ஆண்களுக்கு உடலறவின் போது அதிக தன்னம்பிக்கை கொடுப்பது அவர்களது ஆணுறுப்பின் அளவு தான். ஆண்கள் பொதுவாக ஆணுறுப்பின் அளவை பெரிதுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் நடப்பது சாத்தியமா என்ற கேள்வி உங்களுக்கு இருக்கும். ஆனால் நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இயற்கையான முறையில் ஆணுறுப்பை பெரிதுபடுத்த முடியும். சந்தைகளில் கிடைக்கும் சில உபகரணங்கள், மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவை ஆணுறுப்பின் அளவை பெரிதாக்கும். ஆனால் அவை எல்லாம் இயற்கையான வைத்திய முறைக்கு ஈடாகாது. சில மூலிகைகள் மற்றும் தீர்வுகள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை உடலுறவு திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை ஆணுறுப்பு பகுதியில் அதிகரிக்கவும் உதவுகிறது. விறைப்பு தன்மை குறைவு மற்றும் சில பிரச்சனைகளுக்கும் இந்த தீர்வுகள் பொருந்தும். நீங்கள் செயற்கையான கெமிக்கல் போன்ற பொருட்களை தவிர்த்து இந்த முறைகளின் வாயிலாக சிறந்த பலனை பெறலாம்.
1. பூண்டு பூண்டு ஒரு மிகச்சிறந்த ஆணுறுப்பை பெரிது படுத்தும் பொருளாகும். இதில் அலிசின் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது விறைப்பு தன்மையை நீண்ட நேரத்திற்கு தக்கவைக்க உதவியாக உள்ளது.
2. பாதாம் பாதமில் ஜிங்க், சிலினியம், விட்டமின் இ ஆகியவை உள்ளன. இது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் ஆணுறுப்பை பெரிதுபடுத்த இது உதவுகிறது.
3. வெங்காயம் வெங்காயம் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது உடலுறவின் வீரியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது ஆணுறுப்பை பெரிதுபடுத்த மிகச்சிறந்த வீட்டு மருத்துவ குறிப்பாகும்.
4. கேரட் கேரட் ஆண்களின் ஆண்மை மற்றும் விந்தணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது. இது கருமுட்டையை நோக்கி விந்தணுக்கள் வேகமாக செல்ல தேவையான சக்தியை விந்தணுக்களுக்கு தருகிறது.
5. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவுகள் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவுகள் ஆண்களின் திறனை இயற்கையாகவே அதிகரிக்க உதவுகின்றன. இவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. இது உச்சமடைதலுக்கும் உதவுகிறது.
6. மாதுளை ஜூஸ் மாதுளை ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இது ஆணுறுப்பிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் எளிதில் விறைப்பு தன்மை உண்டாகிறது.
7. விட்டமின் பி3 தினமும் விட்டமின் பி3 எடுத்துக் கொள்வது ஆண்களின் விறைப்பு தன்மைக்கு உதவுகிறது. இந்த விட்டமின் பி3 அதிகம் நிறைந்த உணவுகள் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
தினசரி உடலுறவு கொண்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா?
தினசரி உடலுறவு கொள்வதால் விந்தணுக்களின் திறன் குறையுமா என்ற கேள்வி அனைவரின் முக்கிய கேள்வியாகும். தினசரி உடலுறவு வைத்துக் கொள்வது என்பது ஆரோக்கியமானது தான். இவ்வாறு உடலுறவு வைத்துக் கொள்வது என்பது உங்களுக்கு கருவுறுதல் பிரச்சனை இல்லை என்றால் உங்களது விந்தணுக்களை பாதிக்காது. பல ஆய்வுகள் தினசரி உடலுறவு வைத்துக் கொள்வதால், விந்தணுக்களின் திறன் மேம்படுத்தப்படுகிறது என்று கூறுகின்றன. குறைவான விந்தணுக்களை கொண்டுள்ளவர்களுக்கு தினசரி உடலுறவு கொண்டால் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று நம்பப்படுகிறது. இந்த பகுதியில் ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் சில பழக்கங்களை பற்றி காணலாம்.
குறைவான விந்தணுக்கள் நீங்கள் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, குறைவான விந்தணுக்கள் தான் உள்ளது என்று மருத்துவர் தெரிவித்துவிட்டால் நீங்கள் தினசரி உடலுறவு கொள்வது என்பது கருவுறுவதை தமாதமாக்கும். ஒவ்வொரு முறையு ஆணின் விந்தணுக்கள் வெளியேறுவதால், அவரது உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. எனவே இது மீண்டும் அதிகரிக்க சில காலம் தேவைப்படுகிறது.
விந்தணு உருவாகும் காலம் விந்தணுக்கள் உருவாக எடுத்துக் கொள்ளும் காலம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். இது மீண்டும் உருவாக 24 முதல் 48 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே 36 மணிநேர இடைவெளியில் உடலுறவு கொள்வது என்பது கரு உருவாக வழிவகுக்கும்.
இது வேண்டாம்! உங்களுக்கு குறைவான அளவு மட்டுமே விந்தணுக்கள் இருப்பது தெரிய வந்தால், நீங்கள் தொடர்ச்சியாக உடலுறவு கொள்வதை நிறுத்திக் கொள்ளலாம்.
கால இடைவெளி இது பற்றி நடந்த ஆராய்ச்சிகளில் ஆண்கள் தினசரி ஒரு மாதம் காலம் உடலுறவு கொள்வதால் அவர்களது விந்தணுக்களின் திறனும், டி.என்.ஏக்களும் முழுமை பெருவதில்லையாம். அதுவே மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளிகளில் உடலுறவு கொள்வதால் அவர்களது விந்தணுக்களின் திறனில் எந்த விதமான மாற்றமும் இல்லையாம்.
இவர்களுக்கு மட்டும் தான் தினசரி உடலுறவு விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்பது, விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் தான். மற்றவர்களுக்கு தினசரி உடலுறவு ஆரோக்கியமானது தான். விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளவர்கள், மாதவிடாய் நெருங்கும் காலங்களில் உடலுறவு கொள்வது கருவுற வழிவகுக்கும்.