.

மத்தியகிழக்கு பிராந்தியத்தில் உல்லாசப் பயணிகளின் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றதான நாடுகளின் வரிசையில் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டமைந்துள்ள நாடாக ஜோர்தான் திகழ்கின்றது.
சம்பிரதாயபூர்வமான பாராளுமன்றக் கட்டமைப்பைக் கொண்டு மன்னர் ஆட்சியின் கீழான இயக்கத்திலுள்ள ஜோர்தான் அம்மான் எனும் பெயரை தலைநகராகக் கொண்டுள்ளது.
மிகப் பிரமாண்டமானதும் எழில்மிக்கதும் அதேநேரம் கண்கவர் கட்டட அமைப்புகளை கொண்டமைந்துள்ள ஜோர்தான் நாட்டின் பிரதம அமைச்சராக ஹனி அல்– முல்கி காணப்படுகிறார்.
கீழ்சபை, மேல்சபை என வகுக்கப்பட்ட பாராளுமன்றக் கட்டமைப்பொன்று இருக்கின்றபோதிலும் முடிக்குரிய மன்னராக மன்னர் அப்துல்லா – ஐஐ ஆட்சிக்கு அதிபதியாக இருக்கிறார்.
98 வீதத்தை இஸ்லாமியர்களாக கொண்ட இங்கு அரபு மொழியே உத்தியோகபூர்வ மொழியாக இருக்கின்றது. இவர்கள் சுன்னி முஸ்லிம் என்று அழைக்கப்படுகின்றனர்.
2017 ஆம் ஆண்டின் முற்பகுதியின் தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 98 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
34495 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ள இந்நாட்டின் நாணயமானது ஜோர்தான் டினார் என்று அழைக்கப்படுகிறது. எனினும் து.னு.என்பது சுருக்கி அழைக்கும் வழக்கமாக பரவியுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு சென்றால் வாகனங்களை செலுத்துதல் என்பது நினைத்துப்பார்க்க முடியாததாகும். ஏனெனில் அங்கு வலது புறத்து ஒட்டுகையே அமுலில் இருந்து வருகிறது.
விதவிதமானதும் வித்தியாசமானதுமான உணவுகளால் தானோ என்னவோ ஜோர்தானியர்கள் ஆணோ பெண்ணோ சிறுவர்களோ அனைவருமே ஒருவிதமான கவர்ச்சிகொண்ட எழிலோடும் அழகோடும் உலாவருகின்றனர்.
ஆமாம் இவ்வாறு இன்னும் கூறுவதற்கு பல உண்டு. அவைபற்றி கூறுவதற்கு முன்பதாக இந்தக் கட்டுரையை எழுதுவதற்கான பிரதான காரணத்தையும் கூறியாக வேண்டும்.
வருடமொன்றுக்கு சுமார் 50 இலட்சம் உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கின்ற வரலாற்று சிறப்புமிக்க விடயங்களை கொண்டமைந்துள்ள ஜோர்தான் நாட்டுக்கு அண்மையில் சுற்றுலாப் பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம்.
ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவர் அப்துல் லத்தீப் லாபிர் ஏற்பாட்டில் ஜோர்தான் நாட்டின் சுற்றுலாப் பயணத்துறை அதிகாரசபையின் நேரடியானதும் பூரணத்துவமானதுமான அனுசரணையின் கீழ் இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் பௌத்த மதங்களை அடிப்படையாகக் கொண்டு அச்சு இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவாக ஜோர்தானுக்கு சென்றிருந்தோம்.
இலங்கையிலிருந்து நேரடியாக ஜோர்தானுக்கான விமான சேவை இல்லாததால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து முதலில் கட்டாருக்குப் பயணித்தோம்.
இதிலென்ன புதினமெனில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திறக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். அப்படியான நாளில் எந்தவித அலைச்சலும் இல்லாது எமது பயணம் இலகுவாக அமைந்திருந்தது.
கட்டார் விமான நிலையத்தில் சில மணிநேரங்கள் காத்திருக்கும் தேவை ஏற்பட்டிருந்தது. சில மணிநேரங்கள் என்றாலும் மிகக்குறுகிய நேரமே அது. அதற்குள் கட்டார் விமான நிலையத்திலிருந்து இனாமாக கிடைக்கப்பெற்ற வைபை சேவையை பெற்றுக்கொண்ட நாம் அனைவரும் அவரவர் கையடக்கத் தொலைபேசியுடன் சங்கமித்திருந்தோம்.
அதுமாத்திரமின்றி எம்மிடையே சிலரது கைத்தொலைபேசிகள் உயிரிழந்து கிடந்ததால் இனாமாக சார்ஜ் செய்து கொள்ளவும் முடிந்தது. அதற்கான வசதிகளும் அங்கு உள்ளன.
கைத்தொலைபேசியை உற்றுநோக்கி மூழ்கிக்கிடந்த நேரமே அறியாது தலைநிமிர்ந்த போது கட்டார் விமான நிலையத்திலிருந்து ஜோர்தான் பறப்பதற்கான நேரம் நெருங்கியிருந்தது.
அனைவருமே அவசர அவசரமாக இயற்கைத் தேவைகளை முடித்துக் கொண்டு விமான நிலையம் புறப்படுகை தளத்துக்குள் புகுந்து கொண்டோம்.
சுமார் இரண்டு மணித்தியாலங்களும் சில நிமிடங்களும் கடந்து கண் விழிக்கையில் ஜோர்தான் நாட்டின் தலைநகரான அம்மானின் சர்வதேச விமான நிலையத்தில் எமது கட்டார் விமானம் தரையிறங்குவதை உணர்ந்தோம்.
ஒருவாறு வெளியேறு தளத்துக்கு வருகை தந்த போது அங்கு எம்மை வரவேற்பதற்காக இலங்கைக்கான ஜோர்தானியத் தூதுவர் அப்துல் லத்தீப் லாபிர் காத்திருந்தார்.
அவருடன் எமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலாப் பயணத்துறையின் சிறப்புமிக்க வழிகாட்டி ஒருவரும் சுற்றுலாப் பயணத்துறை அலுவலர் ஒருவரும் அவர்களோடு தூதரகத்தில் பணிபுரியும் அரபு நாட்டு பைங்கிளி ஒருவரும் நின்றிருந்தனர்.
எம் அனைவரையும் கட்டியணைத்து கைலாகு கொடுத்து முகர்ந்து வரவேற்ற தூதுவரின் முகம் மலர்ந்து பரவசத்தில் காணப்பட்டதை உணரமுடிந்தது.
சிறிதான அறிமுகத்தின் பின்னர் எமக்காக காத்திருந்த அதிசொகுசு வாகனத்தில் ஏறினோம். சுமார் இரண்டு மணிநேர பயணத்தின் பின்னர் மூவ் பிங்க் எனும் நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்தோம்.
வெளித் தோற்றத்தில் பண்டைக்காலத்து கலாசாரத்தை வடித்து வைத்தால் போலுள்ள இந்த ஹோட்டல் மிகவும் உயர்தரமானதாகவே அமைந்திருக்கிறது.
இலங்கை நேரப்படி நாம் பயணித்த மறுநாள் அதிகாலை 2.00 மணியளவில் எமது இரவு உணவை எடுத்துக் கொண்டோம். ஒதுக்கப்பட்டிருந்த சொகுசு அறையில் சில மணிநேரங்களே நித்திரை கொண்டு விழித்தெழ நேர்ந்தது.
ஏனெனில் மாதக்கணக்கில் ஜோர்தான் நாட்டில் தங்கியிருந்து சுற்றுலா செல்வதற்கான வரலாற்று புகழிடங்கள் இருந்தாலும் வெறும் எட்டு தினங்களில் அநேகமான இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டிய தேவையுடன் எமக்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருந்தது.
சுற்றுலாப் பயணத்தின் முதலாவது நாளில் எமக்கான நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது என்னவென்றால் கடற்குளியலாகும். இது மிகவும் ஆச்சரியம்மிக்கது. அதிசயிக்கத்தக்கது. அதற்கும் காரணம் உண்டு என்பதை எமது வழிகாட்டி மிகத் தெளிவாக எடுத்தியம்பினார்.
அற்புத மருத்துவம் கொண்டதாக அந்த கடற்குளியல் அமையும் என்பதை மிக அழகாக வர்ணித்தார். வருடமொன்றுக்கு 50 இலட்சம் பேர் ஜோர்தானுக்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்வதாக நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.
அவ்வாறு ஜோர்தான் வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் ஆவலில் முதலிடம் கொண்டதுதான் இந்த “னுநயன ளுநய” குளியல். சாக்கடல் என்பது இந்த கடலுக்கு அமைந்துள்ள தமிழ்ப்பெயர்.
இக் கடலானது இஸ்ரேல், பலஸ்தீன் மற்றும் ஜோர்தான் ஆகியா நாடுகளுக்கு சொந்தமாகவும் அமைந்திருக்கிறது. உப்புக்கடல் என்ற சொல்லொன்று தமிழ்த் திரைப்படப்பாடலிலும் வருகிறது.
ஆனாலும் இந்த உப்புக் கடலானது சாதாரண கடலிலும் பன்மடங்கு உப்புத்தன்மையைக் கொண்டிருக்கின்றது. இங்குள்ள விசேடம் என்னவெனில் கறுப்பு நிறமான சேற்றை உடல் முழுதும் பூசிக்கொண்டு சில நிமிடங்கள் கழித்து உப்பு செறிமானம் அதிகரித்த இந்த சாக்கடலில் குளித்தல் வேண்டும்.
மிகமிக அடர்த்தியான நீரை இக்கடல் கொண்டிருப்பதால் பஞ்சணையில் போன்று மிதக்கவும் முடிகிறது. இயற்கை மருத்துவம் இங்குதான் உள்ளது என்று புகழப்படுகிறது. தோல் சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான நோய்களுக்கும் உப்புக்கடல் என்கின்ற இந்த சாக்கடல் குளியல் நிவாரணியாக அமைகின்றதாம்.
நாம் இங்கு குளிப்பதற்கு சென்றிருந்த போது பிரான்ஸ் நாட்டுக்காரர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. அவர்களிடம் சுமாராக பேச்சுக்கொடுத்தபோது தாம் சாக்கடலில் குளிப்பதற்காகவே பிரான்ஸிலிருந்து வருகை தந்ததாக குறிப்பிட்டனர். சாக்கடல் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.
தோல் நோய்களுக்கு இயற்கை நிவாரணியாக விளங்கும் னுநயன ளுநய எந்தவொரு உயிரினமும் வாழ்வதற்கு பொருந்தாததாகும். உப்புத் தன்மை அதிகரித்திருப்பதால் இங்கு மீன்களோ வேறு உயிரினங்களோ இல்லை. சாக்கடல் இறைவனால் அருளப்பட்ட அற்புதமானதொரு அம்சமாகும். இதில் அதிமுக்கிய விடயம் ஒன்றும் மறைந்திருக்கிறது.
இல் குளிப்பதற்கு ஆவல் கொண்டவர்கள் சவரம் செய்துவிட்டு இந்த கடலுக்கு செல்வது கண்டிப்பாக தடை செய்யப்படுகிறது. அதிகரித்த உப்புத்தன்மையும் மேலே கூறப்பட்ட சேறும் சவரம் செய்யப்பட்ட தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகின்ற காரணத்தாலேயே இவ்வாறானதொரு கட்டாய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அறிவுறுத்தவும் படுகிறது.
சாதாரண கடலில் குளித்தாலே தேக சுகம் எனக்கூறப்படுகின்ற போது இயற்கை மருத்துவ குணம் கொண்ட உப்புக்கடலில் குளிப்பதற்கு யாருக்குத்தான் ஆசையிராது? அனைவருமாக அள்ளிப் பூசிக் கொண்ட சேற்றுடன் கடலுக்குள் சங்கமித்தோம்.
உப்புக்கடல் குளியலில் குளிர்ந்திருக்க நேரமோ சீக்கிரமாக கடந்து கொண்டிருந்தது. மறுபுறத்தில் எமது அடுத்த நிகழ்ச்சி நிரலின் படியான பயணத்துக்கு அதிசொகுசு வாகனமும் அதேநேரம் எமக்கான வழிகாட்டி அலுவலரும் மூவ் பிங்க் ஹோட்டலின் வரவேற்புப்பகுதியில் காத்திருந்தனர். எனினும் நேரம் வெகுவாகக் கடந்திருந்தது.
ஜோர்தானின் சுற்றுலாப் பயணத்துறையானது அதன் அபிவிருத்தி கருதி பல மில்லியன் ரூபாவை எமக்காக செலவிட்டே தனது நிகழ்ச்சிநிரலை தயாரித்திருந்தது.
அந்த வகையில் எமது சுற்றுலாப் பயணத்தின் முதலாவது நாளின் இரண்டாவது விஜயம் எல்லாம் வல்ல இறைவனின் ஒரே குமாரனான இயேசுகிறிஸ்து புனித திருமுழுக்கு அருளப்பரிடம் திருமுழுக்குப் பெற்றுக் கொண்ட “ஜீஸஸ் பெப்டிசம் சைட்” எனப்படுகின்ற புனித பூமிக்கான பயணமாக அமைந்திருந்தது.
மயனயடடயள சாக்கடலில் சேற்றுக்குளியல்...ஜோர்தானுக்கான சுற்றுப் பயணத்திப்போது.. - ஜே.ஜி.ஸ்டீபன் மயனயடடயளஎனினும் னுநயன ளுநய குளியலானது அதற்கான நேரத்தைக் குடித்து விட்டதாகக் கூறிய வழிகாட்டி அலுவலர் இறைமகனாம் இயேசுகிறிஸ்து திருமுழுக்கு பெற்ற புனித பூமிக்கான பயணம் இரத்துச் செய்யப்பட்டு விட்டதாகக் கூறிவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் எனது மனம் இடிந்து போனது. எனினும் மனதைத் திடமாக்கிக்கொண்டிருந்தேன்.
இங்குதான் மோசேயின் ஆலயமும் அவரது ஞாபகார்த்த படிகக் கல்லும் அங்குதான் காணப்படுகிறது. பச்சைப்பசேலென வளர்ந்து காட்சியளித்த ஒலிவ மரத்து அழகை ரசித்துக் கொண்டிருந்த அந்த புனித பூமியின் புனிதத்துவத்தை
மோசேயினால் அழைத்து வரப்பட்ட மக்கள் சுதந்தரிகளாக வாழக்கூடிய நிலப்பரப்பினைக் காட்டிய தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு வாக்களித்தபடி இஸ்ரவேல் ஜனத்தாருக்கான சுதந்திர தேசத்தை காண்பித்தேன் என்று மோசேக்கு கூறுகிறார், அத்துடன் மக்கள் அங்கு செல்கின்ற போதிலும் உன்னால் அங்கு செல்ல முடியாது என்றும் மோசேயிடம் கூறுகின்றார்.
தேவனின் கட்டளைப்படி ஒழுகிவரும் மோசே தேவனின் இறுதிக்கட்டளையையும் ஏற்கிறார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் தனது ஊழியக்காரனான யோசுவாவை அழைத்து தேவனின் கட்டளையை விளக்கி, மோசே தனது மேலாடையையும் அற்புதக் கோலையும் அவரிடம் ஒப்படைக்கின்றார்
பரிசுத்த வேதாகமத்திலோ அல்லது புனித குர் ஆனிலோ கூறப்பட்டுள்ளவாறு இறைவனால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் அல்லது முற்காலத்தையும் பிற்காலத்தையும் அறிந்த விவேகமும் ஞானமும் நிறைந்தவர்களில் இறைவாக்கினர் மோசஸ் தனியானதும் மகத்துவம் மிக்கதுமான இடத்தைப் பிடித்திருக்கிறார்.
மோசஸ் எனப்படுபவர் இறைவனுக்குப் பாத்திரமானவர் மாத்திரமல்லாது தேவனோடு பேசுபவராகவும் திகழ்ந்தார்.
அத்தகைய இறை ஆசி நிறைந்த இறைவாக்கினரின் இறுதிக் காலக்கட்டத்தின் புகழிடமே ஜோர்தானின் நேபோ எனப்படுகின்ற மலைத் தொடராகும்.
இந்த புனிதம் மிக்க மலையானது ஜோர்தானின் தலை நகரம் அம்மானிலிருந்து வெறும் 47 நிமிட பயணத்துக்குள் அடங்கியிருக்கின்றது.
மோசேயின் யாத்திரை முடிந்து யோசுவா என்பவரின் பயணம் ஆரம்பிப்பதும் இந்த நேபோ மலைத் தொடரிலேயே ஆகும். இது எரிக்கோவுக்கு எதிரே அமைந்துள்ள மலையாகும்.
ஜோர்தானுக்கான சற்றுலாப்பயணத்தின் மற்றுமொரு அம்சமாக மோசேயின் மலைக்கான எமது பயணம் அமைந்திருந்தது, எங்கும் ஒலிவ மரங்களால் அலங்கரிக்கப்பட்டாற்போல் காட்சிதரும் அந்த மலைத்தொடரில் ஜில்லென வீசும் குளிர் காற்றையும் கிழித்துக்கொண்டு முன்னேறினோம்,
இந்த புனிதம் மிக்கதான நேபோ மலைபற்றி பேசும் போதும் அந்த மலையில் வாசம் செய்த மோசே என்பவரது இறுதிக் காலம் குறித்து சிந்திக்கும்போதும் மெய்சிலிர்க்கும். அந்த வகையில் இறைவாக்கினர்மோசேயைப் பற்றி சற்று பார்க்கலாமே.
இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட உலகில் ஆதாம் என்பவர் முதல் மனிதனாகவும் ஏவாள் என்பவள் முதல் மனுஷியாகவும் அறியப்படுகின்றனர்.
உலகம் சிருஷ்டிக்கப்பட்டதன் பின்னர் பல்கிப் பெருகிச் சென்ற மனித இனமானது முறை தவறி, வழிதவறி வாழத் தொடங்கியது.
இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதனும் முதல் மனுஷியும் பாம்பாக வந்த சாத்தானால் வஞ்சிக்கப்பட்டதன் விளைவாக மனிதன் பாவியாகினான், அழிவுகளை நாடினான், குரோதங்களையும் வைராக்கியங்களையும் தன்னகத்தே ஆழப் பதிந்துக் கொண்டவனானான்.
இவ்வாறு வழி தவறிய மனிதன் மீட்டெடுக்கப்படவேண்டும் என்று சித்தம் கொண்ட தேவன் தனது தூதுவர்களாக ஏராளமான தீர்க்க தரிசிகளை உலகிற்கு அனுப்பி வைத்தார்.
அவ்வாறு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இறைவாக்கினர் மோசஸ். இவர் சீனாய் மலையில் எரியும் முட்செடியின் நடுவே தோன்றி தேவனோடு பேசியவர்தான் இந்த மோசே,,
எகிப்து நாட்டின் அடிமைகளாக நடத்தப்பட்ட இஸ்ராயேல் ஜனத்தாரை மீட்டெடுக்க வேண்டும் என்பதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் அவர்களை வாழ வைக்க வேண்டும் என்பதும் இறைவனது சித்தமாகும்.
இந்த சித்தம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைதூதர்கள் அனுப்பப்பட்டனர்.
எகிப்திலிருந்து அடிமை ஜனங்களை மீட்டெடுத்து வழி நடத்தவும் இறைவன் சித்தமாகவுள்ள தேசத்தில் அவர்கள் சுதந்தரிகளாக வாழவும் சித்தம் கொண்டிருந்த காரணத்தால் அன்றைய மீட்பனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மோசேக்கு இறைவன் துணையாக இருந்தார்.
எகிப்தில் அடிமைகளாய் இருந்தவர்களை மீட்டுவருவதென்பது இலகுவான காரியமல்ல.
எகிப்திய இராஜ்ஜியம் விட்டு அங்கிருந்த அடிமை மக்கள் விடுவிப்பதற்கு அப்போதையை மன்னன் இணங்கியிருக்கவில்லை.
இதனால் மன்னனின் மனமாற்றத்துக்காக இறைவன் அற்புதங்களை நிகழ்த்தவும் அதேநேரம் கொடிய நோய்களை பரவவும் செய்திருந்தார்.
அவ்வப்போது அடிமைகளை விடுவிப்பது தொடர்பில் உணர்த்தியும் வந்தார். இவ்வாறு வேதாகமத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ள மோசேயின் வரலாறு வெகுவாக வியாபித்து நிற்கிறது.
இறைவனால் அருளப்பட்ட கோல் ஒன்றே மோசேயின் ஆயுதமாக இருந்தது. அந்த கோலின் துணை கொண்டே எகிப்திய மன்னனை எதிர்கொண்டு இஸ்ரவேல் ஜனத்தாரை மீட்கலானார் மோசே, பல சவால்கள், சங்கடங்கள், இன்னல்கள், துன்பங்கள், எதிர்ப்புகள், இழப்புகளுக்கு மத்தியிலும் தேவனின் கட்டளையின் பிரகாரம் நீதி நெறி தவறாதவராக செயற்பட்ட மோசஸ் எகிப்திய அடிமைகளை அழைத்துக் கொண்டு எகிப்திலிருந்து புறப்படுகிறார்.
இவ்வாறு தனக்கு அருளப்பட்ட அதிசய அற்புத கோலை மட்டுமே துணையாகக் கொண்டிருந்த மோசஸ் மக்களை அழைத்துச் செல்கையில் செங்கடல் தடையாக அமைந்தது.
பின்னால் எகிப்திய இராஜ்ஜியப் படைகள் மோசேயின் மீட்புப் பணியைத் தடுப்பதற்கும், அதேநேரம் அடிமைகள் தப்பிச் சென்றுவிடாது முடக்குவதற்கும் வேகமாக விரைந்து கொண்டிருந்தன.
இந்த சந்தர்ப்பத்தில் தேவனின் அற்புதம் நிகழ்த்தப்படுகிறது. மோசேயுடன் பேசிய தேவன் மக்களை வழிநடத்துவதற்கும் அவர்களைப் பாதுகாப்பதற்கும் செங்கடலைப் பிரித்து வழிசமைப்பதாய் உறுதியளித்தார். தேவனின் சித்தம் மோசேயினால் நிறைவேறியது.
தேவன் கூறியவாறு மோசே செங்கடலை நோக்கி தனது அற்புதக் கோலை உயர்த்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து நின்றது. அதிசயம் ஆச்சரியம் பொங்கி நின்ற சமயத்தில் அடிமை மக்கள் வாய்பிளந்து நின்றனர்.
செங்கடல் பிரிந்து அமையப்பெற்றிருந்த தரை வழியாக நடக்குமாறு இடப்பட்ட மோசேயின் கட்டளையை மக்கள் ஏற்றனர்.
செங்கடலும் கடக்கப்பட்டது. இவ்வாறு செங்கடலைத் கடந்த மக்கள் ஜோர்தானை அடைந்தனர்.
நாடோடிகளாய் திரிந்து கொண்டிருந்த மக்களை பேணிக்காத்தது இறைவனே என்பதும் அவரது தூதனே மோசஸ் என்பது மக்களால் அப்போதுதான் உணரப்படத் தொடங்கியது.
செங்கடல் கடக்கப்பட்டதன் பின்னர் எகிப்திய அடிமைகள் சுதந்திர மனிதர்களானாலும் தேவனால் எண்ணம் கொண்ட தேசத்தை அடைவதற்கு இன்னும் காலங்கள் எடுக்கப்பட்டன.
மோசஸின் இறுதிக் காலம் நெருங்கியிருந்தது. எனினும் கண்பார்வை குன்றாமலும், உடல் பலம் குறையாமலும் காணப்பட்ட மோசே அப்போது 120 வயதுகளை எட்டியிருந்தார் என்று வேதாகமம் கூறுகிறது.
மோசேயின் ஒவ்வொரு நகர்வும் இறைவனால் செயற்படுத்தப்படுகிறது என்பதை அவரது ஊழியக்காரனாக இருந்த யோசுவா நன்கு அறிந்திருந்தார். மோசேயின் மனதை வென்றிருந்த யோசுவா மோசேயின் அடுத்த ஸ்தானத்தில் பார்க்கப்பட்டார்.
மோசே எனும் இறைவாக்கினரை கிறிஸ்தவர்கள் மோசஸ் என்று அழைக்கும் அதேவேளை இஸ்லாமியர்கள் அவரை மூசா நபி என்று அழைக்கின்றனர், அதேபோன்று கிறிஸ்தவர்களால் யோசுவா என்று அழைக்கப்படுகின்றவர் இஸ்லாமியர்களால் யூசுப் என்று அழைக்கப்படுகின்றார்,
ஜோர்தான் நாட்டிலே அம்மான் எனும் தலை நகருக்கு மிக அருகில் “ஆடீருசூகூ சூநுக்ஷடீ’’ என்று புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நேபோவில் மோசேயின் வரலாறு கூறும் நினைவுகள் பதியப்பட்டுள்ளன.
செங்கடல் வழியாக அழைத்துவரப்பட்ட மக்களை நேபோவின் அடிவாரத்திலே இருக்கச் செய்த மோசேக்கு தேவனின் அழைப்பு வருகிறது. நேபோவின் உச்சிக்கு வருமாறு மோசே தேவனால் அழைக்கப்படுகிறார்.
இந்த நேபோ பர்வதமானது எரிக்கோவுக்கு எதிரே அமைந்து காணப்படுகிறது. நேபோவின் உச்சிக்கு அழைக்கப்பட்ட மோசேக்கு அவரால் அழைத்து வரப்பட்ட மக்கள் சுதந்தரிகளாக வாழ்வதற்கான தேசங்களையும் நிலப்பரப்பினையும் காண்பித்ததாக வேதாகமத்தில் கூறுவதைக் காண முடியும்.
மோசேயினால் அழைத்து வரப்பட்ட மக்கள் சுதந்தரிகளாக வாழக்கூடிய நிலப்பரப்பினைக் காட்டிய தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு வாக்களித்தபடி இஸ்ரவேல் ஜனத்தாருக்கான சுதந்திர தேசத்தை காண்பித்தேன் என்று மோசேக்கு கூறுகிறார், அத்துடன் மக்கள் அங்கு செல்கின்ற போதிலும் உன்னால் அங்கு செல்ல முடியாது என்றும் மோசேயிடம் கூறுகின்றார்.
தேவனின் கட்டளைப்படி ஒழுகிவரும் மோசே தேவனின் இறுதிக்கட்டளையும் ஏற்கிறார். அந்தச் சந்தர்ப்பத்தில் தனது ஊழியக்காரனான யோசுவாவை அழைத்து தேவனின் கட்டளையை விளக்கி, மோசே தனது மேலாடையையும் அற்புதக் கோலையும் அவரிடம் ஒப்படைக்கின்றார்.
இனியும் நமது மக்களை நீயே வழிநடத்துவாய். இறைவன் அளித்துள்ள தேசத்துக்கு மக்களை அழைத்துச் செல்வாய் என்று பணிக்கவே, இது எப்படி என்னால் சாத்தியமாகும் என்று யோசுவா மோசேயிடம் கேட்கிறார்.
எனினும் தேவன் கட்டளையிடுவார் அவரது விருப்பத்தையும் எண்ணங்களையும் நிறைவேற்று என்று மோசே யோசுவாவுக்கு உறுதியாகக் கூறினார்.
இதன் பின்னர் நேபோ மலைத் தொடரில் மோசேயின் இறுதிக்காலமும் நிறைவடைகிறது என்றும் இந்நாள் வரை மோசேயின் உடல் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறை என்று எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மோசேயின் மேலாடையையும் அவரது அற்புதக்கோலையும், தாங்கியவாறு நோபோ மலையிலிருந்து இறங்கி வந்த யோசுவாவை கண்ட மக்கள் மோசேயின் இறுதிக்காலம் நிறைவேறிவிட்டதை உணர்ந்தவர்களாய் அழுது புலம்பினர்.
துக்கம் தாளாது துவண்டு போயினர். இன்பத்திலும் துன்பத்திலும் பசியிலும் பட்டினியிலும் துணையாக நின்றிருந்த மோசேயின் பிரிவு அந்த மக்களை வெகுவாகப் பாதித்தது.
எனினும் தேவனின் சித்தம் என்னவென்றும் மோசேயின் விருப்பம் எதுவென்றும் மக்களுக்கு உணர்த்துவதற்கு யோசுவா கடமைப்பட்டிருந்தார். இதனையடுத்து மக்கள் யோசுவாவின் வார்த்தைகளுக்கு செவிமடுத்தனர்.
பரிசுத்த தளமாகவும் அதேநேரம் சுற்றுலாப் பயணிகளின் தளமாகவும் ஜோர்தானிய அரசினால் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நேபோ மலையானது ஒலிவ மரங்களால் சூழப்பட்டிருக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஒலிவமரம் நிறைந்து காணப்படுகிறது.
இங்கு மோசேயின் ஞாபகார்த்தமாக நினைவுக்கல் ஒன்று அமையப்பெற்றுள்ளது. அதேபோன்று மிகவும் அழகான நினைவுத் தேவாலயமும் உள்ளது.
மோசேயின் காலத்தில் அமைக்கப்பட்ட அடித்தளங்கள் இன்றும் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெற்ற நிகழ்வுகளை நூல் வடிவில் படிப்பதற்கும் அவ்விடங்களில் நின்று அனுபவிப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.
மோசேயின் இறுதிக்கால வரலாறுகள் பாதுகாக்கப்படுகின்ற இந்த புனித பூமிக்கு தினமும் உல்லாசப் பயணிகளின் வருகையானது அமைந்திருக்கிறது.
இங்கு வருகை தந்த பரிசுத்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவரது ஞாபகார்த்தமாக ஒலிவமரக் கன்று ஒன்றையும் நாட்டி வைத்துள்ளார். மோசேயின் காலப் பதிவானது நேபோ மலையில் ஒவ்வொரு விடயங்களும் மிகவும் அருமையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தேவனின் தூதர் அதுவும் தேவனோடு உரையாடும் வல்லமையைப் பெற்றிருந்த தூதனின் வரலாறும் காலடியும் பதிந்திருந்த நேபோ மலையில் அதிசயங்கள் அறிந்து, பார்த்து, அனுபவித்து முடிய அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் இரண்டு மணியாகியிருந்தது.
இதன்படி புனித பூமியான நேபோவிலிருந்து வெளியாகி மதிய உணவுக்காக நியமிக்கப்பட்ட விடுதிக்குள் சங்கமித்தோம். அங்கு அறுசுவையோடு உணவு அயிட்டங்கள் காத்திருந்தன.
இவ்வாறு அன்றைய நாள் ஓடியது. இன்று நினைத்தாலும் நேபோ மலையில் நின்று நிழலாடுவது போல் ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.
ஜோர்தானுக்கான உல்லாசப் பயணிகளாக அல்லது வேலை வாய்ப்புக்காக இல்லாவிட்டால் வேறு என்ன காரணங்களாலும் சரி அங்கு பயணித்தால் இத்தகைய வரலாற்றிடங்களையும் புனிதத் தலங்களின் வரலாறுகளையும் அறிவது அவசியமானது என்றேபடுகிறது.
ஜோர்தான் உல்லாசப் பயணத்துறை ஏற்பாடு செய்திருந்த வழிகாட்டியானவர் மோசேயின் வரலாறுகளை உள்ளது உள்ளவாறே விளக்கினார்.
தனக்கே உரிய பாணியில் அவரது விளக்கமான தனியான ஸ்டைலாகவும் அது இருந்தது. சரி எமது பயணத்தின் அடுத்த கட்ட சுவாரஸ்யத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.
ஜே.ஜி.டீபன்
ஜே.ஜி.டீபன்தனக்கே உரிய பாணியில் அவரது விளக்கமான தனியான ஸ்டைலாகவும் அது இருந்தது. சரி எமது பயணத்தின் அடுத்த கட்ட சுவாரஸ்யத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.ஜோர்தான் உல்லாசப் பயணத்துறை ஏற்பாடு செய்திருந்த வழிகாட்டியானவர் மோசேயின் வரலாறுகளை உள்ளது உள்ளவாறே விளக்கினார்.ஜோர்தானுக்கான உல்லாசப் பயணிகளாக அல்லது வேலை வாய்ப்புக்காக இல்லாவிட்டால் வேறு என்ன காரணங்களாலும் சரி அங்கு பயணித்தால் இத்தகைய வரலாற்றிடங்களையும் புனிதத் தலங்களின் வரலாறுகளையும் அறிவது அவசியமானது என்றேபடுகிறது.இவ்வாறு அன்றைய நாள் ஓடியது. இன்று நினைத்தாலும் நேபோ மலையில் நின்று நிழலாடுவது போல் ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.இதன்படி புனித பூமியான நேபோவிலிருந்து வெளியாகி மதிய உணவுக்காக நியமிக்கப்பட்ட விடுதிக்குள் சங்கமித்தோம். அங்கு அறுசுவையோடு உணவு அயிட்டங்கள் காத்திருந்தன.தேவனின் தூதர் அதுவும் தேவனோடு உரையாடும் வல்லமையைப் பெற்றிருந்த தூதனின் வரலாறும் காலடியும் பதிந்திருந்த நேபோ மலையில் அதிசயங்கள் அறிந்து, பார்த்து, அனுபவித்து முடிய அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் இரண்டு மணியாகியிருந்தது.இங்கு வருகை தந்த பரிசுத்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவரது ஞாபகார்த்தமாக ஒலிவமரக் கன்று ஒன்றையும் நாட்டி வைத்துள்ளார். மோசேயின் காலப் பதிவானது நேபோ மலையில் ஒவ்வொரு விடயங்களும் மிகவும் அருமையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.மோசேயின் இறுதிக்கால வரலாறுகள் பாதுகாக்கப்படுகின்ற இந்த புனித பூமிக்கு தினமும் உல்லாசப் பயணிகளின் வருகையானது அமைந்திருக்கிறது.மோசேயின் காலத்தில் அமைக்கப்பட்ட அடித்தளங்கள் இன்றும் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெற்ற நிகழ்வுகளை நூல் வடிவில் படிப்பதற்கும் அவ்விடங்களில் நின்று அனுபவிப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.இங்கு மோசேயின் ஞாபகார்த்தமாக நினைவுக்கல் ஒன்று அமையப்பெற்றுள்ளது. அதேபோன்று மிகவும் அழகான நினைவுத் தேவாலயமும் உள்ளது.பரிசுத்த தளமாகவும் அதேநேரம் சுற்றுலாப் பயணிகளின் தளமாகவும் ஜோர்தானிய அரசினால் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நேபோ மலையானது ஒலிவ மரங்களால் சூழப்பட்டிருக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஒலிவமரம் நிறைந்து காணப்படுகிறது.எனினும் தேவனின் சித்தம் என்னவென்றும் மோசேயின் விருப்பம் எதுவென்றும் மக்களுக்கு உணர்த்துவதற்கு யோசுவா கடமைப்பட்டிருந்தார். இதனையடுத்து மக்கள் யோசுவாவின் வார்த்தைகளுக்கு செவிமடுத்தனர்.துக்கம் தாளாது துவண்டு போயினர். இன்பத்திலும் துன்பத்திலும் பசியிலும் பட்டினியிலும் துணையாக நின்றிருந்த மோசேயின் பிரிவு அந்த மக்களை வெகுவாகப் பாதித்தது.மோசேயின் மேலாடையையும் அவரது அற்புதக்கோலையும், தாங்கியவாறு நோபோ மலையிலிருந்து இறங்கி வந்த யோசுவாவை கண்ட மக்கள் மோசேயின் இறுதிக்காலம் நிறைவேறிவிட்டதை உணர்ந்தவர்களாய் அழுது புலம்பினர்.இதன் பின்னர் நேபோ மலைத் தொடரில் மோசேயின் இறுதிக்காலமும் நிறைவடைகிறது என்றும் இந்நாள் வரை மோசேயின் உடல் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறை என்று எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.எனினும் தேவன் கட்டளையிடுவார் அவரது விருப்பத்தையும் எண்ணங்களையும் நிறைவேற்று என்று மோசே யோசுவாவுக்கு உறுதியாகக் கூறினார்.இனியும் நமது மக்களை நீயே வழிநடத்துவாய். இறைவன