பேய் ஓட்டும் நபரை தேடி அலைகிறார் ஸ்பெயின்
கவுன்சிலர்
20 Feb,2017
ஸ்பெயின் நாட்டில் உள்ள மாநகர கவுன்சில் கட்டடம் ஒன்றில் பேய் இருப்பதாக பரவலாகக் கூறப்படுகிறது. இதனால் கவுன்சிலரே ஆடிப்போயுள்ளதாக கூறப்படுகிறது. மாநகர கவுன்சிலர் ஒருநாள் இரவு அங்கே சென்றவேளை திடீரென இனம் தெரியாத ஒருவகையான குளிரில் நடுங்கியுள்ளார். உள்ளே வெப்பம் அதிகமாக இருந்தாலும். ஒரு குறித்த இடத்தில் திடீரென கடும் குளிர் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கே சில வினோதமான சத்தங்கள் கேட்டுள்ளது.
இதனால் பதறிய கவுன்சிலர் அங்குள்ள CCTV கமராவை அடுத்த நாள் காலையில் பார்த்தவேளை மிரண்டு போய் விட்டார். அங்கே குறித்த பகுதியில் ஒரு சிறுமியின் உருவம் மங்கலாக காணப்படுகிறது. ஆனால் அவ்விடத்தில் அவர் நின்றவேளை அதனை காணவில்லை என்றும். ஆனால் குறித்த அவ்விடத்தில் தான் ஒருவகையான குளிர் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதேவேளை கவுன்சிலர் பேய் ஓட்டக்கூடிய பாதிரியார் ஒருவர் தேவை என்று கூட அரசாங்க இணையத்தில் அறிவித்தல் விடுத்துள்ளமை மேலும் பீதியை கிளப்பியுள்ளது என்கிறார்கள்.