கொக்கோ தேங்காய் பர்ஃபிதேவையான பொருட்கள்துருவிய தேங்காய் –1 கப் கொக்கோ –-1 கப் பால் –1 கப் பால் பவுடர் –1 மே.கசர்க்கரை–1 கப் ஏலக்காய் –- ண தே.கநெய் – 4மே.க செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 மே.க நெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.பின் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கொக்கோ மற்றும் 1 கப் சர்க்கரை சேர்த்து கிளறி, பின் வதக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்த, பால் ஊற்றி குறைவான தீயில் கிளறி விட வேண்டும். பின்பு அதில் ஏலக்காய் பொடி மற்றும் 1 மே.க பால் பவுடர் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை கிளற வேண்டும்.அதற்குள் ஒரு தட்டில் நெய் தடவிக்கொள்ள வேண்டும்.பின் தேங்காய் கலவையை தட்டில் பரப்பி, பின் கத்தி கொண்டு சதுரங்களாக வெட்டி, குளிர வைத்தால், கொக்கோ தேங்காய் பர்ஃபி ரெடி.