பஞ்சாபி ஸ்பெஷல் குல்சா
05 Jul,2017
பஞ்சாபி மிகப் பிரபலமானது குல்சா. குல்சா ரெசிபியை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையானவை
மைதா - 3 கப்
சமையல் சோடா - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - சிறிது
எள் - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
மைதாவுடன் உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும்.
நெய், சீரகம், எள், எண்ணெய் ஆகியவற்றுடன் நீர் சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
வட்டமாக சப்பாத்தி இட்டு தாவாவில் எண்ணெய் இல்லாமல் சுடவும். 2 நிமிடம் கழித்து மேலே உப்பி வரும்.
புதினா, தக்காளி சட்னி, குருமா, கிரேவியுடன் சாப்பிடலாம்.