புலிகளின் பூமா Anti Aricraft துப்பாக்கி மவுண்ட்--3

18 Jun,2018
 


இன்றும்கூட இலங்கை போன்ற நாடுகளினால் இரவில் Dogfight செய்ய முடியாது. அதற்கு விமானத்தில் உள்ள ராடர் சிஸ்டம் மாற்றப்பட வேண்டும். Dogfight  செய்ய உகந்த விமானங்களில் உள்ளது 2D ராடர்கள். இன்றைய நவீன தாக்குதல் விமானங்களில்  3D ராடர்கள் உள்ளன. இவைதான் எதிரி விமானத்தின் வேகம், உயரம், திசை என அனைத்தையும் துல்லியமாக கணிக்கும். ஆனால் 2D ராடர்களால் அது முடியாது. எதிரி விமானங்களின் திசை, வேகம் என்பவற்றை கணிக்குமே தவிர, விமானத்தின் உயரத்தை துல்லியமாக கணிக்காது. இரவில் Dogfight செய்வதெனில், விமானத்தின் திசை, வேகம் எவ்வளவு முக்கியமோ- அதேயளவு முக்கியம் விமானத்தின் உயரமும்.
விமானப்படையிடம் உள்ள பழைய விமானங்களில் உள்ள 2D ராடர்களை வைத்து வான்புலிகளுடன் Dogfight செய்ய முடியாதென்ற முடிவிற்கு விமானப்படை வந்தது. ஆனால் வான்புலிகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு தம்மிடமிருந்து நழுவிச்செல்வதையும் விரும்பவில்லை. அதனால் வேறொரு ஐடியா போட்டார்கள்.
 
தம்மிடமுள்ள பழைய விமானங்களிற்கு 3D ராடர்கள் பொருத்துவதே அந்த திட்டம்!
இது பெரும் செலவான, தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளிற்கு மட்டுமே சாத்தியமான திட்டம். என்றாலும், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்காவிடம் கேட்டுப்பார்க்கலாமென்பதால், இந்த திட்ட வரைபை பாதுகாப்பு செயலாளரிடம் கையளித்தனர். ஆனால் அதனை நிராகரித்து விட்டார். ஆனால், மூன்று நாடுகளின் நிபுணர்கள் முன்மொழிந்தது இதைவிட நல்ல திட்டமென்பது கோத்தபாயவின் எண்ணம். இறுதியில் அதுதான் வெற்றியளித்தது!
இந்தியா வழங்கிய Aricraft Artillery  ரகத்தை சேர்ந்த 12.7, 14.5 mm கனோன்கள் எல்லாம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டது. கொழும்பை மையப்படுத்தி  Anti Aricraft Artillery துப்பாக்கிகளுடன் இராணுவத்தினர் அதிகளவில் நிறுத்தப்பட்டனர். விமானப்படை, கடற்படைக்கும் Anti Aricraft Artilleryகள் வழங்கப்பட்டிருந்தன
விடுதலைப்புலிகளிடம் இருந்த இரண்டு விமான ஓடுபாதைகள் பற்றி, இராணுவத்தில் சேர்வதற்கு அட்மிஷன் போர்ம் நிரப்பி அனுப்புவருக்கு கூட தெரிந்திருந்தது. இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் புலிகள் ஏதாவது தாக்குதல் நடத்தினால், விமானப்படை விமானங்கள் கிளம்பி வந்து வன்னியில் பதில் தாக்குதல் நடத்திவிட்டு செல்லும். வன்னியில் தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் என விமானப்படை தயாரித்து வைத்திருந்த லிஸ்டில்  முதலிரண்டு இடங்களில் இருந்த இடங்கள் வான்புலிகளின் ஓடுபாதைகள்.
புதுக்குடியிருப்பு கேப்பாபிலவில் இருந்த ஓடுபாதை, இரணைமடுவிற்கு தெற்கே பனிச்சங்குளத்தில் இருந்த ஓடுபாதை ஆகிய இரண்டுமே அவை. உண்மையில் இந்த இரண்டு ஓடுபாதைகளையும் புலிகள் ஏன் அமைத்தார்கள் தெரியுமா?
 
அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, வான்படையை திசை திருப்ப. பிரமாண்ட ஓடுபாதை அமைத்து வைத்திருந்தால்தான் தம்மிடம் என்ன ரக விமானம் உள்ளதென்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பது முதல் காரணம். வான்புலிகளிடம் எந்த ரக விமானம் உள்ளதென்பது 2007 இன் தொடக்கம் வரை இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியவில்லை. நவீன ரக ஜெட் விமானங்கள் இல்லையென்பது அவர்களிற்கு தெரியும். ஆனால் இலகுரக விமானத்தில் எந்த ரகம் என்பதுதான் குழப்பமாக இருந்தது. அதுதவிர, ஹெலிகொப்டர்கள் ஏதாவது இருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டார்கள். புலிகள் அமைத்த நீளமான ஓடுபாதை உண்மையில் இலங்கை பாதுகாப்பு தரப்பினரை நன்றாக குழப்பி விட்டது.
புலிகளின் ஓடுதளமென ஒரு பகுதியை அடையாளம் காட்டினால், அதுதான் வான்புலிகளின் மையமென பாதுகாப்புதரப்பினர் நினைப்பார்கள். அந்த பகுதியையே குறிவைப்பார்கள். வான்புலிகளின் முகாமை வேறு ஒரு இடத்தில் அமைத்தால் பாதுகாப்பு தரப்பின் அவதானத்தில் இருந்து தப்பிக்கலாம்! இதுவும் ஒரு துணைக்காரணம்.
நீளமான ஓடுபாதைகளை புலிகள் அமைத்ததற்கு இரண்டாவது காரணம்- பொட்டம்மானின் ஐடியா. உக்ரேன் ஆயுதவியாபாரியொருவரிடம் புலிகளின் வெளிநாட்டு ஆட்கள் ஏமாந்த கதையொன்று உள்ளது. அதை பின்னர் தமிழ் பக்கத்தில் தருவோம். அதனுடன் தொடர்புடைய விசயம் அது.
 
கடல்வழி விநியோகங்கள் சிக்கலாகிக்கொண்டு செல்ல, ஆகாய மார்க்கமாக ஆயுதங்களை கொண்டு வருவதே ஒரே வழியென்பதும், இந்த ஓடுபாதைகள் அமைக்க காரணம்.
அல்லது, இவ்வளவு பெரிய ஓடுபாதைகள் புலிகளிற்கு தேவையே இல்லை. புலிகளிடமிருந்த ZLIN ரக விமானங்கள் ரேக்ஓவ் ஆக 600 மீற்றர் ஓடுதளங்களே போதும்.
இதற்காக, கேப்பாபிலவு, பனிச்சங்கேணி ஓடுபாதைகளை வான்புலிகள் பயன்படுத்தவே இல்லையென்று அர்த்தமல்ல. 2006இல் வான்புலிகளின் ஓடுபாதைகள் மீது வான்படை விமானங்கள் குண்டுவீச்சை ஆரம்பிக்கும்வரை பயிற்சி நடவடிக்கைகளிற்காக இந்த ஓடுபாதைகளைதான் பாவித்தார்கள்.
இந்த சமயத்தில் நடந்த ஒரு சடுகுடு ஆட்டத்தை பற்றியும் சொல்ல வேண்டும்.
விடுதலைப்புலிகளின் உள்ள விமானம் என்ன, புலிகளின் விமான ஓடுபாதைகள் எங்குள்ளதென்பதை அறிய இலங்கை பாதுகாப்புதுறை கடுமையான முயற்சிகளை செய்துவந்தது. 1998 இல் புலிகளின் விமானங்கள் முதன்முதலில் பகிரங்கமாக உலகிற்கு அறிவிக்கப்பட்டது. முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்தினத்தின்போது பூ தூவியது. இதையடுத்து புலிகளின் விமானங்கள் பற்றிய தகவலை திரட்ட பாதுகாப்புதுறை அப்போதே களமிறங்கி விட்டது.
 
1998 இல் வான்புலிகளிடம் இரண்டேயிரண்டு முகாம்கள்தான் இருந்தன. பின்னாளில் வான்படையை ஏமாற்ற அமைக்கப்பட்ட ஓடுபாதைகள் இருந்த பகுதிகள்தான் முகாம்களாக இருந்தன. விமானத்தை பாகங்களாக பிரித்து அடர்காட்டிற்குள் அமைந்த ஹங்கருக்குள் பாதுகாத்து வைத்துவிட்டு, பயிற்சியின்போது மாத்திரம் கென்டெயினர்களில் ஓடுபாதைக்கு அருகில் கொண்டு வந்து, விமானத்தை பொருத்திக்கொள்வார்கள். அப்போது வான்படையிடம் இருந்தது IAI Scout ரக UAV விமானங்கள். அவ்வளவு துல்லியமாக இலக்கை அடையாளம் காண முடியாததுடன், நீண்டநேரம் கண்காணிப்பில் ஈடுபட முடியாதவை. இதை வைத்து புலிகளின் விமானங்களையும், வான்புலிகள் முகாமையும் அடையாளம் காண முடியாதென்பது பாதுகாப்பு தரப்பிற்கு தெரியும்.
இதற்காக அவர்கள் கையிலெடுத்தது அமெரிக்க வெர்ஷன் ஒன்று!
1996 இன் பிற்பகுதியில் இலங்கைக்கு அமெரிக்கா பயிற்சியளிக்க ஆரம்பித்தது. Operation Balanced Style என்ற நடவடிக்கையில் நேரடியாக யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் வழங்கப்போவதில்லையென வாஷிங்டன் அதிகாரிகள் தொடர்பாளர்கள் மூலம் புலிகளிற்கு அறிவித்திருந்தார்கள். ஆனால் அங்கு அமெரிக்காவின் விசேட படையினர் (இவர்களைதான் Green Berets என அழைக்கிறார்கள்) இரகசிய பயிற்சி வழங்கினார்கள். அந்த பயிற்சியின் முடிவில் வெளியேறியவர்கள்தான் நான்காம் ஈழப்போரில் புலிகளிற்கு சிம்மசொப்பனமாக இருந்த ஆழஊடுருவும் படையினர்.
 ஆழ ஊடுருவும் படைப்பிரிவு சிப்பாய்
ஆழ ஊடுருவும் படையணியின் முதலாவது அணி 1996 இன் பின்பகுதியில் வன்னிக்குள் இறங்கியது. அவர்களின் இலக்கு பிரபாகரன்!
பிரபாகரனை ஆழஊடுருவும் படையணியினர் இரகசியமாக பின்தொடர்ந்து இலக்கு வைத்தது சுவாரஸ்யமான பெரிய பகுதி. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறோம்.
புரெபஷனலான ஆழஊடுருவும் அணி வன்னி களத்தில் இறங்கியது 1998 மத்தியில். இதே ஆண்டின் இறுதியில் ஒட்டுசுட்டானை இராணுவம் கைப்பற்றியது. ஒட்டுசுட்டான்- மாங்குளம் வீதியில் இராணுவத்தின் நிலைகள் இருந்தன. கேப்பாபிலவில் வான்புலிகளின் முகாம் அமைந்திருந்த இடத்திற்கும் இராணுவத்திற்குமிடையில் இருந்த இடைவெளி ஏழு கிலோமீற்றர்கள்.
வான்புலிகளின் முகாம், ஓடுபாதையை நோக்கி ஆழஊடுருவும் படையணியினர் உளவுத்தகவலிற்காக ஊடுருவ தொடங்கினார்கள். புதுக்குடியிருப்பு, மன்னாகண்டல், கேப்பாபிலவு காட்டுபகுதிகளில் அடிக்கடி இராணுவத்தின் தடயப்பொருட்களை புலிகள் கண்டுபிடித்தனர். இதில் புலிகளை குழப்பிய விடயம்- இராணுவத்தின் இலக்கு விமானப்படையா, பிரபாகரனா என்பதை ஊகிக்க முடியாமல் இருந்தது. புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் சாலையின் கிழக்கு பக்கம் வான்புலிகள் முகாம் இருந்தது. மேற்கு பக்கமாக பிரபாகரனின் முகாம் இருந்தது. யுத்தத்தின் பின்னர் படையினர், மக்கள் பாவனைக்காக புதுக்குடியிருப்பு- ஒட்டுசுட்டான் சாலையில் திறந்துவிட்ட முகாமைத்தான் குறிப்பிடுகிறோம்.
 
பிரபாகரன் நான்கு அடுக்கு பாதுகாப்பு அகழிக்குள் இருந்தார் என அரசு பிரச்சாரம் செய்தது. அந்த பாதுகாப்பு வீட்டை பார்வையிட சென்றவர்களிற்கு தெரியும்- அங்கிருந்த சிப்பாய்கள் எப்படி கதைவிட்டார்கள் என. இராணுவம் முன்னேறி வர பிரபாகரன் எந்தப்பக்கத்தில் இருந்தார், எப்படி சண்டையிட்டார் என ‘சும்மா அடித்து விட்டார்கள்’. ஆனால் உண்மையில், ஆழ ஊடுருவும் அணிகள் இங்கு நுழைய தொடங்கியதும் பிரபாகரன் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
பிரபாகரனை குறிவைக்கிறார்களா? அவரது இருப்பிடத்தை அடையாளம் கண்டுவிட்டனரா? வான்புலிகளின் விமானங்களை குறிவைக்கிறார்களா? அல்லது பிரபாகரன், விமானம் இரண்டையும் குறிவைக்கிறார்களா என்ற குழப்பம் புலிகளிற்கு ஏற்பட்டது. வான்புலிகளை தேடி வந்த ஆழஊடுருவும் படையினர்தான், இலக்கு வசதியாக அமைய வான்புலிகளின் தளபதி கேணல் சங்கரை தாக்கினார்கள். சங்கர் தாக்கப்பட்ட இடத்திற்கும், பிரபாகரனின் முகாமிற்குமிடையில் இருந்தது வெறும் ஒன்றரை கிலோ மீற்றர் இடைவெளிதான்!
2002 இல் அந்த தாக்குதல் நடந்தது. உடனடியாக பிரபாகரனின் இருப்பிடத்தை மாற்றினார்கள்.
 இதுதான் பிரபாகரனின் புதுக்குடியிருப்பு முகாம்
வான்புலிகளின் விமானங்களை இயக்கி பயிற்சியில் ஈடுபடுவதை, காட்டுக்குள் மறைந்திருக்கு இராணுவம் கேட்ககூடும். அப்படி நடந்தால், வான்புலிகளின் இருப்பிட மையத்தை இராணுவம் அடையாளம் கண்டுவிடக்கூடும்.
இராணுவம் மட்டுமல்ல, அந்த பகுதிக்கு வரும் வேட்டைக்காரர்கள் வேறு தேவைக்காக வரும் போராளிகள் யாருமே விமானங்களின் இருப்பிடத்தை அறிந்துவிடக்கூடாது என்பதில் வான்புலிகள் கவனமாக இருந்தனர். இதற்காக அவர்கள் ஒரு ஐடியா செய்தனர்.
ஓடுபாதையை சுற்றி சிறிய காவல்நிலைகளை புலிகள் அமைத்து வைத்திருந்தனர். விமானம் பறப்பில் ஈடுபடும் நாளில் காவல்நிலைகளில் ட்ரக்ரர்களை கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள். விமானம் இயங்க ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர், ட்ரக்ரர்களை உச்சஸ்தாயி வரை ரேஸ் பண்ணிக்கொண்டேயிருப்பார்கள். அந்த காவல்நிலை பக்கமாக செல்பவர், ட்ரக்ரர் உறுமுவதைதான் கேட்பார். விமான சத்தத்தை கேட்க மாட்டார். இரணைமடுவிலும் இதே உத்தியைத்தான் பாவித்தார்கள்.
வான்புலிகளின் இருப்பிடத்தை தரை வழியாக கடுமையாக தேடியது இராணுவம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
 கேணல் சங்கர்
2006 ஆம் ஆண்டின் பின்னர் இந்த இரண்டு ஓடுபாதைகளையும் புலிகள் பாவித்தது இல்லை. 600 மீற்றர் நீளமான சமதரை இருந்தால் போதும். புலிகள் விமானத்தை கிளப்பிவிடுவார்கள். அரசகட்டுப்பாட்டு பகுதிகளில் எட்டுமுறை வான்புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஐந்துமுறை வான்புலிகள் எங்கு விமானத்தை தரையிறக்கினார்கள் தெரியுமா?
மாத்தளன் நீரேரிக்கரைகளில்!
வான்புலிகளின் இறுதித்தாக்குதல் 2009 பெப்ரவரி 22ம் திகதி நடந்தது. இந்த தாக்குதலிற்கு புறப்பட்டதும் மாத்தளன் நீரேரி கரையிலிருந்துதான்!
2009 பெப்ரவரி 22ம் திகதி வான்புலிகளின் இறுதி தாக்குதல் நடந்தது. கட்டுநாயக்கவிற்கு அண்மையில் ஒரு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. ஒரு விமானம் ஆட்பதிவு திணைக்கள கட்டிடத்தில் மோதியது.
 
பெப்ரவரி திகதி புதுக்குடியிருப்பு நகரத்தை இராணுவம் கைப்பற்றியது. யுத்தத்தின் முடிவை பிரபாகரன் ஏற்கனவே பல மாதங்களின் முன்னரே தெளிவாக தெரிந்துவிட்டார். பெப்ரவரி 5ம் திகதி புதுக்குடியிருப்பு சந்தியை இராணுவம் அடைந்தது. அடுத்த பத்து நாட்களும் யுத்தம் சிறிதுசிறிதாக நகர்ந்து மந்துவில் பக்கத்திற்கு வந்தது. இனி விமானங்களை வைத்திருக்க முடியாதென்ற முடிவிற்கு பிரபாகரன் வந்தார்.
மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் குவிந்துவிட்டார்கள். இன்னும் சில நாட்கள் தாமதித்தால் விமானத்தை ரேக்ஓவ் செய்யக்கூட முடியாத நிலைமை வரப்போகிறது என்பது பிரபாகரனிற்கு தெரியும். வான்புலிகள் கொழும்பில் நடத்தப்போகும் தாக்குதல் ஒரேநாளில் யுத்தத்தின் போக்கை மாற்றுமென்ற நம்பிக்கையெல்லாம் பிரபாகரனிடம் இருக்கவில்லை. தன்னிடம் உள்ள ஆயுதங்களை கடைசிவரை பாவித்து எதிர்தரப்பிற்கு சேதத்தை உண்டுபண்ணுவதுதான் பிரபாகரனின் இயல்பு. அதைதான் பெப்ரவரி 22ம் திகதி செய்தார்.
வான்கரும்புலிகள் ரூபன், சிரித்திரன் இருவரும்தான் அனேகமான வான் தாங்குதல்களை செய்தவர்கள். இறுதி தாக்குதலிற்கும் அவர்கள்தான் தயாரானார்கள்.
வான்புலிகளின் இறுதி தாக்குதல் திட்டம் பற்றி பிரபாகரன் அதிகம் விவாதிக்கவில்லை. உண்மையை சொன்னால்-பிரபாகரன், பொட்டம்மான், சாள்ஸ் தவிர்ந்த முக்கியஸ்தர்கள் யாருக்குமே வான்புலிகளின் இறுதித்தாக்குதல் பற்றி தெரியாது. மற்ற தளபதிகள் அனைவரும் புதுக்குடியிருப்பு களமுனையில் பிஸியாக இருந்தனர்.
பிரபாகரனும் புதுக்குடியிருப்பில்தான் அப்பொழுது இருந்தார். வான்புலி சிரித்திரனில் பிரபாகரனிற்கு அலாதியான பிரியம் இருப்பதை ஏற்கனவே சொல்லியிருந்தேன். அவரை போராளிகள் பகிடியாக “ஆச்சி“ என்றுதான் கூப்பிடுவார்கள். அது பிரபாகரனிற்கும் தெரியும். கொஞ்சம் உற்சாக மனநிலையில் இருந்தால், அவரும் ஆச்சி என்றுதான் சிரித்திரனை கூப்பிடுவார்.
புதுக்குடியிருப்பிற்கும் இரணைப்பாலைக்கும் இடையில் பிரபாகரனின் இருப்பிடம் இருந்தது. (இப்பொழுது முற்றாக தகர்ந்து, நிலக்கீழ் பதுக்குழிக்கு செல்லும் நுழைவாயில் மட்டும் எஞ்சியுள்ளது)
பெப்ரவரி 22ம் திகதி காலை 11 மணிக்கு இரண்டு வான்புலிகளும் பிரபாகரனின் முகாமிற்கு சென்றனர். வழக்கத்திற்கு மாறாக பிரபாகரன் அன்று மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். இரண்டு போராளிகளையும் அருகில் உட்கார வைத்து, அவர்களின் கையை பிடித்தபடி மௌனமாக நீண்டநேரம் உட்கார்ந்திருந்தார்.
அன்று அவர்களுடனே மதிய உணவை சாப்பிட்டார்.
மதியம் மணியளவில் வான்புலிகள் தமது முகாமிற்கு புறப்பட்டு சென்றனர். அன்று மாலை 5. மணியளவில் மாத்தளனிற்கும் பொக்கணைக்கும் இடைப்பட்ட நீரேரியோரமாக இரண்டு விமானங்களும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. புலிகள் தமது விமானங்களை பொதுமக்களும் பார்க்கலாமென அதுவரை பகிரங்கமாக நிறுத்தியதில்லை.
வான்புலிகளின் விமானங்கள் வெட்டைவெளியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள செய்தி பொதுமக்களிற்குள் வேகமாக பரவி, அங்கு ஓரளவிற்கு ஆட்கள் குவியத் தொடங்கினார்கள். விமானத்திற்கு நெருக்கமாக செல்ல முயன்ற மக்களைத்தான் புலிகள் கலைத்தார்கள். வீதியில் நின்று பார்ப்பதற்கு அனுமதித்திருந்தனர்.
வான்புலிகள் அனைவரும் ஒன்றாக இரவு உணவை எடுத்தபின்னர், 8.30 அளவில் சிரித்திரனும் ரூபனும் விமானத்தை ரேக்ஓவ் செய்தனர். அதுதான் வான்புலிகளின் கடைசி ரேக்ஓவ்!
 
இம்முறை கொழும்பிற்கு செல்வதற்கு வான்புலிகளிற்கு அதிக flight path கள் இருக்கவில்லை. எப்படி சென்றாலும் இராணுவ நிலைகளை கடந்துதான் தீர வேண்டும். அதனால் ஆரம்பத்திலேயே இராணுவ நிலைகளை கடந்துசெல்ல முடிவெடுத்தனர்.
வற்றாப்பளையில் இராணுவத்திற்கு மேலாக ஊடறுத்து, மாங்குளத்தால் ஏ. வீதியை ஊடறுத்து, மடுக்கோவில் பகுதியால் மன்னார் சிலாவத்துறை கரைக்கு வந்து, மேற்கு கரையோரமாக வழக்கமான flight path இல்   தாக்குதல் இலக்கிற்கு சென்றது. புலிகளின் விமானங்கள் கிளம்பியது தெரிந்தால், கொழும்பில் உள்ள Anti Aricraft Artilleryகள் தயார்நிலைக்கு வந்துவிடும்.  இராணுவம் எதிர்பார்க்கும் flight path இல் செல்வது தற்கொலைக்கு சமம்.
வழக்கமாக விமானங்கள் செல்லும்போது பத்திரமாக திரும்பி வருவதையும் கணிப்பிட்டுத்தான் flight path களை தீர்மானிப்பார்கள். தாக்குதலிற்கு செல்லும்போதே விமானப்படையின் கண்காணிப்பு சிஸ்டங்களில் சிக்கக்கூடாது. தாக்குதலிற்கு போகும்போதே விமானப்படை விமானங்கள் அலேர்ட் ஆகி, விரட்ட தொடங்கினால் வான்புலி விமானங்களினால் தப்பிக்க முடியாது. இதெல்லாம் வான்புலிகளிற்கு நன்றாக தெரியும். தெரிந்துகொண்டே வான்புலிகள், ஏன் இந்த flight path ஐ பயன்படுத்தினார்கள் தெரியுமா?
இனி திரும்பி வருவதேயில்லை என்ற முடிவுடன்தான் அவர்கள் கிளம்பினார்கள்! (அதாவது வான் கரும்புலி தாக்குதல் நடத்தும் முடிவு)
வற்றாப்பளையில் உள்ள இராணுவ நிலைகளை புலிகளின் விமானங்கள் கடக்கவே கொழும்பு அலேர்ட் பண்ணப்பட்டது. கொழும்பை வான்புலிகள் நெருங்க, மின்சாரம் நிறுத்தப்பட்டு வானத்தை நோக்கி பயங்கர தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.
இராணுவ தலைமயகத்தை குறிவைத்த புலிகள், இலக்குமாறி இறைவரி திணைக்கத்துடன் மோதினார்கள். மற்றைய விமானம் கட்டுநாயக்கவிற்கு அண்மையில் சுட்டுவீழத்தப்பட்டது. அந்த விமானத்தை வீழ்த்தியது- இந்தியா கொடுத்த Anti Aricraft Artilleryகள்.
இப்படியாக 2009 பெப்ரவரி 22ம் திகதி வான்புலிகளின் சரித்திரம் முடிவடைந்தது.
1993இல் முதன்முதலில் விடுதலைப்புலிகள் வான்புலிகள் என்ற பிரிவை முதன்முதலில் ஆரம்பித்தனர். பல்வேறு படையணிகளிலும் இருந்த 26 போராளிகளை தேர்ந்தெடுத்து வான்புலிகள் அணி ஆரம்பிக்கப்பட்டது. மலேசியா, செக்கோஸ்செலவாக்கியா நாடுகளில் வான்புலிகள் சிலர் பயிற்சி பெற்றுவந்து, பின்னர் உள்ளூரிலேயே பயிற்சிகள் வழங்கினார்கள். இப்படித்தான் வான்புலிகள் உருவாக்கப்பட்டார்கள்.
2007 இல் இருந்து வான்புலிகள் இராணுவ இலக்குகள் மீது நடத்திய தாக்குதல்கள் எட்டு. இதில் எந்த தாக்குதல்களும் வெற்றியளிக்கவில்லை. ஆனால் வான்புலிகள் பற்றிய தகவல் உலகத்திற்கு தெரிவதற்கு முன்னர் இரண்டு வெற்றிகரமான தாக்குதல்களை அவர்கள் செய்திருக்கிறார்கள். ஆளற்ற உளவு விமானங்கள் இரண்டை புலிகளின் விமானங்கள் சுட்டு வீழ்த்தியிருந்தன.
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட வான்புலிகள் குறிப்பிடத்தக்க எந்த வெற்றிகரமான தாக்குதலையும் செய்ய முடியவில்லை. வான்புலிகளை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டுமென இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய வல்லரசுகள் முழு மூச்சாக செயற்பட்டனர். இந்த தடையை கடந்து வான்புலிகளால் வெற்றிகரமாக தாக்குதல் நடத்த முடியவில்லையென்பதே உண்மை.
(முற்றும்)Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies