உலக நாடுகளில் 'டிப்ஸ்' வைக்கும் பழக்கம் எப்படி பார்க்கப்படுகிறது?

05 Oct,2018
 

 

 
பிரிட்டனில் சமீபத்தில் பார் மற்றும் உணவு விடுதிகளில் ஊழியர்களுக்கு டிப்ஸ் வழங்குவதை தடை செய்வதற்கான சட்டங்கள் குறித்த விவாதங்களின் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன.
பிரிட்டன் போன்று வேறு எந்த நாடும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாது. 17ஆம் நூற்றாண்டில் 'டிப்ஸ்' வழங்கும் கலாசாரத்தை உருவாக்கியது பிரிட்டன் மக்கள்தான் என நம்பப்படுகிறது. உண்மையில் அடித்தட்டு வர்க்க மக்களுக்கு சிறிய சன்மானமாக வழங்குவதில் இருந்து இது தொடங்கப்பட்டது.
எனினும், பல்வேறு நாடுகளில், பல்வேறு முறைகளில் டிப்ஸ் வழங்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. ஆனால், சில நாடுகளில் ஒருவருக்கு டிப்ஸ் வழங்குவது என்பது அவர்களை அவமதிக்கும் செயலாக கருதப்படுகிறது.
அமெரிக்கா
அமெரிக்காவில் நகைச்சுவையாக இப்படி கூறுவார்கள். 'வருமான வரி தாக்கல் செய்வதை விட குழப்பமானது டிப்ஸ் வழங்குவது' என்று. 19ஆம் நூற்றாண்டில், அமெரிக்கர்கள் ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியபோதுதான் பணிக்கொடை வழக்கம் அங்கு அறிமுகமானது.
முதலில் இதனை ஜனநாயகத்திற்கு எதிரானது என விமர்சிக்கப்பட்டது. டிப்ஸ் வழங்குபவர்கள், அடித்தட்டு வர்க்க ஊழியர்களை உருவாக்குவதாகவும் கூறப்பட்டது.
ஆனால், 21ஆம் நூற்றாண்டில் இன்றும் அதன் சாதக பாதகங்களை அமெரிக்கர்கள் விவாதித்து வருகிறார்கள். தற்போது டிப்ஸ் வழங்குவது என்பது, அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
2007ஆம் ஆண்டில் பொருளாதார நிபுணர் ஒஃபர் அசர் கணக்கிடுகையில், உணவு விடுதி தொழிலில் மட்டும் அங்குள்ள ஊழியர்களுக்கு 42 பில்லியன் டாலர்கள் டிப்ஸாக வழங்கப்பட்டுள்ளது. ஊதியத்தையடுத்து, ஊழியர்கள் பெறும் முக்கிய தொகையாக டிப்ஸ் பார்க்கப்படுகிறது.
 
சீனா
பிற ஆசிய நாடுகள் போல, சீனாவில் டிப்ஸ் வழங்கும் கலாசாரம் என்பது குறைவாகவே காணப்படுகிறது. பல தசாப்தங்கள் இது தடை செய்யப்பட்டு, டிப்ஸ் என்பது லஞ்சத்திற்கு இணையாக கருதப்பட்டது. இன்றும் ஒப்பீட்டளவில் அசாதாரணமாக உள்ளது.
உள்ளூர் வாசிகள் நடத்தும் உணவு விடுதிகளில் எல்லாம், வாடிக்கையாளர்கள் டிப்ஸ் வைப்பதில்லை. எனினும், சர்வதேச மக்கள் செல்லும் உணவகங்களில் டிப்ஸ் கலாசாரம் உள்ளது. மேலும் சுற்றுலாவுக்கு வழிகாட்டும் நபர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர்களுக்கு டிப்ஸ் வழங்கப்படுகிறது.
 
ஜப்பான்
ஜப்பானின் சமூக அமைப்பிலேயே டிப்ஸ் கலாசாரம் உள்ளடங்கி உள்ளது. திருமணங்கள், இறுதிச் சடங்குகள், சிறப்பு நிகழ்ச்சிகளின்போது இது சமூகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், பல நேரங்களில் பணிக்கொடை வாங்குபவரை சிறுமைப்படுத்தும் விதமாக்கும் சூழல் அமைந்துவிடுகிறது.
முதலில் நல்ல சேவையினை மக்கள் எதிர்பார்ப்பார்கள். நிகழ்ச்சிகளின்போது டிப்ஸ் வழங்கும்போது, பணத்தை உறைக்குள் வைத்து மரியாதையாக கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
உணவு விடுதிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் அமைதியாக டிப்ஸ் வாங்குவதை மறுக்க பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
 
பிரான்ஸ்
1955ஆம் ஆண்டு, உணவகங்களில் ரசீது வழங்கும் போது, அதில் சேவை கட்டணத்தை சேர்க்கும் சட்டம் இயற்றப்பட்டது. ஐரோப்பா மற்றும் உலகின் பல நாடுகளில் இந்த வழக்கம் பொதுவாக உள்ளது. ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி, டிப்ஸ் பணத்தை நம்பாமல் இருக்கவே இந்த வழி.
பிரான்ஸ் நாட்டின் இளைஞர்கள் பெரும்பாலும் டிப்ஸ் வழங்குவதில்லை என சமீபத்திய கணக்கெடுப்புகள் கூறினாலும், இந்த வழக்கம் அங்கு இருந்துதான் வருகிறது. 2014ஆம் ஆண்டில், 15 சதவீத பிரான்ஸ் வாடிக்கையாளர்கள் டிப்ஸ் வழங்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். முந்தைய ஆண்டைவிட இது இருமடங்கு அதிகமாகும்.
தென் ஆஃப்பிரிக்கா
தென் ஆஃப்பிரிக்காவில் "காரை பாதுகாக்க" டிப்ஸ் வழங்கப்படுகிறது. வேறு எந்த நாட்டிலும் இதனை பார்க்க முடியாது.
தென் ஆஃப்பிரிக்காவில் வேலைவாய்ப்பு பெரிதும் இல்லாத நிலையில், ஓட்டுநர்களுக்கு பார்கிங் இடம் கண்டுபிடித்து கொடுப்பது, அவர்கள் வாகனங்களை பார்த்துக்கொள்ளும் வேலையை செய்கிறார்கள். அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புகள்படி, ஒரு நாளில் 140 வாகனங்கள் அங்கு திருடு போகின்றன.
சேவைக்கு 2 டாலருக்கு குறைவான கட்டணம் செலுத்துவதும் கவலையில்லை.
சுவிட்ஸர்லாந்து
சுவிட்ஸர்லாந்தில் மக்கள் முழுமையான கட்டணங்களை செலுத்தி, ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சிகை அலங்கார ஊழியர்கள் போன்றவர்களுக்கு டிப்ஸ் வழங்குவது வழக்கம். உலகில், குறைந்தபட்ச கூலி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நாடுகளில் சுவிட்ஸர்லாந்தும் ஒன்று. உதாரணமாக அங்கு ஹோட்டல் வெயிட்டர் பெறும் ஊதியம் 4000 டாலர்கள். இதனால், அமெரிக்கா போன்று, ஊழியர்கள் பெரிதளவில் டிப்ஸை நம்பி இருப்பதில்லை.
இந்தியா
இந்தியாவில் பல உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதால், டிப்ஸ் வைக்காமல் செல்வது சரி என்று கருதப்படுகிறது. இல்லையெனில், 15 முதல் 20 சதவீதம் டிப்ஸ் வைக்கப்படுவது வழக்கம்.
 
2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், வங்க தேசம் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு அடுத்து, ஆசியாவிலேயே இந்தியர்கள்தான் அதிகளவில் டிப்ஸ் வைப்பது தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூர்
ஹோட்டல்கள், டாக்ஸி ஓட்டுநர்களுக்கு சிறிய தொகை டிப்ஸாக வழங்குவது குற்றம் இல்லை என்றாலும், கொடை அளிப்பது என்பது சர்ச்சைக்குரிய விவகாரம் ஆகலாம். அந்நாட்டு அரசாங்க இணையதளத்தில், "டிப்ஸ் வழங்குவது இங்கு வாழ்க்கைமுறை கிடையாது" என்று கூறப்பட்டிருக்கும்.
எகிப்து
எகிப்திய வாழ்க்கை முறையில் டிப்ஸ் வழங்குவது என்பது ஒன்றிணைந்துள்ளது. வெயிட்டர்கள் மற்றும் பெட்ரோல் பம்ப் ஊழியர்கள் என இது போன்ற சேவை செய்பவர்களுக்கு, பணக்காரர்களாக இருக்கும் எகிப்தியர்கள் டிப்ஸ் வழங்குவது வழக்கமான ஒன்று.
   
ரஷ்யா
சோவியத் ஆட்சி இருந்தபோது, டிப்ஸ் வழங்குவது என்பது உழைக்கும் வர்ககத்தை அவமதிக்கும் விதமாக கருதப்பட்டது.
chayeviye ("for the tea") - என்பது ரஷ்யர்கள் 'டிப்ஸ்'க்கு வைத்த பெயர்.
எனினும், டிப்ஸ் வைக்கும் வழக்கம் 2000களில் திரும்பியது. ஆனால், வயதானவர்கள் இதனை அவமதிக்கும் விதமாகவே இன்றும் பார்க்கின்றனர்.
 
அர்ஜென்டினா
நல்ல உணவுக்காக, வெயிட்டருக்கு டிப்ஸ் வைப்பது அர்ஜென்டினாவில் பெரிய பிரச்சனையாக இருக்காது. எனினும் உணவு தொழிலுக்கான 2004 தொழிலாளர் சட்டப்படி, டிப்ஸ் வைப்பது சட்டவிரோதமானது.
எப்படி இருந்தாலும் இன்று பணம் வழங்குவது புழக்கத்தில் உள்ளது. அர்ஜென்டினாவில் வெயிட்டர்கள் பெறும் வருமானத்தில் 40 சதவீதம் டிப்ஸ் தொகையால் வந்ததாக இருக்கலாம்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies