தமிழரின் விமானத்தில் பறந்து திருப்பதி சென்ற மஹிந்த ராஜபக்ஷ: Video
29 Dec,2021
தமிழரின் விமானத்தில் பறந்து திருப்பதி சென்ற மஹிந்த ராஜபக்ஷ: வீடியோ இணைப்பு Video: பிரதமர் மகிந்த ராஜபக்ச திருப்பதிக்கு பயணம் மேற்கொண்ட தனியார் விமானம் குறித்த தகவல் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்த நிலையில் அந்த விமான யாருடையது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அதன்படி குறித்த விமானம், மகிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உகண்டாவுக்கான தூதுவராக கடமையாற்றிய வேலுப்பிள்ளை கணநாதனுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அத்துடன் வேலுப்பிள்ளை கணநாதன் தற்போது கென்யாவுக்கான தூதுவராக கடமையாற்றி வருகின்றார். அதேவேளை ராஜபக்ச குடும்பத்தின் மிக நெருங்கிய நண்பராக கருதப்படும் வேலுப்பிள்ளை கணநாதன் , எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பலரின் நெருங்கிய கூட்டாளி எனவும் கூறப்படுகின்றது. வீடியோ கீழே இணைப்பு:
<