மீனம் -கும்பம் -தனுசு -மகரம்=விருச்சிகம் -துலாம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)

22 Aug,2017
 

    





குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடன்களால் கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வழக்குகள் சுமுகமாகும்.



குரு பகவானின் பார்வை:  குரு பகவான்  தனது 5-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் தனது 7-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.  குரு பகவான் தனது 9-ம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 2, 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் பயணிப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்லபடி முடியும். தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். உங்களின் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வங்கிக் கடன் கிடைக்கும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள்  நல்லவிதத்தில் முடியும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் அரசாங்க விஷயம் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர் கள். புதிய வீட்டுக்கு மாறுவீர்கள்.
வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். மாணவர்களே! முதலில் இருந்தே பாடங்களை கவனமாகப் படிப்பது அவசியம். உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொள்ளப் பாருங்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.
இந்த குரு மாற்றம் கடின உழைப்பு, குறைந்த வருமானம் என ஒருபக்கம் அலைக்கழித்தாலும், சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.
பரிகாரம்:
மகம் நட்சத்திர நாளில், உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ர புரீஸ்வரரையும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணா மூர்த்தியையும் வணங்குங்கள்; வாழ்வில் சாதிப்பீர்கள்.

கும்பம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)


கண்டு அஞ்சாதவர்களே!
 உங்கள் ராசிக்கு 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன்  மனைவிக்கு இடையில் அந்நியோன்யம்  அதிகரிக்கும். கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.



குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு கூடும். ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  முக்கியப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் வரும். குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியம் கூடும். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக  இருப்பார்கள்.  அதிகாரிகளின் நட்பு  கிடைக்கும். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
 குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 3 மற்றும் 10-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் பயணிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து கைக்கு வரும்.  6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஒருவித தயக்கம், படபடப்பு, எதிர்காலம் குறித்த பயம், தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். பிறமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  அயல்நாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும்.  உங்களின் ராசிக்கு 2 மற்றும் 11-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் கூடி வரும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். இடமாற்றங்கள் உண்டாகும். தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்படும்.
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் சற்று தாமதமாகி முடியும். அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படும்.
 வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். சிலர் சில்லறை வியாபாரத்தில் இருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை நிம்மதி தரும். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும்.
மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும்  அளவுக்குப் பிரபலமாவீர்கள். மூத்த கலைஞர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
இந்த குரு மாற்றம் மன நிம்மதியைத் தருவதுடன், எதிலும் வெற்றி பெறுவோம் என்கிற தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்:
பூசம் நட்சத்திர நாளில், சிதம்பரம் அருகிலுள்ள ஓமாம்புலியூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீபிரணவ வியாக்ர புரீஸ்வரரையும் தட்சிணாமூர்த்தியையும் வில்வ அர்ச்சனை செய்து வழிபடுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

மகரம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)



உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்வதால் வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது. உழைப்புக்கான அங்கீகாரமோ, பாராட்டோ கிடைக்காது. பல வேலை களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். தன்னம்பிக்கை குறையும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிலர் பணியின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடும்.



குரு பகவானின் பார்வை: குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். 

குரு பகவான் தன் 7-ம் பார்வையால் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீடு, மனை வாங்கக் கடனுதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். குரு பகவான் தன் 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் செயலில் வேகம் கூடும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். செலவுகள் குறையும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 4 மற்றும் 11 ஆகிய இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். திருமணம் கூடி வரும். உங்கள் ராசிக்கு 3, 12-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எனினும், மனதிலே ஒருவித அச்ச உணர்வு வந்து நீங்கும். பிள்ளை களிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். முன்கோபம் கூடாது. மற்றவர்களுக்காக சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். அரசாங்கத்தால் நெருக்கடிகள் வந்து நீங்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் குரு பகவான் அமர்வதால் புகழ், கௌரவம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள்.
வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.   உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்த படைப்புகளைக் கொடுக்கவும்.
இந்த குரு மாற்றம் உங்களின் முன்னேற்றப் பாதையில் சிறுசிறு தடைகளை ஏற்படுத்தினாலும், உங்களைக் கொஞ்சம் செம்மைப் படுத்துவதாக அமையும்.
பரிகாரம்:
புனர்பூசம் நட்சத்திர  நாளில், அரியலூர் மாவட்டம் திருமழபாடி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் திருப்பம் உண்டாகும்.


       தனுசு -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)


தசமி திதியன்று, கும்பகோணத்துக்கு அருகேயுள்ள தேப்பெருமா நல்லூரில் அருளும் ஸ்ரீவிஸ்வநாதரையும், ஸ்ரீஅன்னதான குருவையும் வணங்குங்கள்; தொட்டது துலங்கும்.பரிகாரம்: மொத்தத்தில் இந்த குரு மாற்றம் தோல்விகளால் துவண்டுகிடந்த உங்களைச் சிலிர்த்தெழச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.வியாபாரம் மேம்படும். உத்தியோகத் தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மாணவர்களே! உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் அமையும். கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் விமர்சனங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளவும். வீடு மாற வேண்டிய நிலை ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு பகவான் சென்று மறைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் பிரச்னை களால் கலக்கம் உண்டாகும்.  6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உங்களின் புகழ் உயரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ஏமாந்த தொகை வரும். தாய்வழி உறவினர்களால் திடீர் நன்மைகள் உண்டாகும். குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 5 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் 2.9.17 முதல் 5.10.17 வரை செல்வதால் மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும்.  வழக்குகளில் வெற்றி உண்டு.குரு பகவான் தனது 9-ம் பார்வையால் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய தனித் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணைக்கு புது வேலை அமையும். செல்வாக்குக் கூடும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். மனதில் தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  குரு பகவான் தனது 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17  முதல் 2.10.18 வரை அமர்வதால் கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.  

விருச்சிகம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)


மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்களே!
   உங்கள் ராசிக்கு விரயஸ்தானமாகிய 12-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். செலவுகள் துரத்தும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைக்குச் சுமுகமாகத் தீர்வு காண முயலவும். பணப்பற்றாக் குறையின் காரணமாக வெளியில் கடன் வாங்கவும் நேரிடும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.


குரு பகவானின் பார்வை: குரு பகவான் தன் 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டை குரு பகவான் தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் விடமாட்டீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். உங்களை நம்பி புது பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.
குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர் கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும் 6-ம் வீட்டுக்கு அதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் செல்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.  வருமானம் உயரும்.  சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் ராசிக்கு 2 மற்றும் 5-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசியிலேயே செல்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. செலவுகளும் அதிகரிக்கும்.  
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர் களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். மகான்கள், சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களே!  படிப்பில் அலட்சியம் கூடாது. கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்.
இந்த குருப்பெயர்ச்சி அலைச்சல், செலவினங்களைத் தந்தாலும், சந்தர்ப்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்துகொண்டு முன்னேற வைக்கும்.
பரிகாரம்:
சஷ்டி திதியன்று திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். மகிழ்ச்சி பொங்கும்.

விருச்சிகம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)


மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்களே!
   உங்கள் ராசிக்கு விரயஸ்தானமாகிய 12-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். செலவுகள் துரத்தும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைக்குச் சுமுகமாகத் தீர்வு காண முயலவும். பணப்பற்றாக் குறையின் காரணமாக வெளியில் கடன் வாங்கவும் நேரிடும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.


குரு பகவானின் பார்வை: குரு பகவான் தன் 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டை குரு பகவான் தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் விடமாட்டீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். உங்களை நம்பி புது பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.
குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர் கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும் 6-ம் வீட்டுக்கு அதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் செல்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.  வருமானம் உயரும்.  சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் ராசிக்கு 2 மற்றும் 5-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசியிலேயே செல்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. செலவுகளும் அதிகரிக்கும்.  
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர் களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். மகான்கள், சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களே!  படிப்பில் அலட்சியம் கூடாது. கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்.
இந்த குருப்பெயர்ச்சி அலைச்சல், செலவினங்களைத் தந்தாலும், சந்தர்ப்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்துகொண்டு முன்னேற வைக்கும்.
பரிகாரம்:
சஷ்டி திதியன்று திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். மகிழ்ச்சி பொங்கும்.

துலாம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)



மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர்களே!
குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசியில் ஜன்ம குருவாக அமர்வதால் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வது நல்லது. வேலைச் சுமை அதிகரிக்கும். தம்பதிகள் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம்.  சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.


குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால் எதிலும் தெளிவு பிறக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணம் நல்லபடி நடக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும்.குலதெய்வப் பிரார்த்தனைகளை  நிறைவேற்றுவீர்கள். குரு பகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜன்ம குருவால் கணவன் மனைவிக்கு இடையில் சின்னச் சின்ன கசப்பு உணர்வுகள் ஏற்பட்டாலும் அன்பு குறையாது. ஒருவரின் முயற்சிக்கு மற்றவர் உறுதுணையாக இருப்பார்.
குரு பகவான் தனது 9-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். மதிப்பு கூடும். காணாமல்போன முக்கிய ஆவணம் கிடைக்கும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் இடத்துக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் பண வரவு அதிகரிக்கும். அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஆனாலும் வாழ்க்கைத் துணையுடன் விவாதங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும்.
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்து செல்லும். சுப செலவுகள் அதிகரிக்கும்.  ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உடைய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் தடைகளையும் கடந்து முன்னேறுவீர்கள்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வசதியான வீட்டுக்குக் குடி புகுவீர்கள்.
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:  7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் வாக்குவாதங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களும் ஏற்படும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி களிடம் பணிவாக நடந்துகொள்ளவும். 
மாணவர்களுக்குத் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த கடின முயற்சி அவசியம். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டிவரும்.
மொத்தத்தில் இந்த குரு மாற்றம் சற்றே சோதனைகளைத் தந்தாலும், விட்டுக்கொடுத்துப் போவதன்மூலம் காரியம் சாதிக்கவைக்கும்.
பரிகாரம்:
வளர்பிறை மூன்றாம் பிறை நாளில், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குரு பகவானையும் வழிபடுங்கள். தடைகள் நீங்கும்.




Share this:

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies