கனடாவிற்கான சேவை தொடர்பில் சவுதி எயர்லைன்ஸ் முக்கிய அறிவிப்பு
09 Aug,2018
கனடாவிற்கான தனது பயணிகள் விமான சேவைகளை நிறுத்துவதாக சவுதி எயர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கனடாவிற்கும், சவுதி அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகல் நிலையின் எதிரொலியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று காலை தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக சவுதி எயர்லைன்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 13ஆம் திகதியுடன் கனடாவுக்கான மற்றும் கனடாவிலிருந்து புறப்படும் தமது அனைத்து சேவைகளும் நிறுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சவுதி எயர்லைன்சின் இந்த அறிவிப்பு தொடர்பில் கனேடிய போக்குவரத்து அமைச்சு இதுவரை எந்தவித கருத்துகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.