விமான பணிப் பெண்ணை ஹொட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த அரசு அதிகாரி!
14 Oct,2016

விமான பணிப் பெண்ணை ஹொட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த அரசுஅதிகாரி!
விமான பணிப் பெண்ணை ஹொட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அரசு அதிகாரி மீது புகார் செய்யப்பட்டுள்ளது.டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் விமானப் பணிப் பெண்ணாகப் பணியாற்றி வருகிறார். இவரை காப்புரிமை பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர் சம்பவத்தன்று சில வேலைவாய்ப்புப் படிவங்களை பூர்த்தி செய்வதற்காக தென்மேற்கு டெல்லி, துவாரகாவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹொட்டலுக்கு வருமாறு அழைத்தாராம்.இதையடுத்து அந்த ஹொட்டலுக்கு சென்ற அப்பெண்ணை தனது அறைக்கு வரவழைத்து தகாத முறையில் தொட்டு பாலியல் இச்சைக்கு இணங்குமாறு அந்த அதிகாரி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே, அவரை தாக்கி பின்னர் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்தார். இதையடுத்து, அப்பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.