ஆப்ரிக்காவில் ஒரு இந்து கோயில்
18 Sep,2017
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த கோயில் அமைந்துள்ளது.
கோயிலினுள் நுழைந்த உடன் நவகிரகங்கள் உள்ளன. கோயிலின் நடுவில் சிவலிங்கம் அமைந்துள்ளது. சிவபெருமானை சுற்றி சுப்பிரமணியர், பார்வதி, விநாயகர் சிலைகள் அமைந்துள்ளன. கோயில் சுவர்களில் சிறு குகைகள் போல அமைக்கப்பட்டு அதில் இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு முன்னால் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்பகுதியில் பெரிய ஹால் உள்ளது. அதில் ராமர் சீதா, லட்சுமணன், அனுமான் சிலைகள் உள்ளது. மேலும் வள்ளி தெய்வானையுடன் முருகன், லட்சுமி, பத்மாவதியுடன் வெங்கடேஸ்வரர் சிலைகளும் உள்ளது.
வழிபாட்டு நேரம் :
கோயில் காலை 5.00 மணி முதல் 8.00 வரை திறந்திருக்கும். காலையும், மாலையும் பூஜைகள் நடைபெறும்.
முக்கிய விழாக்கள் :
மகா சிவராத்திரி, ராமநவமி, தசரா, தீபாவளி, மேலும் பல முக்கிய விழாக்கள் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படும்.
தொடர்புக்கு : சுப்பரமணியன், கோயில் அர்ச்சகர்; தொலைபேசி எண் : (00267) 352933