ஜெயலலிதாவின் வேலைக்காரியா சசிகலா ..? வைரலாக பரவும் புகைப்படம் உள்ளே
01 Feb,2017
ஜெயலலிதாவின் வேலைக்காரியா சசிகலா ..? வைரலாக பரவும் புகைப்படம் உள்ளே
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தபோதும், தற்போது அதையும் தாண்டி சசிகலா மற்றும் தீபா பற்றிய பேச்சுக்களே அதிகம் வெளியாகின்றன.
குறிப்பாக ஜெயலலிதாவின் சக தோழியான அ.தி.மு.க பொது செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவிற்கு பணிப்பெண்ணாக வேலை செய்துள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகின்றது.
ஜெயலலிதா எங்கு சென்றாலும் கூடவே சென்று அவருக்கு பணிவிடை செய்யும் பெண்ணாகத்தான் சசிகலா ஆரம்பத்தில் இருந்தார் என்றே இந்த அரிய புகைப்படம் கூறுகின்றது.
தேநீர் பிளாஸ்க், பிஸ்கட் ,மேக்கப் கூடை , பழங்கள், தண்ணீர், போன்றவற்றை சுமந்து செல்வது, சாப்பாடு எடுத்துக் கொடுப்பது போன்ற காரியங்களும்,
ஜெயலலிதா வீட்டு வாசலில் அமர்ந்து அவர் வெளியே வரும் போது பிரச்சார கசட்டுகளை ஆயத்தம் செய்து அவருக்கு கொடுப்பது, அவருடன் காரில் செல்வது போன்ற வேலைகளைத்தான் சசிகலா செய்து வந்தார் என தீபா தரப்பினரும் கூறிவருகின்றார்கள்.
ஆனால் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சொந்தம் கொண்டாடுவது அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது