5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் எவ்வளவு பெரிய பிரச்னைகள், சிக்கல்கள், சூழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.
வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்றுமாநிலத்தை சேர்ந்தவர்களாலும் நன்மை உண்டாகும். ஆனால் உடல் நலக் குறைவு ஏற்படும். கார, அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். என்றாலும் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வர வேண்டிய தொகைக் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும்.
அரசியல்வாதிகளே! கட்சி தலைமை உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.
கலைத்துறையினர்களே! கௌரவிக்கப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். குடும்ப ரகசியங்களை காக்க வேண்டிய மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 5, 8, 14, 15, 26
அதிஷ்ட எண்கள்: 6, 7
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, கிரே
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாததத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள். ஆனால் யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் முக்கிய விஷயங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று வருவது நல்லது. மாதத்தின் முற்பகுதியில் தொட்டதெல்லாம் துலங்கும். புது பொறுப்புகள் தேடி வரும்.
வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள். பணவரவு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வாகன வசதிப் பெருகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஆனால் சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும்.
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
கன்னிப் பெண்களே! திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். பங்குதாரர் பணிந்து வருவார். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சக ஊழியர்களும் நட்புறவாடுவார்கள்.
கலைத்துறையினர்களே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். வசதி, வாய்ப்புகள் பெருகும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 4, 17, 22, 24, 26
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தூரத்து சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அவர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய இனிய சம்பவங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்வீர்கள்.
என்றாலும் சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள்.
அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிக்கு பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு உதவுவார்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் சவாலான காரியங்களை எடுத்து சாதித்துக் காட்டுவீர்கள். மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும்.
கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். வி.ஐ.பிகளால் இனம் கண்டறியப்படும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 3, 1, 9, 10, 21
அதிஷ்ட எண்கள்: 2, 7
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும். திடீர் பணவரவு உண்டு.
ஷேர் மூலம் ஆதாயம் உண்டு. வேற்றுமொழி பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். என்றாலும் கை, கால் வலி வரும். சிலருக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், கால்சியக் குறைவு வரக்கூடும். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவர்களுடன் கருத்து மோதல்களும் வரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.
மாதத்தின் மத்தியப் பகுதியிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வீடு, மனை, சொத்துப் பிரச்னைகள் நல்ல விதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனைவிவழி சொத்துகள் வந்து சேரும். ஆனால் நண்பர், உறவினர்களுடன் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. பழைய நண்பர்களுடன் பகைமை வரக்கூடும்.
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம்.
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் லாபத்தை பெருக்க புது விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். சக ஊழியர்கள் ஆச்சர்யப்படுமளவிற்கு சில காரியங்களை பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். புதிய அணுகுமுறையால் முன்னேறும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 2, 11, 20, 25
அதிஷ்ட எண்கள்: 5, 8
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் எங்குச் சென்றாலும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.
வி.ஐ.பிகள் உதவுவார்கள். ஓரளவு பணவரவு உண்டு. முற்பகுதியில் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். பிள்ளைகளால் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அவர்களுடன் மனத்தாங்கல் வரக்கூடும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.
பூர்வீக சொத்துப் பிரச்னையை இப்போது தவிர்ப்பது நல்லது. மத்தியப் பகுதியிலிருந்து கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். என்றாலும் வாகன விபத்துகள், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் பழுதாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை தள்ளிப் போகும். முதுகு, மூட்டு வலி, வீண் சந்தேகம், கருத்து மோதல்கள் வரக்கூடும்.
அரசியல்வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள்.
கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்க ளை முழுமையாக நம்புவார்கள். அலுவலகத்தை நவீன மயமாக்க திட்டமிடுவீர்கள்.
கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமைக் கொண்டாடுவார். எதிர்நீச்சல் போட வேண்டிய மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 10, 12, 21
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஊதா
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்