வான்புலிகளின் தாக்குதலில் அதிகமான சேதத்தை ஏற்படுத்திய -2

18 Jun,2018
 

சங்கேதபாஷையென்பது, இரண்டு தொடர்பில்லாத சொற்கள். உதாரணமாக முகில், நயன்தாரா என இரண்டு சம்பந்தமில்லாத சொற்கள் இன்று சங்கேத வார்த்தைகளாக அறிவிக்கப்படும். ஒருவர் காவலரணில் இரவு நிற்கிறார் என வைப்போம். இருளில் அடையாளம் தெரியாத யாரோ வருகிறார்கள். முதலில் எச்சரிக்கையாக நிலையெடுத்துவிட்டு, stop என உரத்து கட்டளையிடுவார். பின்னர் முகில் என பெரிதாக சொல்வார். வருபவர் நமது ஆள் எனில் அவருக்கு தெரியும்- தனக்குரிய வார்த்தை நயன்தாரா என்பது. அவர் கொஞ்சம் தடுமாறி லட்சுமிராய் என்றால்கூட சென்ரியில் நிற்பவர் சுடலாம்.
ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு. முகாமிற்குள் வருபவர்கள், சென்ரியில் நிற்பவர் தம்மை அடையாளம் கண்டு சங்கேத பாஷை கேட்கம்வரையெல்லாம் அவகாசம் கொடுக்கமாட்டார்கள். Stop என்ற வார்த்தை வந்ததும், non stop இல் சுட ஆரம்பித்து விடுவார்கள்!
அன்றும் அதுதான் நடந்தது. ராடர் பொருத்தப்பட்டிருந்த வளாகத்தை நெருங்க முன்னரே சண்டை ஆரம்பித்து விட்டது. அதன்பின் கரும்புலிகளால் இலக்கை நெருங்க முடியவில்லை. சண்டை ஆரம்பித்த சிறிதுநேரத்திலேயே வன்னியிலிருந்த கொன்ரோல் ரூமுடன் தொடர்பில் இருந்த கரும்புலி மரணமடைந்து விட்டார். கரும்புலி அணி தொடர்பில்லாமல் போக, களத்தில் நடந்து கொண்டிருப்பது கொன்ரோல் ரூமில் இருப்பவர்களிற்கு தெரியாமல் போனது.
 F-7G உம் அதன் குண்டுகள், ஏவுகணைகளும்
அதற்கு பிறகு கொன்ரோல் ரூமில் இருப்பவர்கள் முன்னர் திட்டமிட்டதன் அடிப்படையில் செயற்படுவதொன்றுதான் வழி. அவர்கள் வான்புலிகளின் விமானத்தை ரேக் ஓவ் ஆக உத்தரவிட்டனர். இரணைமடுவுக்கு அண்மையில் உள்ள பனிச்சங்கேணியில் இருந்து புலிகளின் விமானங்கள் கிளம்பி, வவுனியாவிற்கு வந்தன. அங்கு திட்டமிட்டபடி முகாம் தீப்பற்றி எரியவில்லை. அதனால் வான்புலிகளால் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்த முடியவில்லை. இதற்கு அடுத்த தாக்குதல் 2008 ஒக்ரோபர் 28ம் திகதி நடந்தது.
 
மன்னாரிலுள்ள தள்ளாடி முகாம் மீது இரண்டு குண்டுகளை வீசிவிட்டு, கொழும்பு நோக்கி பறந்து களனிதிஸ்ஸ பவர் ஸ்ரேசன் மீது தாக்குதல் நடத்தின. வான்புலிகளின் தாக்குதலில் அதிகமான சேதத்தை ஏற்படுத்திய தாக்குதல் இது.
கொழும்பிற்கு வான்புலிகள் மீண்டும் வருவதில் உள்ள சிக்கலை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா. அந்த சிக்கல் நடந்தது. தாக்குதலை நடத்திவிட்டு வான்புலி விமானங்கள் திரும்பி வந்தபோது, விமானப்படையின் விமானமொன்று அடையாளம் கண்டுவிட்டது. கொழும்பிற்கு செல்லும்போது விமானப்படையை குழப்புவதற்காகத்தான் தள்ளாடியில் முதலில் தாக்குதல் நடத்தினார்கள். ஒரேநாளில் இரண்டு இடத்தில் புலிகள் தாக்குவார்கள் என பாதுகாப்பு தரப்பினர் எதிர்பார்த்திருக்கவில்லை.
தள்ளாடியில் புலிகள் தாக்குதல் நடத்தியதும், அங்கு chengdu F-7G இன்ரசெப்ரர் விமானமொன்று அனுப்பப்பட்டது. மன்னார், கடலோரம், இரணைமடு பகுதிகளை உள்ளடக்கியதாக ஒரு ரவுண்ட் வந்தபோதும், புலிகளின் விமானம் அதன் கண்ணில் படவில்லை. சலித்துப்போன விமானி மன்னாருக்கு மேலாக விமானத்தை கட்டுநாயக்கா பக்கமாக திருப்பி பறந்து கொண்டிருந்தபோது, கொன்ரோல் ரூமில் இருந்தவர்கள் அவசரமாக மீண்டும் வவுனியாவிற்கு அண்மையான பிளைட் பாத்திற்கு அதனை திருப்பினார்கள். அப்பொழுதுதான் முதன்முறையாக வான்புலிகளின் விமானங்களை F-7G முதன்முறையாக அடையாளம் கண்டது. F-7G விமானத்தில் வானில் இருந்து வானுக்கு ஏவும் (air to air missile) ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த விமானத்தின் வேகத்தின் முன்னால் வான்புலிகளின் விமானத்தின் வேகம் தூசு. F-7G துரத்த தொடங்கியது.
ஒரு கட்டத்தில் வான்புலிகளின் விமானத்திற்கு மேலாக கூட வந்தது. கிட்டத்தட்ட வானத்தில் ஒரு கிளிக்குஞ்சும், வல்லூறும் மாதிரி கற்பனை பண்ணி பாருங்கள்.
பின்னர் தனது வேகத்தை குறைத்து, வான்புலிகளின் விமானத்தை முன்னால் செல்லவிட்டு, அதை தனது பயரிங் ஸ்பொட்டிற்குள் கொண்டு வந்தது. அடுத்து எயார்- ரூ- எயார் மிஷைல்ஸ் சிஸ்டத்தை லொக் செய்தார். சிஸ்டம் லொக் ஆகவில்லை.
F-7G விமானத்தின் ஏவுகணை சிஸ்டம் எப்படி இயங்குகிறதென தெரிந்தால்தான் அடுத்ததாக நான் சொல்லப்போவது உங்களிற்கு புரியும்.
இலக்கிலிருந்து வெளியாகும் வெப்பத்தை (heat source) வைத்து, ஏவுகணை லொக் செய்யப்படும். ஏவுகணை சிஸ்டம் ஓன் செய்யப்பட்டதும், தானாகவே வெப்பத்தை வெளிவிடும் இலக்கை லொக் செய்யும். அந்த இலக்கில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் மாத்திரமே விமானி ஏதாவது செய்ய வேண்டும். இலக்கு சரியென்றால் தாக்குவதற்குரிய பட்டனை அழுத்தினால் போதும்.
புலிகளின் விமானத்தை லொக் செய்ய பலமுறை முயன்றும் F-7G விமானியால் முடியவில்லை. இந்த இடைவேளைக்குள் புலிகளின் விமானம் தரையிறங்கி விட்டது. ஏன் சிஸ்டம் லொக் ஆகவில்லையென விமானப்படை தலையை பிய்த்துக் கொண்டிருந்தனர். 2009 பெப்ரவரியில் வான்புலிகளின் விமானங்கள் சுட்டுவிழுத்தப்பட்ட பின்னர் இதற்கு பதில் கிடைத்தது.
வான்படையின் விமானங்களில் உள்ள எயார்- ரூ- எயார் மிஷைல்ஸ்கள் அனைத்தும் heat source மிஷைல்ஸ் என்பது புலிகளிற்கு தெரியும். அதை சமாளிக்க ஒரு ஐடியா செய்திருந்தார்கள். தமது விமானங்களில் பின்புறமாக வெப்பம் வெளியேறுவதை மாற்றி, முன்புறமாக வெளியேறும் விதமாக மாற்றம் செய்திருந்தனர்.
விமானத்திலிருந்து வெப்பம் வெளியேறும் exhaust out அடைக்கப்பட்டு, அந்த குழாயில் இருந்து இன்னொரு மேலதிக குழால் ஒட்டப்பட்டு, முன்புறமாக திருப்பி விடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு அடி நீளத்துக்கு முன்பக்கமாக வெப்பம் வெளியேறும் விதமாக வெளிப்பக்கமாக குழாய் நீட்டிக்கொண்டிருந்தது. இதனால் வெப்பம் முன்புறமாக வெளியேற, வான்படை விமானங்களால் எயார்- ரூ- எயார் மிஷைல்கள் பாவிக்க முடியாது.
 
2009 இல் சுட்டு விழுத்தப்பட்ட புலிகளின் விமானங்களை பரிசோதித்த பின்னர்தான் இந்த விசயம் வெளியில் வந்தது.
(
வான் புலிகளின் சிலின் விமானத்தை விமானப்படையின் F-7G  விமானி அடையாளம் கண்டார் என்பதையும், வான்புலி விமானத்தை பயரிங் ஸ்பொட்டிற்குள் கொண்டு வந்து, எயார்- ரூ- எயார் மிஷைல்ஸ் சிஸ்டத்தை ஓன் செய்து தாக்க முயன்ற போதும், சிஸ்டம் இயங்கவில்லையென்பதையும் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
ஏன் இயங்கவில்லை?
வெப்பத்தை நாடிச்செல்லும் இந்த வகையான ஏவுகணைகளை ஏமாற்ற, தமது விமானத்திலிருந்து வெப்பம் வெளியேறும் திசையை புலிகள் மாற்றியமைத்திருந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். 2009 பெப்ரவரியில் புலிகளின் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்ட பின்னர்தான் பாதுகாப்பு தரப்பினர் இதை கண்டுபிடித்தனர்.
நடுவானில் வைத்து புலிகளின் விமானத்தை அடையாளம் கண்டபின்னரும் தாக்க முடியாமல் போனது பாதுகாப்பு தரப்பினருக்கு பெரிய தலையிடியாக அமைந்து விட்டது. புலிகள் ஏவுகணையை செயலிழக்க வைக்கும் நவீன சிஸ்டம் எதையாவது வைத்திருக்கிறார்களோ என்றும் பாதுகாப்பு தரப்பினர் யோசித்தனர்.
 
வான்புலிகளை சமாளிக்க இலங்கையால் மட்டும் முடியாது, வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனை அவசியம் என்பது இலங்கைக்கு புரிந்தது. வான்புலிகள் பெரும் தாக்குதல்களை நடத்தாவிட்டாலும், புலிகளின் விமானத்தாக்குதல் என்ற செய்தி ஏற்படுத்திய அர்த்த பரிமாணங்கள் கனதியானவை. எப்படியாவது வான்புலிகளை முடக்க வேண்டும்.
வான்புலிகளின் அச்சுறுத்தல் ஏற்படலாமென புலனாய்வு பிரிவு எச்சரித்ததையடுத்தே சீன தயாரிப்பான F-7G  ஜெட்கள் வாங்கப்பட்டன. எயார்-ரூ-எயார் மிஷைல்ஸ் சிஸ்டம் சிறப்பாக இயங்குவதும், இலங்கைக்கு கட்டுபடியான- கிடைக்க கூடிய ஜெட் விமானம் F-7G  தான். இதில் ஆறு விமானங்களை பாகிஸ்தானிடமிருந்து இலங்கை வாங்கியது.
 F-7G ஜெட் விமானம்
F-7G  வாங்கும்போது இலங்கை யோசிக்காத கோணத்தில் புதியதொரு பிரச்சனை உருவாகியிருந்தது. வான்புலிகளை பயரிங் ஸ்பொட்டிற்குள் கொண்டு வந்தும் தாக்குதல் நடத்த முடியாமல் போனது. ஆனால், வான் புலிகளை தொடர்ந்து பயரிங் ஸ்பொட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை. காரணம், வான்புலிகள் மிகக்குறைந்த உயரத்தில் பறந்தார்கள். தாக்குதலை முடித்துக்கொண்டு திரும்பும் சமயங்களில் வான்புலிகள் மிகத்தாழ்வாக- மர உயரத்தைவிட கொஞ்சம் மேலே- பறந்தார்கள். இந்தவகை பறப்பை tree top level flying என்பார்கள்.
தாக்குதலிற்கு செல்லும்போது, இராணுவ தளங்களிற்கு மேலான வான்பறப்பை தவிர்த்து, கடலிற்கு மேலாக செல்வதால் சாதாரண உயரத்திலேயே வான்புலிகள் சென்றனர். தாக்குதலை நடத்திவிட்டு திரும்பும்போது, இரண்டு காரணங்களினால் உயரத்தை குறைத்து tree top level flying மேற்கொண்டார்கள்.  ஒன்று, வான்படை ஜெட்களிடமிருந்து தப்பிப்பது. கட்டுநாயக்காவில் இருந்து பதினைந்து நிமிடத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு வான்பகுதிக்கு வான்புலிகளின் விமானங்கள் வந்துவிடும். இந்த தூரத்தை ஏழு நிமிடத்தில் வான்படை ஜெட் விமானங்கள் கடந்து விடும். ஆகவே, எட்டு நிமிடங்கள் வான்புலிகளிற்கு ஆபத்தான நிமிடங்கள்.
 
அனேகமாக வன்னி வான்பரப்பிற்குள் நுழைந்து தரையிறங்கும் சமயங்களே ஆபத்தான தருணங்கள். வந்த வேகத்தில் தரையிறங்குவதென்றால் உயரம் குறைவாக பறந்து வர வேண்டும். tree top level flying முறையில் வந்தால், தாமதமின்றி தரையிறங்கிவிட முடியும். விமானப்படை ஜெட் விமானங்களாலும் தாக்க முடியாது.
இதில் புலிகள் இன்னொரு தந்திரத்தை கையாண்டார்கள். வான்புலி விமானங்களை விரட்டிவரும் விமானப்படை ஜெட் விமானங்கள் புதுக்குடியிருப்பின் கேப்பாபிலவு, இரணைமடுவிற்கு அப்பாலுள்ள பனிச்சங்குளம் ஓடுபாதைகளை இலக்கு வைத்துதான் பறந்தன. இந்த ஓடுபாதைகளில்தான் வான்புலிகளின் விமானங்கள் தரையிறங்கின என்றுதான் பாதுகாப்பு தரப்பினர் நினைத்தார்கள். பொதுவாகவே விமானங்கள் தரையிறங்கும்போது ரன்வேயை விமானி கண்டறிய லான்டிங் லைற் எரியவிடப்படும்.  அதுவும், வேகம் அதிகமான தாக்குதல் ஜெட் விமானங்களின் தரையிறக்கத்திற்கு இது அவசியம். வான்புலிகளின் தரையிறக்கத்தையும் அப்படித்தான் பாதுகாப்பு தரப்பினர் நினைத்தனர்.
புலிகள் அமைத்த இரண்டு ரன்வேயும் தமது விமானங்களின் பாவனைக்கல்ல. புலிகளின் விமானங்களிற்கு இவ்வளவு பெரிய ரன்வே தேவையில்லை. ஏன் அவ்வளவு பெரிய ரன்வே அமைத்தார்கள் என்ற விடயத்தை பற்றி பின்னர் தமிழ் பக்கத்தில் வேறொரு தொடரில் குறிப்பிடுவோம்.
 
லான்டிங் லைற் எரியும் புலிகளின் ரன்வே எதுவென விமானப்படை தேடிக்கொண்டிருக்க, புலிகள் எங்கு தரையிறங்கினார்கள் தெரியுமா?
மிக ஆச்சரியமான செய்திதான். ஒன்றில் புதுக்குடியிருப்பை அடுத்த பச்சைபுல்மோட்டை பகுதி (புலிகளின் இறுதி விமானத்தாக்குதலிற்கு 2009 பெப்ரவரியில் கிளம்பியபோது பச்சைப்புல்மோட்டைக்கு பக்கத்திலுள்ள மாத்தளன் நீரேரிக்கு அண்மையான வெட்டைவெளியிலிருந்தே புறப்பட்டனர்) அல்லது மன்னார் பகுதிகள். இதற்காக லாண்டிங் லைற் சிஸ்டமாக கீழிருந்து ஆட்களே டோர்ச் மூலம் வெளிச்சம் பாய்ச்சினார்கள். இப்படி வெளிச்சம் பாய்ச்சும் ஆட்களிற்காக பதுங்குகுழிகள் வெட்டப்பட்டிருந்தன. விமானப்படை வேவு விமானங்கள், அல்லது ஜெட் விமானங்களை கவனித்து கீழிருந்து சிக்னல் கொடுக்க இந்த ஏற்பாடு. ஒருவேளை வேவு விமானம் வானில் சுற்றிக்கொண்டிருந்தால், லாண்டிங் லைற் இல்லாமலே இரவில் தரையிறங்கும் பயிற்சியையும் புலிகள் பெற்றிருந்தனர். பரந்த வெளியில், சிறிய விமானத்தை தரையிறக்குவதால் அதிக ஆபத்திலிருந்து தப்ப முடிந்தது.
தாழ்வாக பறந்து வந்த திசையிலேயே லான்ட் ஆகி விடுவார்கள் வான்புலிகள். விமானப்படை ஜெட் விமானங்களால் இவ்வளவு தாழ்வாக பறந்து வர முடியாது. முடியாதென்பதல்ல, எந்த விமானியும் அதை செய்ய மாட்டார்கள். ஹை ரிஸ்கியான விசயம். விமானம் தரையில் மோதும் அபாயம் அதிகமாகவுள்ளது.
வான்புலிகளை சமாளிக்க முடியாமல் தனது அதிகாரிகள் திண்டாடிக் கொண்டிருப்பதை பார்த்த கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டு உதவியை நாடி முடிவுசெய்தார். அப்பொழுது அனேகமான நாடுகளின் பாதுகாப்பு துறையினர் அவருடன் நல்ல தொடர்பில் இருந்தனர். ஆனால் கோத்தபாய மூன்று நாடுகளைதான் தேர்வு செய்தார்.
ஒன்று இந்தியா. புலிகளை அழிக்க இந்தியா முழுமையான ஆசீர்வாதம் வழங்கி இராணுவ உதவிகள் செய்து வந்தது. வான்புலிகளின் தாக்குதல்களை உடனே தடுக்க வேண்டுமென இந்தியா விரும்பியது. 2007 இல் இது பற்றிய மெசேஜ் ஒன்றை இந்தியா தனது தொடர்பாளர்கள் மூலம் புலிகளிற்கு அனுப்பியிருந்தது. ஆனால் புலிகள் அதை கணக்கில் எடுக்கவில்லை.
இரண்டாவது அமெரிக்கா. புலிகளின் சர்வதேச வலைப்பின்னல்களை உடைத்து, புலிகளின் முதுகெலும்பை உடைப்பதில் இந்தியாவிற்கு நிகரான உதவியை அமெரிக்காவும் செய்து வந்தது. புலிகளின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலைகள் பற்றிய விபரத்தை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்காவும் இலங்கைக்கு வழங்கிவந்தது.
 
மூன்று பாகிஸ்தான். F-7G  தாக்குதல் ஜெட்களை இலங்கைக்கு பாகிஸ்தான்தான் வழங்கியது. சீன தயாரிப்பான இந்த ஜெட்டை இலங்கை வாங்குவதை இந்தியா விரும்பவில்லை. மிக் அல்லது தனது சுகோய் (Sukhoi) விமானங்களை வழங்க இந்தியா தயாராக இருந்தது. ஆனால் சீனா நேரடியாக அல்லாமல் பாகிஸ்தான் மூலம் F-7G  தாக்குதல் ஜெட்களை வழங்க சம்மதித்திருந்தது. சீனாவின் பங்களிப்பை இலங்கை விரும்பியிருந்தது. ஆனால் நேரடியாக சீனா சம்பந்தப்படுவதை இந்தியா விரும்பாது என்பதால், பாகிஸ்தான் வழியாக பாதையேற்படுத்திக் கொடுத்தார் கோத்தபாய ராஜபக்ச.
மூன்று நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பில் இலங்கை முப்படைகளின் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் மூலோபாய ஆலோசகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டம்தான் புலிகளிற்கு மிக அச்சுறுத்தலாக அமைந்த திட்டமொன்றிற்கு வித்திட்டது.
மெதுவாக, குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களை அழிக்க எயார்- ரூ- எயார் மிஷைல்ஸ் பொருத்தமில்லையென மூன்று நாடுகளின் நிபுணர்களும் கூறினர். நீண்ட தூர பறப்பு செய்தால் தாக்கலாமே தவிர, கொழும்பிலிருந்து வன்னி வரையான சிறிய தூர பறப்பு செய்யும் வான்புலிகள் ரக விமானங்களை தாக்குவதற்கு தரையில் இருந்து வானுக்கு (ground to air) தாக்கும் கலிபர், கனோன் ரக துப்பாக்கிகளே பொருத்தம் என சிபாரிசு செய்தனர்.
இதையடுத்து விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் 50, 30 கலிபர் ரக துப்பாக்கிகள் கொழும்பில் பல இடங்களில் பொருத்தப்பட்டன. வான்புலிகளின் தாக்குதல் நடக்கலாமென கருதப்பட்ட இடங்களிற்கு அண்மையாக இந்த துப்பாக்கிகள் பொருத்தப்பட்டன. புலிகளின் விமானங்கள் வந்தால் வானத்தை நோக்கி எல்லா திசைகளிலும் சுடுவதுதான் திட்டம்.
மூன்று நாடுகளின் நிபுணர்கள் பரிந்துரைத்த இந்த திட்டத்தை, அதற்கு ஏழு வருடங்கள் முன்னரே புலிகள் திட்டமிட்டார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?. ஆனால் உண்மை அதுதான்.
2000ஆம் ஆண்டுகளில் விமானப்படையின் கிபிர், மிக் விமானங்கள் புலிகளிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தன. அப்பொழுது ஓயாத அலைகள் நான்கு படைநடவடிக்கை நடந்து கொண்டிருந்த சமயம்.
தளபதி கடாபிதான் விமான எதிர்ப்பு பிரிவின் தளபதியாகவும் இருந்தார். அதுதவிர, கனரக ஆயுதங்களின் பயிற்சி பொறுப்பும் கடாபியிடமே இருந்தது. கடாபியின் கீழ் அனந்தன் என்ற போராளி இருந்தார். கடாபிக்கு அவரில் நல்ல நம்பிக்கை. குறிபார்த்து சுடுவதில் வல்லவரான இவர், கலிபர் மற்றும் கனோன் பயிற்சி ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஒரு திட்டம் தீட்டினார்.
 
வான்படைக்கு பொறியாக இலக்கொன்றை வைத்து விட்டு, அந்த இலக்கை சூழ முக்கோண வடிவத்தில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை நிறுத்தி வைத்திருந்து, விமானம் முக்கோண வடிவ தாக்குதல் இலக்கிற்குள் நுழையும்போது தாக்கி வீழ்த்தலாம் என திட்டமிட்டார். 2001 இல் கடலில் ஒரு படகை நிறுத்தி வைத்து, விமானப்படைக்கு தூண்டில் போட்டனர் புலிகள். ஆனால் அன்று விமானத்தை விழுத்த முடியவில்லை.
2006 இன் பின்னர் மீண்டும் முயற்சி செய்தனர். இரணைமடுவிற்கு அண்மையிலுள்ள பனிச்சங்கேணி ரன்வேயில் விமானத்தை போன்ற டம்பி உருவமொன்றை செய்து நிறுத்தியிருந்தார்கள். அதை சூழ 2 கிலோமீற்றர் சுற்றளவில் நான்கு, ஐந்து கனோன் Anti Aricraft துப்பாக்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வான்புலிகளின் விமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக நினைத்து வான்படை விமானங்கள் தாக்குதல் நடத்த வரும்போது- குண்டு வீச பதிவாக பறக்கும்போது- தாக்குதல் நடத்துவதே திட்டம்.
இரணைமடுவில் குண்டுவீச கிபர் விமானங்கள் வந்தபோது, புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு விமானம் சேதத்துடன் சென்றுவிட்டது. இந்த தாக்குதலை புலிகள் சரியாக ஒருங்கிணைக்கவில்லை. சில துப்பாக்கிகள் முன்னரே சுட தொடங்கி, விமானங்களை எச்சரிக்கையடைய வைத்து விட்டன. அதன்பின் புலிகள் பல டம்மிகள் வைத்தபோதும், வான்படை தாக்குதல் நடத்த வரவில்லை.
தரையிலிருந்து தாக்கும் திட்டம்தான் பொருத்தமானதென இந்தியாவும் தன் பங்கிற்கு ஒரு உதவியை செய்தது. அதுதான் வான்புலிகளிற்கு பெரிய சிக்கலை கொடுத்தது.
Anti Aricraft Artillery வகை விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. இவை தரையிலிருந்து வானிற்கு நீண்டதூரம் சுடக்கூடிய சுடுகலன்கள். பொதுவாக Anti Aricraft Artillery வகைகளை இராணுவ பாஷையில் ack ack துப்பாக்கிகள் என்றும்  அழைப்பார்கள். இந்த சுடுகலன்களின் ஆரம்ப வடிவங்கள்தான் இரண்டாம் உலகப்போரில் விமான எதிர்ப்பு ஆயுதங்களாக இருந்தன.Anti Aricraft Artillery களை இந்தியா கொடுத்தது அல்லவா. இலங்கைக்கு இவை கிடைப்பதற்கு ஆறு வருடங்களின் முன்னரே புலிகளின் பாவனையில் அவை இருந்தன!
 14.5 mm கனோன்இவற்றின் மேம்படுத்தப்பட்ட 12.7, 14.5 mm கனோன்களை புலிகள் உக்ரேனிலிருந்து கடல் மார்க்கமாக 2000ஆம் ஆண்டே வன்னிக்கு கொண்டு வந்துவிட்டனர். 12.7 mm கனோன்கள் சிலவற்றை கடற்படையிடம் இருந்து அதற்கு முன்னரே கைப்பற்றியிருந்தனர். 12.7, 14.5 mm கனோன்கள் இலங்கையிடம் ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. ஆனால் அதை வான்புலிகளிற்கு எதிராக பாவிக்கலாமென்ற ஐடியா அவர்களிற்கு வரவில்லை. 2000ஆம் ஆண்டு வெற்றிலைக்கேணி கடற்படை தளத்தை புலிகள் கைப்பற்றியபோது 14.5 mm கனோன் ஒன்றை கைப்பற்றியிருந்தனர். கடலை நோக்கி மவுண்ட் பண்ணப்பட்டிருந்தது. கடல்வழியாக வரும் புலிகளை தாக்க அங்கு மவுண்ட் பண்ணியிருந்தார்கள்.
பின்னர் புலிகள் 14.5 mm கனோன்களில் ஒற்றை பரல் (single barrel) உடைய சுடுகலனை அப்பாச்சி என அழைத்தார்கள். இரட்டை பரல் (dowel barrel) உடையவற்றை பூமா என்ற பெயரில் பாவித்தார்கள்.
கடைசியில், இந்தியா வழங்கிய இந்த சுடுகலன்கள்தான் வான் புலிகளின் விமானத்தை சுட்டு விழுத்தியது!
இதேவேளை, விமானப்படையினரிடம் வேறொரு திட்டம் இருந்தது. புலிகளின் சிறியரக விமானங்களை எதிர்கொள்ள தம்மிடமிருந்த சிறியரக விமானங்களை களமிறங்கலாமென ஒரு திட்டம் தீட்டினார்கள். வான்புலிகளின் விமானங்களை தம்மால் வீழ்த்த முடியாமலிருக்கிறது என்பது அவர்களிற்கு ஒரு கௌரவ பிரச்சனையாக இருந்தது. விமானப்படையினால் சமாளிக்க வேண்டிய பிரச்சனையை பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் இராணுவம், கடற்படையுடனும் ஆலோசிக்க வேண்டிய நிலைமை வந்ததை அவர்கள் விரும்பவில்லை. எப்படியாவது புலிகளின் விமானத்தை வீழ்த்த வேண்டுமென விரும்பினார்கள்.
 
இலங்கை விமானப்படையின் பாவனையில் பதினைந்து வருடங்களிற்கு முன்னர் பாவனையில் இருந்த சிறிய ரக விமானங்களை தூசு தட்டி பறக்கவிடுவதே அந்த ஐடியா.
முதலாம் உலகப்போர் பற்றி இராணுவரீதியாக தெரிந்து வைத்திருப்பவர்களிற்கு dogfight என்ற சொல் தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட வானத்தில் நடக்கும் கைகலப்புதான் அது. ஒன்றையொன்று நேரடியாக எதிர்கொள்வது. விமானப்படையில் அப்பொழுது நடவடிக்கை கொமாண்டராக இருந்த ஒருவருக்குத்தான் (இப்பொழுது ஓய்வுபெற்றுவிட்டார்) இந்த ஐடியா தோன்றியது.
வான்புலிகள் விமானம் ரேக்ஓவ் ஆகி கொழும்பிற்கு வருகிறதென வைப்போம். விமானப்படையின் ராடர் சிஸ்டத்தில் அது விழுந்ததும், விமானப்படையிடமிருக்கும் சிறியரக விமானங்கள் ரேக்ஓவ் ஆகும். வான்புலிகளின் விமானம் வரும் உயரத்தில் சென்றால், இரண்டும் நேருக்கு நேர் சந்திக்கும். இப்பொழுது வானில் துப்பாக்கி சண்டை நடக்கும். இந்த சமயத்தில் விமானப்படை விமானங்களின் கைதான் ஓங்கியிருக்கும். அது ஏனென பார்ப்போம்.
வான்புலிகளின் விமானம் ZLIN-143. இதன் அதிகபட்ச வேகம் 260km/h. தமது  விமானங்களில் EBR (Electrical Bomb Release) சிஸ்டத்தை அமைத்து இரண்டு குண்டுகள் காவிச்செல்லும் வசதியை ஏற்படுத்தியிருந்தனர். ஒவ்வொரு குண்டும் கிட்டத்தட்ட 50 கிலோ எடையானவை. இதன்படி பார்த்தால், ஒரு விமானத்தில் 100 கிலோ எடை காவிச்செல்லப்படுகிறது. இந்த எடை விமானத்தின் பறப்பு வேகத்தை கணிசமாக குறைக்கும்.
வான்புலிகள் தாக்குதலிற்கு வரும்போதே dogfight முறையில் விமானப்படை விமானங்கள் எதிர்கொள்ள வேண்டும். அதிக வேகத்தில் பறக்க முடியாத வான்புலிகளின் விமானத்தை சுலபமாக தாக்கலாம் என்பதே திட்டம். தாக்குதவற்கு வசதியாக விமானப்படையின் சிறிய விமானங்களில் 50 கலிபர் துப்பாக்கிகள் பொருத்தலாம் என்பது திட்டம்.
இந்த திட்டம் விமானப்படை தளபதிக்கு போனதும், விமானப்படையின் உயர்மட்ட கூட்டமொன்று நடந்தது. பிராந்திய தளபதிகள், தாக்குதல் ஸ்குவாட்ரன் லீடர்கள் என கிட்டத்தட்ட விமானப்படையின்எல்லா மட்டத்தினரும் கலந்துகொண்ட கூட்டம் அது. அதில் ஸ்குவாட்ரன் லீடர்கள்தான் இந்த திட்டத்தின் முக்கிய பலவீனமொன்றை குறிப்பிட்டார்கள்.
புலிகளின் விமானத்தின் வேகம், குண்டின் எடை என எல்லா விபரங்களையும் துல்லியமாக கணிப்பிட்டு, இந்த ஐடியாவை போட்ட தளபதி ஒரு முக்கிய விசயத்தில் கோட்டை விட்டுவிட்டார். அது- வான்புலிகளின் தாக்குதல் நேரம். வான்புலிகள் பகலில் தாக்குதல் நடத்துவதில்லை. அனைத்து தாக்குதல்களையும் இரவில்தான் செய்தார்கள். Dogfight முறை இரவு தாக்குதலிற்கு சரிவராது!
Dogfight முறை முழுக்கமுழுக்க பகல்வேளைக்கே உகந்தது. எதிரி விமானத்தை கண்ணால் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இப்போதிருப்பதை போல உயர்தர நைட்விஷன்கள் கிடையாது. பிறைமரி நைட்விஷன்கள்தான் இருந்தன. ஒரு மில்லிவிநாடி தடுமாறினாலும் விமானம் மோதி விபத்திற்குள்ளாகும் ஹை ரிஸ்க்கான வானத்தில் நடக்கும் Dogfight, இரண்டாம் உலகபோரில் பகலில் மட்டுமே நடந்தது.
 புலிகளின் பூமா Anti Aricraft துப்பாக்கி மவுண்ட்Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies