நிஷா - இரவு

09 Apr,2016
 


 நிஷா - இரவு






மனைவி: இந்த அநியாயத்தை யாருகிட்டப் போய் சொல்லறது? கணவன்: என்ன அநியாயம் நடந்திருச்சின்னு சத்தம் போடுறாய்? மனைவி: நா அப்பவே சொன்னேன். நம்ம பொண்ணுக்கு நிஷா-ன்னு இந்திப் பெயர் வைக்காதிங்கன்னு. எம் பேச்சக் கேட்டீங்களா? கணவன்: என்னடி சொல்லற காமாட்சி? மனைவி: நீங்க இந்திப் பெயர் மோகத்திலே நம்ம பொண்ணுக்கு அர்த்தம் தெரியாமலே நிஷா-ன்னு பேரு வச்சிட்டீங்க. அவ நல்ல சிகப்பா அழகா இருக்குறா. அவ என்ன இருட்டுக் கட்டின மாதிரி கருகிப் போயாக் கிடக்குறா? குழந்தையில் இருந்ததை விட நல்லா நிறமா தானே இருக்குறா? கணவன்: அதுக்கென்னடி இப்ப? மனைவி: எதோ ஒரு சினிமாவ்லே வர்ற உங்க அபிமான கதாநாயகி பேரு உங்களுக்குப் பிடிச்சுப் போச்சுன்னு அவளுக்கு நிஷா-ன்னு பேரு வச்சீங்களே, அந்தப் பேருக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா மாமா? கணவன்: அட நிஷா -ங்கற அந்த அருமையான பேருக்கு என்ன அர்த்தமா இருந்தா உனக்கென்னடி. அந்தப் பெயர சொல்லறதுக்கு அழகா இருக்குதே அது போதாதா? அந்தப் பேரோட அர்த்தம் பத்தியெல்லாம் ஏண்டி கவலப்படுற. காலத்துகேத்த மாதிரி இந்திப் பெயர் வைக்குறது தான் இன்றைய நாகரிகம். மனைவி: நாசமாப் போச்சு. இன்னிக்குத் தான் ஒரு இந்தி வாத்தியார்கிட்ட ‘நிஷா”-ங்கற பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன். அதுக்கு ‘இரவு”-ன்னு அர்த்தமாம். ஏங்க பெத்த பிள்ளைக்கு யாராவது இரவு-ன்னு பேரு வைப்பாங்களா? கணவன்: அட பாவி! நிறையா பேர் அந்தப் பெயர் தாண்டி அவங்க பிள்ளைங்களுக்கு வச்சிருக்காங்க. அர்த்தம் தெரியாமலே நா அந்த் பெயர் எம் பொண்ணுக்கு வச்சிட்டேன். இன்னிக்கே (நோட்டரி பப்ளிக்) வழக்குரைஞர் கிட்ட சொல்லி நம்ம பொண்ணுக்கு நல்ல தமிழ்ப் பெயர் வச்சு (கெஜட்) அரசிதழில் வெளியிடணும். என்ன மன்னிச்சுக்க காமாட்சி. சினிமா மோகத்தில் நா நம்ம பொண்ணுக்கு அர்த்தம் தெரியாம ’இரவு’-ன்னு பேரு வச்சிட்டேன். சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.






திருமணமான ஆண்கள் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். அவசியம் படிங்க• திருமணம் ஆகவிருக்கும் ஆண்களும்

தெரிந்து கொள்வதில் தவறில்லை நீங்களும் படிக்கலாம்.

கணவனை பார்த்து மனைவி “என்னங்க” என்றழைத்தால், அந்த வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கும். திருமணம் செய்த ஆண்களுக்கு மட்டுமே அது புரியும்.

* பாத்ரூமில் இருந்து ‘என்னங்க’ என்று மனைவி அழைத் தால்,“பல்லி அடிக்க கூப்புடுறா”னு அர்த்தம்.

* வீட்டுவாசலில் நின்று நண்பனுடம் பேசிக் கொண்டிரு க்கும்போது ‘என்னங்க’ என்று அழைப்புவந்தால் “மரியா தையா உள்ள வாறியா இல்ல கதவ சாத்தட்டா”னு அர்த்தம்.

* கல்யாண வீட்டில் ‘என்னங்க’ என்று சத்தம் கேட்டால் “என் சொந்தக்காரங்க வந்திருக்காங்க,சீக்கிரம் வாங்க” னு அர்த்தம்.

*ஹோட்டலில் சாப்பிட்டு முடித்தபின் ‘என்னங்க’ என்று அழைப்புவந்தால் “சீக்கிரம் பில்லகட்டீட்டுவா”னு அர்த்தம்.

* மனைவியுடன் பைக்கில்போகும்போது ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “பூக்கடை வருது,வண்டிய நிப்பாட்டு”னு அர்த்தம்.

* ஜவுளி கடையில் நின்று ‘என்னங்க’ என்று அழை ப்பு கேட்டால் “நான் தேடிட்டு இருந்த புடவை கிடச் சிடுச்சு. பில் போடணும் சீக்கிரம் வாங்கனு அர்த்தம்.

*வீட்டில் பீரோமுன்னாடி நின்றுகொண்டு ‘என்னங்க ‘ என்று மனைவி ஆசையோடு அழைத்தால் “மவனே இன்னக்கி உன் பர்ஸ்ஸ காலி பன்றேன்டா”னு அர்த்தம்.

* தட்டுல சோறு போட்டுட்டு ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “சோறு போட்டாச்சு.வந்து வயிர் நிறைய கொட்டிக்கோ”னு அர்த்தம்.

* பக்கத்து வீட்டு சண்டையில் நாம தலையிடும் போது ‘என்னங்க’ என்று மனைவியின் சப்தம் வேகமாக கேட்டால் “உன் வேலைய பாத்துக்கு போ. தேவையில்லாத பிரச்சணைல நீ மூக்க நுழைக்காதே”னு அர்த்தம்.

*நைட்டு தூங்குவதற்கு முன் ‘என்னங்க’ என அழைப்பு வந்தால் “மொபைல்ல நோன்டியது போதும். மரியாதயா போனை வச்சுட்டு தூங்கு “னு அர்த்தம்.

இப்படி பல அர்தங்களை உள்ளடக்கி கொண் டது தான் “என்னங்க”.
“என்னங்க” என்பது வார்த்தையல்ல, அது ஆண்களின் “வாழ்க்கை”.!





இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு

நண்பர்களாக பழகும்போது, அவர்களுக்கு ள்ளேயே ஒருவித வித்தியாசமான உணர் வுகள் வந்துவிடுகின்றன.

ஆனால் அவற்றை ஆண்கள் வெளிப்படை யாக தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார்கள். ஆகவே அவர்களது மனதில் உங்களை பிடித்திருக் கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன.

அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில் லையா என்பதை கண்டறியலாம். அது என் னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கு ம் பெண்ணிற்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்ஸ

பெண்களுக்கு பிடித்தால் எப்படி நடப்பார்கள் தெரியுமா?ஆண்களே!!!

*பெண்கள் உங்கள் கண்களை அதிகம் பார்த்து பேசினால் அவர்கள் உங்கள்மீது அதிக ஆர்வத்து டன்உள்ளனர் என்பதைஅறியலாம். அதிலும் தொ டர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால், கண்டிப் பாக உங்களை பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

*பெண்களுக்கு உங்களைபிடித்தால், அவர்களே உங்களை அடிக்கடி தொடுவார்கள். உதாரணமாக, அடிப்ப து, அடிக்கடிதொட்டுப்பேசுவது, கை குலுக்குவது, கைகளை பிடித்து நடப்பது போன்றவற்றை செய்வார்கள். ஆம், உண் மைதான். ஏனெனில் அவர்கள் உங்கள்மீது விருப்பம் இருப் பதால் தான் அவர்கள் உங்களை தொட ஆரம்பிக்கிறார்கள். பின்னர் நீங்கள் தொட்டாலும், எதுவும் சொல்லாமல், முகத்தை சுளிக்காமல், தள்ளிவிடாமல் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். பின்னர் என்ன ஜமாய்ங்கப்பாஸ

* உங்கள் மீது விருப்பம் இருந்தால், பெண்கள் அதிக நேரம் உங்களுடன் பேசுவார்கள். மேலும் எவ்வளவு தான் நண்பர்களுடன்கூடி பேசிக்கொண்டிருந்தாலும், அவர்கள் உங்களுடன் பேசுவார்கள் அல்லது மெசேஜ் செய்வார்கள். முக்கியமாக எந்த நேரத்திலும் உங்க ளுக்கு போன் செய்து பேசுவார்கள்.

* உங்களைப் பிடித்தால், என்ன தான் நீங்கள் பேசினாலும் பெண்கள் சிரித் துக்கொண்டே இருப்பார்கள். அது எவ்வளவுதான் படு மொக்கையாக இருந்தாலும், அவர்கள் விழுந்து விழு ந்து சிரித்தால், நிச்சயம் அது காதல்தான். மேலும் உங்கள் பேச்சை அவர்கள் ரசிக்கிறார்கள் என்றும் அர்த்தம்.

* எங்கேனும் அவர்களுடன் வெளியே தனியாக போக திட்டம்போட்டு, அவர்களிடம்கேட்டு, அவர்களுக்கு வேலை இருப்பது உங்களுக்கு தெரிந்தும், உங்களுடன் வருவதற்கு ஒப்புக்கொண்டால், அந்நேரத்தில் நீங்கள் அத்திட்டத்தை முறியடிக்காமல் செல்லுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களுடன் வெளியேவந்து, அப்போதும் உங் களிடம் காதலை சொல்லும் வாய்ப்புகளும் உண்டு. இந்த சந்தர்ப்பத் தை வேஸ்ட் செய்ய வேண்டாம்.

* உங்களிடம் பேசும்போது, பெண்கள் தங்கள் முடிகளை கைகளால் சுருட்டிக்கொண்டிருப்பதை, நீங்கள் கண்டால் , நிச்சயம் அவர்களுக்கு உங்கள்மீது ஒரு கண் உள்ளது என்பதை அறிய லாம். இது ஒரு சிறிய சிம்டம் தான்.

*நீங்கள் வேறுஒரு பெண்ணிடம் பேசுவதைப்பார்த் து கோபப்பட்டால், அதுகூட உங்கள்மீது இருக்கும் ஒரு வகையான காதல்தான். ஆனால் இதை அவர் களிடம் கேட்டால், அவர்கள் ஒப்புக்கொள்ள மாட் டார்கள். ஏனெனில் உண்மையில் அவர்கள் உங் களை வேறு யாருக்கும் விட்டுக்கொடுப்பதை விரும்பவில்லை. இந்நேரத்தில் அவர்களது காதல் வெளிப்படுகிறது.
என்ன நண்பர்களே!!! உங்களை யாராவது லவ் பண்றாங்களாஸ?



Share this:

Kommende Film DENMARK

Denmark Kommende Film

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil HD Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND 2017/2018

HolylandTour Package 2017 cont/ 0091 9884849794

Umrah 2016-2018

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies