பின்லாந்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள்
28 Nov,2014

பின்லாந்து தமிழர் பேரவை சேர்ந்த தினேஷ் தலைமையில் மாலை 5 மணியளவில் ஆரம்பமாகியது.

முதலாவது நிகழ்வாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டது , பொதுசுடரினை பின்லாந்து தமிழர் அவையின் செலாளர் அவர்கள் ஏற்றி வைத்தார்கள் , அதனை தொடர்ந்து தமிழிழ தேசிய கொடியினை தமிழகத்தில் இருந்து வருகைதந்து இருந்த பேராசிரியர் மு. செ.அறிவு அரசன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பபட்டது. தொடர்ந்து மாவீரர் நினைவு மணி ஒலி எழுபபப்பட்டு, ஈகைசுடர் ஏற்ட்டப்பட்டு மாவீர்களுக்கும் போரினால் கொல்லப்பட்ட பொது மகளுக்கும் அக வணக்கம் செலுதபட்டது.
தொடர்ந்து சிறப்பு உரையினை பேராசிரியர் மு.செ.அறிவு அரசன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து அன்னை பூபதி கலைக்கூட ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் மாவீரர்களின் ஈகத்தை போற்றும்பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.