கேரளா உணவு வகைகள்

23 Apr,2018
 

 
இது கேரள ஸ்பெஷல். நம் ஊரில் வாழைக்காய் பஜ்ஜி போல கேரளாவில் வாழைப்பழத்தில் போடப்படும் பஜ்ஜிதான் பழம்பொரி. இதை ஏத்தங்காய்ப் பணியாரம் என்றும் சொல்வார்கள்.
1. பழம் பொரி
தேவையான பொருட்கள்:
மைதா – 1/2 கிலோ
நடுத்தரமான நேந்திரம் பழம் – 5
சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.
மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்துத் தேங்காய் எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுங்கள். சுவையான பழம்பொரி தயார்.
 
கேரளா ஸ்பெஷல் : புட்டு, கடலை கறி மற்றும் ஓலன்
புட்டு கடலை கறி
புட்டு – தேவையான பொருட்கள்
புட்டு மாவு (அரிசி மாவு) – 2 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்
தேங்காய் துருவியது – தேவையான அளவு
புட்டு செய்முறை:
அரிசி மாவோடு போதுமான உப்பு சூடான தண்ணீர் சேர்த்து கைவிரல்களால் நன்கு பிசைய வேண்டும். இந்தப் புட்டு செய்வதற்கு நீங்கள் பாரம்பரிய புட்டுக்குடத்தைப் பயன்படுத்த வேண்டும். அந்த உருளை வடிவமான குழலில் முதலாவது ஒரு கரண்டி துருவிய தேங்காய் போட்டு அதன் மீது பிசைந்த அரிசி மாவினைப் போட வேண்டும்.
ஒரு கையளவு போட்டதும் மறுபடியும் தேங்காய் துருவல் பின்னர் பிசைந்த அரிசி மாவு என புட்டுக் குழல் நிரப்பும் வரை மாறி மாறி போட வேண்டும். பின்னர் புட்டுக் குடத்தின் மீது புட்டுக் குழலை நன்கு மூடி வைத்து அவிக்க வேண்டும். நீராவி வெளிவரும் வரை நன்கு கவனமாக அவிக்க வேண்டும். மூன்று நிமிடங்களில் புட்டு தயார். புட்டுடன் சாப்பிட கடலை கறி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
2. புட்டு கடலை கறி
கடலை கறி செய்ய தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டை கடலை – 1கப் (ஊற வைத்து அதோடு உப்பு சேர்த்து வேக வைத்தது)
சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 1 கப்
தேங்காய் (துருவியது) – 1 கப்
தனியாத் தூள் – 2 தேக்கரண்டி
வற்றல் பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ண தேக்கரண்டி
கரம் மசாலா – ண தேக்கரண்டி
தேங்காய் (துண்டுகள்) – ட கப்
தக்காளி (நறுக்கியது) – ட கப்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
கடுகு
மிளகாய் வற்றல்
இஞ்சி-பூண்டு (விழுது)
கடலை கறி செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவலைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும், அதோடு கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், கரம் மசாலா போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். அவற்றை விழுதாக அரைக்கவும்
ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும், பின்னர் கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு அது பொரியத் தொடங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அதன் பின்னர் வெங்காயம் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சிறிது கறிவேப்பிலை, அவித்து வைத்த கொண்டைக் கடலையை அத்தோடு சேர்த்து போதுமான நீர் உப்பு சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்.
பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அவித்து வைத்த கொண்டை கடலையோடு சேர்த்து மேலும் நன்கு வேக விடவும். நன்கு வெந்ததும் நீங்கள் இப்போது நறுக்கிய கொத்தமல்லி தூவி இதனை அலங்கரித்து புட்டுவோடு சேர்த்து பரிமாறலாம். இந்த புட்டுடன் கடலை கறி சேர்த்து சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்கும்.
 
 
கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார்
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
வெண்டைக்காய் - 4 (நறுக்கியது)
கேரட் - 2 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
புளி
துருவிய தேங்காய்
சிறிது உப்பு
தேவையான அளவு கொத்தமல்லி
சிறிது பருப்பு வேக வைப்பதற்கு... துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
 
வறுத்து அரைப்பதற்கு...
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2-3
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் 3 கப் தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்கி, குக்கரை திறந்து பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் புளியை ஒரு கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கவும்.
பிறகு அதில் காய்கறிகளை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.
காய்கறியானது நன்கு வெந்ததும், அதில் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் துருவிய தேங்காய் சிறிது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவி மூடினால், கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார் ரெடி!!!
 
மலபார் மட்டன் பிரியாணி

 
 
 
மசாலாவிற்குத் தேவையான பொருட்கள்
மட்டன் - ண கி.கி (நடுத்தரமாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை – 25 கிராம்
புதினா இலை – 25 கிராம்
கறிவேப்பிலை – 10 கி
பச்சை மிளகாய் – 5
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு(நறுக்கியது) – 2 தேக்கரண்டி
இஞ்சி – 2 தேக்கரண்டி (நறுக்கியது)
மஞ்சள் பொடி - ண தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி
கசகசா விழுது – 1 தேக்கரண்டி
தயிர் - ண கப்
கொத்தமல்லித் தூள் – 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - ண தேக்கரண்டி
பிரியாணி சாதம் செய்ய தேவையான பொருட்கள்
நெய் – 3 கப்
இலவங்கப்பட்டை – 5-6 (கம்பு)
பிரியாணி இலை – 1
ஏலம் – 4-5
கறிவேப்பிலை
வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்
பிரியாணி அரிசி – 250 கி
தண்ணீர் -ண லி
மசாலாவிற்குத் தேவையான பொருட்கள்
நெய் – 2 கப்
இலவங்கப்பட்டை – 5
பிரியாணி இலை – 1
கிராம்பு – 4
ஏலம் – 4
ஜாதிக்காய் – 100 கிராம்
தக்காளி – 1
அலங்காரத்திற்கு தேவையான பொருட்கள் 
வெங்காயம் (மெலிதாக) – 1 கப்
முந்திரிப் பருப்பு - ட கப்
உலர்ந்த திராட்சை - ட கப்
செய்முறை
நீங்கள் இப்போது மட்டனை செய்ய தயாராகலாம். மட்டனை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதோடு இஞ்சி, கிராம்பு, ஏலம், பெருஞ்சீரகம், கசகசா விழுது, நறுக்கிய இஞ்சி, ஜாதிக்காய், பிரியாணி இலை, புதினா இலை, சீரகம், இலவங்கப்பட்டை, கொத்தமல்லித்தூள், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, தயிர் மற்றும் உப்பு நன்கு கலந்து தனியாக வைக்கவும்.
இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதே மாதிரி நெய்யில் உலர்ந்த திராட்சையையும் வறுத்து எடுக்கவும். அதன் பின்னர் வெங்காயம், உப்பு போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இப்போது நறுக்கிய வெங்காயத்தை போட்டு கிளறவும். அத்தோடு தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். இப்போது ஊற வைத்த மட்டனை அத்தோடு சேர்க்கவும். போதுமான அளவு நீர் ஊற்றி நன்கு கலக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்கவும்.  
மற்றொரு பாத்திரத்தை எடுத்து நான்கு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதனுள் கிராம்பு, பெருஞ்சீரகம், ஏலம், சீரகத்தூள் மற்றும் கறிவேப்பிலை போடவும். பின்னர் இலவங்கப்பட்டை மற்றும் வெங்காயம் போட்டு நன்கு கிளறவும். அதோடு சாதத்தை சேர்த்து திரும்பவும் நன்கு கிளறவும்.  தேவையான அதாவது அரிசி அளவு நீர் மூழ்கும் அளவு நீர் ஊற்றவும். பின்னர் உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி அடுப்பில் வைத்து வேக விடவும்.
மட்டன் வெந்ததும் பாத்திரத்தின் மூடியை திறந்து மறுபடியுமாக சிறிது கிளற வேண்டும்.
சாதம் செய்த பாத்திரத்திலிருந்து ஒரு பகுதி சாதத்தை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சில துண்டு மட்டனை எடுத்து மீதம் இருக்கும் சாதத்தின் மீது வைக்கவும் இப்போது தனியாக எடுத்து வைத்த சாதத்தை மட்டன் மீது பரப்பவும். திரும்பவும் மட்டன் துண்டுகள் பரப்பி அதன் மீது சாதத்தை பரப்பவும். இப்படியாக மொத்த சாதமும் மட்டனும் சமமாக அடுக்குகளாக பரப்பப்பட்ட பின்னர் இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை வெங்காயத்தை சேர்க்கவும். சிறிது கொத்தமல்லி இலை தூவி சிறிது அடுப்பில் வைத்து வேக விடவும்.
இப்போது ருசியான கமகமக்கும் கேரள மலபார் பகுதி பிரசித்திப்பெற்ற  பிரியாணி ரெடி.
 2
 
மலபார் இறால் புரியாணி
 
 
 
 
தேவையான பொருட்கள்;
சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசி - அரைக்கிலோ
இறால் உறித்தது  - 500 கிராம்
வெங்காயம் - 4 மீடியம் சைஸ்(200 கிராம்) 
தக்காளி - 2 (100 கிராம்)
நறுக்கிய மல்லி,புதினா - தலா அரை கப்
ப்ரெஷ் கெட்டி தயிர் - அரை கப் 
எலுமிச்சை ஜூஸ் - ஒரு பழம் ( மீடியம் சைஸ்)
இஞ்சி பூண்டு  பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
ஏலம்,பட்டை, கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - 1
காஷ்மீரி சில்லி பவுடர் - அரைடீஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 4 + 2  டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பைனாப்பிள் எசன்ஸ் - விரும்பினால் - 1 டீஸ்பூன் ( நான் சேர்க்கவில்லை)
உப்பு - தேவைக்கு.
 
அலங்கரிக்க:
பெரிய வெங்காயம் - 1 
முந்திரி - 10 -15
 
 
செய்முறை:-
முதலில் சுத்தம் செய்த இறாலை 1/2  டீஸ்பூன் மிளகாய்த்தூள் ,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சுவைக்கு உப்பு, சிறிது எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலந்து  வைக்கவும். 
தேவையான பொருட்களை நறுக்கி தயார் செய்து வைக்கவும்.
 
 
ஒரு கடாயில் 2 -3  டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு முந்திரி  பக்குவமாக வறுத்து எடுக்கவும்.அதே எண்ணெயில் சிம்மில் வைத்து வெங்காயம் பொன்னிறமாக வறுத்து எண்ணெய் வடித்து தனியாக வைக்கவும்.
 
 
முந்திரி  வெங்காயம் வறுத்த எண்ணெயில் இறாலை ரோஸ்ட் செய்து எடுக்கவும்.
 
இனி பிரியாணி ரைஸ் செய்ய:
2 டேபிள்ஸ்பூன் நெய் அடிகனமான பாத்திரத்தில் விடவும், ஏலம்,பட்டை கிராம்பு,பிரியாணி இலை போட்டு சிம்மில் வைத்து வெடிக்க விட்டு ஊறிய அரிசியை சேர்த்து மெதுவாக வதக்கவும்.அரிசியின் அளவிற்கு ஒன்றுக்கு ஒன்னரை அளவு கொதி நீரை விடவும் .தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து மூடவும். தண்ணீர் வற்றி ரைஸ் பொல பொல வென்று வரும். அடுப்பை அணைக்கவும். ரைஸ் முக்கால் பதம் தான் வெந்திருக்கும்.
 
இனி பிரியாணிக்கு கிரேவி செய்ய:-
பிரியாணிக்கு கிரேவி செய்ய அடிகனமான பாத்திரம் எடுத்துக் கொள்ளவும்.
 
4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்து வரவும் .
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.நன்கு பொன்னிறமாக வரவேண்டும்.இஞ்சி பூண்டு பேஸ்ட்  சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி, மல்லி, புதினா சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.தக்காளி நன்கு மசிந்து வர வேண்டும்.
 
.மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மிளகுத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்க்கவும்.பிரட்டி விடவும். தயிர் எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது.நன்கு பிரட்டி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.ரோஸ்ட் செய்த இறாலைச் சேர்க்கவும்  கிரேவியில் உப்பு சரிபார்க்கவும். சிறிது எலுமிச்சை பிழிந்து விடவும்.
இனி பிரியாணிக்கு தம் செய்ய வேண்டும்.
இறால் ரெடி செய்ததில் பாதி கிரேவியோடு தனியாக எடுத்து வைக்கவும்.
மீதியுள்ள கிரேவி மீது ரெடி செய்த கீ ரைஸ் பாதி சேர்க்கவும்.விரும்பினால் அரை டீஸ்பூன் பைனாப்பிள்  எசன்ஸ் சேர்க்கவும்.அதன் மீது பாதி எடுத்து வைத்த இறால் கிரேவி சேர்க்கவும்.மீண்டும் ரைஸ் சேர்க்கவும்.வறுத்து வைத்த வெங்காயம்,முந்திரி திராட்சை சேர்க்கவும். எசன்ஸை பரவலாக விடவும். அலுமினியம் ஃபாயில் அல்லது மெல்லிய துணி கொண்டு மூடவும். தம் செய்ய ஒரு பழைய தோசைக்கலம் அல்லது தவாவை வைக்கவும். மேலே ரெடி செய்த பிரியாணி  பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் மிகச் சிறிய தீயில் தம் செய்யவும்.அடுப்பை அணைக்கவும்.10 நிமிடம் கழித்து திறக்கவும்.
கலந்து பரிமாறவும்.
 
சுவையான மலபார் இறால் பிரியாணி தயார். ரைத்தா, பப்படம்,  ஃபிஷ் ஃப்ரையுடன் பரிமாறலாம்.
 
 
கேரளா ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்
 
 
 
.
பாலக்காடு சாம்பார்
தேவையானவை:
 துவரம் பருப்பு -  கால் கப்
 பெரிய வெங்காயம் - 1
(நீளமாக நறுக்கவும்)
 தக்காளி - 2
(மீடியம் சைஸில் நறுக்கவும்)
 வெண்டைக்காய் - 2
 முருங்கைக்காய் - 2
(விருப்பமான வடிவில் நறுக்கவும்)
 கல்யாணபூசணிக்காய் - 50 கிராம்
 சேனைக்கிழங்கு - 1 கப்
 உருளைக்கிழங்கு - 1
 புளி - சின்ன எலுமிச்சை அளவு (ஊற வைத்து வடிகட்டவும்)
 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 பெருங்காயம் - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - 5 இலைகள்
 மல்லி (தனியா) - 3 டேபிள்ஸ்பூன்
 கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 வெந்தயம் - 1 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 6
 கறிவேப்பிலை - 5 இலைகள்
 துருவிய தேங்காய் - 1 கப்
 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
 கடுகு - 1 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 வெந்தயம் - அரை டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
காய்கறிகளை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும். துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து புளிக்கரைசல், மூன்று கப் தண்ணீர், காய்கறிகள், தக்காளி, வெங்காயம், மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து குறைவான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்.
 அடுப்பில் வாணலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து மல்லி (தனியா), கறிவேப்பிலை, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இறுதியாக தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு  விழுதாக அரைத்து வைக்கவும். காய்கறிகள் வெந்ததும், வெந்த பருப்பை மசித்து காய்கறிகளோடு சேர்த்துத் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அரைத்த விழுதை சாம்பாரில் சேர்த்து பத்து நிமிடம் குறைந்த தீயில் வேக வைத்து, தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்துப் பரிமாறவும்.
காளன்
தேவையானவை:
 நேந்திரங்காய் - 2
 சேனைக்கிழங்கு - 250 கிராம்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 தயிர் - கால் கப்
 உப்பு - தேவையான அளவு
அரைக்க:
 துருவிய தேங்காய் - முக்கால் கப்
 சீரகம் - 1 டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
 கடுகு - 1 டீஸ்பூன்
 வெந்தயம் - அரை டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 1
 கறிவேப்பிலை - 5 இலைகள்
செய்முறை:
நேந்திரங்காய் மற்றும் சேனைக்கிழங்கை, மீடியம் சைஸ் துண்டுகளாகத் தோல் நீக்கி கழுவி பிரஷர் குக்கரில் மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிக குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் வரும் வரை வேக விடவும். தண்ணீர் இருந்தால், அடுப்பில் மீண்டும் வைத்து, தண்ணீரை வற்ற விடவும். அடுப்பை அணைத்து காய்கறிகளை லேசாக மசித்துக் கொள்ளவும். மீண்டும் குக்கரை அடுப்பில் ஏற்றி சிம்மில் வைத்து தயிரைச் சேர்த்துக் கலக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதை காய்கறிக் கலவையில் சேர்த்துக் கலக்கி, சில நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றை, தாளித்து கலவையில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
மீன் மொய்லி
தேவையானவை:
 மீன் - 500 கிராம்
(சின்ன கியூப்களாக  நறுக்கவும்)
 பெரிய வெங்காயம் - 2
(மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 10 (இரண்டாக நறுக்கி கொள்ளவும். காரத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்)
 முதல் தேங்காய்ப்பால் - அரை கப்
 இரண்டாம் தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்
 பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
 மிள‌காய்த்தூள் - 1 டீஸ்பூன்
 வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 பட்டை - 2
 கிராம்பு - 4
 மைதா மாவு - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - 5
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய் எண்ணெய்
- தேவையான அளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 நீளமான தக்காளி ஸ்லைஸ்கள்
- அலங்கரிக்க
செய்முறை:
மீனைக் கழுவி சிறிது மஞ்சள்தூள், உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகத் தேய்த்து, அரை மணி நேரம் தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு கப் எண்ணெய் ஊற்றி, மீனை பாதி வேக்காட்டில் பொரித்து எடுத்து எண்ணெயை வடித்து தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் மைதா மாவு, மீதமிருக்கும் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை போட்டு சில நிமிடம் வதக்கவும். இதில் இரண்டாம் தேங்காய்ப்பாலைச் சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், வினிகர், கிராம்பு, பட்டை, உப்பு சேர்த்து குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வேக விடவும். கலவை ஒன்று சேர்ந்து வரும் போது பொரித்த மீனை சேர்த்து, அது கொதிக்க ஆரம்பித்ததும் முதல் தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைக்கவும். எக்காரணம் கொண்டும் கொதிக்க விடக்கூடாது. இறுதியாக தக்காளி ஸ்லைஸ் கொண்டு அலங்கரிக்கவும்.
கறிமீன் பொலிச்சது
தேவையானவை:
 கறிமீன் - 2
 சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - 2
(பொடியாக நறுக்கவும்)
 இஞ்சி-பூண்டு விழுது
- 1 டேபிள்ஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2
 கறிவேப்பிலை
- 5 இலைகள்
 மிளகாய்த்தூள்
- அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்)
- அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள்
- கால் டீஸ்பூன்
 உப்பு
- தேவையான அளவு
 வாழை இலை - சிறியது
 தேங்காய்ப்பால் - 1 டேபிள்ஸ்பூன் (தண்ணீருக்கு பதிலாக)
 எண்ணெய்
- 1 டேபிள்ஸ்பூன்
ஊற வைக்க:
 மிளகுத்தூள்
- அரை டீஸ்பூன்
 உப்பு
- தேவையான அளவு
செய்முறை:
மீனை நன்கு கழுவி மேலும் கீழும் கத்தியால் கீறி விட்டுக் கொள்ளவும். மிளகுத்தூளை உப்புடன் கலந்து, மீனில் தடவி அரை மணி நேரம் தனியாக வைக்கவும். அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து ஒரு டிஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் மீனை இருபுறமும் வேக விட்டு எடுத்து வைக்கவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கியதும், தக்காளியைச் சேர்த்துக் கரைய வதக்கவும். உப்பு போட்டுக் கிளறவும். ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர்/தேங்காய்ப்பால் விட்டு கிளறி இறக்கவும். அடுப்பை அணைத்து கிளறியதை நான்கு பாகமாகப் பிரிக்கவும். வாழை இலையை தீயில் இரண்டு புறமும் லேசாக வாட்டி எடுக்கவும். இதில் ஒரு பாக கலவையை வைத்து, அதன் மேல் மீனை வைக்கவும். இதன் மேல் மற்றொரு கலவை பாகத்தை எடுத்துப் பரப்பவும். இலையால் மீனை மூடி வாழை நாரால் கட்டி விடவும்.
இதே போல மீதம் இருக்கும் மற்றொரு மீனிலும் கலவையைத் தடவி வாழை இலையில் வைத்து மூடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வாழை இலை மீனை வைத்து மூடியால் மூடி சிம்மில் வைக்கவும். பத்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து மீனைத் திருப்பிப் போட்டு மீண்டும் பத்து நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும். அடுப்பை அணைத்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
செம்மீன் மசாலா ஃப்ரை
தேவையானவை:
 செம்மீன் (இறால்) - 250 கிராம்
 இஞ்சி-பூண்டு விழுது
- தலா 1 டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள்
- 1 டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்)
- அரை டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
 கரம் மசாலாத்தூள்
- 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
 குடம் புளி - நெல்லிக்காய் அளவு (ஊற வைக்கவும்)
 மெல்லியதாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள்
- கால் கப்
 பெரிய வெங்காயம் - 2 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
 சின்ன வெங்காயம் - 5 (மெல்லிய வட்டமாக நறுக்கவும்)
 உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 தேங்காய் எண்ணெய்
- தேவையான அளவு
செய்முறை:
இறாலைச் சுத்தம் செய்து பாதியளவு இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், குடம் புளி, தேங்காய்த் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கைகளால் நன்கு பிசிறவும். சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்து இறால் அதிகமாக வெந்துவிடாமல், எடுத்து அதிகப்படியான தண்ணீரை இறுத்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும், மீதம் இருக்கும் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் வெந்த இறால், உப்பு சேர்த்து 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு வேக விடவும். தண்ணீர் வற்றி மசாலாவுடன் இறால் கலந்து வரும் வேளையில், தீயை முற்றிலும் குறைத்துக் கிளறவும். அடுப்பை அணைத்து ரொட்டி மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.
ப்ராம்ஃபெட் தவா ஃப்ரை
தேவையானவை:
 வவ்வால் மீன் - 1
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
 மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டேபிள்ஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 ரவை - 2 டேபிள்ஸ்பூன்
 அரிசி மாவு - 1 டீஸ்பூன்
செய்முறை:
வவ்வால் மீனின் சிறகை நறுக்கி கழுவி மென்மையான துணியால் துடைத்து வைக்கவும். ஒரு பவுலில் இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள் கலந்து மீனின் மீது தடவி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சிறிது தண்ணீர் தெளித்து கலந்து மீனின் மீது இருபுறமும் தடவி வைக்கவும். ஒரு பவுலில் ரவை, அரிசி மாவை தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும். ஊறிய மீனை அரிசிக் கலவையில் முக்கியெடுத்து நான்-ஸ்டிக் தவாவில் இருபுறமும் நான்கு நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.
சிறுகீரை கட்லெட்
தேவையானவை:
 சின்னதாக நறுக்கிய
சிறுகீரை - 100 கிராம்
 சின்னதாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்
 நறுக்கிய
பச்சை மிளகாய் - 2
 மெல்லியதாக
நறுக்கிய இஞ்சி
- அரை அங்குலம் அளவு
 வேகவைத்த உருளைக்கிழங்கு - 25 கிராம்
 தண்ணீரில் நனைத்து
மசித்த பிரெட் - 25 கிராம்
 மல்லித்தூள் (தனியாத்தூள்)
- முக்கால் டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள்
- முக்கால் டீஸ்பூன்
 ரஸ்க் பவுடர் - 50 கிராம்
 மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்
 கறிவேப்பில்லை - சிறிதளவு
 உப்பு- தேவையான அளவு
செய்முறை :
கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.  பிறகு, இத்துடன் உருளைக்கிழங்கு, பிரெட், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி சின்னச் சின்ன கட்லெட் மசாலா துண்டுகளாகச் செய்யவும்.
மைதாவை 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்லெட் மேல் தெளிக்கவும். அதன் மேல் ரஸ்க் பவுடரை தூவவும். பேனில் எண்ணெயைத் தடவி, கட்லெட்டை ஃபிரை செய்யவும்.
கடலைக் கறி
தேவையானவை:
 சின்ன கொண்டைக்கடலை - 2 கப் (வேக வைத்தது)
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் -  2 (பொடியாக நறுக்கியது)
 பச்சை மிளகாய்
- 1 (உடைத்துக் கொள்ளவும்)
 தக்காளி - 1
 துருவிய தேங்காய் - முக்கால் கப்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டீஸ்பூன்
 கேரளா கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 கடுகு - 1 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
 எண்ணெய் - 1 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 கறிவேப்பிலை - 8 இலைகள்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
கொண்டைக்கடலையை தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு, குக்கரில் உப்பு சேர்த்து மூன்று விசில் வரை வேக விடவும். அடுப்பில் வாணலியை வைத்து, அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேங்காயைச் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற விட்டு, மிக்ஸியில் விழுதாக தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.
தக்காளியை மீடியம் சைஸில் நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, பெருங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி வேக விடவும். இதில் வேக வைத்த கடலையை தண்ணீரோடு சேர்த்து, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து சில நிமிடம் வேக விடவும். இதில் இருந்து சிறிதளவு கொண்டைக்கடலையை எடுத்து, மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்துக் கிளறவும். இத்துடன் கரம் மசாலாத் தூளைச் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை வேக விடவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கிரேவியில் சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துத் தூவி இறக்கவும். புட்டு, ஆப்பம், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.
காலிகட் சிக்கன் பிரியாணி
தேவையானவை:
 சிக்கன் (கோழிக்கறி) - அரை கிலோ
 தயிர் - 50 கிராம்
 கொத்தமல்லித்தழை - 25 கிராம்
 புதினா - 25 கிராம்
 கறிவேப்பிலை - 10 கிராம்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
 சோம்பு - அரை டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 25 கிராம்
 பூண்டு - 20 கிராம்
 இஞ்சி - 2 டீஸ்பூன்
 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
 எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
 கசகசா பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
சாதத்துக்கு:
 வெண்ணெய்/ நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பட்டை  - 5
 பிரிஞ்சி இலை - 1
 ஏலக்காய் - 4
 கறிவேப்பிலை - 4
 பெரிய வெங்காயம் - 1
 கிராம்பு - 4
 சீரகச்  சம்பா அரிசி - 250 கிராம்
 தண்ணீர் - அரை லிட்டர்
 உப்பு - தேவையான அளவு
பிரியாணி மசாலா:
 வெண்ணெய்/ நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய் - 5
 பிரிஞ்சி இலை - 1
 ஏலக்காய் - 4
 பட்டை - 5
 ஜாதிக்காய் - 1
 வெங்காயம் - 100 கிராம்
 தக்காளி- 1
செய்முறை:
சிக்கனை (கோழிக்கறி) கழுவி விருப்பமான வடிவில் நறுக்கி வைக்கவும். தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் சிக்கனுடன் கலந்து அரை மணி நேரம் தனியாக ஊற வைக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சேர்த்து சூடாக்கி, அதில் பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கறிவேப்பிலை, கிராம்பு, வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் அரிசியைக் கழுவி சேர்த்து உப்பு போட்டுக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் குறைவான தீயில் 15 நிமிடம் அரிசியை வேக விட்டு எடுக்கவும்.
வாணலியில் வெண்ணெய் / நெய்யை சூடாக்கி, மாசாலாவுக்குத் தேவையானவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். இத்துடன் ஊற வைத்திருக்கும் சிக்கனையும் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். பிறகு, மூடியைத் திறந்து தீயை



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies