இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்
20 Feb,2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 430ஆக அதிகரித்துள்ளது . இறுதியாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக பதிவாகியுள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது .
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவரும் கொழும்பு – 08 பகுதியைச் சேர்ந்த ஆண்ணொருவரும் மீகொட பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆண்ணொருவரும் ரிதிமாலியத்த பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவரும் உயிரிந்துள்ளனர்.
இதேவேளை தெகடன பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஆண்ணொருவரும், கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆண்ணொருவரும் அதேபோன்று வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண்ணொருவரும் வத்தளை பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.