பெண் ராணுவ அதிகாரிகள் குளிப்பதை ரகசியமாக படம்பிடித்த அதிகாரிக்கு சிறை
04 Oct,2018
கனடா ராணுவத்தில் பெரிய பொறுப்பு வகிக்கும் ராணுவ அதிகாரி மார்டி ரேஸ் சக பெண் ராணுவ அதிகாரிகளின் குளியலறையில் ரகசியமாக கேமிராக்களை வைத்து அவர்கள் குளிப்பதை பார்த்து உள்ளார். இது தொடர்பாக அவர் மீது குற்றம்சட்டபட்டது.பலமுறை இவ்வாறு குளியலறைக் காட்சிகளை படம் பிடித்ததாக ஒப்புக்கொண்டதன்பேரில் அவருக்கு ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.நேற்று அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் எட்மன்டனில் தனது தண்டனைக் காலத்தை அனுபவிக்க இருக்கிறார்.
அத்துடன் அவரது பட்டமும் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி என்னும் நிலையிலிருந்து சார்ஜெண்ட் ஆக குறைக்கப்பட்டுள்ளது.மேலும் அவரிடம் பயிற்சி பெறும் ஒரு பெண் ராணுவ வீரர் மீது அவர் கண் வைத்ததாகவும், ராணுவ சீருடை அணிந்த வீரர்கள் மற்றும் அவரது சகாக்கள் முன்னிலையிலேயே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த பெண் ராணுவ வீரரின் பாதுகாப்பு கருதி அவரது பெயர் வெளியிடப்படவில்லை.