பஞ்சபூத தியானம் குறித்த தகவல்

05 Sep,2017
 

பஞ்சபூத தியானம் குறித்த  தகவல்
 
அண்டத்தையும் பிண்டத்தையும் இணைப்பது தொண்டம் என்று ஶ்ரீவித்யையில்
 
குறிப்பிடுவார்கள். அதுபோல அண்டத்தையும் பிண்டத்தையும் இணைக்கும் தொண்டனாக யோகம் திகழ்கிறது. உச்சியில், கயிலாய மலைமேல் இருக்கும் பரத்தை அடைய மலையைச் சுற்றிலும் பலவழிகள். எல்லாம் மலைக்கு மேலேதான் சென்று சேருகின்றன. அதைப் போலவே யோகங்களும் பல விதமாக இருந்தாலும் பயன் ஒன்றுதான். ஏன் அப்படி? என்ற கேள்வி கேட்பவர்களுக்கு,ஒன்றைச் சொல்வேன். என்னவென்றால் இறையாற்றலாகிய இயற்கை பலவித பரிமாணங்களில் விரிந்து பரிணமித்திருப்பதால், அதில் எந்த விஷயத்தின் உள்ளே நீங்கள் மனதினால் சங்கமித்தாலும், இறைவனை அடையலாம். எனவேதான் கல்லிலும் கடவுளைக் கண்டு முக்தி அடைந்த ஞானிகளையும் காண்கி றோம். மன ஒருமைப்பாட்டு டன் உலகில் எந்த விஷயத்தைத்தொட்டாலும் இறையாற்றல் உங்க ளை உறிஞ்சி எடுத்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளும். வேதா த்ரியத்தில் பஞ்சபூத நவக்கிரக தவம் என்று ஒரு தவமுறையைக் கற்றுத் தருவார்கள். அதை முறையாகத் தவறாமல் கடைபிடித்து சில இக்கட்டான நேரங்களில் நான் சௌகர்யம் அடைந்திரு க்கிறேன். இது என் அனுபவம். இதை ப்போல நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்களையும், பிண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்களையும் இணைத்து தியானிப்பார்கள். இதை பஞ்ச பூத தியானம் (அ) பரந்த தியானம் என்பார்கள். நம் உடலில் உள்ள பஞ்ச பூதங்களி னால் விளையும் உணர்ச்சிகளை அதன் போக்கில் விடாமல் கட்டுப்படுத்தி வெற்றி கொண்டோமானால், அண்டத்தின் இயற்கை சக்திகளை நம் விருப்பம் போல கையாளலாம். அந்த ஆற்றல் வந்து விடும். அதை அஷ்டமகா சித்தி என்பா ர்கள். நம் உட லாகிய பிண்டம், அண்டத்தோடு நமது மற்றொரு நுண்ணிய சரீரம் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. அதன் மூலமே அண்டத்தி ன் சக்திகள் நம் ஏழு ஆதாரங்களையும் தூண்டி செயலாற்றச் செய்கி றது. ஸ்தூல உடலில் உள்ள அந்த ஆதாரங்கள் பரு உடலின் நரம்பு மண்டலம் மூலமாக நம் முதுகெலும்பில் உள்ள ஏழு நரம்பு மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
மத்திய தேகத்தில் வெளி ஆகாயத்தையும், பிராண வாயுவில் வெளி வாயுவையும், ஜடராக்கினியில் வெளி அக்னியையும், அப்புவின் அம்சத்தில் நீரையும், பிருதிவி அம்சத்தில் பூமியையும் சேர்த்து தியானிக்க வேண்டும். இவற்றிற்கு முறையே அ – ய – ர – வ – ல என்ற மந்திர அட்சரங்களை மனதுக்கு ள் உச்சரிக்க வேண்டும். அதாவது, பாதம் முதல் முழங்கால் வரை – பிருதிவி ஸ்தானம்.
 
முழங்காலுக்கு மேல் இடுப்பு வரை – நீர் ஸ்தானம்.
 
இடுப்புக்கு மேல் இருதயம் வரை – அக்னி ஸ்தானம்.
 
இருதயத்திலிருந்து புருவ நடு வரை – வாயு ஸ்தானம்.
 
அதிலிருந்து சிரசு உச்சி வரை – ஆகாய ஸ்தானம்.
 
இனி நீங்கள் ஆரம்பிக்கலாம். உங்கள் சுவாசத்தை பிருதிவி ஸ்தான த்தில் நிறத்தி ‘லம்’ என்ற கந்த பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணி நேரம் தியானத்தில் இருக்க வேண்டும். இது நம் பிருதிவி அம்சத்தை பூமியோடு இணைக்கும் மூலாதார தியான மாகும். இதில் வெற்றி பெற்றவர்கள் மண்ணுக்குள் நாட்கணக்கில் இருந்தாலும் மர ணம் சம்பவிக்காது. உடலுக்கோ உயிருக்கோ மண்ணால் எந்த சேதாரமும் ஏற்படா து.
 
சுவாசத்தை நீர் ஸ்தானத்தில் நிறுத்தி ‘வம்’ என்ற பீஜ அக்ஷரத்தை ஜபித்தபடி தின மும் இரண்டு மணி நேரம் தியானித்திட, நீரில் மிதக்கும் சித்தி கிடைக்கும். கடலு க்குள் சஞ்சரிக்கும் சித்தியைத் தரும். இந்தியா னத்தில் வெற்றி பெற்ற வர்களுக்கு நீரால் மரணம் ஏற்படாது.
 
சுவாசத்தை அக்னி ஸ்தானத்தில் நிறுத்தி ‘ரம்’ என்ற பீஜ அக்ஷரத்து டன் தினமும் இரண்டு மணிநேரம் தியானம் செய்ய வேண்டும். இதில் வெற்றி அடைந்தவர்களை நெருப்பு சுடாது. அக்கினியால் மரணம் ஏற்படாது.
 
சுவாசத்தை வாயு ஸ்தானத்தில் நிறுத்தி ‘யம்’ என்ற பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணிநேரம் தியானிக்க வேண்டும். இதில் வெற்றிய டைந்தவர்களுக்கு வாயு வேகம், மனோவேகம் பெற்று எங்கும் சஞ்சாரம் செய்யும் சித்தி கிட்டும். இவர்களுக்கு வாயுவால் மரணம் ஏற்படாது.
 
அடுத்து சுவாசத்தை ஆகாய ஸ்தானத்தில் நிறுத்தி ‘அம்’ என்ற பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணி நேரம் தியானத்து, சாதனையில் வெற்றி அடைந்தவர்களுக்கு ககன மார்க்கத் தில் சஞ்சரிக்கும் சித்தி கிட்டும். இவர்களுக்கு ஆகாயத் தத்துவத்தா ல் மரணம் ஏற்படாது. இந்த பஞ்சபூதத் தியானத்தில், அல்லது பரந்த தியானத்தில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. அது என்ன வென்றால் மனிதனுக்கு மரணம் பஞ்சபூதங்கள் வாயிலாகவே நடைபெற்றாக வே ண்டும். அவற்றை ஒருவர் வென்று விட்டால் அவரை மரணம் தீண் ட முடியாதல்ல வா? இதில் வென்றவர்கள் மரணத்தை வெல்ல லாம். தன் சரீர த்தை காற்றில் கரைக்கலாம். மீண் டும் சேர்த்து உருவமாகலாம் . நம் சித்தர்கள் இந்த உபாயத்தைக் கைகொண்டுதான் கண்ணு க்குத் தெரியாமல் மறைந்து இமயத்தில தவத்தில் இருக்கிறார்க ள். அவர்களை போகர் இமயத்தில் போய் பார்த்துவிட்டு வந்து சொன்னது. அவரது பாடல்களில் உள்ளது. நம் தமிழகம் செய்த பெரும் பேற்றினால், நமக்குக் கிடைத்த மகா ஞானியும், சன்மார்க்க யோகியுமான அருள் பிரகாச இராம லிங்க அடிகளார் அவர்கள் இந்த முறையைக் கையாண்டு தான் காற்றில் கரைந்து ஒளியாகத் திகழ்கிறார். எனவே வள்ளலாரின் சன்மார் க்க நெறியில் ஒழுகி அவர் வழியில் நாமும் சென்று உலகுக்கு ஒளியாகத் திகழ்வோமாக.

 



Share this:

DENMARK Kommende Film

Tamilmatrimony.world

DENMARK AIR TRAVELS

, Kommende Film

Kommende Film

Nearairtravelsdk-DANMARK

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies