5-அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

23 Jun,2015
 

             

பாக்க ஒரு தரம் கும்புட ஒரு தரமா?
பாட்டி சொல்லைத் தட்டாதே.
பாண்சேரிப் பற்கிளக்கு மாறு (பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்துவந்தவர் பறையருள், ஒரு பிரிவினரான பாணரே.)
பாத்திரமறிந்து பிச்சை இடு, கோத்திரமறிந்து பெண்ணை எடு.
பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு .
பாம்பின் கால் பாம்பறியும்.
பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது.
பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!
பாம்பு தின்ற ஊருக்குப்போனா நடுக்கண்டம் நம்ப கண்டம்.
பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது.
பாம்பு கடிச்சுதா? பயம் கடிச்சுதா?
பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும்.
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?
பாலைக் குடித்ததுமட்டு மல்லாமல் பூனை பானையை வேறுடைத்ததாம்!
பானை பிடித்தவள் பாக்கியசாலி.

பி[தொகு]
பிஞ்சில வளெயாதது கம்புல வளெயுமா?
பிள்ளை இல்லா வீட்டுக் கிழவன் துள்ளி விளையாடினானாம்!
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டக் கதையாக...
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதை தட்டிப் பறிச்சுதாம் அனுமார்.

பு[தொகு]
புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரி.
புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
புத்திமான் பலவான்.
புலி அடிச்சுதா? கிலி அடிச்சுதா?
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
புலிக்கு பயந்து சிங்கத்தின் வாயில் விழுந்தானாம்!
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம்.
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
புலவர் போற்றினும் போற்றுவர், தூற்றினும் தூற்றுவர்.

பூ[தொகு]
பூனை கண்ணை மூடினால் பூளோகம் இருண்டு போய்விடுமா?
பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
புயலுக்குப் பின்னே அமைதி.
பூனை உள்ள இடத்தில் எலி பேரன் பேத்தி எடுக்குது.

பெ[தொகு]
பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
பெண்ணுக்கு இடம் கொடேல்.
பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு!!
பெண்டாட்டி இல்லை, கருவும் இல்லை மகனின் பெயர் கரிகாலனாம்....
பெத்த அம்மா செத்தா பெத்த அப்பன் சித்தப்பன்
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
பெண்பிள்ளை சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு.
புகையிலை சுருள்நிலையிலிருந்து அகன்று விரிந்தால் பயன்படுத்தப் பக்குவமாகிவிட்டதென்று செடியிலிருந்து பறித்துவிடுவார்கள் அதுபோலவே ஒரு கன்னிப்பெண் ஒருவனைப் பார்த்து நட்பாகச் சிரித்தாலும், அவள் தன்னை விரும்புகிறாள் என்று தவறாக நினைத்து அவளை தன் காமவாஞ்சைக்கு பயன்படுத்திக்கொள்ள முற்படுவன் என்றுப்பொருள்...

பே[தொகு]
பேசப் பேச மாசு அறும்.
பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
பேராசை பெருநட்டம்.
பேராசைக்காரனைப் பெரும்புளுகன் வெல்லுவான்.
பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
எவ்வளவு மேலான/புனிதமான விடயங்களும் தீயவன்/கொடுங்கோலன் ஆட்சிபுரியும்போது அவை அந்த நாட்டில் கெட்டு,அழிவுறும் என்பது பொருள்.
பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரத்தில் ஏறத்தான் வேண்டும்.

பொ[தொகு]
பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை.
பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.
பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
பொறுமை கடலினும் பெரிது.
பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
பொன் குடத்திற்கு பொட்டிட்டா பார்க்கணும்?
பொக்கை வாயனுக்கு பொரி உருண்டை கிடைத்தாற் போல...

போ[தொகு]
போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
போகாத ஊருக்கு வழி காட்டுகிறான்/வழி சொல்லுகிறான்.
செயல்படுத்த முடியாத காரியங்கள்/செயல்களைப்பற்றி ஒருவர் பேசும்பொது/சொல்லும்போது, எதிர்த் தரப்பார் கையாளும் பழமொழி..ஒரு ஊரே இல்லை ஆனால் அதற்குப்போக வழி காட்டுகிறான் என்பதாகும்...

ம[தொகு]
மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கணும்.
மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
மடை திறந்த வெள்ளம் போல ......
மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? இது 'மண்குதிரை (மண்குதிர்) நம்பி ஆற்றில் இறங்கலாமா' என்பதன் திரிந்த வழக்கு

மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா? மண்குதிர் என்பது புதுமணல் மேடு. அதை நம்பி ஆற்றில் இறங்கினால் புதைந்துவிட வாய்ப்புண்டு.

மண்டையுள்ள வரை சளி போகாது.
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை பொல்லாது.
மணி அடித்தால் சோறு, மயிர் முளைத்தால் மொட்டை.
மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
மதியாதார் வாயிலை மிதியாமை கோடி பெறும்.
மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?
மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம்
மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் .
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?
மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
மல்லாந்து படுத்துக்கொண்டு காறி துப்பினாற் போல.
மவுனம் கலக நாசம்
மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
மனமுரண்டிற்கு மருந்தில்லை.
மனம் உண்டானால் இடம் உண்டு.
மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு.
மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
மனம் போல வாழ்வு.
மனையுமில்லை, கருவுமில்லை மகனின் பெயர் சங்கிலிக்கருப்பனாம்!
அடிப்படையான விடயங்கள் கைவசம் எதுவுமில்லாமல் பெரிய திட்டங்களும், எதிர்ப்பார்ப்புகளும் கொண்டவர்களைப் பரிகாசம் செய்யும் பழமொழி...எப்படி ஒருவன் தனக்கு பெண்டாட்டியில்லாமல், இருந்தாலும் அவள் கர்ப்பமாக முடியாவிட்டாலும், தன்மகன் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அவனுக்கொரு பெயரிட்டு மகிழ்வதைப்போல என்னும் பொருளில் பயன்படுகிறது...
மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
மண்ணுயிரை தன்னுயிர்போல் நினை.
மணலை கயிறாக திரிப்பது போல. ..
மந்திரத்தால் மாங்காய் விழாது!
மழை விட்டும் தூவானம் விடவில்லை!

மா[தொகு]
மாடம் இடிந்தால் கூடம்.
மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்காது!
மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்குமா?
மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
மாடு வாங்கறதுக்கு முன்னால நெய் கலயம் தேடுனது மாதிரி
மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
மாமியார் உடைத்தால் மண்கலம், மாட்டுப்பெண் உடைத்தால் பொன்கலம்!
மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
மாரடித்த கூலி மடி மேலே.
மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
மாரி யல்லது காரியம் இல்லை.
மாவுக்குத் தக்க பணியாரம்.(மாவுக்கேத்தப் பணியாரம்)
மாற்றானுக்கு இடங் கொடேல்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு!
மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
மானத்தை விட்டால் மார் மட்டும் சோறு.

மி[தொகு]
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

மீ[தொகு]
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்கணும்?
மீன் வித்த காசு நாறுமா?
மீ தூண் விரும்பேல்.

மு[தொகு]
முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா ?
முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)
முன் ஏர் போன வழிப் பின் ஏர்.
முன்கை நீண்டால்தான் புறங்கை நீளும்.
முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)
முட்டிக்கு போனாலும் மூன்று பேர் ஆகாது.....(முட்டி என்றால் பிச்சை)
முண்டச்சிக்கு வருவதெல்லாம் முறட்டு இழவாம்!
முழுக்க நனஞ்ச பின் முக்காடு எதுக்கு?
முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தாற் போல.
முகத்துக்கு முகம் கண்ணாடி
முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
முடங்க பாய் இல்லையினு சடங்க நிறுத்த முடியுமா?
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டாற்போல!..
முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.
முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
முட்டிக்கு (பிச்சைக்கு) போனாலும் மூன்று பேர் ஆகாது.
முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
முதல் கோணல் முற்றுங் கோணல்
முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!
முயற்சி திருவினை ஆக்கும்.
முருங்கை பருத்தால் தூணாகுமா?
முள்ளு முனையிலே மூணு குளமாம்!
மிகச் சிறிய பிரச்சினை/விடயத்திலும், சுமுகமாக இல்லாமல், ஒருவருக்கொருவர் முரண்டுப் பிடித்துக்கொண்டு ஒற்றுமையில்லாமல் பிரிந்துக் கிடப்பது என்றுப் பொருள்...முள்ளின் முனை எவ்வளவு சிறியது!...அதில் மூன்று பின்னங்களை உண்டாக்குவது எப்படி சரியல்லவோ அப்படி என்பதாம்...
முள்ளுமேல் சீலைபோட்டால் மெல்ல மெல்லதான் வாங்கவேண்டும்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
முன் வைத்த காலைப் பின் வைக்காதே!
முன்ன பேயாமல் கெடுக்கும், பின்ன பேஞ்சு அழிக்கும்.
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

மூ[தொகு]
மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் கனியும் முதலில் கசக்கும்.
மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்ன இனிக்கும்.
மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.
மூர்க்கனுக்கு செய்யாதே உபதேசம்.
மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது.

மெ[தொகு]
மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

மே[தொகு]
மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்

மொ[தொகு]
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டாற்போல!
மொழி தப்பினவன் வழி தப்பினவன்

மோ[தொகு]
மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
மோரை பெருக்கு, நெய்யை உருக்கு.
மெளனம் மலையைச் சாதிக்கும்.

ய[தொகு]
யதார்த்தவாதி வெகுசன விரோதி.
உள்ளதை உள்ளபடியே, ஒளிவு, மறைவு இல்லாமல், நடைமுறைப்படி சொல்பவன்/பேசுபவன் பெரும்பாலாருக்கு/எல்லாருக்கும் பிடிக்காத விரோதி போலாகிறான் என்பது கருத்து.

யா[தொகு]
யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
யானைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல்.
யானைப் பசிக்கு சோளப் பொரி.
யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).

யோ[தொகு]
யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.ரா[தொகு]
ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது.
ராஜாவ மிஞ்சுன ராஜ விசுவாசி.

வ[தொகு]
வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
வட்டி ஆசை முதலுக்கு கேடு.
வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
வடக்கே கருத்தால் மழை வரும்.
வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம்.
வணங்கின முள் பிழைக்கும்.
வணங்குன புல்லு தைக்கும்.
வந்த மாட்டயும் கட்ட மாட்டான் வராத மாட்டயும் தேட மாட்டான்.
வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
வந்த வேலெயப் பாக்காம பந்தக்காலெ ஆட்னானான்.
வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
வந்தா வரவுல வை வராட்டி செலவுல வை.
வரவு எட்டணா செலவு பத்தணா.
வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
வரிந்து இட்ட அன்னமும் சொரிந்து இட்ட எண்ணெய்யும்... (ஒட்டும்)
வருந்தினால் வாராதது இல்லை.
வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
வல்லூறு பார்வை இங்கே. வௌவால் பார்வை எங்கே?
வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
வழிவழியாப் போகும்போது விதி விதியா வருது
வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் (பாய்ந்தது)போல.....
வளவனாயினும் அளவறிந் தளித்துண்Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies