கழுத்து அறுத்துக் கொல்லப்பட உள்ள இந்திய பாதர் -மோபைல் துப்பாக்கி
25 Mar,2016

யெமன் நாட்டில் வைத்து இந்திய கத்தோலிக்க பாதிரியார் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடித்துள்ளார்கள். 56 வயதான டாம் ஊசானலி என்னும் இந்த இந்தியரை பெரியவெள்ளி(25) அன்று கழுத்தறுத்து கொலைசெய்ய அவர்கள் திட்டம் தீட்டி உள்ளதாக செய்திகள் வெளியாகிள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு, ஜெமன் நாட்டு அரசு மற்றும் அமெரிக்க உளவுத்துறையினர் அவரை மீட்க்க நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
இருப்பினும் இதுவரை எந்த தகவலும் இவர் தொடர்பாக கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பெரிய வெள்ளி (ஈஸ்டர்) அன்று இந்த கத்தோலிக்க பாதிரியாரை கொன்று தமது பழியை அவர்கள் தீர்க்க உள்ளார்கள் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.
மோபைல் போனில் துப்பாக்கி: ISIS க்காகவா தயாரிப்பு ?

மோலைப் போன் போன்ற அதே உருவத்தில் இரட்டை குழல் துப்பாக்கி ஒன்றை ஒரு கம்பெனி தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இதனை ரப்பர் உறையைக் கொண்டது என்றும். மிகவும் இலகுவாக எடுத்துச் சென்று , யாரையும் சுட முடியும் என்று இந்த கம்பெனி விளம்பரம் செய்துள்ளது. இது தேவையா ? விமான நிலையத்தில் கூட யாருக்கும் தெரியாமல் மோபைல் போனைப் போல கொண்டு சென்று விமானத்தை கடத்த முடியும்.
மேலும் கடத்திய விமானத்தை மோதி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தவும் முடியும். இந்த கம்பெனி என்ன ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்த இந்த வகையான ஆயுதங்களை செய்கிறார்களா என்று மக்களே கடும் விசனமடைந்துள்ளார்கள். இதனை பல ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இன் நிலையில் குறித்த கம்பெனி இது தொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
