ஆஸ்திரேலியாவில் பயங்கரம் இங்கிலாந்து பெண் குத்திக்கொலை பிரான்சு வாலிபர் கைது
25 Aug,2016

ஆஸ்திரேலியாவில் பயங்கரம் இங்கிலாந்து பெண் குத்திக்கொலை பிரான்சு வாலிபர் கைது
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தின் டவுன்ஸ்வில்லே நகரில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அந்த ஓட்டலில் தங்கியிருந்த பிரான்சு நாட்டை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் தனது அறையை விட்டு வெளியே வந்தார். பின்னர் அவர் தன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும் இங்கிலாந்தை சேர்ந்த 30 வயது வாலிபரும், மற்றொருவரும் படுகாயம் அடைந்தனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று பிரான்சு நாட்டு வாலிபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் யார்? எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
படுகாயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் இங்கிலாந்து வாலிபர் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலின் போது ஒரு நாயும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.