யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்: "தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு"

02 Jun,2018
 

 

 

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (வெள்ளிக்கிழமை)37 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம்வரை மாறாது உள்ளது.
 
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இச் சம்பவமானது தமிழ் மக்களின் அடையாம், அறிவு மற்றும் பண்பாடு போன்றவற்றை இல்லாதொழிக்கும் தமிழ் இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள்.
இந்நூலக அழிப்பின் போது பல நூற்றாண்டு பழமைவாய்ந்த தமிழ், ஆங்கில நூல்களும் மற்றும் ஓலைச்சுவடிகளும் அழிந்து போயின.
அழிந்த புத்தகங்கள் எவை?
இவற்றில் கிடைப்பதற்கு அரிதான ஐசாக் தம்பையா நன்கொடை கொடுத்த இலக்கியம், சமயம், மொழியியல் தத்துவம் தொடர்பாக சுமார் 6000 நூல்களும், இந்திய வர்த்தகர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சத்தியசோதனை, 1672 ஆம் ஆண்டில் பிலிப்பஸ் பால்டியார் என்பவர் எழுதிய டச்சு ஆட்சியில் இலங்கை என்னும் நூல், 1660 ஆம் ஆண்டில் கண்டி மன்னரால் சிறைபிடிக்கப்பட்டவேளை றொபேட் நொக்ஸ் என்பவர் எழுதிய இலங்கையராவார் என்னும் நூல் ஆகியவை அழிந்தன.
1585 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல், சேர் பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய பகவத்கீதை விளக்கம், சித்தாந்தம், செந்தமிழ் இலக்கிய நூல்கள், திருமதி இராமநாதன் அம்மையார் எழுதிய இராமாயாண மொழிபெயர்ப்பு, மகாகவி பாரதியாரின் நண்பரான நெல்லையப்பன் எழுதிய நூல்கள், கடலைக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய சோதிட சாஸ்திர நூல்கள், வானசாஸ்த்திரம் சம்பந்தமான நூல்கள், சித்தவைத்திய வாசகங்கள் அடங்கலான ஏட்டுச்சுவடிகள் ஆகியவை அழிந்தன.
மேலும், முத்துத்தம்பிபிள்ளை ஏழுதிய அபிதானகோசம், சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, முதலியார் இராசநாயகம் எழுதிய புராதன யாழ்ப்பாணம், சுவாமி ஞானப்பிரகாசம், முத்துத்தம்பிபிள்ளை எழுதிய யாழ்ப்பாணம் பற்றிய நூல்கள், கல்லடி வேலன் என்று அழைக்கப்பெற்ற கே.வேலுப்பிள்ளை இயற்றிய யாழ்ப்பாண வைபவகௌமுகி, சிற்பக்கலை பற்றிய நூல்கள், தனிநாயக அடிகளார் பதிப்பித்து வெளியிடப்பட்ட"தமிழ் கலாசாரம்" எனும் ஆங்கில சஞ்சிகை, இராசையனார், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, ஆனந்தகுமாரசாமி மற்றும் முதலியார் குலசபாநாதன் சேகரித்த நூல்கள், மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பிரதிகளும் அழிவடைந்தன.
 
இந்நூலகத்தை இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவின் தமிழ்நாடு உட்பட பல பாகங்களிலிருந்தும் தேடிச் சென்று பயன்படுத்தியிருந்தனர்.
யாழ் பொது நூலக எரிப்பு தொடர்பில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பிபிசி தமிழுக்கு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்
 
யாழ் பொது நூலகம் அழிக்கப்பட்டு 37 ஆண்டுகள் கடந்தாலும்கூட அந்த அழிப்பு நடவடிக்கை மூலம் தமிழ் மக்களின் இதயங்களில் ஏற்படுத்திய வடு இன்னமும் மாறாதது.
தென்னாசியாவின் மிகப் பெரிய அறிவியல் பொக்கிஷமாக போற்றப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகத்தின் அழிப்பு என்பது மனித நாகரிகத்தின் மோசமான துயரம். 1981ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவில் இந்த கொடுமை நேர்ந்த போது அதனை சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாடியில் இருந்து நேரில் பார்த்த தாவீது அடிகளார் அந்த கணத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி ஒன்றே அந்த நூலகத்தின் பெறுமதியை எடுத்துக் காட்டுகின்றது.
 
நூலகம் எரிக்கப்பட்ட மறுநாள் ஜூன் மாதம் முதலாம் தேதி எனது நண்பன் நுகுமானும் நானும், யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து துவிச்சக்கர வண்டியில் அங்கு சென்று பார்த்த போது எரிந்த சாம்பல்கள் ஊடாக நாங்கள் கொண்ட துயரமும் வலியும் இந்த கணம்வரை நெஞ்சுக்குள் வலிக்கின்றதாக உள்ளது.
நாங்கள் நூலகத்திற்குச் சென்ற போது அந்த தீ அணையாமல் இருந்தது. நான் சிறுவர் பகுதியில் படித்த புத்தகங்கள் சிலவற்றை இனங்காணக் கூடியதாக இருந்தது.
நூலகத்திற்குள் கம்பீரமாக நின்ற புத்தக அலமாரிகள் எல்லாம் நிலத்திலே பாட்டமாக வீழ்த்து இருந்தது. நாங்கள் கோவிலாக வழிபட வேண்டிய அந்த கட்டடம் எல்லாம் உடைந்து சீமெந்து துகழ்களாகவும், சாம்பலாகவும் காட்சியளித்தது. அன்று பார்த்த அழிவை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அங்கு பகுதியளவில் எரிந்த புத்தக துண்டுகள் சிலவற்றை அடையாளமாக எடுத்துச் சென்று எனது வீட்டில் இருந்து நூலகத்தில் வைத்து பாதுகாத்திருந்தேன்.
பின்னர் யுத்தம் காரமாணக ஏற்பட்ட இடம்பெயர்வின் போது என்னுடைய வீட்டில் இருந்த புத்தகங்களோடு அவையும் அழிவடைந்துவிட்டன.
நூலக பாதிப்பை பார்த்த பின்னர் எனது நண்பர் நுகுமான் ஒரு கவிதையினை எழுதியிருந்தார். அந்த கவிதை எரித்து சாம்பலாக்கப்பட்ட நூலகத்தின் நினைவுகளோடு உள்ளது.
புத்த பெருமான் ஒரு இரவிலே சுடப்பட்டார் என்று ஆரம்பிக்கும் அந்த கவிதை இறுதியில் புத்தரின் சிவில் உடையாளர்கள் பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர். 90 ஆயிரம் புத்தகத்தினால் புத்தரின் மேனியை மூடி மறைத்தனர். சிகாலேகவாத சூத்திரத்தை கொழுத்தி எரித்தனர். புத்தரின் சடலம் அஸ்தியானது. தம்ம பதமும் சாம்பலானது என்று முடிகின்றது அந்த கவிதை. நூலக எரிப்பின் குறியீடாக இந்த கவிதை அமைகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் மட்டும் முதல் தடவையாக நடக்கவில்லை. 1930 ஆம் ஆண்டு ஜெர்மனி பேளின் வீதியில் நூற்றுக்கனக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டு வீதிகளில் எல்லாம் சாம்பல் பரவியதாக சொல்லுவார்கள்.
நாசிகளின் இனப்படுகொலைக்கு அவ்வழிப்பு பெரும் எடுத்துக்காட்டு. யாழ் நூலக எரிப்பும் தமிழ் இனப்படுகொலை என்றே கருத வேண்டும்.
வரலாற்றில் இருந்து நாங்கள் பாடம் படிக்க தவறுகின்ற போது மீண்டும் மீண்டும் அந்த தவறான வரலாறு மீட்டப்படும் என்பதற்கு இந்த தேசத்தின் வரலாறு சான்றாக இருக்கின்றது.
இந்த நூலக எரிப்பு மூலம் தென்னாசியாவில் இருந்து தேடி வைத்த பொக்கிஷங்கள் குறிப்பாக ஓலைச் சுவடிகள் 1800 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை பதிவுகள் அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.
யாழ் நூலகம் திறக்கப்பட்டது எப்போது?
இவற்றை அழித்துவிட்டு வெறுமனே கட்டடத்திற்கு வெள்ளை பூசுவதால் அழிந்தவற்றை மீள பெற்றுக்கொள்ள முடியாது.
யாழ் நூலக எரிப்பு நாளை நினைவுகூறுவது என்பது மனித நாகரிகத்திலேயே மோசமான அரசியல் செயற்பாட்டில் இருந்து விடுபடும் புதிய பண்பாட்டினை இந்த தேசத்தின் அரசியலும் மக்களும் விழிப்புக் கொள்ளும் நாளாக கொண்டாட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார்.
 
யாழ் பொது நூலக எரிப்பு தொடர்பில் பிபிசி தமிழுக்கு, யாழ் பொது நூலக பிரதான நூலகர் சுகந்தி சதாசிவமூர்த்தி தெரிவித்த கருத்துக்கள் இவை.
யாழ் பொது நூலகத்தில் 31 வருடங்கள் நூலகராகவும், பிரதான நூலகராக கடந்த 4 வருடங்களும் கடமையாற்றுகின்றேன்.
யாழ் பொது நூலகம் 1933ஆம் ஆண்டு முதன் முதலில் மு.செல்லப்பா என்ற தனி நபரால் ஆஸ்பத்திரி வீதியில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போது உள்ள கட்டடத்தில் 1959ஆம் ஆண்டு அப்போதைய யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையாப்பாவினால் திறந்துவைக்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டு நூலகம் எரிக்கப்பட்ட போது 97 ஆயிரம் புத்தகங்களும், பழமைவாய்ந்த ஓலைச்சுவடிகளும், தனிநபர்களின் சேமிப்பு புத்தகங்களும் முற்று முழுதாக அழிவடைந்தன.
பின்னர் 2004 ஆம் ஆண்டு மீண்டும் புணரமைக்கப்பட்டு நூலகம் திறந்துவைக்கப்பட்டது. தற்போது ஒரு இலட்சத்தி 8 ஆயிரம் புத்தகங்களும், தனிநபர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகளும் உள்ளது.
 
இந்தியா அரசாங்கத்தினால் கடந்த வருடம் 16 ஆயிரம் புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
நாளாந்தம் பெருமளாவன வாசகர்கள் இந்த நூலகத்தினை பயன்படுதுகின்றார்கள்.
 
நூலக எரிப்பின் நேரடி சாட்சியாளரான யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் யாழ் பொது நூலக எரிப்பு தொடர்பில் பிபிசி தமிழுக்கு தெரிவித்த கருத்துக்கள்,
யாழ்ப்பாண பொது நூலகம் யாழ் மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் 1941 ஆம் ஆண்டில் இருந்து வருகின்றது.
 
அந் நூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி மாவட்ட சபை தேர்தல் கால வன்முறையின் போது எரிக்கப்பட்டது. இலங்கை அரசின் காவல் துறையினரும், அவர்களுடன் இணைந்த கட்டாக்காலிகளும் இணைந்து தமிழ் தேசியத்தின் பொக்கிஷமான நூலகத்தை எரித்தார்கள். இச்சம்பவம் நடைபெற்று 37 வருடங்கள் கடந்துவிட்டன.
அப்போது நடைபெற்ற அராஜகங்களை நேரடியாக நான் பார்த்தவன். அந்த வகையில் நூலக எரிப்பின் நேரடி சாட்சியாக நான் உள்ளேன்.
மாவட்ட சபை தேர்தலுக்காக அன்று யாழில் கூடியிருந்த அமைச்சர்கள் இங்கு ஜக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். அந்த தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்ற அவர்களின் செயற்பாட்டை துணிந்து எதிர்த்து நின்ற அரச அதிபர் யோகேந்திரா துரைசுவாமியினால் அவர்களின் சதி முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதனால் அன்று துரையப்பா விளையாட்டரங்கில் நிலை கொண்டிருந்த காவல்துறையினரும், அவர்களுடன் இணைந்து சிலரும் நூலகத்தை தீக்கிரையாக்கினர்.
நூலகம் எரிக்கப்படும் போது எனக்கு முதலில் திருமதி யோகேந்திரா துரைசுவாமி தகவல் தந்திருந்தார். தகவல் கிடைத்ததும் என்னுடைய வாகனத்தை செலுத்திக் கொண்டு புறப்பட்டேன். வேம்படி சந்தியை அண்மித்த போது பொலிஸார் தடுத்து நிறுத்தினார்கள். மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று அச்சுறுத்தினார்கள்.
காவல்துறையின் தடையினை மீறி சப்பல் வீதியை அடைந்த போது அங்கு நின்ற காவல்துறையினர் என்னையும், வாகனத்தையும் சுற்றி நின்று முன்னொக்கிச் செல்லவிடாது தடுத்து நிறுத்தினார்கள்.
இதனையும் மீறி சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தி, துப்பாக்கியின் பிடியால் வாகனத்தின் மீது குத்தி என்னை மேலும் அச்சுறுத்தினார்கள்.
தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் சப்பல் வீதியில் நின்று நேசித்து வளர்த்த தமிழ் மக்களின் கலாசார சின்னமாக இருந்த நூலகம் எரிவதை நேரடியாக பார்த்தேன். இந்த வன்முறையை அரசாங்கம்தான் செய்தது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டேன்.
 
அன்று 1981 ஜூன் முதலாம் தேதி காலை 5 மணியளவில் எரிந்த நூலகத்திற்கு சென்ற போது அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்கள் அங்கு நின்றார்கள்.
அங்கு சென்ற பார்த்த போது நூலகத்தில் இருந்து 97 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகி கிடந்தது.ஆனந்தகுமாரசாமியின் பழமைவாயந்த ஏட்டுச் சுவடிகளும் எரிந்து சாம்பலாகிக் கிடந்தது.
நூலக எரிப்பு என்பது கலாசார, கல்வி படுகொலையாகும். இது தமிழ் இனத்தை அச்சுறுத்துகின்ற படுகொலை நிகழ்வாகவே பார்க்கின்றேன்.
மீண்டும் அந்த நூலகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக பல இடங்களில் நிதி சேகரிக்கப்பட்டன.
எரிக்கப்பட்ட நூலகத்தின் முன்பகுதியை நினைவுச் சின்னமாக பேணிக் கொண்டு நூலகத்தின் மேற்குப் பகுதியை புதிதாக நிர்மானித்து 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியல் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நூலக பகுதியை அமரர் அமிர்தலிங்கம் ஊடாக நான் திறந்து வைத்திருந்தேன்.
இதன் பின்னர் யுத்தம் காரணமாகவும் நூலகம் மீண்டும் சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட நூலகத்தினை புணரமைப்புச் செய்வதற்கு அதன் பின் வந்த அரசாங்கங்கள் முனைப்புக் காட்டியிருந்தன. இதனால் நூலக எரிப்பினை நினைவு கூறும் வகையில் எங்களால் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நூலகத்தின் முன் பகுதி முழுமையாக புணரமைக்கப்பட்டு, நூலக எரிப்பின் சான்றும் அரசாங்கத்தால் திட்டமிட்டு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பின்னர் நவீனத்துவத்துடன் தற்போது இயங்கி வருகின்றது. குறிப்பாக கணினி உட்பட பல்வேறு வசதி வாய்ப்புக்கள் அங்கு உள்ளது. இருந்த போதும் நாங்கள் இழந்த தமிழ் மக்களின் ஓலைச் சுவடிகள் உட்பட பல பொக்கிஷங்களை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேதான் இருக்கின்றோம்.
இது ஒரு காலத்தினுடைய கலாசார படுகொலையின் சுவடாகவே யாழ் பொது நூலக எரிப்பினை பார்க்கின்றேன் என்றார்.
 
யாழ் பொது நூலக எரிப்பு தொடர்பில் பதிப்பாளரும் சிவசேனை அமைப்பின் இலங்கை தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் பிபிசி தமிழுக்கு தெரிவித்த கருத்துக்கள்,
 
யாழ்ப்பாண நூலகத்தை 1981 மே 31 அல்லது ஜூன் முதலாம் தேதி அழிக்க நினைத்தவர்கள் தமிழர்களை வேரோடும் மண்ணின் மரபோடும் அழிக்க நினைத்தவர்கள்.
அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது. தமிழர்கள் பீனிக்ஸ் பறவையை போன்றவர்கள். அழிவடைந்த சாம்பலில் இருந்து தமிழர்கள் மீண்டெழுவார்கள்.
அன்பும் அறனும் அருளும் என்று பாடிய பெருந்தகைகள் வாழ்ந்த இந்த மண்ணிலே இருந்த இந்த நூலகத்தை எரித்து தமிழ் இனத்தை மண்ணோடு மண்ணாக்கலாம் என்ற கணவு கண்டவர்கள் இன்று அதில் தோற்றுப் போய்விட்டார்கள்.
தமிழர்கள் இன்று நிமிர்ந்து நிற்கின்றார்கள். எந்த அழிவுகளையும் எதிர் கொள்ள தயாராக இருக்கின்றோம் என்றார்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies