கடந்த கால சம்பவங்களை மறக்க நினைக்கிறேன் - பிரதமர் பதவியை ஏற்கும் ஆசை இல்லை : மகிந்த!
27 Feb,2023
"மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கும் ஆசை எனக்கு இல்லை, பிரதமர் பதவியை எனக்கு வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதம் தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுப்பேன்."
இவ்வாறு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமராக மகிந்தவை மீண்டும் நியமிக்கவுள்ளதாக அண்மையில் வெளியான செய்திகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர்,
நாட்டில் நிலவிய மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டே கடந்த வருடம் மே 9 ஆம் திகதி நான் பிரதமர் பதவியில் இருந்து விலகினேன்.
கடந்தகால சம்பவங்களை நான் மறக்க நினைக்கின்றேன், மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கும் ஆசை எனக்கு இல்லை.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்பினால் அது தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுப்பேன்." இவ்வாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.