ஆந்திரா கோங்குரா சிக்கன்சிக்கன் தேவையான பொருட்கள்: சிக்கன் - அரை கிலோ புளிச்சக்கீரை - 1 கட்டு பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு நறுக்கியது - தலா 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் தனியா தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கு. செய்முறை: * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும். * கீரையை நன்றாக மண் போக அலசிய பின்பு இலையின் காம்பை நறுக்கி எடுத்து கீரையை மட்டும் உபயோகிக்கவும். * ஒரு வாணலியில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் விட்டு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கிய பின் சுத்தம் செய்து வைத்துள்ள கீரை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். * நன்கு வதங்கிய பின் ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். * மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து சிவற வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். * மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதக்கிய பின் கிக்கனை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும். * அடுத்து அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாதூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். * சிக்கன் சுவைக்கு உப்பு சேர்க்கவும். * அரை கப் தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி வேக விடவும். * சிக்கன் முக்கால் பாகம் வெந்த பின்பு தயார் செய்த அரைத்த கோங்குரா விழுதை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும். * நல்ல கொதித்து சிக்கனும் கீரை விழுதும் சேர வேண்டும். கீரையே புளிக்கும், தயிரோ தக்காளியோ சேர்க்க தேவையில்லை. இதற்கு காரம், உப்பு சிறிது அதிகமாகத் தேவைப்படும். விரும்பினால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும். * சுவையான ஆந்திரா கோங்குரா சிக்கன் ரெடி. * இது சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் கூட பரிமாறலாம். பருப்பு சோற்றுடன் சூப்பர்.