சூரியனுக்கு அருகில் வேற்றுகிரகவாசிகளின் விண்கலத்தை
07 Oct,2018
சூரியனுக்கு அருகில் சூரியனுக்கு அருகில் வேற்றுகிரகவாசிகளின் விண்கலத்தை பார்ப்பது என்ற வதந்திகள் கிளம்பவது இது முதன்முறையல்ல. கடந்த செப்டம்பர் மாதம், இண்டியானா மாகாணத்தின் சேலம் பகுதியில் உள்ள மரியா ஹில் என்பவர், சூரியனை புகைப்படம் எடுக்கும் போது, மிகப்பெரிய பறக்கும் தட்டு சூரியனை கடந்து சென்றதாகவும், அதனைத் தொடர்ந்து பல சிறிய பறக்கும் தட்டுகள் சென்றதை பார்த்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். அந்த புகைப்படங்களை முகநூலில் பதிவிட்ட ஹில், காலை நேரத்தில் கிழக்கு வானில் சூரியனை புகைப்படம் எடுக்கும் போது இதைத்தான் எனது கேமரா காட்டியது. இது கேமரா அடாப்டர் கொண்ட ஐபோன்8 -ல் எடுத்தது என குறிப்பிட்டார்.
மர்ம பறக்கும் பொருள் "இந்த மர்ம பறக்கும் பொருள் மிகப்பெரியது. சூரியனின் சுற்றளவு பூமியை போல 109 மடங்கு இருக்கும் நிலையில், இந்த மர்ம பொருளும் பூமியின் அளவை ஒத்தே உள்ளது. இப்பொருள் அதிவேகத்தில் சென்றதால் மற்ற எந்த புகைப்படத்திலும் பதிவாகவில்லை. இது தான் மர்மமாக உள்ளது. ஒளியை விட அதிக முடுக்கம் இல்லாமல், ஒளியை விட அதிக வேகத்தில் செல்வதை தான் ஏலியன் தொழில்நுட்பம் என அழைக்கிறோம்" என்கிறார் வாரிங். பழங்கால் ஏலியன் இனம் மட்டுமே சூரியனின் வெப்பத்தை தாக்குபிடித்து அதன் ஊடாக பயணிக்கும் விண்கலத்தை உருவாக்கமுடியும் என விளக்குகிறார் வாரிங்.