புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்களுக்கு

07 Jul,2018
 

 

திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று தகுதிக்கு மீறி செலவு செய்து
பிள்ளைகளுக்கு மணமுடித்து வைக்கிறோம். உற்றாரும் உறவினரும் கூடி வாழ்த்தி அத்தனை சம்பிரதாயங்களோ டும் நடைபெறுகிற எல்லாத் திருமணங்களும் வெற்றிய டைகின்றனவா என்றால்ஸ இல்லை என்றுதான் வருத்தத் தோடு சொல்ல வேண்டி இருக்கிறது.
‘‘சமீப வருடங்களாக விவாகரத்து வழக்குகள் பதிவாவது அதிகரித்து வருகின்றன’’ என்று கவலைப்படுகிறார்கள் குடும்ப நீதிமன்ற வழக்கறிஞர்கள்.
‘‘இக்காலத்து இளம் தம்பதிகளுக்கு பொறுமையே இல்லை. சின்ன பிரச்னைகளைக்கூட தாங்கமுடியாமல் சட்டென்று கோர்ட்படி ஏறி விடுகிறார்கள்’’ என்று திருமண கவுன்சிலர்கள் அதற்கு ஒரு விளக் கம் சொல்ல, ‘‘இன்றைய தலைமுறை பக்குவமாகத்தான் நடந்து கொள்கிறது. அந்த சின்னஞ்சிறுசுகளிடையே குழப்பத்தை ஏற்படு த்துவதில் பெரியவர்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது’’ என்று கை நீட்டுகிறார்கள் மனநல மருத்துவர்கள்.
தப்பு யார் மீது என்றாலும், ஒரு பெண் நினைத்தால் எந்த ஒரு இல்ல த்தையும் மகி ழ்ச்சிப் பூந்தோட்டமாக ஆக்கமுடியும் என்பது நாம் அறிந்ததுதான். அப்படி, மணக் கோலம் காண உள்ள பெண்களுக்கும் இளம் மனைவிகளுக்கும் இனிய இல்லறத்துக்கான ஆக்கப்பூர்வமா ன வழிமுறைகளைச் சொல்வதுதான் நோக்கம்.
படித்து பாருங்கள். வாழ்க்கையை உணருங்கள். விவா கரத்து என்ற வார்த்தைக்கே விடைகொடுப்போம்!
நல்ல உறவுக்கு நான்கு விஷயங்கள்!
‘‘ஒண்ணு, ரெண்டு வார்த்தைகள்ல சொல்லி முடிக்கற விஷயமா அது? முன்னாடி யெல்லாம் 17, 18 வயசுலயே கல்யாணம் பண்ணிடு வாங்கஸ பெண்களுக்குனு தனியான கருத்து, விருப்பம் இருந்தாலும் வெளியே சொல்ல முடியாத காலம் அது. எல்லாத்தையும் மனசுக் குள்ள போட்டுப் புதைச்சுக் கிட்டதாலயே பிரச்னைகள் வெடிக்க இட மில்லாம போயிடுச்சு. ஆனா, இப்போ காலம் மட்டுமில்லஸ பெண் களுக்கும் விழிப்பு உணர்வு வந்து ரொம்பவே மாறியிருக்காங்களேஸ’’
– ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்கள், பிரச்னையே இல்லாமல் வாழ வழி சொல்லுங்களேன்’ என்று கேட்ட போது, இப்படித்தான் ஆரம்பித்தார் பிரபல மனநல ஆலோ சகரும் திருமண கவுன்சிலருமான பிருந்தா ஜெயராமன்.
‘‘படிப்பு, வேலை, வருமானம், சுதந்திரமான சிந்தனைனு பெண்கள் இப்ப ரொம்பவே மாறிட்டாங்க. சுயமா தன் கால்ல நிக்கற ஒரு பொண்ணு, போற இடத்துல தன்னை செட்டில் பண்ணிக்க கொஞ்சம் காலம் ஆகும். ஒரு இடத் திலேருந்து பிடுங்கி இன்னொரு இடத்தில் நடும் செடிக்கே, அது வேர்விட கொஞ்சம் கால அவகாசம் கொடுக்குற நாம , வேறொரு குடும்பத்திலேர்ந்து வாழ வர்ற பொண்ணுக்கு புது இடத்தோட சூழலை புரிஞ்சுக்கிட்டு ஒன்றிப்போறதுக்கு நேரம் கொ டுக்கிறதில்லை. அதுதான் பல இடங்கள்ல பிரச்னையா வந்து நிக்குது.
ஒரு உதாரணம் பாருங்கஸ
எனக்கு தெரிஞ்ச ஒரு குடும்பத்துல கல்யாணம் முடிஞ்ச மறு நாள், மாமியார் பொ ண்ணைக் கூப்பிட்டு, ‘பாத்ரூம்ல துணிகள் கிடக்கு.. போய் துவைச்சுப் போடும்மா’னு சொல்லியிருக்காங்க. உடனே, அந்தப் பொண்ணு, ‘ஐயய்யே அதெல்லாம் என்னால முடியாது. எங்கம்மா வீட்டுலகூட ஒரு நாளும் நான் துணி துவைச்சதில்ல’னு சொல்லியி ருக்கா. அன்னிக்கு ஆரம்பிச்சது பிரச்னை. இன்னிக்கு வரை எல்லா த்திலும் தொடருது. மாமியாருக்கும் மருமகளு க்குமான இந்த மனக் கசப்பு, கணவன் மனைவிக்கு இடையிலும் ஊடுருவி, நெருடல் ஏற்படுத்திடுச்சு.
இதே விவகாரத்தை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். முன் னெல்லாம், வீட் டுல பெண் பிள்ளைகளுக்கு எல்லா வேலைகளையு ம் கத்துக்கொடுத்து, பொறுப்பா வளர்த்தாங்க. ஆனா இப்ப செல்லமா வளர்க்கிறேன் பேர்வழினு அவங்கள ஒரு வேலைகூட செய்ய விடறதில்லை. இதனால பாதிக்கப் படப் போறது நம்ம பொண் ணுதா னேனு பெத்தவங்க யோசிக்கணும். நான் முதல்ல சொன்ன சம்பவ த்துக்கு அந்த மாமியாரும் காரணம் தான்னாலும் பெண்ணை தயார்ப்படுத்தாத அம்மா மேலயும் தப்பிருக்கு?’ எனசொல்லும் பிருந்தா ஜெயராமன்,
‘‘கல்யாணத்துக்கப்புறம் முக்கியமான 4 ஏரியாக்கள்லதான் பிரச் னை வருது’ என்று தொடங்கி அவற்றை விரிவாக விளக்கினார்.
‘‘உணர்வுகள், பொருளாதாரம், சமூகம், செக்ஸ்ஸ இவைதான் அந்த நாலு ஏரியாக்க ள். முதல்ல, உணர்வுபூர்வமா வர்ற பிரச்னை பத்தி சொல்லிடறேன்.
உடம்புக்கு முடியாமதான் படுத்திருக்கறப்ப, ‘என்னாச்சும்மா? டல் லா இருக்கேஸ’னு கணவன் அக்கறையா விசாரிக்கணும்னுதான் ஒவ்வொரு மனை வியும் எதிர்பார்ப்பாள். அதுபத்தி கணவன் ஒரு வார்த்தையும் கேக்கலைனா வருத்தப்படுவாங்க. அடுத்து அந்த வருத்தம், ‘இதே எங்க வீடாயிருந்தா, எங்க அப்பா, அம்மா துடிச்சு போயிருப்பாங்க. என் அக்கா வீட்டுக்காரர்லாம், அக்காவுக்கு ஒண்ணுன் னா அப்டியே பறந்துடுவாரே என ஒப்பிட்டபடி வார் த்தைகளா வெளிலவரும். அப்புறம், விவாதம் ஆரம்பிக்கும். பிரச்னை வெடிக்கும்.
பொருளாதாரம் சார்ந்த பிரச்னை தனிக்குடித்தனமா, கூட்டுக் குடும்ப மாங்கிறது முதல், மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா ங்கிறது வரை இதுலதான் வரும். சம்மந்தப்பட்ட ரெண்டு குடும்பமும் கல்யாணத்துக்கு முன்னாலேயே பேசிக் கிறது மூலமா, இந்தப் பிரச் னைகளை முன்கூட்டியே தடுத்துடலாம்.
மூன்றாவது, சமூகம். மாமியார், நாத்தனார் பிரச்னை எல்லாம் இதுலதான் வருது. சிலசமயம் பெண்ணோட அம்மா, அப்பா மூல மாகூட பிரச்னை வரும். ‘உன் ஓர கத்தி வேலைக்குப் போறதா ல, அவ குழந்தைக்கு நீ வேலைக்காரி இல்லை. ஆரம்பத்திலேயே எச்சரிக்கையா இரு. இல்லேன்னா, உன் தலையிலயே எல்லா வேலையையும் கட் டிருவாங்கனு புத்திமதி(?) சொல்ற அம்மாக்கள் உண்டு. ‘அந்த வீடு உன் வீடும்மா. அவுங்க உன் மனுஷங்க.. உன்னால முடிஞ்ச அளவு க்கு வேலைகளைப் பாரு. சீக்கிரமா எல்லார் மனசுலயும் இடம் பிடி ’னு சொல்லி அனுப்பணும். ஆனா, இப்படிச் சொல்ற அம்மாக்கள் ரொம்பக் குறைவுங்கிறதையும் நாம வருத்தத் தோட ஏத்துக்கணும்.
நாலாவது, செக்ஸ்ரீதியான பிரச்னை. பல பெண்களுக்கு தாம்பத்யம் பற்றிய தெளிவான அறிவு இல்லை. கல்யாணம் நிச்சயமாகி இருந் த ஒரு பெண்ணை என்கிட்ட கவுன்சிலிங்குக்காக அழைச்சுட்டு வந் தாங்க. எடுத்ததும் செக்ஸ் பத்தி பேசினா மிரண்டுடுவானு, முதல் ரெண்டு சிட்டிங் பொதுவா பேசி, அவளை ரிலாக்ஸ் பண்ணினேன். அதுக்கப்புறம், தாம்பத்ய உறவு பத்தி நான் விள க்க ஆர ம்பிச்சதும் அவமுகம் போன போக்கை பாக்கணுமே..! செக்ஸ் பத்தி பேசறதையே சகிச்சுக்க முடியாத பொண்ணு, எப்படி கணவனோட எதிர்பார்ப்பு களை பூர்த்தி செய்வா?
அந்தப் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணின பையன் ஆசைப்பட்டு கூப்பிட்டாலும் அவன் கூட வெளில போக தயங்குறா. இந்த தயக்கத்தை சரி பண்ணாம கல்யாணம் பண்ணினா, நிச்சயம் அவங்களுக்குள்ள பிரச்னைவரும் கல்யாணத்துக்கு முன்னால செக்ஸ் பத்தின பயமோ, தயக்கமோ இருந்தா டாக்டர் அல்லது கவுன்சிலர் மூலம் அதை அகற்ற வேண்டியது ரொம்ப அவசியம்ஸ’’ என்று விவரித்த பிருந்தா ஜெய ராமன்,
‘‘கல்யாணமான முதல் ஒரு வருஷம் ரொம்ப முக்கியமான கால கட்டம். அந்த சமயத்துல உணர்ச்சிவசப்படாம, புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டா, இனிமையான இல்லறத்துக்கு பலமான அஸ்திவார ம் போட்டுட்டதா அர்த்தம். அதுக்கப்புறம் எப்படிப்பட்ட பிரச்னையை யும் சுலபமா ஊதித் தள்ளிட முடியும்’’ என்றார் உறுதிபட.
அவரே, ஆரம்பகட்டத்தில் எழுந்த சிறுகீறல் பின்னர் பெரும் விரிசல் ஆன கதை ஒன்றையும் சொன்னார்.
அப்பெண்ணின் பிறந்த வீட்டில் பிறந்தநாள் விழாக்க ளை ரொம்பப் பிரமாதமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், புகுந்த வீட்டி லோ மிகவும் எளிமையாக கோயி லில் ஒரு அர்ச்சனையோடு முடித்துக் கொள்வார்கள். இது அந்த பெண்ணுக்குத் தெரியவில்லை.
அவளது பிறந்தநாள் அன்று ஆரம்பித்தது பிரச்னை.
‘நடுராத்திரி 12 மணிக்கு எங்க வீட்டுல கேக் வெட்டுவா ங்க. காலை யிலேர்ந்து எங்க அப்பா, அம்மா, அண்ணா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போட்டிபோட்டுட்டு விஷ் பண் ணுவாங்க.. கிஃப்ட்ஸ் தருவாங்க. ஆனா , இந்த வீட்டுல ‘ஹேப்பி பர்த்டே’னு வாழ்த்து சொல்லக்கூட யாருக்கும் மனசில்லே’ என்று சண்டை போட்டாள். ‘ஒரு சாதாரண விஷயத்துக்குப் போய் இந்தப் பொண்ணு இப்படி குதிக்குதேஸ’ என்று புகுந்த வீட்டு ஆட்களுக்கு அதிர்ச்சி. வார்த்தைகள் தடித்தது. அவ்வ ளவுதான்.. அந்த பிறந்த நாள், வாழ்க்கையில் மறக்கமுடியாத, மிக மோசமான நாளாகிவிட்டது.
தொடர்ந்து நம்மிடம் பேசிய பிருந்தா ஜெயராமன், ‘‘இதுமாதிரி சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம்கூட சண்டை போடறதை பெண்கள் தவிர் க்கணும். இதே விஷயத்தை இதமா கணவன்கிட்ட அந்தப் பொண்ணு சொல்லியி ருந்தா, ‘அடடாஇவ மனசுல இப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கா? அதை நிறைவேத் தணுமே’னு பரபரப்பா கியிருப்பார் கணவர். வீட்டுல எல்லார்கிட்டயும் பேசி, பெரிய விழாவுக்கே ஏற்பாடு பண்ணியிருப்பார். அந்த நாளும் வாழ்க்கையில மறக்க முடி யாத சந்தோஷ நாளாகியிருக்கும்.
அதேமாதிரி, எளிமையா வளர்ந்த பொண்ணு, ஆடம்பரமா இரு க்கிற வீட்டுக்குப் போறப்ப கொஞ்சம் கஷ்டமாயிருக்கும். அது மாதிரி சூழ்நிலையில எதுக்கும் கமெண்ட் கொடுக்காம அமை தியா இருந்துட்டாலே, பிரச்னைகளை தவிர்த்துடலாம் என்ற வர் தொடர்ந்தார்ஸ
‘‘தொண்ணூறு சதவிகித வீடுகள்ல மகளுக்கு ஒரு மாதிரி, மருமகளுக்கு ஒரு மாதிரிதான் எல்லாமே நடக்கும். அதுக்குக் காரணம், மருமகளை அவமானப்படுத் தணும்கிற நோக்கம் இல்லை. மகள்கிட்ட உரி மையா நடந்துக்க முடியும்கிற தாயோட நம்பிக்கை! தன்கிட்டே யும் உரிமை எடுத்துக்கற அளவுக்கு மருமகள் பாசமா நடந்துக்க ணுமே தவிர, இதனால மனம் சோர்ந்து உட்கார்ந்துடக் கூடாது.
அதேமாதிரி, மாமியார், மருமகளுக்கு இடையே பிரச்னை வர்றப்ப, சின்ன விஷயத் துக்கெல்லாம் கணவனிடம் புகார் சொல்றதை தவிர் க்கணும். அது அவரை தர்ம சங்கடமான சூழ்நிலையில் நிறுத்திடும். எந்தப் பிரச் னையா இருந்தாலும், முடிஞ் சவரைக்கும் பொண்ணுங்க தானே தீர்வு காணத் தெரிஞ்சுக்கணும். எடுத்ததுக் கெல்லாம் அம்மா கிட் டே போய்ச் சொல்றதும் தேவையில்லாதது. அவங்க உங்கமேல இருக்கற அக்கறையில், உதவுறதா நினைச்சிட்டு, உங்களையும் குழப்பி, பிரச்னை யையும் ஊதி பெரிசாக்கிட வாய்ப்பிருக்கு. பாசம் கண்ணை மறை ச்சிடும்! அதனால, தோழியிடமோ, கவுன்சிலரிடமோ ஆலோச னை கேட்கலாம்ஸ’’ என்று ஆரோக்கிய மான வழிமுறைகளை பட்டியலிட்டவர், இறுதியாக சொன்னதுஸ
கடைசியா சொல்றேன்னாலும், இது ரொம்ப முக்கியமான விஷய ம். கல்யாணமாகி ஒரு வாரத்துக்குள் தம்பதிக்குள் தாம்பத்ய உறவு நடந்துடறது நல்லது. ஏதாவது பிரச்னைன்னா அதை குடும் பத்தில் வேற யார்கிட்டயும் சொல்லி பயமுறுத்தாம, டாக்டரையோ, கவுன்சிலரை யோ போய்ப் பார்க்கணும். இந்த விஷயத்தில் கணவன், மனைவி ரெண்டு பேருமே புரிஞ்சு நடந்துக்கணும். எதிர் பார்த்த அனு சரணை கிடைக்காத ஆண்களுக்கு, மனை வியை பார்த்தாலே எரி ச்சல் வரலாம். இதுமாதிரி பிரச் னைகள் வராம தவிர்க்க, இப்போ திருமண கவுன்சிலிங் வகுப்புகள் நடக்குது. அதுல பங்குபெற்று, வரு ம்முன் காப்பது புத்திசாலித்தனம்ஸ’’
விட்டுக்கொடுப்பதிலும் வேண்டும் எல்லை!
‘புகுந்த வீட்டில் எல்லோரையும் அனுசரித்துப் போவது நல்லது தான் என்றாலும், அது விபரீதத்தில் போய்முடியவும் வாய்ப்பி ருக்கிறது’ என்று மாறுபட்ட கருத்து சொல்கிறார் திருமண கவுன்சிலர் சரஸ்வ தி பாஸ்கர்.
‘‘கம்யூனிகேஷன் கோர்ஸ் படிக்கிறவங்களுக்கு 4 டபிள்யூ (W), ஒரு ஹெச் (H) பத்தி சொல்லித் தருவாங்க. அதுஸ வென்(When), வாட் (What), வொய்(Why), வேர்(Where), அப்புறம் ஹவ்(How) அதாவது, எப்போ பேசணும்? என்ன பேசணும்? ஏன் பேசணும்? எங்கே பேசணும்? எப்படி பேசணும்? இந்த ஐந்தும் எல்லாருக்குமான பாடம்னாலும், புது இடத்துல வாழப்போற பெண்களுக்கு அவசியமான பாடம்!
ஒரு உதாரணம் சொல்றேன். அந்தம்மாவுக்கு கல்யாணமாகி பல வருஷமாச்சு. புகுந்த வீட்டுல ரொம்ப நல்ல பேரு. ஒருநாள் என் கிட்ட வந்தாங்க. ‘காரணமே இல்லாம என் குழந்தைகளை போட் டு அடிக்கிறேன். கணவர்கிட்ட சண்டைபோடுறேன். எனக்கே நான் செய்றது தப்புனு தெரியுது. ஆனா, எப்படி சரிபண்ணிக்கிறதுனு தெரியல’னு கல ங்கிப் போய் சொன்னாங்க.
புகுந்த வீட்டுல மாமனார், மாமியார்லருந்து நாத்தனார் வரைக்கு ம் இவங்களை தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடுறாங்க. பிற கென்ன பிரச்னைங்கறீங்களா? பிரச்னையே அதுதான். நல்ல பேர் வாங்கணும்னு, முழுக்க முழுக்க தன்னை மாத்திக்கிட்டாங் க அவங் க.
கல்யாணமான புதுசுல மாமியார் திட்டினாக்கூட பதிலுக்கு ஒரு வார்த்தைகூட பேசாம, அமைதியாவே இருந்திருக்காங்க. எந்தப் பிரச் னைனாலும் முதல்ல விட்டுக்கொடுத்துப்போறது இவ ங்கதான். வீட்டுல சமையல்லருந்து துணி துவைக்கிற து, பாத்திரம் கழுவுறது, ஓ ரகத்தியோட குழந்தைகளை ப் பாத்துக்கிறதுஸ எல்லாமே இவங்க தான். இத்தனை க்கும் இவங்க ஹவுஸ் வைஃப் கிடையாது. வேலை க்குப் போறவங்க.
வீட்டு வேலை அத்தனையும் பண்ணிட்டு, எல்லா விஷயங்களுக்கும் விட்டுக் கொடு த்தும் போனதோட டென்ஷன் உள்ளுக்குள்ள ஏறி உட்கார்ந்தி ருக்கு. அது, ஏதாவது ஒரு ரூபத்துல வெளியாகணும் இல்லை யா? மாட்டினது அந்தம்மாவோட கணவரும் குழந்தைகளும் தான்.
தினம்தினம் கணவரோட சண்டை. கணவரும் எத்தனை நாள் பொறுப்பார்? பதிலுக்கு அவரும் ஏதோ சொல்லவும், அடுத்ததா அத்தனை கோபமும் பிள்ளைகள் மேல. குழந்தைங்க என்ன கேட்டாலும் அடி, உதை. அப்புறமாஸ ‘இப்படி தப்பே செய்யாத குழந்தைகளைப் போட்டு அடிச்சிட்டோ மே’ங்கிற குற்ற மனப்பான்மையில தனிமை யில அழற துனு பாவம்ஸ ரொம்பவே நொந்து போயிருந்தாங்க.
இந்த நிலைமையிலதான் என்கிட்ட வந்தாங்க. ஆரம்பத்துலருந்து எல்லாத்துக்கும் அடங்கிப் போனதும், தனக்கு தப்புனு பட்டதை சொ ல்லவேண்டிய விதத்துல சொல்லாம விட்டதும்தான் இன்னிக்கு அவங்கள இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தி இருக்குங்கிறதை விளக்கமா எடுத்துச் சொன்னேன்.
ஆனா, திடீர்னு அவங்க தன்னை மாத்திக்க முடியாது இல்லை யா? அப்படி செய்தா, புகுந்த வீட்டு ஆட்கள் குழம்பிப் போயிடு வாங்க. அதோட, இவங்க இத்தனை வருஷமா சம்பாதிச்ச நல்ல பேரும் போயிடும். அதனால, அவங்க நடவடிக்கைகள் ல கொஞ்சம் கொஞ்சமா சில மாற்றங்களை செய்யச் சொல்லி அனுப்பி வெச்சேன்.
அடக்கம், பணிவு, விட்டுக்கொடுத்துப்போற குணம் எல்லாமே பெண்களுக்கு வே ணும்தான். ஆனா, எதுக்குமே ஒரு எல்லை இருக்கு. விட்டுக்கொடுத்துப் போகணு மேங்கிறதுக்காக நம்மளோட சுய மரியாதையையும் மனதிருப்தியையும் இழக்க வேண்டிய அவசியமில் லை. மீறினா, அது மனநோய்லதான் கொண்டுபோய் விடும்.
புகுந்த வீட்டுல அடியெடுத்து வெச்சதுலருந்தே, நீங்க என்ன நினைக்கறீங்கஸ எந்தளவுக்கு உங்ககிட்ட மத்தவ ங்க உரிமை எடுத்துக்கலாம் எதுக்குமேல கூடாதுங்கிற தைப் பத்தியெல்லாம் மென்மையான முறையில நீங்க உணர்த்திடணும். அப்போதான் நீங்களும் நல்லா இருக் க முடியும். குடும்பத்துல இருக்கிற மத்தவங்களும் சந்தோஷப்பட முடியும்’’ என்கி றார் சரஸ்வதி.
மறைக்க வேண்டாம்ஸ மனம்விட்டு பேசுங்கள்!
‘‘என்னைப் பொறுத்தவரைக்கும், கணவனும் மனைவியும் தின மும் நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசிக்கிட்டா, எந்தப் பிரச் னையும் வராது. அது கூட்டுக் குடும்பமா இருந்தாலும் சரிஸ தனிக் குடித்தனமா இருந்தாலும் சரிஸ’’ என்கிறார் உளவியல் நிபுணர் டாக்டர் ராஜ்மோகன்.
‘‘சமீபத்துல எங்ககிட்ட வந்த ஒரு தம்பதியோட கதை இது. அவர் பேர் ஷ்யாம்னு வெச்சுக்கலாம். சின்ன அளவுல பிஸினஸ் பண்றவர். தனக்கு வரப்போற பொண்ணு நிறை யப் படிச்சிருக்கணும்ஸ பார்க்க ரொம்ப அழகா இருக்கணு ம்ஸ இது ரெண்டும் தான் ஷ்யாமோட எதிர்பார்ப்பு.
அவர்விரும்பின மாதிரியே பொண்ணும் அமைஞ்சது. கல்யாணம் முடிஞ்சுஊட்டி, கொடைக்கானல்னு ரெண்டு பேரும் ஜாலியா சுத்தியிரு க்காங்க. சென்னை வந்தபிறகும் தினமும் பீச், சினிமா, ஷாப்பி ங்னு ஆறேழு மாசம் பொழுது போயிருக்கு.
திடீர்னுபார்த்தா, அவரோடதொழில்ல ஏதோ பெரிய பிரச்னை. ஆள் அப்படியே தலைகீழா மாறிப்போய், எந்நேரமும் ஃபேக்டரியி லயே இருக்க ஆரம்பிச்சுட்டாரு. தன்னையே சுத்திச் சுத்தி வந்த வரு, இப்படி ஏன் மாறிட்டாருனு அந்தப் பொண்ணு க்குக் குழப்ப மாயிடுச்சு.
ஒருநாள் ரொம்பக் கோபமாகி, நேரா மாமனார் வீட்டுக்குப் (அவங்க ளும் சென்னை யிலதான் இருக்காங்க) போய், ‘என்ன உங்க மகன் இப்படிப் பண்றாருஸ’னு கோபமா கேட்டிருக்கா. அதுக்கு அவங்களும் டென்ஷனாகி, ‘என் மகன் எவ்ளோ கஷ்டப்படு றான். அவனைப் புரி ஞ்சுக்காம அவனைப் பத்தி எங்ககிட்டயே குறை சொல்றியா? படிச்ச திமிர்ல எது வேணும்னாலும் பேசிடறதா?’னு கொதிச்சிரு க்காங்க.
இந்தப் பொண்ணு அந்த வார்த்தையில காயமாகி, கிளம்பி நேரா அவ ங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டா. இதுக்கு நடுவுல ஷ்யாமோட அப்பா போன் பண்ணி அவரை வீட்டுக்கு வரவெச்சிருக்கார். அவங்க என்ன சொன்னாங்களோஸ ரொம்பக் கோபமா மனைவியைத் தேடிப் போன ஷ்யாம், எதுவும் கேக்காம மனைவியை அவளோட அப்பா, அம்மா முன்னாலயே வெச்சு, பளார்னு அறைஞ்சிட்டார்.
அப்புறம், ‘என் கண்ணு முன்னாடியே என் மகளை நீ எப்படி அடிக்க லாம்?னு அவங்க அப்பா ஏதோ ஆத்திரமா பேச, விஷயம் ரொம்பப் பெரிசாகி, விவாகரத்து வரை போயிடுச்சு. இந்த ஸ்டேஜ்லதான் என்கிட்ட வந்தார் ஷ்யாம்.
பசங்களும் சரி, பொண்ணுங்களும் சரி, எப்படிப்பட்ட ஜோடி தனக்குத் தேவைங்கிற துல இன்னமும் குழப்பமாவே இருக்காங்க.
இந்த ஷ்யாமை எடுத்துக்கிட்டீங்கன்னா, அழகான, தன்னை விடப் படிச்ச பொண்ணு வேணும்னு நினைச்சாரே தவிர, தொழி ல்னா என்னனு புரிஞ்சுக்கிற, திடீர்னு ஒருநஷ்டம் வந்தா அனுச ரிச்சுப் போற பொண்ணு வேணும்னு நினைக்கல. அந்தப் பொ ண்ணுக்கும் ‘கணவர் தொழிலதிபர். நிறைய காசு இருக்கு’ங்கிறது தெரிஞ்ச அளவுக் கு ‘தொழில்ங்கிறது ரோலர் கோஸ்டர்மாதிரி ஒருநேரம் ஏத்தியும் விடும். இறக்கியும்விடும். நாமதான் அட்ஜஸ்ட் செய்துட்டுப் போகணும்’கிறது தெரியல.
‘எவ்ளோ நகை வாங்கிக்கொடுத்திருக்கேன். கார் இருக் கு. பங்களா இருக்கு. வேற என்ன வேணும்?’கிறார் ஷ்யா ம். ஆனா அந்தப்பொண்ணு, ‘இப்படி ஃபேக்டரியே கதியா இருக்கிறவர் அதையே கல்யாணம் செய்திருக்க வேண்டியதுதானே?’னு கேக்கிறா.
யோசிச்சு பாத்தா பிரச்னை சின்னதுதான். அதை இவங்களே தான் பெரிசாக்கிட்டாங்க. கணவர் செய்யறது பிடிக்கலைன்னா அவர்கி ட்டயே பொறுமையா இந்தப் பொண்ணு எடுத்துச் சொல்லியிருக்க லாம். அதை விட்டுட்டு நேரா மாமனார் வீட்டுக்குப் போய் எகிறி னது தப்பு. கம்பெனியில என்ன மாதிரி பிரச்னைகள். ஏன் இப்படி லேட்டாகுதுஸ இன்னும் எத்தனை நாள் இப்படியாகும்னு மனைவி கிட்ட சொல்லாம விட்டது ஷ்யாமோட தப்பு. ரெண்டு பேரும் அவ ங்கவங்களோட தேவைகள் பத்தியும் விருப்பு வெறுப்புகள் பத்தியு ம் மனம் விட்டு பேசிக்கிட்டா எல்லா பிரச்னையும் தீர்ந்துடும்னு சொல்லி அனுப்பி னேன். மனத் தெளிவோடு போனாங்க’’ என்ற ராஜ்மோகன்,
‘‘எப்பவுமே கணவனும் மனைவியும் அவங்களோட பிரச்னைகளை அவங்களேதான் தீர்த்துக்கணும். தீர்த்துக்க முடியாத அளவுக்கு சிக்கல் அதிகமா இருந்தா கவுன்சிலர்களை அணுகலாம். அப்படி இல்லாம மூணாவது மனுஷர்கிட்ட போகும்போதேஸ அது சொந்தப் பெற்றோராக இருந்தாலும், பிரச்னையோட உண்மைத் தன்மை மாறிப் போய் அதுக்கு வேற கலர் வந்துடுது. அப்புறம், உண்மையான பிரச்னைய பத்தி யாரும் பேச மாட்டாங்க. அதுக்குப் பிறகு நடக்கிற விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்கும்..’’ என்றார்.
கல்யாணத்துக்கு முன்பே பேசி, சில விஷயங்களில் முடிவு செய்யாமல் விடுவதும் கூட பல பிரச்னைகளை கொண்டு வரும் என்பது இவரது கருத்து.
‘‘உதாரணத்துக்கு வேலைக்குப் போற ஒரு பெண்ணோட குடும்பம், அவளோட வருமானத்தை மட்டுமே நம்பி இருக் கலாம். திடீர்னு அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் முடிவானா அந்தக் குடும்பம் ரொம்ப சிரமப்படும். அந்தப் பொண்ணுக்கும் தன்னோட பிறந்த வீடு சிரமப்படுறது மனசுக்குக் கஷ்டமா இருக்கும். இந்த மாதிரி சூழ்நிலை கள்ல முன்னாலயே அவர்கிட்ட கொஞ்சகாலத்துக்கு என்னோட சம்ப ளத்திலருந்து எங்க வீட்டுக்கு உதவி பண்ண வேண்டியிருக்கும்னு சொல்லிடலாம். கல்யாணத்துக்குப்பிறகுமெதுவாசொன்னா, ‘பாத்தி யா ப்ளான்பண்ணி இப்போ சொல்றானு கணவனுக்குக் கோபம் வரு ம். பிரச்னை ஆகும். இல்லற வாழ்க்கையோட வெற்றியில பணத்துக்கு நிச்சயமா வே ஒரு பெரிய பங்கு இருக்கு!’’ என்ற டாக்டர் ராஜ்மோகன், கணவன்-மனைவி உறவில் விரிசல் விழாமல் இருக்க, சொன்ன டிப்ஸ்ஸ
‘நீங்க அவரை மாதிரி டிரஸ் பண்ணுங்களேன்ஸ இவரை மாதிரி ஹேர்ஸ்டைல் வெச்சுக்குங்களேன்’ என்று ஒரு போதும் கணவரை பிறருடன் ஒப்பிட்டு பேசவே கூடாது. வெளிப்பார்வைக்கு அந்த கணவர் கண்டுகொள்ளாதது போல தெரிந்தாலும் உள்ளுக்குள் நிச்சயம் புழுங்கிக் கொ ண்டிருப்பார். ‘நீங்கதான் எனக்கு சூப்பர்மேன்’ என்று அவருக்கு உணர்த்தவேண்டும்.Share this:

Hajj Packages

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies