என் பொண்ணு உள்ளதான் இருக்காஸ உள்ளே போங்கஸ நம்பிச் சென்ற  ஆண்

02 Nov,2018
 


“என் பொண்ணுகூட அந்த ரூமில் கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு வாங்களேன்” என்று ஆண்களிடம் சொல்லி சொல்லியே அவர்களிடம் பணத்தை மிரட்டி கறந்துள்ளார் அந்த பெண்ணின் தாய்.
வடபழனியை சேர்ந்த இளைஞர் காளிசரண். வயசு 43 ஆகிவிட்டதால் கல்யாணம் செய்ய யாரும் பெண் தரவில்லை. அதனால் மேட்ரிமோனியல் உள்ளிட்ட திருமண பதிவு மையங்களில் தனக்கு ஒரு பெண் வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அதன்படி கடந்த வாரம் காளிசரணுக்கு ஒரு பெண் போன் செய்து, “உங்கள் விவரங்களையெல்லாம் மேட்ரிமோனியலில் பார்த்தேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. என் போட்டோவை உங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிறேன். உங்களை நேரில் பார்க்க வேண்டும்போல் இருக்கு. வரமுடியுமா?” கேட்டு பூந்தமல்லி சாலையில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் முகவரியையும் அனுப்பி அழைத்தார்.
ஏற்கனவே 43 வயசு ஆகிவிட்ட காளிசரணுக்கு, வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் போட்டோவை பார்த்ததும் சொக்கியே போய்விட்டார். இவ்வளவு அழகு பெண்ணா? நமக்கா? என்று ஆச்சரியப்பட்டு கொண்டே அந்த பெண்ணை பார்க்க சொன்ன முகவரிக்கு கிளம்பினார். பெண்ணுக்கு நம்மை பார்த்தவுடன் பிடித்து போய்விட வேண்டும் என்று புது டிரஸ், தங்க மோதிரம், செயின் என கிட்டத்தட்ட ஒரு மாப்பிள்ளை ரேஞ்சுக்கு போனார். அங்கே வாட்ஸ்அப்பில் பார்த்த பெண் காளிசரணை வரவேற்று உள்ளே கூட்டிக் கொண்டு போனார்.
அங்கே ஒரு பெண் உட்பட 3 பேர் இருந்தார்கள். அவர்கள் காளிசரணை வரவேற்று டீ கொடுத்தார்கள். பிறகு அங்கிருந்த பெண், இவ என் பொண்ணு, அதோ அந்த அறையில் கொஞ்சம் நேரம் போய் தனியா மனசுவிட்டு பேசிட்டு வாங்களேன்” என்று சொல்லஸ காளிசரணும் பொண்ணு அறைக்கு போக, உடனே பின்தொடர்ந்த 3 பேரும் காளிசரணை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம், செல்போன், ஏடிஎம் கார்டு எல்லாத்தையும் பிடுங்கிகொண்டு அனுப்பினார்கள்.
இதுகுறித்து காளிசரண் வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் போட்டோவையும் போலீசாருக்கு அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து தேடி வந்ததில் தற்போது அந்த கும்பல் சிக்கியுள்ளது. இவர்கள் எல்லோரும் கேரளாவை சேர்ந்தவர்களாம். சாவித்ரி என்னும் 52 வயது பெண்தான் இவ்வளவுத்துக்கும் காரணம் என தெரியவந்துள்ளது.
இவரது மகன் சிவா, மகள் பிரியா ஆகியோருடன் கோடம்பாக்கத்தில் வாடகை வீட்டில் சாவித்திரி குடியேறியுள்ளார். அப்போது கோகுல கிருஷ்ணன் என்ற தரகர் அறிமுகமாகி உள்ளார். இவர்களது வேலையே, யாரெல்லாம் 40 வயசுக்கு மேல கல்யாணம் ஆகாமல் இருக்கிறதோ, யாரெல்லாம் 2-வது கல்யாணத்துக்கு ஆசைப்படுகிறார்களோ அவர்களை வளைத்து போடுவதுதான். அவர்களின் முகவரியை கண்டு பிடித்து வைத்து கொண்டு, திருமண ஆசை காட்ட வேண்டியது.
அதற்காக பெற்ற மகளையே சாவித்திரி போனில் பேச வைத்து, போட்டோவையும் அனுப்பிஸ நேரில் வரவழைப்பதுஸ பிறகு “என் பொண்ணு சினிமா நடிகை மாதிரி இருக்கா பாருங்க. அதோ அந்த ரூமில் அவளிடம் தனியா பேசிவிட்டு வாங்க. உங்களுக்கு முதல்ல பிடிச்சா போதும். அப்பறம் உங்க வீட்டு ஆளுங்கள வரவழைச்சி பேசி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுவோம் என்பார்களாம்.
இதை நம்பி மாப்பிள்ளை ரூமுக்கு போவாராம், சிறிது நேரம் தனியாக பேசுவார்களாம்ஸ பின்னாடியே சென்ற 3 பேரும் நகை, பணம் பறிப்பார்களாம். இப்படியே 30-க்கும் மேற்பட்ட மாப்பிள்ளைகள் உயிர்பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடியிருக்கிறார்கள். அதனால் யாருமே இதுவரை இவர்களை பற்றி எந்த தகவலும் அளிக்க முன்வரவில்லை.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies