இதை செய்து பாருங்கள்!

13 Sep,2018
 

 

 சாம்பார் மணக்க இதை செய்து பாருங்கள்!
 
 
உங்களிடம் உள்ள அரிசியில்  சாதம் வடித்தால் நிறம் மங்கலாக இருக்கிறதா, அரிசி வேக வைக்கும் போது தண்ணீருடன் சிறிது கெட்டியான மோர் அல்லது பால் கலந்து விடுங்கள் சாதம் வெள்ளையாக இருக்கும்.
நெய் ஜாடியில் ஒரு சிறிய வெல்லக்கட்டியை போட்டு மூடி வைத்துவிட்டால் மூன்று மாதங்கள் ஆனாலும் நெய் கெட்டுப்போகாது.
சோயா பீன்ஸ் பருப்புகளை  உளுந்துக்குப் பதிலாக  போட்டு ஆட்டி இட்லி சுட்டால்,  இட்லி அருமையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
எப்போதும் சாம்பாரில் பெருங்காயத்தைப் பொரித்துத்தான் சேர்ப்போம். மாறுதலாக கொத்துமல்லி விதைகளை  சிறிது நெய்யில் வறுத்துப் பொடி செய்து சாம்பாரில்  சேர்த்துப் பாருங்கள். அதன் மணமே அலாதிதான்.

 
சப்பாத்திஸ.சப்பாத்திதான்ஸசுவையான சப்பாத்திக்கு 7 டிப்ஸ்
 
 
1
குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை தவாவில் மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் சப்பாத்தி மிருதுவாகவும் இருப்பதுடன் பூரி போல உப்பும்.
2
மாவு பிசையும் போது தளரப் பிசைந்து கொண்டாலே சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும். போலவே பூரிக்கு மாவை இறுகப் பிசைந்து கொண்டால் அதிகம் எண்ணெய் உறிஞ்சாது. 
3
சப்பாத்தி மாவில் நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஒன்று சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
4
ச‌ப்பா‌‌த்‌தி‌க்கு திர‌ட்டு‌ம் போது மாவை தொ‌ட்டு‌ ச‌ப்பா‌த்‌தி திர‌ட்டுவா‌ர்க‌ள். மேலு‌ம் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி திர‌ட்டினா‌ல் ச‌ப்பா‌த்‌தி சுடு‌ம்போது அ‌திக எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்ற‌த் தேவை‌யி‌ல்லை.
5
ச‌ப்பா‌த்‌தியை ந‌ன்கு பே‌ப்ப‌ர் போ‌‌ல் திர‌ட்டி அத‌ன் மே‌ல் எ‌ண்ணெ‌ய் உ‌ற்‌றி அதனை நா‌ன்காக மூடி மீ‌ண்டு‌ம் ஒரு முறை திர‌ட்டி எடு‌த்து தோசை‌க் க‌ல்‌லி‌ல் போடு‌ங்க‌ள். ச‌ப்பா‌த்‌தி எ‌ப்படி உ‌ப்பு‌கிறது எ‌ன்று தெ‌ரி‌‌யு‌ம். 
6
சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து வைத்தாலோ அல்லது கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து வையுங்கள். கருப்பாக காய்ந்து போகும் தன்மை ஏற்படாது.
7
சப்பாத்தி காய்ந்து போனால் அதில் சிறிது தண்ணீர் தெளித்து பத்து விநாடி மைக்ரோவேவ் அவனில் வைத்துச் சூடாக்கினால் சப்பாத்தி சாஃப்ட்டாகி விடும்.
 
இப்படியெல்லாம் சமைத்தால் உங்கள் உணவு விஷமாகிவிடும்!
 
 
ஆரோக்கியத்துக்கான முதல்படி நாம் உண்ணும் உணவுதான். ஆனால் இதில் முக்கியமானது நீங்கள் எந்த உணவை உட்கொள்கிறீர்கள் என்பது அல்ல, அது எப்படி சமைக்கப்படுகிறது என்கிற தயாரிப்பு முறையாகும். இந்திய பாரம்பரியத்தில், உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். ஒரு உணவை இப்படித்தான் தயாரிக்க வேண்டும் என்ற முறை உண்டு. ஒரு உணவை சமைக்கும் போது அதன் ஊட்டச்சத்த்துகளை இழந்து விடாமல் சமைக்க வேண்டும். ஆனால் ருசிக்காக நன்கு பொறிக்கப்பட்ட உருளைக்கிழங்கு அல்லது  ப்ரோக்கோலியால் உங்கள் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை. அது டாக்ஸின் எனப்படும் நச்சுக்களை உற்பத்து செய்து நாளாவட்டத்தில் கேன்சர் போன்ற நோய்களை உருவாக்கிக் விடக் கூடும். பின்வரும் சமையல் முறைகளைத் தவிர்த்துவிடுவது உடல் நலத்துக்கு நல்லது.
டீப் ஃப்ரை (Deep Fry)
எத்தனையோ புத்தகங்களில் படித்திருந்தும், மருத்துவர்கள் அறிவுரை கேட்டிருந்தும், பொறிக்கப்பட்ட உணவு வகைகளை பெரும்பாலானோர் அடிக்கடி சமைத்து சாப்பிடுகிறார்கள். அது தவறு. காரணம் அதிக நேரம் காய்கறிகளை எண்ணெயில் பொறிப்பதால், அக்காய்கறியில் இயற்கையில் உள்ள சத்துக்கள் இழக்கப்பட்டு கூடுதலாக கொழுப்புச் சத்தும் அதிகரிக்கும். இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை வரவழைத்துக் கொள்ள இத்தகைய சமையல் வழி வகுத்துவிடும்.
பேன் ஃப்ரை (Pan Fry)  
பேன்  பயன்படுத்தி காய்கறிகளை பொறிப்பதால் உணவின் சத்துக்கள் மொத்தமாக இழக்கப்படுவதுடன், நச்சுக்களையும் ஏற்படுத்திவிடும். பேனில் நீங்கள் ஃப்ரை செய்யும் போது உருவாகும் சில வேதியல் பொருட்கள் உடல் நலத்துக்கு மிகவும் தீங்கானது. அக்ரலமைட் (Acrylamide) எனும் இந்த வேதிப்பொருள், உணவுப் பொருள் அதிகபட்ச வெப்பத்தில் சமைக்கப்படும் போது தானே உருவாகும். இது கேன்சர் உள்ளிட்ட சில நோய்களுக்கான காரணியாகும். எந்த அளவுக்கு பொறித்த உணவுகளின் நிறம் அடர்த்தியாக உள்ளதோ அந்த அளவுக்கு அதிகமான அக்ரலமைட் உருவாகியுள்ளது என்று அர்த்தம்.
க்ரில்லிங் 
க்ரில்லிங் முறையில் சமைப்பது ஆரோக்கியம் என்று சிலர் நம்புவார்கள். ஆனால் எந்தந்த உணவை அம்முறையில் சமைக்கலாம் என்பதை அறிந்து சமைக்க வேண்டும். இறைச்சியை க்ரில்லிங் முறையில் தயாரிப்பது அவ்வுணவின் ஊட்டச்சத்தைக் கெடுப்பதுடன், கேன்சர் வருவதற்கான காரணியாகிவிடும். இறைச்சியில் சர்க்கரை, கிரியாடைன் மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதால் அதிகமான வெப்பத்தில் சமைக்கும் போது ஹெடிரியோசைக்ளிக் அமைன்ஸ் (heterocyclic amines) எனும் வேதிப்பொருள் உருவாகும். இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உருவாக்கக் கூடிய தன்மையை உடையது. எனவே க்ரில்லிங் முறை அதிக கேடுகளை உடலுக்கு ஏற்படுத்தும்.
புகையவிடுதல் (ஸ்மோகிங்)
புகைப் பிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். சில உணவை புகைய விட்டுச் சமைப்பது அதன் ருசியை அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் புகைபிடித்த உணவை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. புற்றுநோயை உருவாக்கும் கலவைகளான HCAs மற்றும்   polycyclic aromatic hydrocarbons (PAHs) போன்றவற்றை புகைத்த உணவு உருவாக்க காரணமாக உள்ளது
மைக்ரோவேவ்
 
மைக்ரோவேவில் சமைக்கும் போது அதிக அளவு நுண்ணலை கதிர்வீச்சு (ரேடியேஷன்) வெளிப்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அதில் சமைக்கப்படும் உணவு உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். 2011-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் படி, சமைப்பதற்கு அல்லது சூடுபடுத்துவதற்காக தொடர்ந்து மைக்ரோவேவ் ஓவன்களைப் பயன்படுத்தும் போது அதன் கதிர்வீச்சுத் தாக்கத்தால் மூளைப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
மேற்சொன்ன வகைகளில் உணவை சமைக்கும் போது நேரம் மிச்சப்படலாம், அல்லது ருசி கூடலாம். ஆனால் உடல் நலத்துக்கும் அதைத் தொடர்ந்து உயிருக்கும் பேராபத்தை சிறுக சிறுக விளைத்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். எனவே நம் பாரம்பரிய முறைப்படி சமைப்பதே நல்லது. அதற்காக விறகு அடுப்பில் சமைக்க வேண்டும் என்பதில்லை. நவீன கருவிகளை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். மேலும் சமையல் செய்வதை ஒரு வேலையாகச் செய்யாமல் விருப்பத்துடன் செய்ய வேண்டும்.
ஆவியில், மிதமான வெப்பத்தில் சமைக்கப்படும் உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் 
எண்ணெய் சேர்க்காமல் எளிய சைட் டிஷ்!சந்தேகங்களும்... தீர்வுகளும் விஜயலட்சுமி ராமாமிர்தம்ஃபுட்ஸ்
 
 
 சமையல் செய்து முடித்த பின்னர், சிறிதளவு எடுத்து நாக்கில் வைத்துப் பார்த்து, சுவை சரியாக இருந்தால், 'அப்பாடா’ என்று ஒரு பெருமூச்சு வரும். ஆம்... தினந்தோறுமே எக்ஸாம் டைம்தான் இல்லத்தரசிகளுக்கு! இந்தப் பரீட்சையில் நீங்கள் நூற்றுக்கு நூறு வாங்கும் வகையில்... உங்கள் சமையல் சிறப்பாக அமைய உறுதுணை புரியவும், சமையல் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும் சமையல் கலை வித்தகர்கள் களம் இறங்கும் பகுதி இது.
இந்த இதழில் உங்களுக்கு உற்ற தோழியாக, உளமார்ந்த அன்புடன் உதவிக்கு வருபவர் விஜயலட்சுமி ராமாமிர்தம்.
முழுசாக வேக வைத்த  உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற காய்களைத் துண்டுகளாக்கும் போது, சீராக வராமல் உடைந்து போகிறது. இதற்கு என்ன செய்யலாம்?
ஒரு தட்டில் ஒரு டீஸ்பூன் எண் ணெய் ஊற்றி அருகில் வைத்துக் கொள்ளுங்கள். வெந்த காய்களைத் துண்டுகளாக்கும் முன், கத்தியின் இருபுறமும் விரலால் எண்ணெயைத் தடவி நறுக்கினால், பிரச்னை தீர்ந்தது. இடையிடையே கத்தியில் இப்படி எண்ணெய் தடவிக்கொண்டால் சீராக துண்டுகள் போடலாம்.
இட்லி, வடை ஆகியவற்றைத் தயாரித்த பின் உப்பு குறைவாக இருப்பது தெரிந்தால் என்ன செய்யலாம்?
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளியுங்கள்.  அதில் இட்லிகளை உதிர்த்துப் போட்டு கொஞ்சம் உப்பும் சேர்த்து, ஒரு கிளறு கிளறினால், ஐந்து நிமிடங்களில்  உப்பில்லா இட்லிகளை உப்புமாவாக மாற்றிவிடலாம். விரும்பினால் வெங்காயமும் சேர்க்கலாம். வடை யாக இருந்தால், ஒரு ஃபோர்க்கினால் ஓரிரு முறை குத்திவிட்டு, உப்பு கலந்த வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு விட்டு, பின் தயிரில் ஊற வைத்தால் அருமையான தயிர் வடை ரெடி!
 
எண்ணெய் சேர்க்காமல் ஒரு எளிய சைட் டிஷ் சொல்ல முடியுமா?
ஒரு பிரஷர் பேன் அல்லது கடாயில் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு, அரை ஆழாக்கு பயத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய 2 தக்காளி, இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி கறிவேப் பிலை இவற்றைச் சேர்த்து, அடுப்பில் குறைந்த தீயில் வேகவிடுங்கள். நடுவில் ஓரிரு முறை தண் ணீர் வற்றிவிடாமல் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வெந்ததும், உப்பு சேர்த் துக் கலக்கினால்... இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி ஆகியவற்றுக்கு ஏற்ற எண்ணெயில்லாத சைட் டிஷ் ரெடியாக இருக்கும்
இட்லி, தோசை மாவுகளில் வெந்தயம் கண்டிப்பாக சேர்த்து அரைக்க வேண்டுமா?
இட்லியை ஆவியில் வேக வைப்பதால் உளுந்தினால் வரும் வாயுத் தொல்லையோ, எண்ணெயினால் வரும் கொலஸ்ட்ராலோ இருக் காது. அதனால், இட்லி மாவு அரைக்கும்போது வெந்தயம் சேர்க்க வேண்டியது கட்டாயமில்லை. ஆனால், தோசைக்கு மணத்தைக் கொடுப்ப தோடு, உளுந்தினாலும் எண்ணெயினாலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தோசை மாவில் வெந்தயம் சேர்ப்பது நல்லது. வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டால், தோசை வார்க்கும் முன் மாவில் ஒரு டீஸ்பூன் கலந்து கொள்ளலாம்.
உப்பு, காரம் சேர்த்து செய்யும் உணவுப் பதார்த்தங்களில்கூட சர்க்கரை அல்லது வெல்லம்  சேர்க்கிறார்கள். எந்தப் பதார்த்தத்தில் இவற்றைச் சேர்க்கலாம்?
புளி சேர்த்து செய்யும் குழம்பு வகைகள், சாம்பார், பிட்ளை, ரசம் போன்ற திரவ வடிவிலுள்ள உணவு வகைகளிலும், புளிக்காய்ச்சல், தோசை மிளகாய்ப்பொடி போன்றவற்றிலும் சின்ன நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும். கீரை, கத்திரிக் காய், கொத்தவரங்காய், அவரைக்காய், பாகற்காய் போன்ற காய்களில் பச்சை நிறம் மாறாமல் இருக்கவும், கசப்பு - துவர்ப்பு சுவைகள் தெரியாமல் இருக்கவும் சிறிது சர்க்கரையைத் தூவலாம்.
தினமும் ஒரு சத்தான துவையல் சாப்பிட சுலபமான வழி சொல்லுங்களேன்..!
உளுத்தம்பருப்பு - ஒரு ஆழாக்கு, மிளகாய் வற்றல் - 15, பெருங்காயத்தூள் - சிறிதளவு ஆகியவற்றை எண்ணெ யில் வறுத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். துவையல் தேவைப்படும்போது இதிலிருந்து இரண்டு ஸ்பூன் பருப்பு, மிளகாய் - 2 எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய் இவற்றில் ஏதாவது ஒன் றையும் (பச்சையாகவே) சேர்த்து, சுண்டைக்காய் அளவு புளி மற்றும் உப்பையும் சேர்த்து அரைத்தால், தினமும் வெரைட்டியாக துவையல் ரெடியாகிவிடும்!
கைவசம் தோசை மாவு குறைவாக இருக்கிறது. அதன் அளவை அதிகரிக்க, என்ன மாவு சேர்க்கலாம்?
மாவு வகைகளைச் சேர்ப்பதைவிட இப்படி செய்து பாருங்களேன். ஒரு பாத்திரத்தில் கையில் உள்ள தோசை மாவை ஊற்றுங்கள். அதில் இரண்டு மடங்கு தண்ணீரையும் ஊற்றுங்கள். தோசை மாவு எவ்வளவு இருந்ததோ... அதில் பாதி அளவு சம்பா கோதுமை ரவையை சேர்த்து, கொஞ்சம் உப்பும் சேர்த்து நன்கு கலக்கி, 10 நிமிடங்கள் ஊறவிடுங் கள். இதை மெல்லிய தோசைகளாக வார்த்தால், பேப்பர் ரோஸ்ட் போல முறுகலாக, அருமையாக இருக்கும்.
 

 
 
 
காய்கறி குருமாவில், கசகசாவை லேசாக வறுத்து அத்துடன் பூண்டு, தேங்காய் சேர்த்து அரைத்து ஊற்ற குருமா ருசியாகவும் நீர்க்காமலும் இருக்கும்.
 
வேர்க்கடலையை வறுத்துப் பொடியாக்கி, சப்பாத்தி செய்யும் மாவுடன் கலந்து  சப்பாத்தி செய்யும்போது வாசமும் சுவையும் அதிகரிக்கும்.
கையில் நல்லெண்ணெயைத் தடவிக் கொண்டு சேனைக் கிழங்கை நறுக்கினால் கையில் அரிப்பு உண்டாகாது.
 
கொள்ளு, கம்பு இரண்டையும்  சம அளவில் மாவாக அரைத்து வைத்துக்கொண்டால் டயட்டில் இருப்பவர்களுக்குப் பசிக்கும் நேரங்களில் கருப்பட்டி சேர்த்து, கஞ்சி செய்து கொடுக்கலாம். இதனால் பசி அடங்குவதுடன் உடல் எடையும் குறையும்.
வெந்தயத்தை முதல்நாள் இரவு வெந்நீரில் ஊறவைத்து மறுநாள் காலை எழுந்தவுடன் தினமும் குடித்துவர உடல் குளிர்ச்சி பெறும்.
வெங்காயப் பச்சடியில் சிறிது தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட்டால் சுவை கூடுதலாகும்.
கத்தியில் சிறிது எலுமிச்சைச் சாற்றைத் தடவிக் கொண்டு ஆப்பிள், வாழைக்காயை நறுக்கினால் பழமும் காயும் கறுப்பாகாது.
பீட்ரூட்டை வேக வைத்த நீரைப் பருகினால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து முடி உதிர்வது குறையும்.
- ஜெ.கலைவாணி

கத்திரி, வாழை, உருளைக்கிழங்கு கறி செய்யும்போது ஒரு டீஸ்பூன் பாலைச் சேர்த்தால் பொன்னிறமாக வறுபடும்.
காய்கறிகள், கீரை வேகும்போது அரை டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால், காய்கறிகளின் சத்தும் நிறமும் மாறாது.
கேரட்டை பூப்போலத் துருவி, சிறிது உப்பு சேர்த்து அரை கப் தயிருடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி கலந்து சாப்பிட, சுவை பிரமாதமாக இருக்கும்.

 
 

 
 

 
 
கஷ்டப்படுவதற்கு பலன் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். பல மணி நேரம் புழுக்கமான சமையலறையில் உழன்று, சோர்வடையும் இல்லத்தரசிகளுக்கு 'சமையல்ல உன்னை மிஞ்ச ஆள் இல்லை’ என்ற பாராட்டுதான் மல்டி வைட்டமின் டானிக். இந்தப் பாராட்டை உங்களுக்கு பெற்றுத்தரும் நோக்கத்துடன்...  நீங்கள் சிறப்பாக உணவு தயாரிக்க உதவவும், சமையல் தொடர்பான உங்கள் சந்தேகங்களைக் களையவும் சமையல் கலை நிபுணர்கள் உதவிக்கரம் நீட்டும் பகுதி இது. இந்த இதழில் அளவற்ற பரிவுடன் ஆலோசனை கூறுபவர் நங்கநல்லூர் பத்மா.
நவராத்திரி சமயத்தில்... நாம் செய்தது, அக்கம்பக்கத்தில் கொடுத்தது என்று பலவிதமான சுண்டல்கள் மிகுந்துவிடும். அவற்றை வைத்து என்ன செய்யலாம்?
இனிப்பு இல்லாத சுண்டல் எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பொட்டுக்கடலை மாவு அல்லது ரஸ்க்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு பிசையவும். இந்தக் கலவையை சிறு வடைகள் வடிவத்தில் தட்டி, நான்ஸ்டிக் தவாவில் பரவலாக வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுக்கவும். வித்தியாசமான, சுவையான, சுண்டல் கட்லெட் ரெடி!
தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் வீட்டில் செய்யும்... உறவினர், நண்பர்கள் வாங்கி வரும் ஸ்வீட், கார வகைகள் தேவைக்கு அதிகமாகி விடும்போது அவற்றை வேறு வகையில் பயன்படுத்த முடியுமா?
காராசேவு, மிக்ஸர், நாடா பக்கோடா, தேன் குழல் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பிசைந்து வைத்த கலவையை குணுக்கு போல் கிள்ளி போட்டு பொரிக்கவும். வழக்கமாக செய்யும் குணுக்கைவிட இது மேலும் பிரமாதமான ருசியுடன் இருக்கும்.
ஸ்வீட் வகைகளை எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 100 கிராம் கடலைப்பருப்பை வறுத்து வேக வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கிளறி, பொடித்த ஸ்வீட் சேர்த்துக் கலந்து பூரணம் தயாரிக்கலாம். மைதா மாவை தேவையான நீர் விட்டு பிசைந்து, ஸ்வீட் பூரணம் வைத்து மூடி, போளி தயாரிக்கலாம். இந்த மல்டி ஸ்வீட் போளி ஆளை அசத்தும்.
இஞ்சி அதிகமாக கிடைக்கும் சீஸனில், அதை வாங்கி பக்குவப் படுத்தி வைப்பது எப்படி?
இஞ்சியை இளசாக (நார் இல்லாதது) வாங்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி, சிறிதளவு சர்க்கரை, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டால்... சமையலுக்கு தேவைப்படும்போது பயன்படுத்தலாம். இஞ்சி சாறை கெட்டியாக காய்ச்ச வேண்டியது அவசியம்.
சுகரை கன்ட்ரோலில் வைக்கவும், உடலுக்கு வைட்டமின் சத்து கிடைக்கவும் எளிய உணவு முறை... ப்ளீஸ்!
வெந்தயத்தை வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் மோரில் இந்தப் பொடியை கொஞ்சம் சேர்த்து பருகி வந்தால்... சுகர் கட்டுப்படும்.
நெல்லிக்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியை சேர்த்துக் கலந்து அருந்தினால், வைட்டமின் 'சி’ சத்து கிடைக்கும். இது, வயிற்றுக் கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். நெல்லிப் பொடியை தயிரில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால், கூந்தல் நன்கு வளரும்.
டீ தயாரிக்கும்போது டீத்தூள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டினாலும் பொடி தங்குகிறதே... என்ன செய்வது?
தேவையான அளவு டீத்தூள், ஏலக்காய்... இரண்டையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, மெல்லிய துணியில் வடிக்கட்டவும். இதை சூடான பாலில் கலந்தால்... அருமையான  ஏலக்காய் டீ ரெடி. டீத்தூளும் தங்காது.
பாட்டிலில் போட்டு வைத்த ஊறுகாய்கள் எல்லாம் பழையதாகி கொஞ்சம் கொஞ்சம் தங்கிவிட்டது... இதை என்ன செய்வது?
சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாய் எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து, சிறிது வெல்லம் சேர்த்து, வாணலியில் போட்டு கிளறி ஜாம் போல தயாரிக்கலாம். இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
வீட்டுக்கு வரும் உறவினர், விருந்தாளிகளுக்கு வாசனையான மோர் கொடுக்க... ஒரு ஐடியா தருவீர்களா...?
புதினா, கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து, ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் ட்ரேயில் வைக்கவும். ஒரு டம்ளர் மோரில் 2 ஐஸ் க்யூப், சிறிதளவு உப்பு போட்டுக் கலக்கினால்... அருமையான, கமகம மோர் தயார்
முருங்கை மரம் பூத்து குலுங்குகிறது அவ்வளவு பூவும் காயாகாது. முருங்கைப்பூவை சமையலில் பயன்படுத்தலாமா?
முருங்கைப் பூவை நெய்யில் வதக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து சட்னியாக அரைக்கலாம்.
பொரித்த அப்பளம் நமுத்துவிட்டால், என்ன செய்யலாம்?
அதை வைத்து பச்சடி தயாரிக்கலாம். அப்பளத்தை மிக்ஸியில் கிள்ளிப் போட்டு ஒரு சுற்று சுற்றி, ஒரு கப் தயிருடன் சேர்த்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்து சேர்த்தால்... சுவையான அப்பளப் பச்சடி ரெடி. இதை வெங்காயம், கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல் கலந்தும் தயாரிக்கலாம்.
 
 
ஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா?
 
 
பஜ்ஜி மாவில் பொடியாக நறுக்கிய புதினா, ஓமவல்லி இலை அல்லது வெற்றிலை சேர்க்கலாம் - நல்ல வாசனையாக இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும்.
புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால். இரவில் நல்ல உறக்கம் வரும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இருமல், கபம் முதலியவற்றால் மூச்சுத்திணறும் குழந்தைகளுக்கு இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு கலவையுடன் தேன் கலந்து குடிக்க கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பாதுஷா செய்யும் போது மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து, சிறிதளவு வனஸ்பதியையும், நெய்யும் சேர்த்தால் பாதுஷா மிருதுவாகவும் நல்ல சுவையுடனும் இருக்கும்.
ஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா? கோதுமை மாவைப் பிசையும் போதே ஒரு தேக்கரண்டி சோயாமாவு, அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் போதும். பூரிஉப்பலாக வரும். இது சீக்கிரத்தில் நமர்த்தும் போகாது.
வேக வைத்த உருளைக் கிழங்குடன் அரிசிமாவு, கடலை மாவு சேர்த்து ஓமப் பொடி பிழிந்தால் பிரமாதமான சுவையுடன் இருக்கும்.
நாலு டம்ளர் கோதுமை மாவுக்கு அரை டம்பளர் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து கோதுமையுடன் கலந்து உப்பு போட்டு கரைத்து தோசை வார்த்தால் தோசை மிருதுவாக இருக்கும்.
பாதாம் அல்வா கிளறும் போது ஊறிய பாதாம் பருப்புடன் குங்குமப் பூவையும் போட்டு அரைத்தால் நிறமும் மணமும் தூக்கலாக இருக்கும்.
வெண்பொங்கல் செய்து பக்குவம் ஆனதும் குக்கரை திறந்து காய்ச்சிய பாலில் ஒரு கரண்டி விட்டுக் கிளறி மூடினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
இட்லி மிளகாய் பொடியில் எண்ணெய் ஊற்றிக்கொள்வதற்குப் பதிலாக தயிர் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். ருசியாகவும் இருக்கும். உடம்புக்கும் நல்லது.
 
பந்தியில் வாழை இலை போட்டுச் சாப்பிடும் போது இலையைச் சுற்றி தண்ணீர் தெளிப்பது ஏன்?
 
 
 
பந்தியில் அமர்ந்து சாப்பிடும் போது கண்டிருப்பீர்கள், இப்போதும் கூட பலரும் ஒரு கை நீரள்ளி இலையைச் சுற்றியும், இலைக்கு உள்ளேயும் தெளித்து இலையைச் சுத்தம் செய்த பிறகே உணவுப் பொருட்களை பரிமாற அனுமதித்துப் பிறகு சாப்பிடத் தொடங்குகிறார்கள். இலைக்கு உள்ளே நீர் தெளிப்பதை வேண்டுமானால் இலையைக் கழுவுவதற்காக நீர் தெளிக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்ளலாம். இலைக்கு வெளியேயும் ஏன் நீர் தெளிக்க வேண்டும்? என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
சிம்பிள்... இந்தப் பழக்கத்தைத் தொடங்கியவர்கள் நமது ஆதி ரிஷிகளும், முனிவர்களும் தான். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் காட்டுக்குள், கட்டாந்தரையில் இலை போட்டுத்தான் சாப்பிட வேண்டியதாக இருந்திருக்கும். அப்போது உணவு பரிமாறப்பட்டிருக்கும் இலையைச் சுற்றி தூசு எழும்பிப் பறக்காமல் இருப்பதற்காக இலையைச் சுற்றி தண்ணீர் தெளிக்கும் பழக்கம் வந்திருக்கலாம். சரி அப்போது அப்படிச் செய்வதில் அர்த்தம் இருந்திருக்கும். ஆனால், இன்று கான்கிரீட் கட்டிடங்களில் வசித்துக் கொண்டிருக்கும் நாம் ஏன் அந்தப் பழக்கத்தை இன்னும் விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா? அதற்கும் சில காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 
சிலர் சொல்கிறார்கள் இந்திய உணவுகளில் பொதுவாகவே காரமும், மணமும், அமிலத்தன்மையும் அதிகமிருக்கக் கூடும். அப்படியான தன்மைகளைக் குறைத்து அமில, காரத்தன்மையை சமநிலைப்படுத்துவதற்காகக் கூட இப்படி ஒரு பழக்கம் தோன்றியிருக்கலாம் என்கிறார்கள். இலைக்கு உள்ளும், புறமும் ஒரு கை நீரள்ளித் தெளிப்பதால் உணவுப் பொருட்களின் காரம் மற்றும் அமிலத்தன்மை நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது என்கிறார்கள். இது ஒரு விதமான விளக்கம்.
இன்னொரு சாரர் என்ன சொல்கிறார்கள் எனில், இந்திய உணவுகளில் பெரும்பகுதி அரிசியும், ஸ்டார்ச்சும் (மாவுப்பொருள்) நிறைந்தவையாகவே இருக்கும். ஆகவே இலையில் பரிமாறப்பட்டுள்ள உணவைச் சுற்றி ஒரு கை நீரள்ளித் தெளித்த பின் உண்பதால் உணவிலுள்ள மாவுச்சத்து கரைந்து உணவு எளிதில் ஜீரணமாகக் கூடிய வகையில் மாறும் என்கிறார்கள். இந்த இரண்டு காரணங்களுமே அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் படாதவையே! தொன்று தொட்டுச் செய்து வரும் ஒரு பழக்கத்திற்கான காரணங்களாக இவை இருக்கலாம் என மனிதர்கள் தாங்களே கற்பிதம் செய்து கொள்ளும் காரணங்களே இவை. இப்படியுமிருக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதே தவிர உண்மையில் உணவைச் சுற்றி தண்ணீர் தெளிப்பதன் பின்னிருக்கும் ரகஷியம் அறியப்படாததாகவே இருக்கிறது. 
சமஸ்கிருதத்தில் இப்படிச் செய்வதை சித்ராகுதி (chitrahuti) என்கிறார்கள். பிராமணர்களில் பெரும்பாலானோர் இன்றும் உணவுண்பதற்கு முன்பு இந்தப் பழக்கத்தைத் தவறாது கடைபிடித்து வருகின்றனர். அவர்களளவில் இதற்கு காரணமாகச் சொல்லப்படுவது, நமக்கு உணவளித்த தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதை அவர்கள் தங்களது உணவு நேரத்தின் போது பின்பற்றி வருவதாகக் கூறப்படுகிறது. 
சிலரோ, இலையில் உணவுண்ணும் பழக்கம் இருந்த அக்காலத்தில், இலையில் பரிமாறப்பட்டு உணவைச் சுற்றி எறும்புகள், வண்டுகள் உள்ளிட்ட சிறுபூச்சிகள் அணுகாவண்ணம் தடுப்பதற்காக இலையைச் சுற்றி நீர் தெளிக்கும் பழக்கம் வந்திருக்கலாம் என்கிறார்கள்.
மேற்கண்ட காரணங்களில் எது வேண்டுமானாலும் நிஜமாக இருக்கலாம். ஆனால், இனிமேல் சாப்பிடும் போது இலையைச் சுற்று ஏன் தண்ணீர் தெளிக்கிறார்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால் இனி தலையைச் சொறிந்து கொண்டு அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று சொல்லாமல் இந்தக் காரணங்களில் எதையாவது ஒன்றைச் சொல்லி வைக்கலாம் சரி தானே?!
 
நீங்கள் வாங்கியுள்ள தேன் சுத்தமானதுதானா?
 
 
 
நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை மானே தேனே என்று அழைப்போம். காரணம் தேன் அத்தனை மகத்தானது. அவ்வளவு சுத்தமானது. ஆனால் மனிதன் தான் எல்லாவற்றையும் கலப்படம் செய்து விடுகிறானே! கொம்புத் தேன், மலைத்தேன், கடைத்தேன், தேனடை என்று தேன்களை விதவிதமாக வாங்கினாலும் நாம் வாங்கியுள்ளோமா அல்லது வெல்லக் கரைசலா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது. பொதுவாக தேன் பார்ப்பதற்கு அடர் செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாவினால் நக்கினால் அதன் இனிப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்த நிறமும் நாக்கில் ஒட்டியிருக்காது. இப்படி விஷயம் அறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். தேன் தானே என்று அலட்சியமாக எண்ணாமல் கவனமாக வாங்கிப் பயன்பெறுங்கள்.
ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றியபின், ஒரு சொட்டு தேனை விடுங்கள். தேன் கரையாமல் கலங்காமல் அப்படியே டம்பளரின் அடியில் சென்று படிந்தால் சுத்தமான தேன் என்றறிக.
ஒரு ப்ளாட்டிங் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனை விடுங்கள். அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேன் என்கிறார்கள் செய்து பார்த்தவர்கள்.
சுத்தமான தேனுக்கு எறும்பு வராது என்கிறார்கள். வெல்லத்துக்குதான் எரிம்பு மொய்க்கும். தேனை எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் எறும்பு அண்டாது.
இந்த மூன்று முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும் டிப்ஸ். இவை சரிப்படாது என்று நினைத்தால் நான்காவதாக ஒரு டிப்ஸ் உள்ளது.
ஆற்று மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும். நன்றாக குனிந்து உங்கள் வாயால் அதனை ஊதவும். தேன் மட்டும் உருண்டு ஓடினால் அது தூய்மையான தேன். மணலோடு மணலாக கலந்துவிட்டால் ஊதினால் திரண்டு வராவிட்டால் அது போலியானது. 
சுத்தமான தேனை கண்டு பிடித்து அதனை தினமும் சாப்பிட்டு வந்தால் அதனால் ஏற்படும் பலன்கள் கணக்கிலடங்காதது. தேனின் மருத்துவ பலன்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
கடுமையான வயிற்றுவலி குணமாக ஒரு தேக்கரண்டி தேனை கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தி வந்தால் கடுமையான வயிற்று வலி உடனே நின்றுவிடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.
வயிறு மற்றும் குடற்புண் ஆற தினமும் இரண்டு தேக்கரண்டி தேனை உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு  குடித்து வந்தால் வயிறு மற்றும் குடற்புண்கள் ஆறி விடும்.
உடல் சோர்வு, சளி, வயிற்றுப் பிரச்சனைகள் தீர ஒரு தேக்கரண்டி தேனை ஒரு டம்ளர் சுடுநீரில் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.
வறட்டு இருமல் குணமாக தேனுடன்  நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி அதனுடன் சிறிதளவு ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
மூட்டுத் தேய்மானம், வலி நீங்க மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேனை எடுத்து மூட்டு வலி உள்ள இடத்தில் நன்றாகத தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு தேக்கரண்டி தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.
தேனின் மற்ற பயன்கள் தினந்தோறும் இரவு படுக்க போகும்முன் ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வுற்ற நிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், ரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான ரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் ரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவகளுக்குச் மிகச் சிறந


Share this:

NEAR REJSER DK

Tamilmatrimony.world

DENMARK AIR TRAVELS

, Kommende Film

Kommende Film

Nearairtravelsdk-DANMARK

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies