கே.பியுடனான இப்பேட்டி மீள்பிரசுரம் .

26 Apr,2016
 

இலங்கை இறுதிப் போரில் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின் முன்னாள் சர்வதேச தொடர்பாளராக இருந்த கேபி என்ற குமரன் பத்மநாதன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

மிகவும் பிரபலமான ஊடகவியலாளர் டி.எஸ்.பி ஜெயராஜ் அவர்கள் 2010 இல் கேபி ஐ பேட்டி எடுத்திருந்தார். அண்மையில்  ஐ.நாவினால் தயாரிக்கப்பட்டு ஊடகங்களுக்கு கசிந்துள்ள ஐ.நாவின் இரகசிய அறிக்கை அம்பலமாகியதன் பின்னர், மீண்டும் டி.எஸ்.பி ஜெயராஜ் கேபியை சந்தித்து இன்னுமொரு பேட்டி எடுக்கலாமா, ஒத்துழைப்பு தருவீர்களா என கேட்டதும்,

கேபி மிகவும் உற்சாகத்தோடு, 2010 இல் தந்த தகவல்களை விட விபரமாக பேட்டி தருகின்றேன் எனக்கூறி பல தகவல்களைக் கூறியிருக்கின்றார்.

ஜெயராஜ்: பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்த எரிக் சொல்ஹெய்ம், போரின் இறுதியில் ஐநா உதவியுடனான யுத்த நிறுத்தத்துக்கு முயற்சியை மேற்கொண்டதாகவும், அதை புலிகளின் தலைவர் தடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான உருத்திரகுமாரன் சொல்ஹெய்மின் கருத்தை மறுத்திருந்தார். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

கேபி: எரிக் சொல்ஹெய்மின் கருத்து 100% உண்மையானது. அவர் மேற்கொண்ட முயற்சிகள் விடுதலைப் புலிகளின் தலைவரால் தடுக்கப்பட்டது. அப்படியான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் பேரழிவைத் தவிர்த்திருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல தளபதிகள் இன்று உயிரோடு இருந்திருக்க முடியும்.

ஜெயராஜ்: அப்படியெனில் ஏன் அப்படி ஒரு முயற்சியே நடைபெறவில்லை என்று ஏன் உருத்திரகுமாரன் சொல்ல வேண்டும்?
 
கேபி: உருத்திரகுமாரனைப் பொறுத்தவரையில் 2009- ஆண்டு பெப்ரவரியில் நிகழ்ந்ததை பற்றி பேசுகிறார். பெப்ரவரிக்கு பின்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.

ஜெயராஜ்: 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டீர்கள்.. நீங்களும் யுத்த நிறுத்தம் தொடர்பான முயற்சிகளில் பங்கெடுத்தவர்.. அப்போது என்ன நடந்தது என்பதை விவரிக்க முடியுமா?


கேபி: நிச்சயமாகஸ 2008-ம் ஆண்டிலேயே புலிகளின் கதை முடிவுக்கு வருகிறது என்பதை பார்வையாளர்கள் பலரும் ஊகித்திருந்தனர். புலிகளின் பதில் தாக்குலுக்கு அப்பாலும் இலங்கை ராணுவம் மெதுவாக ஆனால் நம்பிக்கையோடு முன்னேறிக் கொண்டிருந்தது. ஏ-9 நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஏ-9 பாதையின் கிழக்குப் பகுதிக்கு ராணுவம் முன்னேறுவதற்கு முன்பாக ஒரு கெளரவமான யுத்த நிறுத்தத்துக்கு வாய்ப்பும் இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையும் அதன் வெளிநாட்டு அமைப்புகளும் இராணுவத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளை புரிந்து செயற்படவில்லை.

2003-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் நான் விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டேன். ஆனால் தொலைவில் இருந்து கள நிலைமைகளை பார்த்து வந்தேன். 2008-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் என்னுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்க தலைமை தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது.

அப்போது புலிகளின் தலைவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க யுத்த நிறுத்தம் அவசியம் என்பதை நான் வலியுறுத்தினேன். 2008-ம் ஆண்டு டிசம்பரில் பிரபாகரன் என்னை சர்வதேச பொறுப்பாளராக நியமிக்க ஒப்புக்கொண்டார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரவும் ஒப்புக் கொண்டார்.

2008-ம் ஆண்டு டிசம்பரில் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தாலும் யுத்த நிறுத்தத்தை நோக்கிய நகர்வுகள் புலிகள் தரப்பில் மிகவும் மெதுவாகவே இருந்தன. புத்தாண்டு பிறந்தபோது ராணுவமானது பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றை கைப்பற்றியிருந்தது.

அப்போதுதான் விடுதலைப் புலிகளின் தலைமை கவலைகொண்டு அதன் வெளிநாட்டு பிரிவுகளை என் தலைமையின் கீழ் இயங்கவும் உத்தரவிட்டது. எனக்கு ஆதரவு தரவும் சொன்னது. ஆனால் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த காஸ்ட்ரோ, தமது பிரதிநிதி நெடியவன் மூலமாக எனது செயல்பாடுகளை சீர்குலைத்தார். போதுமான பண உதவி செய்யப்படவில்லை. இருந்தபோதும் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தேன். சர்வதேச சமூகத்தின் முக்கிய நபர்களுடன் இந்த விவகாரத்துக்காக தொடர்பு கொண்டிருந்தேன்.

ஜெயராஜ்: எப்படி தொடர்பு கொண்டிருந்தீர்கள்? நேரடியாக தொடர்பு வைத்திருந்தீர்களா?

கேபி:  நிறைய கடிதங்கள், ஃபக்ஸ்கள், மின் அஞ்சல்கள் வழியாக தொடர்பு கொண்டிருந்தேன். யாரையெல்லாம் எப்படி தொடர்பு கொள்ள முடியுமோ அதை மேற்கொண்டேன். சிலரை நேரடியாகவும் தொடர்பு கொண்டேன். சில நேரங்களில் எனது பிரதிநிதிகள் சந்தித்தனர்.

ஜெயராஜ்: இதில் நார்வேயின் பங்கு என்ன?

கேபி: நோர்வே யுத்த நிறுத்தம் மற்றும் அமைதி முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நாடு. நோர்வே மட்டும் குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள பணியை ஆற்றியிருக்காவிட்டால் போர் நீண்டு இன்னும் மிக மோசமாக இருந்திருக்கும். ஆகக் கூடுமானவரையில் உயிரிழப்புகளைத் தடுக்கவே நோர்வே விரும்பியது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பினர்.

ஜெயராஜ்: அதற்காக நோர்வே என்ன செய்தது?

கேபி: நோர்வே எரிக் சொல்ஹெய்ம் என்னுடன் தொடர்பில் இருந்தார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு சந்திப்பை நடத்த நாங்கள் முடிவு செய்தோம். 2009-ம் ஆண்டு பெப்ரவரி இறுதி வாரத்தில் இப்படியான ஒரு ரகசிய சந்திப்பு நடைபெற்றது.

ஜெயராஜ்: அந்த சந்திப்பு எங்கு நடைபெற்றது?

கேபி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஹில்டன் ஹோட்டைல் நடைபெற்றது. 2 நாட்கள் அந்த கூட்டம் நடந்தது.

ஜெயராஜ்: யார் யாரெல்லா கலந்து கொண்டனர்? எரிக் சொல்ஹெய்ம் கலந்து கொண்டாரா?

கேபி: இல்லைஸ நோர்வே அமைச்சராக அவர் இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை. நோர்வேயின் முக்கிய அதிகாரி, அவரது பிரதிநிதியாக வந்தார். மேலும் இரு நோர்வே அதிகாரிகள் ஒஸ்லோவில் இருந்து வந்திருந்தார். இலங்கைக்கான நோர்வே தூதரும் கலந்து கொண்டார்.

ஜெயராஜ்: இலங்கைக்கான நோர்வே தூதுவரா? யார் அவர்?

கேபி: கொழும்பில் அப்போது நோர்வே தூதராக இருந்த ஹட்ரெம். இப்பொழுது அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார் என நினைக்கிறேன்.

ஜெயராஜ்: விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக யார் கலந்து கொண்டது?

கேபி: நான், என்னுடைய செயலாளர் அ அப்பு ஞ, ஜோய் மகேஸ்வரன், உருத்திரகுமாரன். இவர்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த சில விடுதலைப் புலி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். அவர்களது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் இருவரும் நோர்வே முன்னெடுத்த முந்தைய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டவர்கள்.

ஜெயராஜ்: அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

கேபி: யுத்த நிறுத்தம் பற்றியும் பேச்சுவார்த்தை பற்றியும் தெரிவித்தேன். பொதுமக்களின் நிலைமையை கண்ணீர்மல்க எடுத்துக் கூறி அவர்களைக் காப்பாற்ற எப்படியாவது யுத்த நிறுத்தம் அவசியம் என்று நோர்வேயிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

ஜெயராஜ்: அதற்கு என்ன பதில் கிடைத்தது?

கேபி:  அது மிகவும் எதிர்பாராதது. நோர்வே தூதர் ஹட்ரம் வெளிப்படையாக கடுமையான குரலில் ஆனால் உண்மைகளை விவரித்தார்.

ஜெயராஜ்: ஏன் அவர் சொன்னது என்ன?

கேபி: யுத்த களத்தின் உண்மை நிலவரத்தை எங்களிடம் விவரித்தார். இலங்கை ராணுவத்தின் கைதான் ஓங்கி இருக்கிறது என்பதை விளக்கினார். சாலைப் பகுதியில் 55வது டிவிசன், விசுவமடுவில் 57வது டிவிசன், தேவிபுரத்தில் 58வது டிவிசன், முல்லைத்தீவு நகரில் 59வது டிவிசன் நிலை கொண்டிருக்கிறது. சிறப்பு படை-2 உடையார்கட்டிலும் சிறப்பு படையணி 3 அம்பகாமமிலும் சிறப்பு படை 4 ஒட்டுசுட்டானிலும் நிற்கிறது என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு சிறிய நிலப்பரப்பில் அட்டை பெட்டி வடிவத்தில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறினார். புலிகளை அழிக்க சிறிது காலம்தான் ராணுவத்துக்கு தேவை. அதனால் இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்தம் என்பது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளைத் தோற்கடித்துவிடுவது உறுதி என்றார் அவர்.
மேலும் பொதுமக்களுக்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு. பொதுமக்களை மனித கேடயங்களாக கட்டாயப்படுத்தி புலிகள் வைத்திருக்கின்றனர். நீங்கள் சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் சிலவற்றைப் பெற முடியும் என்றும் கூறினார்.

ஜெயராஜ்: அது என்ன ஆயுத ஒப்படைப்பா?

கேபி:  ஆம். சரியானதே.. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை சரணடைய ஒப்புக் கொண்டால் நோர்வேயும் இதர நாடுகளும் யுத்த நிறுத்தம் குறித்து இலங்கையை கேட்டுக் கொள்ளும் என்றார். விடுதலைப் புலிகளுக்கு இனி வாய்ப்பு என்பதே இல்லை.. நிச்சயமாக இலங்கை ராணுவம் வெற்றி பெறத்தான் போகிறது என்றார்.

எனவே உயிரிழப்பைக் குறைக்க விரும்பினால் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். அப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட உண்மையாக ஒப்புக் கொண்டால் அமெரிக்கா, இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் யுத்த நிறுத்தத்துக்கு இலங்கையை வலியுறுத்தும் என்றும் கூறினார். அப்படி விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்ளவில்லையெனில் யுத்தம் சிறிது காலத்தில் முடிந்துவிடும். அத்துடன் விடுதலைப் புலிகளின் கதையும் முடிந்துவிடும் என்றார்.

இதையடுத்து நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தொடர்பு கொண்டு பதில் கேட்கிறோம் என்றோம். இதுதான் அந்த சந்திப்பில் நடந்தது.

ஜெயராஜ்: அடுத்து என்ன நடந்தது?

கேபி: நாம் சோகமாக இருந்தோம். ஆனால் அதுதான் யதார்த்தம் என உணர்ந்தோம். பின்னர் வன்னிக்கு தொடர்புகொண்டோம். அவர்களின் பதில் எமக்கு ஏமாற்ரத்தை தந்தது. ஏனெனில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண்டைய புலிகள் ஒப்புக்கொள்ளவில்லை.இறுதிவரை போராடுவோம் என்ற சவாலோடு இருந்தனர்.

ஜெயராஜ்: எனவே நோர்வேயின் திட்டத்தை புலிகள் நிராகரித்தனர் என உருத்திரகுமாரன் சொன்னது சரியா?

கேபி: ஆமாம். ஆனால் அவர் இதில் பெரிதும் அக்கறை காட்டவில்லை. வேறு சில திட்டங்களை செயற்படுத்துவதில் மும்முரமாக இருந்தார். அதனால் ஹெட்ரம் என்ன பேசினார் என்பது அவருக்கு விபரமாக தெரியாது.

ஜெயராஜ்: உருத்திரகுமாரன் இருக்கவில்லை என கூறுகின்றீர்கள். ஹெட்ரம் தெரிவித்தவற்றை விளக்கமாக உருத்திரகுமாரனுக்கு தெரிவிக்கவில்லையா?

கேபி: அனைத்தும் அவருக்கு தெரியும். ஆனால் எரிக் சொல்கெய்ம் போரைநிறுத்த முயற்சிக்கவில்லை என ஏன் உருத்திரகுமாரன் பொய் சொன்னார் எனத் தெரியாது. ஆனால் உண்மை உருத்திரகுமாரனுக்கு தெரியும்.

ஜெயராஜ்: மலேசியாவில் ஹில்டன் விடுதியில் நடைபெற்ற சந்திப்புக்கு உருத்திரகுமாரன் வரவில்லையா?

கேபி: அது ஒரு பகிடியான கதை. நியூயோர்க் இல் இருந்த உருத்திரகுமாரனை மலேசியாவுக்கு வருவதற்கு நோர்வே விமானச்சீட்டுக்களை அனுப்பியும், அவர் மலேசியாவுக்கு வராமல், நான் தாய்லாந்தில் இருப்பதாக நினைத்து, பாங்கொக் போயுள்ளார். அதை அறிந்த நான் சிலரை பாங்கொக் க்கு அனுப்பி உருத்திரகுமாரனுக்கு உதவிசெய்யும்படி கூறினேன். இந்த தவறான புரிதலால் உருத்திரகுமாரன் அந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஜெயராஜ்: நோர்வே அதிகாரிகளுடனான 2009ம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெற்ற சந்திப்பு சாதகமாக இருக்கவில்லை. 2010-ம் ஆண்டு என்னிடம் நீங்கள் பேசும்போது, பிரபாகரனுக்கு 16 பக்க யுத்த நிறுத்த யோசனை பற்றி அனுப்பியதாகவும் அதனை 3 வார்த்தைகளில் அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறினீர்கள். 2009ம் ஆண்டு பெப்ரவரிக்கு பிறகு என்ன நடந்தது?

கேபி:  நோர்வேயின் யோசனையை பிரபாகரன் நிராகரித்த பின்னரும்கூட என்னுடைய முயற்சிகளை நிறுத்தவில்லை. நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து கொண்டே இருந்தது. இதனால் நோர்வே தரப்புடனும் சர்வதேச தலைவர்களுடனும் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

இது வாழ்வா? சாவா? என்ற விவகாரம்ஸ எப்படியாவது யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும்.. இயக்கத்தை அதன் தலைமையை காப்பாற்ற வேண்டும் என்று கருதினேன். ஐ.நா.வின் உயர் அதிகாரிகள், தூதர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலதரப்போடும் போராடிப் பார்த்தேன். சிலரை நேரில் கூட சந்தித்தேன்.

மார்ச் மாத பிற்பகுதியில் சர்வதேச அனுசரனையுடன் ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்ற திட்டத்தை உருவாக்கினேன். ஆயுதங்களை அ மெளனிக்க ஞ செய்தல் அது தேவைப்பட்டால் 25 முதல் 50 புலிகளின் முக்கிய தளபதிகள் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவும், நடுத்தர போராளிகள் தடுத்து வைக்கப்பட்ட அவர்களுக்கு குறைந்த தண்டனை வழங்குதல், இளநிலைப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்தல் என்பதுதான் அத்திட்டம்.

விடுதலைப் புலி தலைவர்களின் குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுக்க 3 நாடுகளுடன் பேசியிருந்தேன். இதில் ஆசிய நாடு ஒன்றும் அடக்கம். மற்றவை ஆப்பிரிக்க நாடுகள். இந்தத் திட்டம் நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் போர்க் கப்பலை அனுப்பவும் அமெரிக்காவும் தயாராக இருந்தது.

இந்தத் திட்டம் பற்றி தெரிவித்து இதற்கான ஒப்புதலை தெரிவிக்கக் கோரி மார்ச் மாத இறுதியில் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பினேன். அவர் செய்யலாம் என்று சொல்லியிருந்தால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழு முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக 16 பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஃபக்ஸ் மூலம் அனுப்பியும் வைத்தேன்.

16 பக்கத்துக்கு நான் அனுப்பி இருந்ததை அ இதை ஏற்றுக்கொள்ள முடியாது ஞ என்று மூன்று வார்த்தைகளில் சொல்லிவிட்டார். அதனால் இந்தத் திட்டத்தையே நான் கைவிட்டேன்.

ஜெயராஜ்: ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன்ஸ. விடுதலைப் புலிகளின் தலைவரை எப்படி தொடர்பு கொண்டீர்கள் நீங்கள்?

கேபி: சாட்டிலைட் தொலைபேசிகளை பயன்படுத்தினோம். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலு (குமாரவேல்) என்பவர் மூலமாக தொடர்பு கொண்டோம். அவர்தான் எனது தகவல்களை தலைவருக்கு தெரியப்படுத்தி அவரிடம் இருந்து பதில் பெற்றுத் தருவார். அதன் பின்னர் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன்(பாலசிங்கம் மகேந்திரன்), கடற்புலி பொறுப்பாளர் சூசை(தில்லையம்பலம் சிவனேசன்) ஆகியோரும் தலைவருக்கும் எனக்குமான தொடர்பாளர்களாக இருந்தனர்.

ஜெயராஜ்: ஐ.நா.வின் தலையீடு என்பது எந்தளவு இருந்தது?

கேபி: நோர்வேதான் ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட்டது. என்னைப் பொறுத்தவரை ஐ.நா. அதிகாரிகளான ஹோல்ம்ஸ், விஜய் நம்பியார், தம்ர சாமுவேல் ஆகியோருடன் தொடர்பில் இருந்தேன்.

ஜெயராஜ்: உங்களது திட்டத்தை பிரபாகரன் நிராகரிக்கக் காரணம் என்ன? உண்மையான களநிலவரம் அவருக்கு தெரியவில்லையா? இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கேபி: சிறப்புப் படையணி மூலம் பெரியளவிலான ஒரு பதிலடித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது பின்னர்தான் தெரிய வந்தது. ஆனந்தபுரம் பகுதியில் இதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரபாகரனைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய ராணுவ ரீதியான வெற்றியைப் பெற முடியும் என்று இறுதிவரை நம்பியிருந்திருக்கிறார். இதன் மூலமாக நிலைமையை தலைகீழாக்க முடியும்ஸ இராணுவத்தை சீர்குலைய வைக்க முடியும் என்று நம்பியிருக்கிறார்.

ஜெயராஜ்: இராணுவம் முழுமையாக சுற்றி வளைத்ததனால் விடுதலைப் புலிகளுக்கான போதிய ஆயுத வழங்கல்கள் கிடைக்காமையால்தான் அவர்களால் எதிர்த்துப் போராட முடியாமற் போனதால் இராணுவம் முன்னகர்வுகளை எளிதாக மேற்கொண்டதா?

கேபி: நீங்கள் நினைப்பது சரி. ஆனால் பிரபாகரன் மிகவும் நம்பிக்கைகொண்டு இருந்தார். எவ்வாறெனினும் தம்மால் இராணுவத்தின் முன்னகர்வுகளை முறியடிக்க முடியும் என. ஆனால் ஆனந்தபுரப் பகுதியில் ஏராளமான தளபதிகள் தீபன் உட்பட பலர் உயிரிழந்தனர்.

ஜெயராஜ்: பிரபாகரன் நிராகரித்த பிறகு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

கேபி: அந்த முயற்சிகளைத்தான் பிபிசி ஊடகத்திடம் எரிக்சொல்ஹெய்ம் விவரித்ததுஸ. அதாவது தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிப்பது. அதன் பின்னர் ஐ.நா. அதிகாரிகள், பிரதிநிதிகள் (இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே) மற்றும் இந்திய பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் வடபகுதிக்கு கப்பலில் செல்வது.

யுத்த முனையில் இருக்கும் புலிகள் மற்றும் பொதுமக்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்வது.. அதன் பின்னர் இலங்கையின் பாதுகாப்பில் அனைவரையும் முகாம்களுக்கு அனுப்புவது என்பதுதான் எரிக் சொல்ஹெய்ம் சொல்லும் திட்டம்.

அதேபோல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மெளனிக்க செய்துவிட்டு ஐநாவிடம் அவற்றை ஒப்படைப்பது. மார்ச் மாதம் என்ன திட்டமிடப்பட்டதோ அதன்படி விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து அவர்களை கண்காணிப்பது. நடுநிலையான போராளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையும், மற்றோருக்கு பொதுமன்னிப்பும் கொடுத்தல் என்பதும் அத்திட்டம்.

கேள்வி: இதில் பிரபாகரன்., பொட்டு அம்மான்(சண்முகலிங்கம் சிவசங்கர்) சேர்க்கப்படவில்லையா?

கேபி : அவர்களும்தான் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவோர் பட்டியலில் இருந்தனர். அதை அவர்கள் ஏற்கவில்லை.

ஜெயராஜ்: எரிக் சொல்ஹெய்ம் வேறு மாதிரி சொல்கிறாரே..

கேபி: எனக்கும் தெரியும். எரிக் சொல்ஹெய்ம் வேறு மாதிரியாக சொல்கிறார் என்பது.. அந்தத் திட்டத்தின்படி பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

ஜெயராஜ்: ஒருவேளை ராஜீவ் கொலை விவகாரத்தில் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று இந்தியா கேட்டுக் கொண்டதா?

கேபி: உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.. எனக்கே சொல்ஹெய்ம் சொல்வது புதிராக இருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஏனெனில் அவர் இது விஷயமாக வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நோர்வே முன்னெடுத்த முயற்சிகளுக்கு பிரபாகரன் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் நான் வன்னிப் பகுதிக்கு நேரடியாக சென்று தலைவரை சந்தித்து பேசியிருப்பேன்.

இரண்டாம் இணைப்பு


 

 

யுத்த நிறுத்த நகர்வுகள் பிரபாகரனால் முறியடிக்கப்பட்டன: கே.பி. pottuamman pirapakaranஜெயராஜ் : ஒருவேளை ராஜீவ் கொலை விவகாரத்தில் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று இந்தியா கேட்டுக் கொண்டதா?

கேபி : உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.. எனக்கே சொல்ஹெய்ம் சொல்வது புதிராக இருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஏனெனில் அவர் இது விஷயமாக வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

ஜெயராஜ் : பிரபாகரனும் பொட்டம்மானும் இத்திட்டத்திற்கு ஏன் ஒத்துக்கொள்ளவில்லை?

கேபி :பிரபாகரனுக்கு இத்திட்டம் பற்றி தெரியாது. ஏனைய தளபதிகள் இதைப் பற்றி பிரபாகரனிடம் தெரிவிக்கவில்லை. ஏனெனில் பிரபாகரன் நெறிமுறை பிறழாதவர். இத்திட்டத்திற்கு அவர் உடன்படமாட்டார் என்பதற்காக அவரிடம் இதுபற்றி தெரிவிக்கவில்லை.

ஜெயராஜ்:நீங்கள் ஒஸ்லோ சென்றபோது சொல்கெய்ம் இது தொடர்பாக உங்களுடன் கதைத்தாரா? என்ன கதைத்தார்?

கேபி:  ஆம். பிரபாகரன் இத்திட்டத்திற்கு உடன்படமாட்டார் என்பது தெரியும். அவரின் உடன்பாடின்றி எந்த முயற்சியும் செய்யமுடியாது. நோர்வே முன்னெடுத்த முயற்சிகளுக்கு பிரபாகரன் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் நான் வன்னிப் பகுதிக்கு நேரடியாக சென்று தலைவரை சந்தித்து பேசியிருப்பேன்.

ஜெயராஜ் : ஏன் இவ்வாறான திட்டத்தை மேற்கொள்ள நினைத்தீர்கள்?

கேபி:  பிரேமதாச ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளரான அன்ரன் பாலசிங்கமும், நானும் இணைந்து இச் செயற்திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தோம்.

ஜெயராஜ்:  அவ்வாறாயின் 1989 காலப்பகுதியில் என்ன நடந்தது?
 
கேபி : அக்காலத்தில் இந்திய இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே போர் நடைபெற்ற காலம். இந்தியாவின் தலையீட்டை அன்றைய ஜனாதிபதி நிராகரித்தார். இந்தியாவுக்கு தெரியாமல் செயற்படத் திட்டமிட்டு, பிரேமதாஸவுக்கு மிகவும் நெருக்கமானவரும், நம்பிக்கைக்குரியவருமான அமைச்சர் ACS ஹமீட் அவர்களை இரகசியமாக பாங்கொக் இல் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நானும் அன்ரன் பாலசிங்கமும் அவரைச் சந்தித்து ஒரு கோரிக்கையை முன்வைத்தோம்.

அதாவது நான் நேரிடையாக சென்று பிரபாகரனைச் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஹமீட் ஊடாக பிரேமதாஸவுக்கு இக் கோரிக்கையை முன்வைத்தோம். இலங்கையும் அதற்கு உடன்பட்டு, தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்தது.

ஜெயராஜ்: எவ்வாறு சென்றீர்கள்?

 

கேபி : அது ஒரு பெரிய இக்கட்டான சூழ்நிலையாக இருந்தது. வன்னிக்கு போவதெனில், இலங்கை அரசின் அனுமதியுடன் நோர்வே அல்லது ஐ.நாவின் பாதுகாப்பின் கீழ் உத்தியோகபூர்வமாக செல்ல வேண்டும். இன்னொரு வழி மாலைதீவு கடல்வழியாக வன்னிக்கு செல்வது. இவ்வழி ஆபத்தை ஏற்படுத்தும் என்பதனால் செல்லமுடியவில்லை.

ஜெயராஜ்: 2002 இல் இரணைமடுவில் அன்ரன் பாலசிங்கமும் அவரது மனைவியான அடேல் பாலசிங்கமும் எவ்வாறு தரையிறங்கினார்கள்?

கேபி: உண்மைதான். ஆனால் நோர்வே புலிகளுடன் நேரடியாக கலந்தாலோசித்து ஒரு உறுதியான முடிவை எடுக்கும்படி தெரியப்படுத்தியதனால் அவர்கள் சென்றார்கள். ஆனால் பிரபாகரனைச் சந்திக்க முன்னர், எரிக் சொல்ஹெய்ம் ஒஸ்லோ வந்து தன்னை சந்திக்கும்படி எனக்கு சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

ஜெயராஜ்: அடுத்துஸ?

கேபி:  அடுத்து எனக்கு புரிந்துவிட்டது பிரபாகரன் எதற்கும் ஒத்துக்கொள்ளமாட்டார் என. எனவே நான் எரிக் சொல்ஹெய்ம் க்கு அறிவித்துவிட்டு ஒஸ்லோ பயணத்தையும் நிராகரித்துவிட்டேன். இது 2009 ஏப்ரல் கடைசிப் பகுதியில் நடந்தது.

ஜெயராஜ்: யார் சொன்னது பிரபாகரன் எதற்கும் ஒத்துழைக்கம்மாட்டார் என?

கேபி:  சாதாரண ஊடகங்களினூடாக அறிந்தேன்.

ஜெயராஜ்: இறுதிக் காலகட்டத்திலும் பிரபாகரன் எதற்காக உடன்படவில்லை என நீங்கள் நினைக்கிறீங்கள்?

கேபி:  அவரது இறுக்கமான மனோநிலையும், சமரசமற்ற போரும் தான் அவருடைய கொள்கை. அவர் ஈழப் போரின் வரலாற்றுப் பாதையை நினைத்து நினைத்து பார்ப்பார், சமரசமாக போவதைப் பற்றியோ, கீழிறங்கி போவதைப் பற்றியோ அவர் விரும்பவில்லை. சர்வதேசத்தையும் அவர் நம்பவில்லை.

நான் நினைக்கிறேன், இந்தியாவில் நெடுமாறன் வைகோ போன்றோர் ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்து ஜெயலலிதாவின் கைக்கு ஆட்சி வரும் எனவும் அன்று அவர் நினைத்திருக்கலாம். அதாவது அதிமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று, மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையலாம் என எண்ணியிருக்கலாம் என நினைக்கின்றேன்.

யுத்த நிறுத்த நகர்வுகள் பிரபாகரனால் முறியடிக்கப்பட்டன: கே.பி. 1137497 f496ஜெயராஜ்:அதன்பின் உங்கள் முயற்சிகள் முடிந்துவிட்டனவா?

கேபி: இல்லை. பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் என்னைத் தொடர்புகொண்டு தன் குடும்பத்தைப் காப்பாற்றும்படி கேட்டிருந்தார். அதற்காக நான் ஒரு சிறிய விமானத்தை ஏற்பாடு செய்தேன். அதற்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்பட்டதால், நெடியவனிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.

அதன் பின் மே மாத நடுப்பகுதியில் சூசையும், நடேசனும் தொடர்புகொண்டு தாம் ஆயுதத்தை கீழே போடுவதற்காகவும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறும் கோரியிருந்தனர்.

அந்தநேரம் நான் மிகவும் யோய்வாய்ப்பிட்டிருந்தேன், நீரிழிவு நோயினால் மிகவும் சோர்வுற்றிருந்தேன். இப்போரை நினைத்து ஊணின்றி, உறக்கமின்றி பைத்தியநிலைக்கு சென்றிருந்த காலப்பகுதி. அந்நேரத்தில் தான் தாம் ஆயுதங்களை மெளனிக்க சம்பதித்தனர்.

ஆனால் அது மிகவும் காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு.

ஜெயராஜ்: எவ்வாறு போர் முடிந்தது என்பது யாவரும் அறிந்ததே. நீங்களும் வருத்தத்தில் இருந்ததை நான் அறிவேன். பிரபாகரன் உங்களின் திட்டத்திற்கு ஏற்ப நடந்திருந்தால், அதை யுத்த வெற்றியின் விளிம்பில் இருந்த இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்குமா?

கேபி: ஐநாவுடன் சேர்ந்த இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவற்றின் மூலமாக ஒப்புக்கொள்ளவைக்க வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் ஒரு உத்தியோகபூர்வமற்ற அறிவிப்பாகவே ஆயுத மெளனத்தை அறிவித்திருந்தனர். விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஆயுதத்தை கீழே வைக்க விரும்பியிருக்கமாட்டார்கள்.

ஜெயராஜ்: எனவே விடுதலைப் புலிகள் தம் சுயமுடிவுகளுடன் செயற்பட்டமையால் தான் அத்தனை உயிரிழப்புக்களுக்கும் காரணம் என நினைக்கின்றீர்கள்?

கேபி: ஆமாம். அதை நினைத்துதான் எனக்கும் கவலை. தமிழ் இன விரோதம். விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினரான நான் சாகும்வரையிலும் இவ் அழிப்பை என்னால் மறக்கவே முடியாது.

கே.பியுடனான இப்பேட்டியானது   மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies