மகா சிவராத்திரி மகிமைகள்!

12 Feb,2018
 

 
 
 
 

தியானத்துக்கும் பிரார்த்தனைக்கும் உகந்த திருநாள்!
 
உருவும் பெயரும் இல்லாதவனான ஈசன், பக்தா்களை உய்விக்கும் பொருட்டு கருணை மிகுதியால் பல நாமங்களுடனும் ரூபங்களுடனும் காட்சி அளிக்கிறாா்.
 
குழந்தைகள் பாலுக்குத் தாயினிடம் அழுவது போல், அஞ்ஞானத்திலும் காம குரோதமாகிய சுழல்களிலும் சிக்கியுள்ள ஜீவாத்மாக்கள் ஞானப்பாலுக்காக, ஜகத்துக்கெல்லாம் தாயும் தந்தையுமான பரமேசுவரனிடம்  அழ வேண்டும். பரமேசுவரன் நமக்கு உடல்வளா்ச்சிக்காக உணவு அளிப்பதுடன், நம் ஆசாபாசங்களைக் கொய்து ஞானப்பசியையும் தீா்த்துவைப்பாா். இவ்விதம் சமஸ்த ஜீவராசிகளுக்கும் அடைக்கலமாக இருக் கும் ஈசனுடைய திருநாளே மகாசிவராத்திாி.
 
உருவமற்ற முழுமுதற் கடவுள் பக்தா்களின் பிராா்த்தனைக்கு இணங்க, அரூபத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் இடையேயுள்ள ஜோதிா் லிங்க மாகக் காட்சியளித்தாா். அப்படி, அவர் லிங்கோத்பவராகத் திருவுருவம் எடுத்த நன்னாளே, இந்த மகாசிவராத்திாி.
 
ஆதியும் அந்தமும் இல்லாத பராபரவஸ்து, ஜோதி ஸ்வரூபத் திலிருந்து லிங்கமாக வெளிவந்து, பின்னா் லாவண்ய ஸ்வரூபத்தை அடைந்த இந்தப் புனிதமான தினம் பிராா்த்தனைக்கும் தியானத்துக்கும் சிறந்த நாள்.
 
நம்மை போஷித்து முடிவில் நம்மை ஆட்கொள்ளும் அந்தக் கருணாமூா்த்தியின் நினை வாக, இந்நாள் முழுவதும் உபவாசம் இருந்து, நித்திரை இல்லாமல் நடுநிசியில்ஸ
 
பிறப்பில்லாத பரமசிவன் பக்தா் களின் அன்புக்குச் செவி சாய்த்துப் பிறக்கும் அவ்வேளையில், அவரை நினைத்து அவருடைய திருநாமங்களை ஜபித்து, அவரது கருணைக்குப் பாத்திரமாக வேண்டும்.
 
 
 
சிந்தனா சக்தியையும் அறிவை யும் மற்ற இந்திாிய கலாபங் களையும் அளித்த அவரை, மகா சிவராத்திரி தினத்தில் நினைத்து, அவரது அருளுக்குப் பாத்திரமாக வேண்டும் .
 
ஜீவனுக்குத் தனிச் சொரூபம் உண்டு என்ற மமகாரத்தை விட்டொழிக்கவேண்டும்.
 
ஆத்மா பரமசிவனுக்கு அா்ப்பணம் செய்ய வேண்டிய பொருள் என்று, தெளிந்த முடிவுடன் அவரை ஆராதித்து,  அவரது அருள் விலாசத்தை அடைய வேண்டும்.
 
இதுவரையிலும் நாம் படித்தது காஞ்சி மகாபெரியவரின்  அருள் வாக்கு.  அவரின் அருளுரைப்படி மகா சிவராத்திரியின் புனிதத்தை அறிந்து, அந்தத் திருநாளில் சிவப் பரம்பொருளை வழிபட்டு வரம் பெறுவோமா?
 
முன்னதாக, சிவராத்திரியின் வகைகளைக் காண்போம்.
 
 
 
ஐந்து வகை சிவராத்திரி
 
சிவராத்திரி ஐந்து வகை யாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை: மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி.
 
மாக சிவராத்திரி: மாக சிவ ராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு ‘வருஷ சிவ ராத்திரி’ என்ற பெயரும் உண்டு.
 
யோக சிவராத்திரி: யோக சிவ ராத்திரியில் நான்கு வகை உண்டு.
 
திங்கள்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல் – இரவு சேர்ந்த அறுபது நாழிகையும் (24 மணி நேரம்) அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.
 
திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் அன்று இரவு 4 ஜாமமும் (12 மணி நேரம்) தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரி.
 
திங்கள்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணியிலிருந்து 6 மணி வரை உள்ள நேரத்தில்), அமாவாசை அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தாலும் அன்று யோக சிவராத்திரிதான்.
 
திங்கள்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால் அன்றும் யோக சிவராத்திரி.
 
இந்த நான்கு ‘யோக’ சிவராத்தி ரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்தாலும், அதற்கு ‘மூன்று கோடி சிவராத்திரி’ விரதம் கடைப்பிடித்த பலன் கிடைக்கும்.
 
மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தசி, திருவாதிரை நட்சத் திரத்துடன் வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும், அந்தச் சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம் என்பார்கள்.
 
 
 
நித்திய சிவராத்திரி: வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி இடம்பெறும் 24 நாள்களும் நித்திய சிவராத்திரி.
 
பட்ச சிவராத்திரி: தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாள்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு,
 
14-ம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.
 
மாத  சிவராத்திரி:  பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும். ஆனால் இந்த `மாத சிவராத்திரி’ என்பது, மாதத்தின் மற்ற திதி நாள்களிலும் வரும்.
 
மாசி மாதத் தேய்பிறை சதுர்த் தசி, பங்குனி மாத வளர்பிறை திருதியை, சித்திரை மாதத் தேய்பிறை அஷ்டமி, வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி, ஆனி மாத வளர்பிறை சதுர்த் தசி, ஆடி மாதத் தேய்பிறைப் பஞ்சமி, ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி, புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி, ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி, மார் கழி மாத வளர்பிறை சதுர்த்தசி- தேய்பிறை சதுர்த்தசி, தை மாத வளர்பிறை திருதியை ஆகிய இந்தப் பதினான்கு நாள்களும் மாத சிவராத்திரி எனப்படும்.
 
மகா சிவராத்திரி வரலாறு!
 
பிரம்மாவும் மஹாவிஷ்ணு வும், சிவபெருமானின் முடி-அடி தேடிய வரலாறு நமக்குத் தெரியும். இது நிகழ்ந்தது, மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினத்தன்று. அந்த நாளே சிவராத்திரி. இதை ஸ்காந்த மஹாபுராணம் கூறுகிறது (மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம்   அனலாசல மத்புதம்  – ஸ்காந்த மஹா புராணம்).
 
இது தவிர மற்றோர் அற்புதமான கதையும் உண்டு.
 
ராத்திாி என்பது, எந்தவொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்திருக்க உயிர்கள் உறங்கும் காலமாகும். பகலெல்லாம் வேலை செய்த நாம், நாள்தோறும் இரவில் தூங்குகிறோம். அவ்வாறு உறங்கி எழுந்தால்தான், உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகின்றன. உறக்கம் இல்லா விட்டால், உடலும் புத்தியும் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை.
 
நமது நன்மையை நாடி, சா்வேஸ்வரன் நமக்குத் தந்த வரமே, தூக்கமாகும். அதேநேரம் அளவு கடந்தும் தூங்கக்கூடாது.
 
பகலெல்லாம் அலைந்து திாிந்த
 
நம் உடலும் இந்திாியங்களும் சக்தியை இழந்து ஓய்வு பெறு கின்றன. அப்போது நம் இதயத் தில் உள்ள ஈஸ்வரன், நம் ஜீவனை அணைத்துத் தன்னருகில் அமா்த்துகிறாா். அப்போது கண்கள் காண்பதில்லை; காது கள் கேட்பதில்லை; புத்தி எதையும் நினைப்பதில்லை.
 
தூங்கி எழுந்ததும், “சுகமாகத் தூங்கினேன்” என்கிறோம்.  அப்போது, நாம் இழந்த சக்தியை பகவான் நமக்குத் தந்து அனுப்புகிறாா்.  இதேபோல, இந்த மண்ணுலகும் விண்ணுலகும் ஒரு  தருணத்தில், வேலையை விட்டு இறைவனிடம் ஒடுங்கு கின்றன. இந்த நிகழ்வே ‘மகாப் பிரளயம்’ எனப்படுகிறது.  நாம் தினந்தோறும் தூங்குவது, ‘தைநந்தினப் பிரளயம்’ எனப்படும்.
 
 
 
நாம் பகலெல்லாம் வேலை செய்து களைப்படை வதைப்போல, ஸ்திதி (காத்தல்) காலத்தில் உலகெல்லாம் வேலை செய்து களைப்படைகின்றன.
 
அந்தப் பிரபஞ்சத்துக்கு, இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன், தனக்குள் அதை லயப் படுத்துகிறாா். அவ்வாறு உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே ‘சிவ ராத்திாி.’
 
அன்று சிவனைத்தவிர, வேறெதுவும் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றுமே எப்போதுமே பிாியாதவளான உமையவள், அன்றைய இரவு நேரத்தில், நான்கு ஜாமங்களிலும் சிவனாரை ஆகம முறைப்படி பூஜித்தாள்.
 
பொழுது விடிந்தது. சிவனாரை வணங்கிய அம்பிகை, ‘‘ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவு, சிவராத்திரி என உங்கள் பெயரால் அழைக்கப்பட வேண்டும். அத்துடன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம் வரை தேவர்கள் உட்பட எல்லோரும் உங்களை பூஜிக்க வேண்டும். அப்படி பூஜிப்பவர்களுக்கு சர்வ மங்கலங்களுடன் முடிவில் முக்தியையும் தாங்கள் அருள வேண்டும்!’’ என வேண்டி வரம் பெற்றாள். 
 
அம்பிகை பூஜை செய்த அந்த நாளே (மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி) மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.
 
மகா சிவராத்திரி விரத நியதிகள்ஸ
 
சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுக போகங்கள் அனைத் தையும் தவிர்க்க வேண்டும்.
 
மறுநாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்த பின், சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும்.
 
கோயிலுக்குள் கொடி மரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ் காரம் செய்யக் கூடாது.  அதேபோல் எந்தச் சந்நிதியிலும் அப்பிரதட் சிணமாக வலம் வரக் கூடாது. ஸ்வாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக் கூடாது. பிரசாதங்களான குங்குமம், விபூதி போன்றவற்றை இடக் கைக்கு மாற்றக் கூடாது. நம் ஆடையிலிருந்து நூலை எடுத்து சண்டிகேஸ்வரர்மீது போடக் கூடாது.
 
இப்படி, முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகிய வற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பின் நடுப் பகலில் நீராடி, உச்சிகால அனுஷ்டானங்களை முடித்து
விட்டு சிவபூஜைக்கு உரிய பொருள்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவன் கோயிலில் கொண்டுபோய்க் கொடுத்து, சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 
வீடு திரும்பியதும் மறுபடி யும் நீராடி, மாலை நேர அனுஷ்டானங்களை முடித்து விட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் பரமேஸ்வரனை (சிவலிங்கத்தை) வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும், நியதிப்படி பூஜை செய்ய வேண்டும்.
 
முதல் ஜாமம்
 
நேரம்: மாலை 6 முதல் 9 மணி வரை
அபிஷேகம்: பஞ்சகவ்யம்
ஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: வில்வம், அகில்
அர்ச்சனை:  தாமரைப்பூக்கள்
நைவேத்தியம்: பயத்தம்பருப்பு கலந்த பொங்கல்
வேத பாராயணம்:  ரிக் வேதம்
 
இரண்டாம் ஜாமம்
 
நேரம்: இரவு 9 முதல் 12 மணி வரை
அபிஷேகம்: பஞ்சாமிர்தம். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம்.
ஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: சந்தனம், தாமரைப்பூ
அர்ச்சனை:  துளசி
நைவேத்தியம்: பாயசம்:
வேத பாராயணம்: யஜுர் வேதம்
 
மூன்றாம் ஜாமம்
 
நேரம்: இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை
அபிஷேகம்:தேன்
ஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை.
அர்ச்சனை:  மூவிலை வில்வம்
நைவேத்தியம்: எள் சாதம்
வேத பாராயணம்: சாம வேதம்
 
நான்காம் ஜாமம்
 
நேரம்: அதிகாலை 3 முதல் 6 மணி வரை
அபிஷேகம்: கரும்புச் சாறு
ஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: அரைத்த குங்குமப்பூவுடன் நந்தியாவட்டை மலர்.
அர்ச்சனை: நீலோத்பலம்
நைவேத்தியம்: சுத்தான்னம்
வேத பாராயணம்: அதர்வண வேதம்
 
வேடர்களின் கதைகள்!
 
சிவராத்திரி புண்ணிய தினத் தன்று அறியாமல் செய்யும் சிவபூஜைக்கும் அளப்பரிய பலன்கள் உண்டு என்கின்றன ஞானநூல்கள். இதற்குச் சான்றாகச் சில திருக்கதைகளைப் பார்ப்போம்.
 
வேடன் ஒருவன் இருந்தான். வழிப்பறி செய்வதும், கொள்ளை அடிப்பதும், கொலை செய்வதும் தான் அவன் தொழில்.
 
அப்படிப்பட்டவன், தனது  வாழ்நாளில் கடைசிக் கட்டத்தில் இருந்தான். உயிர் பிரியும் நேரம். வேடன் தன் பழக்கவாசனையால், `ஆஹர; ப்ரஹர; ஸம்ஹர; விஹர’ என்று புலம்பினான்.
 
அதாவது `வழியில் போகின்றவரை இழுத்து வா, அவனை அடித்துக் கொல்லு, அவனுடைய பொருள்களைக் கொண்டு இன்பம் அடை’ என்பதுதான் அவன் புலம்பிய வார்த்தைகளுக்கான பொருள்.
 
எனினும் அதில், `ஹர’ எனும் வார்த்தை நான்கு முறை இருந்ததால்,  அவனுக்கும் கயிலா யத்தை அடையும் பேற்றினை அளித்தாராம் சிவபெருமான்.அதற்காக, `நாமும் அவனைப் போலவே வாழலாம், கடைசியில் சிவநாமத்தைச் சொன்னால் போதும்; புண்ணியம் கிடைத்து விடும்’ என்று கருதக் கூடாது.
 
மேற்சொன்ன கதையில், வேடன் நான்கு முறை `ஹர’ என்று சப்தத்துடன் கூவி, இறந்து விட்டான். அதன்பிறகு அவன் பாவம் செய்ய வழியில்லை.
 
நம் எல்லோருக்கும் தெரிந்த வேடன் கண்ணப்பர். அவர், தன் கண்ணையே பிடுங்கி சிவாா்ச் சனம் செய்தாா். இவா்கள் செய்த இரண்டையுமே நாம் செய்ய முடியாது. ஆகையால், நாம் தூய்மையாக இருந்து பூஜை செய்வதே முறை.
 
 
 
மற்றொரு வேடனின் கதை யையும் பார்ப்போம்.
 
அந்த வேடனின் பெயர் அங்குலன். அவன் கண்ணெதிரில் எந்தவொரு விலங்கும் நடமாட முடியாது.
 
சாதாரணமாக வேடர்கள் தரையில் வலை விரித்து, அதில் சிக்குபவற்றைப் பிடிப்பார்கள். ஆனால் அங்குலனோ, மரங் களிலும் சேர்த்தே வலை விரிப்பான். தரையிலுள்ள வலையி லிருந்து தப்பிக்கும் விலங்குகள், மரங்களில் இருக்கும் வலையில் மாட்டிக் கொள்வதற்காகவே அவன் அப்படிச் செய்தான்.
 
அங்குலனுக்கு மனைவியும் குழந்தைகளும் உண்டு. அமைதி யாகப் போய்க்கொண்டிருந்த அங்குலனின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உண்டாக்கி அவனுக்கு அருள் செய்ய, ஆண்ட வன் நினைத்தார் போலும்.
 
ஒரு நாள்ஸ அங்குலன் தனது வழக்கப்படி வலைகளை விரித்துவிட்டுக் காத்திருந்தான். பறவைகளோ விலங்குகளோ எதுவும் அவற்றில் சிக்கவில்லை. சின்னஞ்சிறிய அணில்கூடச் சிக்கவில்லை.
 
அங்குலன் வருந்தினான். அவன் வருத்தத்தை மேலும் அதிகமாக்குவது போல, சூரியனும் மறையத் தொடங்கினான்.
 
‘‘ஹும்..! பகல் பொழுது முழுதும் வீணாகப் போய்விட்டது. எதுவும் கிடைக்கவில்லை. வயிறு பசிக்கிறது. என் நிலையே இப்படியென்றால், வீட்டில் உள்ளவர்கள்ஸ?
 
வேறு வழியில்லை. இன்று வீட்டுக்குப் போகக் கூடாது. போனால் பசியுடன் இருக்கும் அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். ‘ஒன்றும் கொண்டு வரவில்லையா? பசிக்கிறதே!’ என்பார்கள்.
 
‘இன்று இரவு இங்கேயே தங்கி, நாளைக்கு ஏதாவது கொண்டுபோக வேண்டும்’ என்று தீர்மானித்த அங்குலன்,
 
காட்டிலேயே ஒரு குளத்தங்கரை யில் இருந்த வில்வ மரத்தின் மீது ஏறி வாகாக உட்கார்ந்தான். ‘இரவு நேரத்தில் இங்கு ஏதாவது விலங்குகள், குளத்தில் தண்ணீர் குடிக்க வரும். எதற்கும் தயாராக இருப்போம். ஏதாவது வந்தால் அடித்துவிடலாம்!’ என்ற எண்ணத்தில் தோளில் இருந்த வில்லை எடுத்த அங்குலன் கீழே குளத்தைப் பார்த்தான். குளம் தெரியவில்லை. முன்னால் இருந்த வில்வக் கிளைகள் மறைத்திருந்தன.
 
அடுத்து, அம்பை எடுத்த அங்குலன், அதைக்கொண்டு வில்வ இலைகளை உதிர்த்து, குளம் தெரியும்படி செய்து கொண்டான்.
 
 
 
அங்குலன் மரத்தில் இருந்து உதிர்த்த வில்வ இலைகள் முழுவ தும், அதன் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.
 
விலங்குகள் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்த அங்குலன் முன்னால் விலங்குகள் எதுவும் வரவில்லை. ஆனால், அவனுக்குத் தூக்கம் வந்தது. கூடவே பயமும் வந்தது.
 
‘என்ன இது? பகல் பொழுது முழுவதும் அலைந்து திரிந்தது இப்படி அசத்துகிறதே! இங்கு தூங்கிக் கீழே விழுந்துவிட்டால், உணவு தேட வந்த நான், விலங்குகளுக்கு உணவாகி விடுவேனே. தூக்கத்தை விரட்ட வேண்டும். என்ன செய்யலாம்?’ என்று நினைத்த அங்குலன், மரத்திலிருந்து வில்வ இலை களை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டான்.
 
அவ்ஸவளவு இலைகளும் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. காற்று அதிகமாக வீசாத காட்டுப் பகுதியானதால் ஸ்வாமியின் மீது விழுந்த வில்வ இலைகள் அப்படியே, யாரோ ஒருவர் பொறுப்பாக பூஜை செய்து அலங்கரித்ததைப் போல் இருந்தது.
 
பொழுது விடிந்தது. ஒரு விலங்குகூட அவனுக்குக் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துப்போன அவன், வேறு வழியின்றி வீடு திரும்பினான்.
 
அங்கே அங்குலனின் மனைவி, ‘‘காட்டுக்குப் போனவரை இன்னும் காணோமே! இரவும் போய்விட்டது. என்ன நடந்ததோ?
 
தெய்வமே! அவருக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் வீடு திரும்ப வேண்டும்!’’ என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.
 
அங்குலன் வீடு திரும்பியதும் அவன் மனைவி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தெய்வத்துக்கு நன்றி சொன்னாள்.
 
காலங்கள் ஓடின. வாழ்நாள் முடிவில் அங்குலன், சிவ கணங்களில் ஒருவராகும் பேறு பெற்றான்.
 
காட்டில் அங்குலன் பகல் பொழுது முழுவதும் சாப்பிடாமல் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து, மரத்தின் மேல் இருந்தபடி வில்வ இலைகளை உதிர்த்தது, ஒரு சிவராத்திரி நாளின் போது. இதை, சிவபெருமான் தனக்குச் செய்த சிவராத்திரி விரத வழிபாடாக ஏற்றுக்கொண்டார். அதன் விளைவாகத்தான் அங்குலனுக்கு சிவ கணங்களில் ஒருவராகும் பேறு கிடைத்தது.
 
 
 
போற்றித் திருத்தாண்டகம்      (திருநாவுக்கரசர் அருளியது)
 
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
    எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
    கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
    கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
    வீரட்டங் காதல் விமலா போற்றி
 
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
    பல்லூழி யாய படைத்தாய் போற்றி
 ஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி
    உள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
    கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி
 
முல்லையங்கண்ணி முடியாய் போற்றி
    முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
    ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
    சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச் சிற்றம்பல மேயாய் போற்றி
    திருவீரட் டானத் தெஞ்ச் செல்வா போற்றி
 
சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி
    தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்
    குறிக்கொண்டிருக்குங் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்
    பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி
 
நீறேறு நீல மிடற்றாய் போற்றி
    நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறே றுமையொரு பாற்கொண்டாய் போற்றி
    கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
    அடியார்கட் காரமுத மானாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
    இருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி
 
பாடுவார் பாடலுகப்பாய் போற்றி
    பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
    வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற்கரியாய்ப் போற்றி
    நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி
 
மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
    மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
    வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
பண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
    பார்முழுது மாய பரமா போற்றி
கண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
    கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி
 
வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
    விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
    தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
 நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
    நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
    அலைகெடில வீரட்டத்தாள்வாய் போற்றி
 
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
    சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
    புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
    தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி
 
முக்கணா போற்றி முதல்வா போற்றி
    முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
    தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
    துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
    எறிகெடில வீரட்டத் தீசா போற்றி
 
 
 
திருச்சிற்றம்பலம்
 
மகா சிவராத்திரி புண்ணிய தினத்தன்று இரவு, இதுவரையிலும் நாம் பார்த்த முறைப்படி நான்கு ஜாமங்கள் சிவவழிபாடு செய்வதுடன், வேடர் கதைகள் முதலான திருக்கதைகளையும், தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றையும் படிக்கவோ,  யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கவோ வேண்டும்.
 
மறுநாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சிகால அனுஷ் டானத்தையும் சேர்த்து முடிக்க வேண்டும்.
 
அதன்பின் நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசிபெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன்பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும்.
 
சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோயில்களில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளலாம். சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு

 Share this:

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies