எனது குடும்பத்தாரின் சட்டவிரோத சொத்துக்களை அரசிற்கு வழங்கத் தயார் - நாமல்!
27 Feb,2023
"தனது குடும்ப உறுப்பினர்கள் குற்றவாளிகள் அல்ல, நானும் எனது குடும்பத்தவர்களும் சம்பாதித்த சொத்துக்கள் சட்டவிரோதமானது என நிரூபிக்கப்பட்டால் அதனை அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தயார்"
இவ்வாறு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
"உகண்ட போன்ற சர்வதேச நாடுகளில் சொத்துக்கள் இருப்பதாகவும், வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பணம் இருப்பதாகவும் எங்கள் மீது வீணான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு என் மீதும், எனது குடும்பத்தார் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது, அப்படி சட்டவிரோத சொத்துக்கள் வைத்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அதனை அரசிற்கு வழங்கத் தயார்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.