வட்டிலாப்பம்
•பாதாம் - 6
•முந்திரி - 10
•பச்சரிசி - ஒரு மேசைக்கரண்டி
•பசும்பால் - ஒரு டம்ளர்
•சீனி - 6 தேக்கரண்டி
•முட்டை - ஒன்று
•ஏலக்காய் - 2
•நெய் - 2 தேக்கரண்டி
•பட்டை - அரை இன்ச்
மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாதாமை சுடுத்தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். அதைப்போல அரிசியையும் ஊற வைக்வும்.
அதன் பின்னர் மிக்ஸியில் பாதாம், 6 முந்திரி, அரிசி, ஏலக்காய் இவைகளை போட்டு சிறிது பால் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி ஒன்றாக சேரும்படி ஒரு முறை அரைத்து எடுக்கவும்.
அரைத்தவற்றை மீதம் உள்ள பாலுடன் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை போட்டு மீதி உள்ள முந்திரியை சிறியதாக நறுக்கி அதில் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதில் கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி மிதமான தீயிலேயே வைத்திருக்கவும்.
கொதி வரும் போது ஒரு கிளறு கிளறி விட்டு நன்கு திரண்டார் போல் வரும் வரை மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.
இப்போது சீனி, 2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். சீனி கரைந்ததும் நன்கு வெந்து உதிரியாக இருக்கும்.
கலவை வெந்து உதிர் உதிராக வந்ததும் இறக்கி வைத்து விடவும். இறக்கியதும் வறுத்த முந்திரியை சேர்த்து பரிமாறவும்.
சுவையான வட்டிலாப்பம் கஞ்சி ரெடி. இந்த குறிப்பினை திருமதி. ஆயூஸ்ரீ புகழேந்தி அவர்கள் திருமதி. அப்சரா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்து பார்த்ததை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
............................................................................................................................................................
வட்டிலாப்பம்
தேவையானவை:
முட்டை 6
முந்திரி 30 எண்ணம்
ஏலக்காய் 6
பால் 1/4 லிட்டர்
சீனி 200 கிராம்
பசு நெய் 20 மில்லி
கலர் பவுடர் தேவையெனில்
செய்முறை:
முந்திரி மற்றும் தோல் நீக்கப்பட்ட ஏலக்காய் (விதை மட்டும்) மிக்சியில் இட்டு ஒரு கல் உப்பிட்டு தேவையெனில் கலர் பவுடர் மிகச்சிரிதளவிட்டு மிக சற்று தண்ணீர் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதிலேயே முட்டை, சீனி, 100 மில்லியாக வற்ற வைக்கப்பட்ட பாலையும் இட்டு அடித்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தின் உட்புறத்தில் பசு நெய்யை தடவி மிக்சியில் உள்ள கலவையை அதில் உற்றிக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் சிறிதளவு தண்ணீர் விட்டு அதன் மீது சிறிய கலவடை/பிரிமணையை இட்டு அதன் மீது கலவை அடங்கிய கிண்ணத்தை மூடாமல் வைத்து பிரஷர் குக்கரை மூட வேண்டும்.
இதன் பிறகு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து நெருப்பை சற்று கூடுதலாக வைத்து குக்கர் சூடானதும் அடுப்பை 'சிம்'-இல் வைத்து 5 விசில் விட்டு இறக்கி விட வேண்டும். ஒரு வேலை சரிவர வேகவில்லையெனில் மேலும் சில விசில்கள் விட்டு இறக்கினால் சுவையான வட்டிலாப்பம் ரெடி.
..........................................................................................................................................................
சுவைமிக்க வட்டிலாப்பம் தயாரிக்கும் முறை.
தேவையான பொருட்கள்
முட்டை – 12
கருப்பட்டி – 400g
தேங்காய் – ண மூடி திருவியது
சீனி - 250 கிராம்
செய்முறை
ரைஸ் குக்கரில் பாதி அளவுக்கு தண்ணீரை கொதிக்க வைக்கவும்.பின்பு தேங்காயில் முதல் பாலை மட்டும் ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும். கருப்பட்டிஐ சிறிதாக சீவி அதை முட்டையில் போட்டு நன்றாக அடித்து அக் கலவையில் தேங்காய் பாலை ஊற்றி கலக்கி கொள்ளவும். பின்பு அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை ரைஸ் குக்கரின் உள்ளே வைத்து ஒரு மணிநேரம் வேக விடவும். கட்டியான பதத்திற்கு வந்ததும் அதை ஆற விட்டு பரிமாறவும்.
குறிப்பு :
* விரும்பியவர்கள் அக்கலவையில் தேவையான அளவு கஜூ,பிளம்சை சிறிதாக வெட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
* அதிகம் இனிப்பு விரும்பாதவர்கள் சீனி சேர்க்காமலும் செய்யலாம்.
* இதை அவனில் வைத்தும் வேக வைக்கலாம்.
..............................................................................................................................................................
வட்டிலாப்பம் கஞ்சி
வட்டிலாப்பம் கஞ்சிபாதாம் – 6
முந்திரி – 10
பச்சரிசி – ஒரு மேசைக்கரண்டி
பசும்பால் – ஒரு டம்ளர்
சீனி – 6 தேக்கரண்டி
முட்டை – ஒன்று
ஏலக்காய் – 2
நெய் – 2 தேக்கரண்டி
பட்டை – அரை இன்ச்
மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாதாமை சுடுத்தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். அதைப்போல அரிசியையும் ஊற வைக்கவும்.
அதன் பின்னர் மிக்ஸியில் பாதாம், 6 முந்திரி, அரிசி, ஏலக்காய் இவைகளை போட்டு சிறிது பால் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி ஒன்றாக சேரும்படி ஒரு முறை அரைத்து எடுக்கவும்.
அரைத்தவற்றை மீதம் உள்ள பாலுடன் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை போட்டு மீதி உள்ள முந்திரியை சிறியதாக நறுக்கி அதில் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதில் கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி மிதமான தீயிலேயே வைத்திருக்கவும்.
கொதி வரும் போது ஒரு கிளறு கிளறி விட்டு நன்கு திரண்டார் போல் வரும் வரை மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.
இப்போது சீனி, 2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். சீனி கரைந்ததும் நன்கு வெந்து உதிரியாக இருக்கும்.
கலவை வெந்து உதிர் உதிராக வந்ததும் இறக்கி வைத்து விடவும். இறக்கியதும் வறுத்த முந்திரியை சேர்த்து பரிமாறவும்.
சுவையான வட்டிலாப்பம் கஞ்சி ரெடி.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ரமலான் -வட்டிலாப்பம்
ரமலான் -வட்டிலாப்பம்
தேவையான பொருட்கள்:
முட்டை 6
முந்திரி 10
ஏலக்காய் 6
தேங்காய் பால் 1/4 லிட்டர்
சீனி 200 கிராம்
பசு நெய் 20 மில்லி
சிறிது உப்பு
செய்முறை:
முந்திரி மற்றும் தோல் நீக்கப்பட்ட ஏலக்காய் (விதை மட்டும்) மிக்சியில் இட்டு ஒரு கல் உப்பிட்டு மிக சற்று தண்ணீர் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதிலேயே முட்டை, சீனி, கெட்டியாக பிழிந்த தேங்காய் பாலையும் இட்டு அடித்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தின் உட்புறத்தில் பசு நெய்யை தடவி மிக்சியில் உள்ள கலவையை அதில் உற்றிக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் சிறிதளவு தண்ணீர் விட்டு அதன் மீது சிறிய கலவடை(Stand)இட்டு அதன் மீது கலவை அடங்கிய கிண்ணத்தை மூடாமல் வைத்து பிரஷர் குக்கரை மூட வேண்டும்.
இதன் பிறகு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து நெருப்பை சற்று கூடுதலாக வைத்து குக்கர் சூடானதும் அடுப்பை ‘சிம்’-இல் வைத்து 5 விசில் விட்டு இறக்கி விட வேண்டும். ஒரு வேலை சரிவர வேகவில்லையெனில் மேலும் சில விசில்கள்விட்டுறக்கினால் சுவையான வட்டிலாப்பம் ரெடி.