வெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..!

16 Oct,2018
 


அளவுக்கு அதிமாகவும், தேவையற்ற உணவுகளை சாப்பிட்டதாலும் நம் உடல் எடை எகிறி விடுகிறது. ஆசைக்காக நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு விட்டு, பிறகு உடல் எடை கூடிவிட்டதே என
கவலைப்பட்டால் என்ன நியாயம். பிறகு இதனை குறைக்க படாதபாடு படுகின்றோம். சிலர் செய்கின்ற விபரீத பயிற்சிகள் அவர்களது உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது.
உடல் எடையை குறைக்க இது போல தவறான முறையை தவிர்த்து எளிமையான வழிகள் உள்ளன. அந்த வகையில் வெங்காயம் உங்களது குண்டான உடலை சட்டென குறைக்க உதவும். இந்த பதிவில் கூறியபடி வெங்காயத்தை நீங்கள் பயன்படுத்தினால் எளிதில் உடல் பருமனை குறைத்து விடலாம்.
குண்டாக காரணம் என்ன..?
இன்று உடல் பருமனால் பாதிக்கப்படும் பெரும்பாலானோரின் முக்கிய காரணமாக இருப்பது, உடலில் சேர கூடிய இந்த கெட்ட கொழுப்புக்கள் மற்றும் கொலெஸ்ட்ரோல்களே. ஒருவரின் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி விட்டால் உடல் எடை அபரிமிதமாக ஏறி கொண்டே போகுமாம். இதுதான், நீங்கள் குண்டாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
உடல் எடையை குறைக்கும் வெங்காயம்..!
வெங்காயத்தை குறிப்பாக உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாம் என உடல்நல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இதில் உள்ள ஊட்டச்சத்துக்களே உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளுமாம்.
நீர்சத்து
நார்சத்து
வைட்டமின் சி
பொட்டாசியம்
சல்பர்
போலேட்
வைட்டமின் பி9
வைட்டமின் பி6
வெங்காய சாறுஸ
உடல் எடையை குறைக்க இந்த வெங்காய சாறு நன்கு உதவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தாலே உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து நீங்கள் கச்சிதமான உடல் எடையை பெற்று விடுவீர்கள்.
தேவையானவை :-
வெங்காயம் 1
நீர் 3 கப்
செய்முறை :-
முதலில் வெங்காயத்தை நன்றாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து கொண்டு, நறுக்கிய வெங்காயத்தை அதனுள் போட வேண்டும். இதனை இப்படியே 5 நிமிடம் கொதிக்க விட்டு இந்த நீரை வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
மாதுளையும் வெங்காயமும்ஸ
வெங்காயம் மற்றும் மாதுளை இவை இரண்டும் சேர்த்து உடலுக்கு அதிக நலன்களை தர கூடியது. குறிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்போர்களுக்கு சிறந்த மருந்தாக இது அமையும்.
தேவையனவை:-
மாதுளை சாறு 4 ஸ்பூன்
வெங்காயம் 3
ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
சிறிது மிளகு
உப்பு சிறிது
பார்ஸ்லி 1 ஸ்பூன்
செய்முறை :-
முதலில் கடாயில் ஆலிவ் எண்ணெய்யை ஊற்றி கொண்டு, நறுக்கிய வெங்காயத்தை அதனுள் போடவும். இதை சிறிது நிமிடம் வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும். வேறொரு பாத்திரத்தில் மாதுளை சாறு, உப்பு, மிளகு, பார்ஸ்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, அதனுள் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
பச்சை வெங்காயம்ஸ
வெங்காயத்தை சமைத்து சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவது மிக சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள phytonutrients என்ற முக்கிய ஊட்டசத்துக்கள் நேரடியாக நமது உடலை சென்றடையும். ஆதலால், இது உடல் எடையையும் குறைத்து விடும்.
தேவையானவை :-வெங்காயம் 1
எலுமிச்சை 1/2
சிறிது ஹிமாலய உப்பு
செய்முறை :-
வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின், இந்த கலவையுடன் சிறிது உப்பை சேர்த்து கலந்து கொண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம்.
புற்றநோயிற்கும் வெங்காயம்..!
“வருமுன் காப்பதே சிறந்தது” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உங்களுக்கு வெங்காயம் உதவும். வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால் புற்றுநோய் செல்களை அழிக்கும். மேலும், இது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் இல்லாமல் நம்மை காக்கும்.
இதய பாதுகாப்பிற்குஸ
பிளவனோட்ஸ் மற்றும் பொட்டாசியம் வெங்காயத்தில் அதிகம் உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், இவை கொலெஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைத்து கொள்ளும். எனவே, நீங்கள் ஆரோக்கியமுடம் இருக்க வெங்காயம் சிறந்த மருந்து.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கஸ
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் எளிதாக இதனில் இருந்து தப்பிக்க வெங்காயம் உதவும். S-methylcysteine என்ற முக்கிய மூல பொருள் இதில் உள்ளதால் சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும்.
முடியின் நலனுக்குஸ
முடியை அழகாக பராமரிப்பதில் வெங்காயம் முதன்மையான இடத்தில் உள்ளது. முடி உதிர்வு, பொடுகு தொல்லை, பேன் பிரச்சினை போன்றவற்றிற்கு வெங்காயம் முற்றிபுள்ளி வைக்கிறது. மேலும், வெள்ளை முடி இருந்தால் அதையும் இது கருமையாக மாற்றி விடுமாம்



Share this:

NEAR REJSE. DK

Tamilmatrimony.world

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies