நவராத்திரி கொலு வைக்கும் முறை

19 Sep,2017
 


இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அதி கம். ஆண்களுக்கு உகந்த ராத்திரியாக கருதப்படுவது சிவராத்திரி, ஆனால் பெண்க ளுக்கு உகந்த ராத்திரிகள்தான் இந்த நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பதன்
 
பொருள் ஒன்பது இரவுகள் அதாவது ஒம்போது ராத்திரிகள் என்பதே இந்த‌ நவராத்தி ரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தி யாக அலங்கரித்து வைப்பதேயாகும்.
 
 ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மை களை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவ ர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறி யிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போ ம். கொலு மேடை9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
 
 1. முதலாம் படி :–
 
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்க ளின் பொம்மைகள்.
 
2. இரண்டாம் படி:-
 
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
 
3. மூன்றாம் படி :-
 
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்ற வற்றின் பொம்மை கள்.                               
 
4. நாலாம்படி :-
 
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு  போன்றவற்றி ன் பொம்மைகள்.
 
5. ஐந்தாம்படி :-
 
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
 
6. ஆறாம்படி :-
 
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
 
 
 
7. ஏழாம்படி :-
 
மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த    சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொ ம்மைகள்.
 
8. எட்டாம்படி :-
 
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
 
9. ஒன்பதாம்படி :-
 
பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வை க்கவேண்டும்.
 
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற் காகவே இப் படி கொலு அமைப்பது வழக் கம்.
 
 நவராத்திரி வழிபாட்டு முறை.
 
1. முதலாம் நாள் :-
 
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபட வேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்த வள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோப க்காரி. நீதியைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செ ய்தவர்களை திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும்.
 
மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்ட சராசரங்களைக் காக்கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.
 
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
 
2. இரண்டாம் நாள் :–
 
இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபடவேண்டும். வராஹ(பன்றி)முகமும் தெத்து பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமி யை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
 
மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலை யில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர் விற்றவிறகை மீனாட்சி அம்மன் தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்து வத்தினை வலி யுறுத்துவ தாக நாம் கருதலாம்.
 
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
 
3. மூன்றாம் நாள் :-
 
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திரா ணியாக வழிபட வேண் டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவ லோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளே யாகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புப வர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவ ரிற்கு பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளே யாகும்.
 
இன்று மீனாட்சி அம்மன் கல்யானைக்கு கரும்பு கொடுத்த அலங்கா ரத்தில் காணப்படுவார்.
 
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொ ங்கல்.
 
4. நான்காம் நாள் :-
 
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
 
இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சி யளிப்பார்கள்.
 
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
 
5. ஐந்தாம் நாள் :-
 
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழி படவேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியா வாள். திரி சூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடினஉழைப்பாளிகள் உழைப்பி ன் முழுப்ப லனை பெற அன்னையின்   
      
 
அருள் அவசியம் வேண்டும்.
 
இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட்சம் கொடுத்த அலங்காரத்தில் காட்சி யளிப்பார் கள்.
 
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
 
6. ஆறாம் நாள் :-
 
இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவ சேனா திபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி டுபவள். வீரத்தை தருபவள்.
 
இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங் காரத்தில் அருள்புரிவார்கள்.
 
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.
 
7. ஏழாம் நாள் :-
 
7ம்நாள் அன்னையை மகா லட்சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டா யுதம், சக்தி ஆயுதம், வஜ்ரா யுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்ட லம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களை யும் தருபவள் அன்னை யாகும்.
 
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி கோலத்தில் மக்களி ற்கு அருள் பாலிப்பார்கள்.
 
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க் கண்டுச் சாதம்.
 
8. எட்டாம் நாள் :-
 
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலை யும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.
 
இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷாசுர மர்த்தினி அலங்கா ரத்தில் காட்சியளிப்பார்கள்.
 
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க் கரைப் பொங்கல்.
 
9. ஒன்பதாம் நாள் :-
 
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம்பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
 
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தி ல் அருளாட்சி புரிவார்கள்.
 
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.
 
 

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies