நல்லாட்சியின் மீது நம்பிக்கை இழந்துவரும் சிறுபான்மை மக்கள்

09 Mar,2018
 
 

தம்­புள்ளை, அளுத்­கம, பேரு­வளை, தெஹி­வளை இன்னும் பல முஸ்லிம் பிர­தே­சங்­களில் 2016 வரை மேற்­கொள்­ளப்­பட்ட இன, மத குரோத வெறி­யாட்­டங்­களை நிறுத்த முடி­யாமல் போன­தற்­கா­கவே,முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை பிரிந்து, அவ­ருக்­கெ­தி­ராக தேர்­தலில் அவரை தோற்­க­டிக்க வேண்­டிய அவ­சியம் எமக்­கேற்­பட்­டது. அதன் அவ­சி­யத்தை முஸ்­லிம்­க­ளிடம் உறு­திப்­ப­டுத்தி, ஏனைய முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக நாம், எமது பட்டம் பத­வி­களைத் துறந்து மஹிந்­தவின் ஆட்­சியில் இருந்து வெளி­யே­றினோம்.

நமது தூர­தி­ருஷ்­டி­யான முடி­வி­னதும், உழைப்­பி­னதும் கார­ண­மாக முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளா­லேயே மஹிந்­தவின் தோல்வி இறு­தி­யாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதன் விளை­வாக மைத்­திரி - – ரணில் நல்­லாட்சி உத­ய­மா­யிற்று. நம் நாட்டு முஸ்­லிம்கள் நம்­பிக்­கை­யா­கவும் நிம்­ம­தி­யா­கவும் பெரு­மூச்சு விடும் நிலைக்கு நாமே அத்­தி­வா­ர­மிட்டோம்.

எனினும், மஹிந்­த­விற்கு ஆத­ர­வான சிங்­கள பௌத்த தேசிய இன­வா­திகள் மஹிந்­தவை தோற்­க­டித்­த­தற்­காக முஸ்­லிம்­களை பழி­வாங்கும் எண்­ணத்தை தம்முள் மறைத்துக் கொண்டு தக்க தரு­ணத்தை எதிர்­பார்த்து காத்­தி­ருந்­தது எங்கள் கவ­னத்தை விட்டும் தப்­பிப்­போ­க­வில்லை.

அதனால் நாம் சிங்­கள இன­வா­தி­களை சீண்­டி­விடும் எந்த கரு­மத்­தையும் ஒதுக்­கியே செயற்­பட்டு வந்தோம். அந்தக் காலத்­திலும் அங்­கிங்கு நடந்த முஸ்லிம் இன­வி­ரோத செயல்­களை நாம் பெரிது படுத்­தாமல், நல்­லாட்­சியின் ஊடாக நாட்டை முன்­னேற்றும் வழி­களில் அர­சாங்­கத்­திற்கு முஸ்­லிம்­களின் அதி­யுச்ச ஒத்­து­ழைப்பை வழங்­கியே வந்தோம்.

எதிர்­பார்த்­தது போலவே இரட்டைத் தலை நல்­லாட்­சிக்குள் தன்­னார்வ போட்டி பொறா­மைகள் விஸ்­வ­ரூபம் எடுக்கத் தொடங்­கின. அதனால் நல்­லாட்­சியைக் காப்­பாற்றும் பொறுப்பும் முஸ்­லிம்­க­ளுக்கு அதி­க­ரித்­ததை உணர்ந்து இந்த நல்­லாட்­சியை தொடர்ந்­தேர்ச்­சியாய் கொண்டு செல்லும் பணி­யையும் எம்­மீது நாம் கட­மை­யாக சுமந்­து­கொண்டோம். அதற்­காக முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் நல்­லாட்­சிக்­கான நல்­லெண்­ணத்தை அதி­க­ரித்து, ஆத­ரவை பர­வ­லாக்­கு­வ­தற்­காக இலங்கை முஸ்­லிம்­களை எமது செயற்­பா­டு­க­ளாலும், உத்­த­ர­வா­தங்­க­ளா­லும்­நல்­லாட்­சியின் முதல்­தர ஆத­ர­வா­ளர்­க­ளாக வளர்த்­தெ­டுப்­பதில் கடு­மை­யாக உழைத்­ததே நமது வர­லாறு ஆகும்.

நல்­லாட்­சியின் ஒரு­மைப்­பாடு பிளவு படு­வதில் அதி­க­ரித்தே சென்­றது. நாளுக்­குநாள் நல்­லாட்சி பொது மக்­களின் முன் பல­கீ­ன­மாகத் தொடங்­கிற்று. எல்லோரும் எதிர்­பார்த்­தி­ருந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் நல்­லாட்­சிக்கு மறக்க முடி­யாத மாத­மாக அமைந்­தது. நல்­லாட்­சிக்குள் ஏற்­பட்ட விரி­சல்கள் அதன் படு­தோல்­விக்கு கார­ண­மாக அமைந்­த­துடன் அத­னை­மேலும் பல­வீ­னப்­ப­டுத்­தி­யது. பௌத்த தேசி­யத்தின் மக்கள் ஆணை பொது­ஜன பெர­மு­ன­வுக்குச் சென்­றது. நல்­லாட்­சியை சிங்­க­ள­வர்கள் நிரா­க­ரித்­தனர். தமிழ்த் தேசி­யத்­தினர் தமது வாக்­கு­களை தமக்­குள்­ளேயே பகிர்ந்து கொண்­டனர்.

ஆனால் இந்த நாட்டில் தென்­மேற்­பு­றத்து, வட­கீழ்ப்­பு­றத்து முஸ்­லிம்கள் அனை­வரும் தமது வாக்­கு­களை நல்­லாட்­சியின் ரணி­லுக்கும், மைத்­தி­ரிக்­கு­மே­அ­ளித்து தமது விசு­வா­சத்­தையும் ஆத­ர­வையும் வெளிப்­ப­டுத்­தினர்.

மொத்த முஸ்­லிம்­களின் நல்­லாட்­சிக்­கான இந்த அர்ப்­ப­ணிப்பை சிங்­கள பௌத்த தேசியம் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதிர்ப்­பா­கவே எடுத்­துக்­கொண்­டனர். அதனால் முஸ்­லிம்கள் மறக்க முடி­யாத பாடத்தை அவர்­க­ளுக்கு கற்­பித்தே தீர­வேண்டும் என்று தீர்­மா­னித்து தமக்குள் துடித்துக் கொண்­டி­ருந்­தனர். நல்­லாட்­சிக்கு முஸ்­லிம்கள் அளித்த வாக்­குகள் சிங்­கள பௌத்த தேசி­யத்­திற்கு எதி­ரான வாக்­கு­க­ளாக, மஹிந்­த­வுக்கு எதி­ரான வாக்­கு­க­ளாக அவை எடுத்துக் கொண்­டன.

பெப்­ர­வரி 10இல் உள்­ளூராட்சித் தேர்­தலில் மஹிந்த அணி மாபெரும் வெற்­றியைப் பெற்று, மூன்று வாரங்கள் முடி­வ­தற்­குள்­ளாக சிங்­கள பௌத்த தேசியம் காடைத்­த­னங்­களைக் கட்­ட­விழ்த்து, முஸ்­லிம்­களின் வியா­பாரத் தலங்­களை அடித்து நொறுக்கி அம்­பாறை நகர ஜும்ஆப் பள்­ளி­வா­சலை அடித்து உடைத்­தது. அங்­கி­ருந்த வாக­னங்­களை எரித்து நாச­மாக்­கி­யது. இந்த அசம்­பா­வி­தங்கள் பொலி­சாரின் முன்­னி­லை­யி­லேயே நடத்­தப்­பட்­டுள்­ளன.

அம்­பாறை தாக்­கு­த­லில் ­சம்­பந்­தப்­பட்ட ஐந்து பேரை பொலிஸார் கைது செய்த போதும், பள்­ளி­வா­ச­லை­ அ­டித்­து­ நொ­றுக்­கி­ய­ சம்­ப­வத்­தை­ ம­றைத்து, இரண்­டு­த­ரப்­பி­ன­ருக்­கும்­ இ­டை­யில்­ இ­டம்­பெற்­ற­ சம்­ப­வ­மா­க­ அம்­பா­றை­ நா­ச­கா­ர ­செ­ய­லைக் ­காட்டி, நீதி­மன்­றத்­தை­ பி­ழை­யா­க­ வ­ழி­ந­டத்தி, நாச­கா­ர­சக்­தி­க­ளுக்­கு ­பி­ணையை பொலி­ஸார்­பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளனர்.

பள்­ளி­வா­சல் ­மற்­றும்­ முஸ்­லிம்­கள்­ மீ­தா­ன­ இந்­த­ நா­ச­கா­ர ­செ­ய­லை ­இ­ன­வா­த­ சம்­ப­வம்­ கி­டை­யா­து ­எ­னவும் இரண்­டு ­த­ரப்­பி­ன­ருக்­கி­டை­யில்­ இ­டம்­பெற்­ற­ பி­ரச்­சி­னை­ எ­ன­வும்­பொ­லி­ஸார் ­நாக்­கூ­சா­மல்­ நீ­தி­மன்­றில் ­தெ­ரி­வித்­துள்­ளனர்.

சட்­டத்­தைப் ­பே­ண­வேண்­டி­ய­வர்கள், மக்­க­ளைப் ­பா­து­காப்­ப­வர்­கள்­ இவ்­வா­று­ கே­வ­ல­மா­க ­ந­டந்­து­ கொண்­டி­ருப்­பது, நல்­லாட்­சி ­அ­ர­சின்­ ஓட்­டை­க­ளை­யே­ வெ­ளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மனு­தா­ர­ரின் ­சார்­பில்­ ஆ­ஜ­ரா­கி­ய­ சட்­டத்­த­ர­ணி­கள்­ ஆட்­சே­ப­னை­ தெ­ரி­வித்தும், நல்­லாட்­சி­ அ­ர­சின் ­கா­வ­லர்கள், பூர­ணப்­படுத்­தப்­ப­டாத பி(க்ஷ) அறிக்­கையை நீதி­மன்­றத்தில் வழங்கி, சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு ஆத­ர­வாக நீதி­மன்றில் பிணை கேட்டு, அவர்­களை பிணையில் விடு­விக்கச் செய்­தி­ருப்­பது மிகவும் மோச­மான செய­லா­கவே நாம் கருத வேண்­டி­யுள்­ளது.

கடந்­த­கா­லங்­க­ளி­லும்­ இ­ன­வா­த ­பௌத்­த­தே­ரர்­க­ளின்­ வெ­ளிப்­ப­டை­யா­ன­ அட்­ட­கா­சங்­க­ளையும், அட்­டூ­ழி­யங்­க­ளை­யும் ­ம­றைத்­து­ பொ­லி­ஸார்­ பி­ணை­ வ­ழங்­கி­ இ­ருக்­கின்­றனர். இப்­போது, இன­வா­த­ ம­த­கு­ரு­மார்­க­ளே­ நல்­லாட்­சி­யை­ வ­ழி­ந­டத்­து­வ­து ­வெ­ளிப்­ப­டை­யாக­ வெட்­ட­வெ­ளிச்­ச­மா­கி­ உள்­ளது.

அம்­பாறை தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்ட சந்­தேக நபர்­களை பிணையில் விடு­தலை செய்­ததன் பின்னர், இந்­நாட்டில் வாழும் சிறு­பான்மை மக்கள் குறிப்­பாக, சட்­டத்தின் மீதும், நல்­லாட்­சியின் மீதும் மேலும் நம்­பிக்கை இழந்து வரு­கின்­றனர். இந்த அர­சாங்­கத்தில் தமக்கு எந்­த­வி­த­மான பாது­காப்பும், உத்­த­ர­வா­தமும் இல்­லை­யென அவர்கள் கரு­து­கின்­றனர். கவ­லை­ய­டைந்­துள்­ளனர்.

இந்தச் சம்­பவம் நடை­பெற்று ஒரு வார காலத்­துக்குள் கண்டி திகன பிர­தே­சத்தில் இன­வா­திகள் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான அட்­ட­கா­சங்­களை புரிந்­தி­ருக்­கின்­றனர்.கண்­டி ­தி­க­ன ­பி­ர­தே­சத்­தில்­ கு­டி­போ­தை­யில்­ இ­ருந்­த­ ஐந்­து­ இ­ளை­ஞர்­க­ளைக் ­கொண்­ட ­கு­ழு­வொன்று, பெரும்­பான்­மை­யின­­ ­லொ­றிச்­சா­ர­தி­ ஒ­ரு­வ­ரை ­அ­டித்­துக் ­காயப்­ப­டுத்­தி­ய­தனால், அவர்­ இ­றந்­த­தை­ கா­ர­ண­மா­க­ வைத்­துக்­கொண்­டு பெ­ரும்­பான்­மை­ இ­னத்­தைச்­சேர்ந்­த­ ஆ­யி­ரக்­க­ணக்­கானோர், அந்­தப்­ பி­ர­தே­சத்­தில்­ உள்­ள­ முஸ்­லிம்­க­ளின் ­சொத்­துக்­க­ளை­ நா­ச­மாக்­கியும் பள்­ளி­வா­சலை­ உ­டைத்தும் முஸ்­லிம்­க­ளை­ கா­யப்­ப­டுத்­தி­யும்­ அட்­ட­கா­சம்­ பு­ரிந்­துள்­ளனர்.

மது­போ­தை­யில் ­சென்­ற­ இந்­த ­இ­ளை­ஞர்­கு­ழு­ லொ­றிச்­சா­ர­தி ­ஒ­ரு­வ­ரு­டன்­ வீ­ணா­க­ மு­ரண்­பட்­டு­ அ­தன்­பின்னர், அவ­ரை ­தாக்­கி­ய­த­னால் ­க­ர­லி­யத்­த­ வைத்­தி­யசா­லை­யில்­ அ­னு­ம­திக்­கப்­பட்­ட ­தாக்­கு­த­லுக்­குள்­ளா­ன­வர் ­அ­கா­ல­ ம­ர­ண­மானார். இந்­த­ லொ­றிச்­சாரதி­ அம்­பா­லை ­கி­ரா­மத்­தைச் ­சேர்ந்­த­வர்­ என்­பதால், அந்­தக்­கி­ரா­மத்­தில்­ உள்­ள­முஸ்­லிம்­க­ளின்­ வீ­டு­க­ளை­ அ­டித்­து­ நொ­றுக்கி, சேதப்­ப­டுத்­தினர்.

அதன்­பின்னர், திக­ன­ பி­ர­தே­சத்­தின்­ ஏ­னை­ய ­முஸ்­லிம்­ கி­ரா­மங்­க­ளி­லும்­ ப­தட்­டம்­ நி­ல­வி­யது. எந்­த­ நே­ரத்­தி­லும்­ அ­சம்­பா­வி­தங்­கள் ­ந­டக்­கக்­கூ­டி­ய­ சூழ்­நி­லை ­நி­ல­வி­யமை­ அ­ர­சாங்­கத்­தின் ­க­வ­னத்­துக்­குக் ­கொண்­டு­ வரப்­பட்­டது.

முஸ்­லிம்­ பி­ர­தே­சங்­க­ளில் ­பா­து­காப்­பை ­உ­று­திப்­ப­டுத்­து­மா­று ­வேண்­டிக்­கொண்­ட­தற்­கி­ணங்­க­ பொ­லிஸார், விஷே­ட­ அ­தி­ர­டிப்­படை­யி­னர் ­பா­து­காப்­புக் ­க­ட­மை­க­ளில்­ ஈ­டு­ப­டுத்­தப்­பட்­டனர். கண்டி பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் தலை­மையில், அந்தப் பிர­தே­சத்தில் பலத்த பாது­காப்பு போடப்­பட்­டுள்­ள­தா­கவும், விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் குவிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் ­நல்­லாட்சி அரசின் தலை­வர்­களும், பொலிஸ்­மா­ அ­தி­ப­ரும்­ முஸ்லிம் அமைச்­சர்­க­ளி­டமும், எம்.பி.க்­க­ளி­டமும் மீண்டும் மீண்டும் உறு­தி­ய­ளித்­தனர்.

இறு­திக்­கி­ரி­யைகள் நடக்கப் போகும் தினத்தில் இன­வா­திகள் முஸ்­லிம்­களின், சொத்­துக்­க­ளையும், பள்­ளி­வா­சல்­க­ளையும் தகர்ப்­ப­தற்கு திட்­ட­மிட்டு வரு­வ­தாக, முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பல­முறை அரசின் உயர்­மட்­டத்­துக்கு தெரி­வித்து, உரிய பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் எடுக்­கா­விட்டால், பாரிய கல­வரம் வெடிக்கக் கூடிய சாத்­தியம் இருப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­தனர்.

எனினும், பலத்த பாது­காப்பு போடப்­பட்­டுள்­ள­தா­கவும், விஷேட அதி­ரடிப் படை­யினர் உஷார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அரசு மீண்டும் மீண்டும் தெரி­வித்த போதும், அதற்கு மத்­தி­யி­லேதான் பட்­டப்­ப­க­லிலே இந்த இன­வாத சங்­காரம் நடந்­து ­மு­டிந்­துள்­ளது.

ஒரு­கு­றித்­த ­இ­ளை­ஞர்­ கு­ழு­வி­ன­ரால்­மேற்­கொள்­ளப்­பட்­ட ­இந்­த ­தாக்­கு­தல் ­ச­மா­தா­னத்­து­டன்­ மு­டி­வ­டைந்­த­போதும், அந்­தப்­பி­ர­தே­சத்­தில்­ இ­ன­வா­த­ ரீ­தி­யா­க ­சிந்­திக்­கும்­ தீ­ய­சக்­தி­க­ளி­னால் ­பெ­ரும்­பான்­மை­ ச­மூ­கம்­ உ­சுப்­பேற்­றப்­பட்டு, இரண்­டு ­ச­மூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லா­ன­ க­ல­வ­ர­மா­க ­இ­த­னை ­மாற்­றி­யுள்­ளனர்.

அது­மட்­டு­மின்­றி­ அந்­த ­இ­ளை­ஞர்­ கு­ழு­வில் ­பெ­ரும்­பான்­மை­ இ­னத்­தைச் ­சேர்ந்­த ­இ­ளை­ஞர்­கள்­ இ­ருந்­த­போதும், வேண்­டு­மென்­றே­ முஸ்­லிம் ­ச­மூ­கத்­தின்­மீ­து­ திட்­ட­மிட்­டு­ இந்­தத் ­தாக்­கு­த­லை­ ந­டத்­தி­யுள்­ளனர்.

மர­ண­ம­டைந்­த ­இ­ளை­ஞ­ரின்­ பி­ரே­தத்­தை­ சு­மந்­து­கொண்­டு­ ஊர்­வ­ல­மாக, கண்­டி ­தி­க­னை பி­ர­தே­சத்­தில்­ உள்­ள­ எல்­லே­பொல, அம்­ப­கல, பல்­ல­கல, அம்­ப­க­ஹா­வத்த, அளுத்­வத்­த­ ஆ­கி­ய ­முஸ்­லிம் ­கி­ரா­மங்­க­ளை­ ஊ­ட­றுத்­து­ இ­ன­வா­தி­கள் ­சென்­றனர்.

இந்த ஊர்­வ­லத்தில் சென்ற இன­வாதக் கும்பல், அந்த வழியில் உள்ள கிரா­மங்­களில் வாழ்ந்த முஸ்­லிம்­களின் சுமார் 50க்கும் மேற்­பட்ட வீடு­களை தீக்­கி­ரை­யாக்கி உள்­ளனர். திகன டவுன் பள்ளி, பல்­லே­கல ஜும்ஆப் பள்ளி, கெங்­கல்ல ஜும்ஆப் பள்ளி ஆகிய மூன்று பள்­ளி­வா­சல்­களும் முற்­றாகச் சேத­ம­டைந்­துள்­ளன.

திகன நகரில் உள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான தாஜ் ஹோட்டல், மதீனா ஹோட்டல், நுவர கடை, உட­தும்­பர ஸ்டோர்ஸ், அக்ரம் புடவைக் கடை, திகன பேக் ஹவுஸ், பாத்­தி­மா­கு­ரோ­சரி, மேக்ரோ கேக் ஹவுஸ், இசட் ஐ கொமி­னி­கே­ஷன்­உட்­பட பல கடைகள் எரித்தும், நொருக்­கப்­பட்டும் சேத­மாக்­கப்­பட்­டன. இன­வா­தி­கள்­பல்­லே­க­லை­யில்­ வீ­டு­களை எரித்த போது, அங்கு சிக்­கிய அப்துல் பாஷித் என்ற இளை­ஞன்­ மூச்­சுத்­தி­ண­ற­லினால் பலி­யா­கி­யுள்ளார்.  

இன­வா­தி­களின் அட்­ட­காசம் கட்­டுக்­க­டங்­காது போன­தனால் கண்டி நிரு­வாக மாவட்­டத்தில் ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த சம்­பவம் தொடர்பில் முஸ்­லிம்­அ­மைச்­சர்­க­ளா­ன­ ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதி­யுதீன், ஹலீம், இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ், ஹரீஸ் உட்­பட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல­முறை அரசின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தனர்.

கண்­டி ­நி­ரு­வாக மாவட்­டத்தில் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்ட பின்னர், மேல­திக பொலி­ஸாரும், இரா­ணு­வத்­தி­னரும், விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் குவிக்­கப்­பட்­டுள்­ள­தாக­ அ­வர்­க­ளுக்­குத் ­தெ­ரி­விக்­கப்­பட்­ட­துடன், நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வரப்பட்­ட­தாக கூறப்­பட்­டது.

திக­னையில் இடம்­பெற்ற அட்­டூ­ழி­யங்­களை அறிந்து, அமைச்சர் ஹக்கீம் கொழும்­பி­லி­ருந்து விரைந்தார். அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீனும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஷாக், மேல் மாகாண சபை உறுப்­பினர் பாயிஸ், பிர­தேச சபை உறுப்­பினர் அன்சில் ஆகி­யோரும் அன்று மாலை அங்கு சென்­றனர். அமைச்­சர்­க­ளான ஹலீம், பைசர் முஸ்­த­பாவும் களத்தில் நின்றனர்.

அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் திக­னைக்கு சென்று கொண்­டி­ருந்த போது, கட்­டு­கஸ்­தோட்­டையில் பள்­ளி­வாசல் ஒன்று தாக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்தி கிடைத்­தது. அவ­ச­ர­மாக கட்­டு­கஸ்­தோட்­டைக்­கு­சென்ற போது, இரவு 9 மணியை எட்­டி­யி­ருந்­தது.அமைச்சர் குழாம் அங்கு செல்­வ­தற்­கு­சில மணி நேரங்­க­ளுக்கு முன்னர், 20 பேர் கொண்ட இன­வாதக் குண்­டர்கள் கடு­கஸ்­தோட்ட, கஹல்­ல­ மஸ்­ஜி­துல் ­ரஹ்­மா­னி­யா­ பள்­ளி­வா­ச­லுக்குள் நுழைந்து, அதனை முற்­றாக சேதப்­ப­டுத்தி இருந்­தனர். அங்­கி­ருத்த ஐந்து முஸ்­லிம்­கள்­ மூன்­றா­வது மாடியின் வழி­யாக வெளி­யே­றி ­தப்­பி­ஓடி உயிர் பிழைத்­த­தாகத் தெரி­வித்­தனர். சில­நி­மி­டங்­களில் அமைச்சர் ஹலீமும் சம்­பவ இடத்­துக்கு வந்­தி­ருந்தார். அமைச்சர் ஹக்­கீமும் அந்த இடத்தை பார்­வை­யிட்­டி­ருந் தார்.

கட்­டு­கஸ்­தொட்டை தக்­கியா பள்­ளி­யை­யும்­ இ­ன­வா­திகள் தாக்­கி­யி­ருந்­தனர்.மூன்று மோட்டார் சைக்­கிள்­க­ளில் ­வந்த 6 பேர் அந்தப் பள்­ளியின் அரு­கி­லி­ருந்­து­ பெற்­றோல்­ குண்­டு­களை வீசி சேதப்­ப­டுத்தி இருந்­தனர்.

அதன் பின்னர், குரு­நா­கல் ­மெல்­சி­ரி­பு­ர­உஸ்­வத்­துல் ­ஹ­ஸ­னா­ அ­ர­பிக்­கல்­லூ­ரி­ மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக தகவல் கிடைத்­தது. கண்டி, தென்­ன­கும்­பு­ர­பள்­ளி­வா­ச­லுக்­கும் ­பெற்­றோல் ­போத்­தல்­ ஒன்­று ­வீசப்­பட்­டது. அல­தெ­னி­ய­வில்­ உள்­ள­ பள்­ளி­வாசல்­ ஒன்­றுக்­கும் ­பெற்­றோல்­ குண்­டு­வீ­சப்­பட்­டுள்­ளது. அந்­த ­பள்­ளி­வா­ச­லின் ­ஜன்­னல்­கள்­ உ­டைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதே­நே­ரம் ­கண்டி, ஹேதெ­னி­ய­ பி­ர­தே­சத்­தில்­ முஸ்­லிம் ­வர்த்­த­கர்­ ஒ­ரு­வ­ருக்­கு­ சொந்­த­மா­ன ­ஹாட்­வெ­யார் ­நி­று­வ­னத்­துக்­கும்­ இ­ன­வா­தி­கள் ­பெற்­றோல் ­போத்­த­லை­ வீ­சி­யி­ருந்­தனர்.

அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் தலை­மை­யி­லான குழு,கட்­டு­கஸ்­தோட்­டையில் தாக்­கு­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்ட பகு­தி­களை பார்­வை­யிட்­டனர். அக்­கு­ரணை நகரை இன­வா­தக்­கும்பல் ஒன்று தாக்க முற்­ப­டு­வ­தா­க­த­கவல் கிடைத்­தது. அக்­கு­ர­ணைக்கு அமைச்சர் ரிஷாட் ­சென்ற போது, அந்தப் பிர­தே­சத்தின் பிர­தான வீதியில் பெரி­ய­வர்­களும், முஸ்லிம் இளை­ஞர்­களும் திரண்டு நின்று அந்தப் பிர­தே­சத்தை பாது­காக்­கும்­நோக்கில் நின்­று­கொண்­டி­ருந்­தனர். அக்­கு­ற­ணை ­ஹ­ஸ­னா­பள்­ளி­வா­ச­லுக்குச் சென்று அந்த மக்­களைச் சந்­தித்து அவர்­கள்­ நி­லை­மை­களை கேட்­ட­றிந்­து­ கொண்­டனர்.

அதன் பின்னர், தொடர்ச்­சி­யாக இரவு, பகல் என்று பாராது இன­வா­திகள் கண்டி மாவட்­டத்­திலும், ஏனைய முஸ்லிம் பிர­தே­சங்­க­ளிலும் ஆங்­காங்கே திட்­ட­மிட்டு பள்­ளி­வா­சல்கள், முஸ்­லிம்­களின் சொத்­துக்­களை தீக்­கி­ரை­யாக்­கியும், உடைத்தும் அழித்தும் வரு­கின்­றனர்.

முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நஷ்டம் இது­வரை, கணக்­கெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­றாலும், அவர்கள் தமது உயி­ரிலும் மேலாக மதிக்கும் பள்­ளி­வா­சல்­களும், கோடிக்­கணக்கில் பெறு­ம­தி­யான சொத்­துக்­க­ளும்­ அ­ழிக்­கப்­பட்­டுள்­ளன.

கண்டி மாவட்­டத்தில் இடம்­பெற்ற கல­வ­ரங்­களை அடுத்து அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதி­யுதீன், ஹலீம், பைசர் முஸ்­தபா உட்­பட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான், இஷாக் ஆகியோர் களத்தில் மக்­க­ளோடு மக்­க­ளாக நின்று, அவர்­களின் தேவை­களை கவ­னித்து வரு­வ­தோடு, முற்­பா­து­காப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.

விஷே­ட ­அ­தி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்கும், பொலி­ஸா­ருக்கும் பாது­காப்பு தொடர்­பான அறி­வு­றுத்­தல்­களை வழங்கி வரு­கின்­றனர்.

இதே­வேளை, ஜனா­தி­ப­தி­ மைத்­தி­ரி­பா­ல சி­றி­சே­ன­வுக்கும் முஸ்­லிம்­ அ­மைச்­சர்­க­ளுக்­கு­மா­ன­ சந்­திப்­பொன்று, நேற்று முன்தினம் (07) மாலை 4 மணி­ய­ள­வில் ­கண்­டி ­ஜ­னா­தி­ப­தி­ மா­ளி­கை­யில்­ இ­டம்­பெற்­றது.

கண்­டி­யில்­ ஊ­ர­டங்­குச் ­சட்­டம்­ பி­றப்­பிக்­கப்­பட்­ட ­பின்­னரும் பொலி­ஸாரும் இரா­ணு­வத்­தி­ன­ரும் ­கு­விக்­கப்­பட்டு பாது­காப்பு­ ப­லப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­க­ ஜ­னா­தி­ப­தியும் பிர­த­ம­ரும்­ அ­றி­வித்­தி­ருந்­த­ பின்­னரும் தொடர்ந்­தும் ­கண்­டி­யில்­ முஸ்­லிம்­ கி­ரா­மங்­க­ளில்­ உள்­ள­ பள்­ளி­வா­சல்கள், வியா­பா­ரஸ்­த­லங்கள், வீடு­கள்­ மீ­து­ நா­ச­கா­ரி­கள் ­பெற்­றோல்­ குண்­டு­க­ளை­ வீ­சி ­அ­வற்றை சேதப்­ப­டுத்தி வரு­வ­தாக முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சுட்­டிக்­காட்­டினர்.

கண்­டி ­ஜ­னா­தி­ப­தி­ மா­ளி­கை­யில்­ இ­டம்­பெற்ற இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக், மஸ்தான், நவவி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கண்டிக்கு வருகை தந்திருந்தனர். கண்டியில் தங்கியிருந்த அமைச்சர்களான ரவூப்ஹகீம், பைசர் முஸ்தபா ஆகியோரும் இதில் பங்கேற்றனர். கொழும்பிலிருந்து விஷேட ஹெலிகொப்டர் மூலம் வந்திருந்த பௌத்தமத குருமாரும் கண்டி அஸ்கிரிய மல்வத்த நாயக்க தேரர்களின் பிரதிநிதிகளும் உலமாக்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

கண்டியில் கட்டுக்கடங்காது சென்று கொண்டிருக்கும் இனவாதிகளின் அராஜகங்களை முடிவுக்குக் கொண்டு வருமாறும் முஸ்லிம்கள் எந்தநேரமும் அச்சத்துடனும் கவலையுடனும் வாழ்வதாக முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினர்.

பாதுகாப்புப் படையினர் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்தபோதும், அவற்றை எல்லாம் மீறி இனவாதிகள், தொடர்ந்தும் நாசகார செயல்களை மேற்கொண்டுவருவதாக அரசியல்வாதிகள் வலியுறுத்தியபோது, அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இதன்போது கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த தேரர்களும் முஸ்லிம்கள் மீது சிங்கள மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்.

இந்த உயர்மட்டக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர், பாதிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றுக்கு விஜயம்செய்து, சேதமடைந்த இடங்களை பார்வையிட்டதுடன், பாதிக்கப்­பட்டவர்களையும் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தனர்.

கண்டியில் கட்டுகஸ்தோட்டை, உண்ணஸ்­கிரிய, அக்குரணை 04 ஆம் கட்டை ஆகிய­­வற்றில் இன்று இனவாதிகளால் எரிக்கப்­பட்டு, சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள், கடைத்தொகுதிகள் மற்றும் வீடுகளையும் பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட பிரதேசமான ஹாரிஸ்­பத்துவ அங்குறுதெனவுக்கு அமைச்சர் குழு சென்றபோது, அங்கு பள்ளிவாசல் மற்றும் பல வீடுகள் எரிக்கப்பட்டு காணப்பட்டன.

அங்கு வசிக்கின்ற 189 முஸ்லிம் குடும்பங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை யிலிருந்து பாடசாலைகளில் தஞ்ச­மடைந்துள்ளனர். நேற்றுமுன்தினம் மாலையிலிருந்து தாங்கள் உணவின்றி அவதிப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர்கள், இனவாதிகள் எந்த நேரத்திலும் தமது கிராமத்தை தாக்கக்கூடும் என அச்சம் வெளியிட்டனர். அமைச்சர் குழாம் அக்குரணைக்குச் சென்று அங்குள்ள பள்ளிவாசலில் மக்களை சந்தித்து, நிலைமைகளை கேட்டறிந்தனர். எந்த நேரத்திலும் தமது கிராமம் தாக்கப்படக்கூடும் என்ற நிலை இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள், படையினரின் செயற்பாடுகளில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் கூறினர்.

முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் காட்டுமிராண்டித்தனமான, தொடர்ச்சியான வன்முறைகள் குறித்து அரசாங்கம் அதிதீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால், விளைவுகள் மேலும், விபரீதமாகி நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதே யதார்த்தமாகும்.
 Share this:

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies