விமானத்துக்குள் சாத்வீக வழியில் போராடி ஆப்கானிஸ்தான் அகதியின் நாடுகடத்தலை முறியடித்த சுவீடன் மாணவி
26 Jul,2018
சுவீடனில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு விமானத்தில் நாடு கடத்தப்படவிருந்த ஒரு அகதியை விமானத்தில் சாத்வீக வழியில் போராடி நாடுகடத்தல் முயற்சியை வெற்றிகரமாக தடுத்த சுவீடன் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளரான இந்த மாணவி சுவீடனில் கோதேபெர்க் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். கடந்த செய்வாயன்று ஒரு இளம் ஆப்கனிஸ்தான் நபர் ஒருவர் அவரது புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் விமானம் மூலம் நாடு கடத்தப்படுவதை அறிந்த இந்த மனைவி குறித்த விமானத்தில் தானும் பயணம் செய்யும் பொருட்டு டிக்கட் வாங்கியுள்ளார். இந்த மாணவி விமானத்துக்குள் சென்று பார்த்தபோது குறித்த அந்த ஆப்கானிஸ்தான் நபாரி காணவில்லை. ஆனாலும், வேறு ஒரு ஆப்கனிஸ்தான் நபர் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படும் பொருட்டு விமானத்துக்குள் இருந்ததை அறிந்தார்.
குறித்த இந்த நபர் விமானத்துக்குள் இருந்து இறக்கப்படும் வரை தான் ஆசனத்தில் அமரப்பவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
பயணிகள் சிலர் தாமதிக்கப் படுவதற்காக ஒரு நபர் நாடுகடத்தப்பட்டு அவரது உயிர் பறிக்கப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை என்று கூறி தனது போராட்டத்தை கையடக்க தொலைபேசி முலம் நேரடி ஒளிபரப்பு செய்தார். இவரது செயலுக்கு விமானத்துக்குள் இருந்த பலர் ஆதரவாக இருந்தபோதிலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவரது நேரடி ஒலிபரப்பு முகநூலில் சில மணி நேரத்தில் 50 இலட்சம் பேரை எட்டியது.
ஒரு ஆங்கில நபர் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது கையடக்க தொலைபேசியை அறிந்தார். ஆனால் அந்த தொலைபேசியை விமான சிப்பந்திகள் மீட்டு அந்த மனைவியிடம் மீண்டும் ஒப்படைத்தனர். ” ஒருவரின் உயிரை பாதுகாக்க எதனை செய்ய முடியுமோ அதனையே நான் செய்கிறேன். விமானத்துக்குள் ஒரு பயணி எழுந்து நிற்கும் வரை விமானி விமானத்தை ஓட்ட முடியாது.எனக்கு வேண்டியதெல்லாம் இந்த நாடு கடத்தலை நிறுத்துவதுதான். பின்னர் நான் இங்குள்ள விதி முறைகளுக்கு கட்டுப்படுவேன். இது சட்ட பூர்வமானது . நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை ” என்று இந்த மாணவி கூறினார்.
இறுதியில் அந்த ஆப்கானிஸ்தான் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதேவேளை, இந்த மாணவியும் வெளியேற்றப்பட்டார். ஆனால் அந்த ஆப்கானிஸ்தான் நபர் பின்னர் வேறு ஒரு விமானத்தில் நாடுகடத்தப்பட்டவிருந்தவுடன் இந்த மாணவி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது. விமானத்தில் விமான கப்டனின் அறிவுறுத்தல்களை பயணிகள் கேட்கவேண்டும், என்றும் இதனை மீறிய குற்றச்சாட்டுக்களுக்காகவே இந்த மனைவி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது.