அன்றைய ஜே.ஆர்.- ராஜிவ் ஒப்பந்தமும் இன்றைய ரணில்- சம்பந்தன் ஒப்பந்தமும்!!

24 Apr,2018
 


 
கர­லி­யத்தை கிரா­மத்­தைச் சேர்ந்த சாலிஸ் முத­லாளி அந்­தக் கிரா­மத்­துக்கே தலை­வர் போன்­ற­வர். பாதிக் கிரா­மத்­துக் குச் சொந்­தக்­கா­ரர். இறப்பர், தேயிலை, தேக்கு, தென்­னந்­தோட்­டங்களுக்­கும், பல ஏக்­கர் வயல்­நி­லத்­துக்­கும் சொந்­தக்­கா­ரர். இவை­கள் அனைத்­தை­யும் தனித்து பாது­காப்­பது சிர­ம­மென உணர்ந்த சாலிஸ் முத­லாளி, அண்­டைக் கிரா­மங்­கள் சில­வற்­றி­லி­ருந்து தொழி­லா­ளர்­க­ளைக் குறைந்த சம்­ப­ளத்­துக்கு வேலைக்­க­மர்த்தி தமது தோட்­டங்­க­ளைப் பரா­ம­ரிப்­பித்து வந்­தார்.
தமது தோட்­டங்­க­ளி­லேயே அந்தத் தொழிலாளர்கள் தங்கி வாழ்­வ­தற்கு வச­தி­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தார். அவர்­க­ளது வாழ்க்கை மகிழ்ச்­சி­யாக அமைந்­தது. சாலிஸ் முத­லாளி முது­மை­ய­டைந்த வேளை, அந்­தத் தொழி­லா­ளர்­க­ளது பிள்­ளை­களே அவ­ரது தோட்­டங்க­ளில் வேலை செய்து வந்­த­னர்.
அது மட்­டு­மன்றி, சாலிஸ் முத­லா­ளி­யால் ஆரம்­பத்­தில் வேலைக்கு அமர்த்­தப்­பட்ட தொழி­லா­ளர்­க­ளது பேரப்­பிள்­ளை­க­ளும் கூட அந்த வேளை­யில் தோட்­டங் க­ளில் வேலை­க­ளில் ஈடு­பட்டு வந்­த­னர். அதிக காலம் கழி­வ­தற்கு முன்­னர் அந்­தத் தொழி­லா­ளர்­கள் வாழ்ந்த இடங்­கள், வீடு­கள், அவர்­கள் வேலை­செய்த முத­லா­ளி­யின் தோட்­டங்­கள் அந்­தத் தொழி­லா­ளர்­க­ளுக்­குச் சொந்­த­மா­கின.
அவற்­றுக்­கான உறு­தி­க­ளை­யும் அந்­தந்­தத் தொழி­லா­ளர்­க­ளால் பெற முடிந்­தது. அந்­தத் தொழி­லா­ளர்­க­ளது பூர்­வீக கிரா­மங்­க­ளது உற­வி­னர்­கள், குறித்த தொழி­லா­ளர் தரப்­புக்­காக உரிமை கோரி சாலிஸ் முத­லா­ளி­யு­டன் மோதல்­க­ளில் ஈடு­பட்­ட­னர். சாலிஸ் முத­லா­ளி­ யின் பிள்­ளை­கள், பேரப்­பிள்­ளை­கள்கூட அந்த இடங்­க­ளுக்கு உரிமை கோர இய­லாது போயிற்று.
சாலிஸ் முத­லா­ளி­ யால் மெள­னம் காப்­ப­தை­விட வேறெ­த­னை­யும் செய்ய இய­லாது போயிற்று. மிகப் பெறு­மதி வாய்ந்த தமது பெரும் சொத்­துக்­களை இழக்க நேர்ந்த கர­லி­யத்த கிரா­மத்து சாலிஸ் முத­லா­ளி­யின் கதை­யின் ஆரம்ப,மத்திய, முடிவுகள் இவை!.
கீழே குறிப்­பி­டப்­ப­ட­வுள்ள கதை­யின் ஆரம்­பத்தை இலங்கையின் பழைய அர­சி­யல் வர­லாற்றை அறிந்­தோர் நன்கறி­வர். நடுப்­ப­குதி குறித்து விளக்­கிக் கூறக் கூடி­ய­தா­யி­ருக் கும். முடிவு எவ்­வா­றி­ருக்­கும் என்­பது குறித்து இப்­போது எது­வும் உறு­தி­யா­கக் கூற இய­லாது.
ஜே.ஆரின் கடை­சிக் கால அர­சி­யல் வாழ்க்கை
பரி­தா­ப­க­ர­மா­னது
1980துகள், அவ்வேளையில் 80 வய­தைத் தாண்­டிய ஜே. ஆரது அரச தலை­வர் பத­வி­யின் முடி­வுக்­கா­லம். 1987ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் ஜே. ஆர் அர­சி­ய­லில் கழுத்தில் கயிறு இறு­கிய நிலை­யில் செயற்­பட நேர்ந்­தது. இலங்­கைத் தமிழ் மக்­கள் தொடர்­பில் இந்­தியா பார­தூ­ர­மான விதத்­தில் தலை­யீட்டை ஆரம்­பித்­தி­ருந்­தது. பிர­பா­க­ரன் உட்­பட விடு­த­லைப் புலிப் போரா­ளி­கள் தமிழ் நாட்­டைக் கைவிட்டு இலங்­கைக்­குத் திரும்­பி­வி­டத் தீர்­மா­னித்­தி­ருந்­த ­னர்.
ஜே. ஆர், யாழ்ப்­பா­ணத்­துக்கு இரா­ணு­வத்தை அனுப்பி விடு­த­லைப் புலி­களை நலி­வு­ப­டுத்­து­வதை தமிழ் நாட்டு மக்­கள் பொறுத்­துக் கொள்ள மாட்­டார்­க­ளெ­னக் கரு­திய இந்­திய அரசு, யாழ் குடா­நாட்­டில் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை நிறுத்­திக் கொள்­ளு­மாறு இலங்கை அரசை வற்­பு­றுத்தி வந்­தது. இதற்­காக இந்­திய மத்­திய அர­சின் அமைச்­ச­ரான தினேஸ் சிங் இலங்­கைக்கு நேரில் வந்து ஜே. ஆரைச் சந்­தித்­தி­ருந்­தார்.
நல்­லெண்­ணத்தை இந்­தி­யா­வுக்கு வௌிப்­ப­டுத்­தும் விதத்­தில் பிரி­வி­னை­வா­தப் போரா­ளி­க­ளு­டன் எட்டு நாள்­க­ளுக்­குப் போர் நிறுத்­த­மொன்றை ஜே. ஆர் அறி­வித்­தார். அந்­தப் போர் நிறுத்­தம் நடை­மு­றை­யி­லி­ருந்த நாள்­க­ளில், திரு­கோ­ண­ம­லை­யி­லி­ ருந்து கொழும்­புக்கு பஸ்­ஸில் பய­ணித்த 130 பய­ணி­களை விடு­த­லைப்­பு­லி­கள் சுட்­டுப் படு­கொலை செய்­தி­ருந்­த­னர்.
கொழும்பு மத்­திய பஸ் நிலை­யத்­தில் விடு­த­லைப் புலி­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட வெடிகுண்­டுத் தாக்­கு­த­லில் 150 பொது­மக்­கள் உயி­ரி­ழந்­த­னர்.
ஜே.ஆரின் வட­ம­ராட்சி இரா­ணுவ நட­வ­டிக்கை
இந்­தி­யா­வின் தலை­யீட்­டுக்கு வழி­வ­குத்­தது
தாம் கடும் அர­சி­யல் அநா­தை நிலைக்கு உட்­ப­டு­வ­தாக உணர்ந்த ஜே. ஆர், விடு­த­லைப் புலி­க­ளுக்கு எதி­ராக வட­ம­ராட்சி இரா­ணுவ நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தார். 1987ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட அந்த இரா­ணுவ நட­வ­டிக்கை, 10 நாள்­க­ளா­கத் தொடர்ந்து இடம் பெற்­றது.
இரா­ணு­வத்­தி­ன­ரில் 29 பேரும், விடு­த­லைப் புலி­க­ளில் நூறு பேர் வரை­யா­ன­வர்­க­ளும் அந்த நட­வ­டிக்­கை­யில் உயி­ரி­ழக்க நேர்ந்­தது. விடு­த­லைப் புலிப் போரா­ளி­கள் பின்­வாங்­கிச் சென்­ற­து­டன், தமிழ் நாட்­டி­லி­ருந்து போரா­ளி­கள் மற்­றும் பேரா­யு­தங்­களை வட­ப­கு­திக்­குக் கொண்­டு­வர விடு­த­லைப்­பு­லி­கள் பயன்­ப­டுத்­திய வட­கி­ழக்கு கடற்­பி­ராந்­தி­யத்தை இலங்கை இரா­ணு­வத் தரப்பு தனது கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தது.
‘‘அந்த வேளை­ யில் இந்­திய அரசு தலை­யிட்­டி­ருக்­காதுவிட்­டால், விடு­த­லைப் பு­லி­களை எம்­மால் முற்­றா­கத் தோற்­க­டித்­தி­ருக்க முடிந்­தி­ருக் கும்.’’ என வட­ம­ராட்சி இரா­ணுவ நட­வ­டிக்­கைக்­குத் தலைமை தாங்­கிய பிரி­கே­டி­யர் விஜய விம­ல­வர்­தன பின்ன ரொரு சமயம் தெரி­வித்­தி­ருந்­தார்.
‘‘யாழ்ப்­பா­ணத்­தைக் கைப்­பற்ற இலங்கை இரா­ணு­வம் முய­லு­மா­னால், அதை இந்­திய அரசு பார்த்­துக் கொண்டு சும்மா இருக்­காது’’ என அந்த வேளை­யில் இந்­தி­யத் தூது­வ­ராக இங்கு கட­மை­யாற்­றிய ஜே. என். டிக்­சிற், அந்த வேளைய இலங்கை பாது­காப்பு அமைச்­சர் லலித் அது­லத்­மு­த­லிக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார்.
உண­வுப் பொருள்­கள் தட்­டுப்­பாட்­டால் வாடிய பொது­மக்­க­ளுக்கு உத­வ­வென தமிழ்­நாடு அர­சின் அழுத்­தம் கார­ண­மாக இந்­திய அரசு 20 மீன்பிடி வள்­ளங்­க­ளில் உண­வுப் பொருள்­கள் மற்­றும் எரி­பொ­ருள்­களை வட­ப­கு­தித் தமி­ழர்­க­ளுக்­கென அனுப்பி வைத்­தது.
ஆயி­னும் இலங்­கைக் கடற்­ப­டை­யி­னர் அந்­தப் பட­கு­கள் வட­ப­கு­திக்­குச் செல்­லத் தடை­வி­தித்து, அவற்றை மீண்­டும் இந்­தி­யா­வுக்கே திருப்பி அனுப்பி வைத்­தி­ருந்­த­னர். இத­னால் ஆத்­தி­ர­முற்ற இந்­திய மத்­திய அரசு, பன்­னாட்டு சட்­ட­ந­டை­மு­றை­களை மீறும் வகை­யில், ஆகாய மார்க்­க­மாக உணவு மற்­றும் மருந்து வகை­கள் அடங்­கிய 22 தொன் பொருள்­களை வட­ப­குதி மக்­க­ளுக்கு விநி­யோ­கித்­தது. அது இந்­திய மத்­திய அரசு தமிழ்ப் பிரி­வி­னை­ வா­தி­க­ளுக்­குப் பகி­ரங்­க­மாக உத­விய நிகழ்­வாக அமைந்­தது.
இத்­த­கைய பின்­ன­ணி­யில் அர­சி­யல் ரீதி­யி­லான பிறநாடுகளது உத­வி­கள் ஜே. ஆரை­விட்­டுத் தூர வில­கத் தொடங்கின. நாடு அர­சி­யல் ரீதி­யில் அரா­ஜக நிலைக்­குத் தள்­ளப்­பட்டு வந்­தது. இந்­திய தலைமை அமைச்­சர் ராஜீவ் காந்­தி­யு­டன் இலங்கை அரசு ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொள்­வது குறித்து பல்­வேறு தரப்­புக்­க­ளி­னின்­றும் விமர்­ச­னங்­கள் தலை­தூக்­கின.
ஜே.ஆர் அத்­த­கைய அழுத்­தங்­க­ளால் குழுப்­ப­முற்ற போதி­லும், கடை­சி­யில் ராஜீவ்­காந்­தி­யு­டன் ஒப்­பந்த மொன்றை மேற் கொள்ள இணங்கினார். வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை தற்­கா­லி­க­மாக ஒன்­றி­ணைத்து, நடை­மு­றை­யில் இருந்­து­வந்த அவ­ச­ர­கா­லச் சட்­டத்தை நீக்கி, பொது­சன அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பொன்றை நடத்­தும் இந்­தி­யத் தரப்­பின் யோச­னைக்கு ஜே.ஆர் இணங்க வேண்­டி­ய­தா­யிற்று.
நாடு பெரும் பர­ப­ரப்­பான நிலை­யில் இருந்த வேளை, 1987 ஆம் ஆண்­டின் ஜீலை மாதம் 29 ஆம் திகதியன்று இந்­திய இலங்கை ஒப்­பந்­தம் இந்­திய த லமை அமைச்­சர் ராஜீவ் காந்தி மற்­றும் இலங்கை அரச தலை­வர் ஜே. ஆர் ஆகி­யோ­ரால் கொழும்­பில் வைத்­துக் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.
ஜே.ஆர்.ராஜீவ் இடையேயான
இலங்கை –இந்திய ஒப்பந்தம்
குறித்த இலங்கை இந்திய ஒப்­பந்­தத்­தில் பல முக்­கி­ய­மான அம்­சங்­கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. இலங்­கை­யின் இறைமை, சுயா­தீ­ னம், மற்­றும் ஒருமைப்பாட்டைப் பேணும் வகை­யி­லும், நாட்­டில் பல்­லின,மற்­றும் பல்­வேறு மொழி­கள் பேசும் இனக்­கு­ழுமங்க­ளைப் பேணும் வகை­யி­லும், வெவ்­வேறு கலாசார மற்­றும் மொழி தனித்­து­வங்களைக் கொண்ட இனக் குழு­மங்­க­ளுக்கான பகு­தி­கள் நாட்­டில் உள்­ளன என்­பதை ஏற்­கும் வகை­யி­லும் நிர்­வா­கம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மென ஒப்­பந்­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டிருந் தது.
தமிழ் பேசும் மக்­கள் ஏனைய இனக் குழு­மங்­க­ளு­டன் இணைந்து வாழ்ந்து வந்த நாட்­டின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­கள், தமிழ் மக்­க­ளது பாரம்­ப­ரிய வாழ்­வி­டங்­க­ளென எற்­றுக் கொள்­ளும் வகை­யி­லும், தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­ப­டும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும், மற்­றும் ஏனைய மாகா­ணங்­க­ளிலும் தேர்­தல் மூலம் மாகா­ண­ ச­பை­களை உரு­வாக்­க­வும் ஒப்­பந்­தம் வழி வகுத்­தி­ருந்­தது.
அவை மட்­டு­மன்றி மாகா­ண­ச­பை­களை எவ்­வி­தம் உரு­வாக்கி, செயற்­பட வைப்­பிப்­பது என்­பவை தொடர்­பா­க­வும், இலங்கை அர­சுக்­கு­ எ­தி­ரான தமிழ்ப் போரா­ளி­கள் தரப்­புக்­களை எவ்­வி­தம் கட்­டுப்­ப­டுத்­து­வ­தெ­ன­வும், இந்­தி­யா­வி­லுள்ள இலங்­கைத் தமிழ் அக­தி­களை இலங்­கைக்­குக் கூட்­டி­வ­ரு­வது தொடர்­பா­க­வும், இலங்­கை­யி­லுள்ள குடி­யுரிமைக்­குத் தகு­தி­யற்ற இந்­தி­யத் தமி­ழர்­களை இந்­தி­யா­வுக்­குத் திருப்பி அழைப்­ப­து­பற்­றி­யும் இரு நாடு­க­ளும் குறித்த ஒப்­பந்­தத்­தின் மூலம் இணங்­கிக் கொண்­டன.
சிங்­க­ளம் இலங்­கை­யின் அர­ச­ க­ரும மொழி என்­ப­து­டன் தமி­ழும் ஆங்­கி­ல­மும் அரச மொழி­க­ளா­கப் பேணப்­ப­டு­மெ­ன­வும் இணக்­கம் காணப்­பட்­டி­ருந்­தது.
அர­சி­யல் சிக்­கல் முடிச்சை அவிழ்க்க வழி தெரி­யாது
தடு­மா­றிய ரணில்
ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறவு முறை­யில் ஜே. ஆரின் மரு­ம­கன். கடை­சி­யாக நாட்­டின் தலைமை அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்ற கொஞ்­சக் காலத்­துக்­குள்­ளேயே, ரணில் கடும் அர­சி­யல் சிக்­கல் க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. கழுத்­துக்­கு அண்மையாக கத்தி வந்த நிலை. அர­சி­யல் ரீதி­யில் குழப்­பத்­துக்கு உள்­ளாக வேண்டி ஏற்­பட்­டது. ஒரே­யொரு ஆபத்­பாந்­தவ தரப்பு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்­பது, இந்­தி­யா­வின் கைப்­பொம்­மையே. இந்­திய அர­சின் வழி­காட்­ட­லின் படியே அவர்­கள் செயற்­ப­டு­கின்­ற­னர். முக்­கிய பிரச்­சி­னை­கள் தலை­ தூக்­கும்போது கூட்­ட­மைப்­பின் தலை­வர் இந்­தி­யா­வுக்கு ஓடு­வ­தற்­கான இர­க­சி­யம் இதுவே.
கடந்த ஏப்­ரல் 4ஆம் நாள் ரணி­லின் தலை­விதி நிர்­ண­யிக்­கப்­ப­டும் நாளாக அமைந்­தது. தம்­மீ­தான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத் தைத் தோற்­க­டிக்க வேண்­டு­மா­னால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ரவு ரணி­லுக்கு அவ­சி­ய­மா­கி­யி­ருந்­தது. வழக்­கம்­போன்று பல்­வேறு நிபந்­த­னை­கள் ரணி­லின் முன்­னி­லை­யில் முன்­வைக்­கப்­பட்­டன.
கூட்­ட­மைப்­பால் முன்­வைக்­கப்­பட்ட பத்து நிபந்­த­னை­களை ஏற்­ற­தன் மூலமே ரணில் தமது தலைமை அமைச்­சர் பத­வி­யைத் தக்க வைத்­துக் கொள்ள முடி­யும் என்ற இக்­கட்டு நிலை. ரணி­லுக்கு வேறு வழி­யே­தும் இருக்­கி­வில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பத்து நிபந்­த­னை­க­ளும் ரணி­லால் ஏற்­கப்­ப­டு­கின்­றன. தலைக்கு வந்­தது தலைப்­பா­கை­யோடு போயிற்று என்ற விதத்­தில் ரணி­லுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட நம்்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தோற்­க­டிக்­கப்­பட்­டது.
ரணில் – சம்­பந்­தன் உடன்­பாடு
வடக்கு– கிழக்­குப் பிரச்­சி­னைக்கு உட­னடி அர­சி­யல் தீர்வு, அடுத்த தேர்­த­லுக்கு முன்­னர் புதிய அர­ச­மைப்பை நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­று­தல், படை­யி­னர் வச­முள்ள தமிழ் மக்­க­ளது காணி­களை விடு­வித்­தல், விசா­ர­ணை­ க­ளின்­றித் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்­தல், காணா­மல் போனோர் தொடர்­பாக நட­ வ­டிக்கை மேற்­கொள்­ளல், வடக்­குக் கிழக்கு பகுதி மக்­க­ளது உரி­மை­க­ளைப் பாது­காத்­தல், தமிழ்ப் பகு­தி­க­ளின் இளை­ஞர் யுவ­தி­க­ளது வேலை­யில்­லாப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு, வேறு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு வடக்கு– கிழக்கு பகு­தி­க­ளில் நிய­ம­னங்­கள் வழங்­கா­தி­ருத்­தல், வடக்கு –கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள எட்டு மாவட்­டங்­க­ளுக்கு மாவட்­டச் செய­லா­ளர்­களை நிய­மிக்­கும்போது, தமி­ழர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளித்­தல். வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளது அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­க­ளில் அந்­தந்த மாகாண சபை நிர்­வா­கங்­க­ளது கருத்­துக்­களை உள்­வாங்­கிச் செயற்­ப­டு­தல் என்­ப­வையே அந்த பத்து நிபந்­த­னை­ க­ளு­மா­கும்.
மேற்­கண்ட நிபந்­த­னை­கள் செயல்­வ­டி­வம் பெறுமா? என்­பது குறித்து எது­வும் சொல்­வ­தற்­கில்லை. 1987ஆம் ஆண்­டில் ரணி­லின் மாம­னா­ரான ஜே. ஆர் விடு­த­லைப் புலி­க­ளுக்கு போர் நிறுத்த வாய்ப்பை வழங்­கிய போதி­லும், அவர்­கள் அதற்கு எது­வித மதிப்­பும் கொடுக்­க­வில்லை. 2002ஆம் ஆண்­டில் ஜே. ஆரின் மரு­ம­கன் ரணில் விடு­த­லைப் புலி­க­ளுக்கு போர் நிறுத்த வாய்ப்பை வழங்கி­ய­வே­ளை­யி­லும் அவர்­கள் அதற்­கும் கூட எது­வித மதிப்­பும் கொடுக்­காது போரை முன்­னெ­டுத்­த­னர்.
அந்த வகை­யில் பார்க்­கும்­போது, பாம்­பென்று நினைத்­து பிடித்திருந்த கைப்பிடி யைக் கைவிடவோ, இல்லை யேல் அது பழு­தை­தான் ( வைக்­கோல்­புரி ) என்று நம்பி கைப்­பி­டியை இறுகப் பற்றிக்கொள்­ளவோ இய­லாத நிலை­யில் ரணில் குழும்­பிப் போக நேர்ந்­துள்­ளதுShare this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies