ஆக.21ல் முழு சூரிய கிரகணம்
23 Jul,2017
.........................
நியூயார்க்:99 ஆண்டுகளுக்கு பின் ஆக.,21ல் தோன்றும் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதை காண்பது தொடர்பாக, அமெரிக்க விண்வௌி ஆய்வு நிறுவனமான \'நாசா\' அறிவுரைகளை வழங்கி உள்ளது.
\'நாசா\' கூறியிருப்பதாவது:
சூரிய கிரகணத்தின் போது சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும். வெறும் கண்களால் பார்க்ககூடாது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித்தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும். சூரியனின் மைய பகுதியை முழுமையாக நிலா மறைக்கிறது. இந்த சூரியகிரகணத்தை உலகம் முழுவதும் 30 கோடி மக்களால் கிரகணத்தை பார்க்க முடியும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.