கற்பழிக்க முயன்றவருக்கு தக்க தண்டனை வழங்கிய இளம் பெண்!
14 Oct,2016

கற்பழிக்க முயன்றவருக்கு தக்க தண்டனை வழங்கிய இளம் பெண்!
பெண் ஒருவர் ஆண் ஒருவரை காலணியால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.குறித்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம், ஹபூரில் இடம்பெற்றுள்ளது. ரவிந்திர குமார் என்ற 46 வயதான நபர், 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளனர். பஞ்சாயத்தின் முடிவில் குற்றவாளியை காலணியால் அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் காலணியை கலற்றி குற்றவாளியை தர்ம அடி அடித்துள்ளார். குறித்த சம்பவத்தை ஒருவர் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர்.ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளிக்க மறுத்துள்ளனர். மேலும், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என கூறி பொலிசாரை திருப்பி அனுப்பியுள்ளனர்.