இத்தாலியன் பாஸ்தா
23 Sep,2017
தற்போது இத்தாலியன் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாஸ்தா - 500 கிராம்
வெங்காயம், கேரட், குடைமிளகாய்- 1 (நறுக்கியது)
பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை போட்டு அதனுடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கியபின் வெங்காய், கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
காய் நன்கு வெந்ததும் தக்காளி, மசாலா பொடிகள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் பாஸ்தாவை போட்டு கிளறிவிடவும்.
இதன்மேல் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான இத்தாலியன் பாஸ்தா ரெடி!!!