28 கிலோ எடையில் 10 மாதக் குழந்தை!
13 Nov,2017
மெக்சிகோவில் 28 கிலோகிராம் எடைகொண்ட10 மாதக் குழந்தையைக் கண்டு மருத்துவர்கள் குழம்பியிருக்கின்றனர்.
பிறந்தபோது 10 மாத லுவிஸ் மெனுவல் கொன்ஸெலஸின்(Luis Manuel Gonzales) எடை 3.5 கிலோகிராம் தான்.
இருப்பினும் முதல் தடுப்பூசி குத்துவதற்குள் லுவிஸின் எடை 10 கிலோகிராம் ஆனது.
தாய்ப் பாலே அதற்கு காரணம் என்று லுவிஸின் அன்னை நினைத்துள்ளார்.
தற்போது, லுவிஸால் நடக்கவோ தவழவோ முடியாது; நிமிர்ந்து நிற்கத்தான் முடியும்.
Prader-Willi Syndrome எனும் மரபணு தொடர்பான நோயால் லுவிஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த விசித்திரமான எடைப் பிரச்சனையைச் சோதிக்க நிறையச் செலவாகும்.
மாதம் சுமார் 200 டாலர் சம்பாதிக்கும் லுவிஸின் தந்தைக்கு மருத்துவச் செலவுகளை கவனிக்க முடியாத நிலையில் லுவிஸின் பெற்றோர் சிகிச்சைக்குத் தேவையான பணத்தை புரட்ட Facebook பக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
மெக்சிகோவில் குழந்தைகளிடையே உடற்பருமன், நீரிழிவு நோய் அதிகரித்துக்கொண்டே வருகிறது. என்றாலும், லுவிஸின் எடை கூடியதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராக உள்ளது.
வாரத்திற்கு நான்கு முறை மருத்துவமனைக்குச் செல்லும் லுவிஸிக்கு நல்ல வழி பிறக்க வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.