டென்மார்க் சயன் நடித்த யாகன் வரும் சனி காண்பிக்கப்படுகிறது..
03 Oct,2017
டென்மார்க்கின் சிறந்த கலைஞன் சயன் அறிமுக நாயகனாக நடிக்கும் யாகன் திரைப்படம் எதிர்வரும் 07.10.2017 சனிக்கிழமையன்று பி.ப. 19.00 மணிக்கும் 22.15 மணிக்குமாக இரண்டு காட்சிகள் ஈக்காஸ்ற் நகரில் உள்ள ஈக்காஸ்ற் பயோ திரையரங்கில் காண்பிக்கப்பட இருக்கிறது. தொடர்பு தொலைபேசி : 27282905
அதைத் தொடர்ந்து ஞாயிறு ஒலஸ்ரொப் நகரில் உள்ள திரையரங்கில் பி.ப. 15.00 மணி காட்சி காண்பிக்கப்படும். தொடர்பு தொலைபேசி : 41133993
தமிழகக் கலைஞர்களுடன் டென்மார்க் சயன் இணைந்து கலக்கும் சிறந்த திரைப்படம் தவறாது பார்க்க வேண்டிய திரைப்படம் அனைவரையும் இரு கரம் கூப்பி அழைக்கிறோம்.
இந்தத் திரைப்படத்தை பார்ப்பது நமது கடமை..
ஆதரவளிக்க திரையரங்கு வருவது நமது கடமை..
இந்த இணையில்லாத முயற்சியின் வெற்றியே எங்கள் வெற்றி..
இந்தத் திரைப்படத்தை வெற்றியாக்க வேண்டியது டென்மார்க்கில் உள்ள ஒவ்வொரு பெற்றோரதும் கடமை..
ஒவ்வொரு இளைஞனதும் கடமை..
ஒவ்வொரு யுவதியதும் கடமை..
சின்னஞ்சிறிய டென்மார்க்கிற்கில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தலை நிமிர்வும் பெருமைiயும் தரும் இந்த முயற்சியை தேடிச் சென்று வாழ்த்தாவிட்டால் டென்மார்க்கில் நாம் வாழ்கிறோம் என்று சொல்லி என்ன பயன்..?
அலைகடலென அணிவகுத்து செல்வோம் நம் இளம் நாயகன் சயனை ஆதரிப்போம் அவர் பெற்றோரின் தியாகத்தை மனதார வாழ்த்துவோம்..
இதுபோல தம் பிள்ளைகளின் உயர்வுக்காக தீபமாக எரியும் பெற்றோரை மனம் குளிர வைப்போம்.. அதனால் நாமும் மனமுள்ள மனிதராவோம் வாருங்கள்..