1-அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

24 May,2015
 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
அகல இருந்தால் பகையும் உறவாம்.
அகல உழுகிறதை விட ஆழ உழு.
அகல் வட்டம் பகல் மழை.
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.
அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.
அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
அடாது செய்தவன் படாது படுவான்.
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்
அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
அடியாத மாடு படியாது.
அடிக்கிற கைதான் அணைக்கும்!
அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்) அம்மியும் நகரும்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
அஷ்ட பிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்
அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை போச்சோ !
அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான். இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு

அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான் அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.

அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.
அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!..
அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
அந்தி மழை அழுதாலும் விடாது.
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.

( மேற்கண்ட பழமொழி 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு)
அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது.
அரும மருமவன் தலெ போனாலும் பரவால்ல ஆதிகாலத்து ஒரல் ஒடயக்கூடாது.
அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல

( குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து).
அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும்.
அரியும் சிவனும் ஒன்னு,அறியாதவன் வாயிலே மண்ணு.
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)
அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
அரைக்கிணறு தாண்டினாற் போல/அரைக்கிணறு தாண்டாதே!
அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
அரைப்பணம் குடுத்து அழச்சொன்னங்களாம், ஒருப்பணம் கொடுத்து ஓயச்சொன்னாங்கலாம்.
அரைக் குடம் தளும்பும், நிறைக் குடம் தளும்பாது.
அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே.
அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
அவரை விதை போட்டால் துவரையா முளைக்கும்?
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!
அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்.
அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
அறச் செட்டு முழு நட்டம்.
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
அற நனெஞ்சவனுக்கு குளிரென்ன கூதலென்ன?
அற முறுக்குனா அத்துப் போகும்.
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
அறிய அறியக் கெடுவார் உண்டா?
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!
அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
அற்றது பற்றெனில் உற்றது வீடு.
அஒருவன் செய்த தீவினைகளின் (பாவங்களின்) விளைவுகளை அனுபவித்து அவை நீங்கப்பெற்றால்தான்/ஒருவன் தன் வக்கிரமமான, இயற்கைக்குப் புறம்பான, காமவெறிச்செயல்களை விட்டொழித்தால்தான், எந்நோய்க்கும் உட்கொள்ளும் மருந்துகள் வேலைசெய்து நற்பலனளிக்கும் என்பது அர்த்தமாகும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது.

ஆ[தொகு]
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.
ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
ஆசை வெட்கம் அறியாது.
ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools.
ஆட்டசெல்லம், பூட்டசெல்லம், அடிக்க செல்லம் அயலாரகத்திலே!
ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா?
ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
ஆடிப் பட்டம் தேடி விதை.
ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!
ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.
ஆடு கடிக்குமுனு அறைக்குள்ள படுத்தவ, அவுசாரியாப் போக பேயாய் அலைஞ்சாலாம்.
ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
ஆடு பகையாம் குட்டி உறவாம்.
ஆடு வளர்க்றது அழகு பாக்றத்துக்கு இல்லெ, கோழி வளக்குறது கொஞ்சு பாக்றதுக்கு இல்லெ.
ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.
ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்
இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.
ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்
ஆண்டை எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்?
ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.
ஆத்தாளும் மகளும் அவுசாரியாப் போயி, முந்தானையில வச்சிருந்த முக்கால் ரூபாயயும் புடுங்கிட்டு விட்டாங்களாம்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆத்திரத்த அடக்குனாலும் மூத்திரத்த அடக்கக்கூடாது.
ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா.
ஆபத்திற்குக் குற்றம் (தோஷம்) இல்லை!
ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர் இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.

ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்.

ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான்; அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான்
ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே.
ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
ஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை.
ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
ஆரால் கேடு, வாயால் கேடு.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
ஆலயம் தொழுவது சாலமும் நன்று.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
ஆழமறியாமல் காலை இடாதே.
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
ஆள் கூடுனா பாம்பு சாகுமா?
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு
ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
ஆள் பாதி, ஆடை பாதி.
ஆளப்பாத்து ஆசனம் போடு, பல்லைப்பாத்து பாக்குப்போடு.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு.
ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
ஆறு பெண்ணைப் பெத்தால் அரசனும் ஆண்டியாவான்!
ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்த மடம்.
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
ஆனைக்கும் அடி சறுக்கும்.
ஆனைக்கு கோவணம் கட்டு-(ரதைப்)-வதைப்போல...
செய்வதற்குக் கடினமான/முடியாத வேலையைப்பற்றிக் குறிப்பிடும்போது சொல்லப்படும் வார்த்தைகள்
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.
ஆனைப் பசிக்கு சோளப் பொரி
ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.
ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்.
ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.
ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.
ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா?

இ[தொகு]
இக்கரைக்கு அக்கரை பச்சை.
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
இஞ்சி இலாபம் மஞ்சளில்.
இஞ்சி விற்ற லாபம் மஞ்சளில் போயிற்று.
இஞ்சி தின்ன குரங்கு மாதிரி....
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிங்கிய கதையாக.....
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
இராச திசையில் கெட்டவனுமில்லை
இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்.
இருக்க எடம் கொடுத்த படுக்க பாய் கேப்பான்.
இருக்குறவ அள்ளி முடியறா.
இரும்பு அடிக்ற எடத்துல ஈக்கு என்ன வேலை?
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
இரும்பூறல் காணாமல் இரும்பிச் செத்தான்.
இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
இருவர் நட்பு ஒருவர் பொறை.
இலவு காத்த கிளி போல....
இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
இல்லது வாராது; உள்ளது போகாது.
இல்லறம் அல்லது நல்லறமல்ல.
இல்லாததை கொண்டா, கல்லாததைப் பாடு (என்பர்கள், எங்கிறார்கள்)
இல்லாதவனுக்கு பசியேப்பம், இருப்பவனுக்கோ புளியேப்பம்.
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
இளங்கன்று பயமறியாது.
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு!
இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இறுகினால் களி , இளகினால் கூழ்.
இரைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
இரைத்த கிணறு ஊறும், இரையாத கிணறு (கேணி) நாறும்.
இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
இனம் இனத்தோடே எழைப்பங்கன் பணத்தோடே.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?

ஈ[தொகு]
ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்; தீயோனுக்கு உடலெங்கும் விடம்.
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
ஈர நாவிற்கு எலும்பில்லை.
ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.

உ[தொகு]
உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும்.
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
உடையவன் இல்லாதது ஒரு மொழந்துண்டு.
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே.
உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்/விஷம்.
உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
உப்பில்லாப் பண்டம் பாழ், குடியில்லா வீடும் பாழ்.
உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!
உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு.
உரம் ஏற்றி உழவு செய்
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!
உலோபிக்கு இரட்டை செலவு.
உழக்கு பணம் இருந்தால்தான் பதக்கு சமத்து இருக்கும்.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
உள்ள அளவும் உப்பிட்நினைடவரை .
உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும்.
உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?
உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல
உள்ளது போகாது இல்லது வாராது.
உள்ளதைச்சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு கோவமாம்!
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
உளவு இல்லாமல் களவு இல்லை.
உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

ஊ[தொகு]
ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்.
ஊசி முனையில் மூன்று குளம்
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
ஊண் அற்றபோது உடலற்றது.
ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
ஊமை சொப்பனம் கண்டாற் போல..
ஊருடன் ஒட்டி வாழ்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
ஊர்க்குருவியைக் கொல்ல இராமபாணமா வேணும்?
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.
ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
ஊருக்கு உபதேசமடி பெண்ணே, அது உனக்கில்லையடி கண்ணே.
ஊர் சனங்களுக்கு எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று உபதேசிக்கும் ஒருவன், தன் மனைவி, மக்கள் அவன் ஊர் சனங்களுக்குச் சொன்னதற்கு நேரெதிராக, நடந்துக்கொண்டாலும் கண்டிக்காமல்/கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடும் இயல்பைக் குறித்துச் சொல்லப்படும் சொலவடை
ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு?
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே.
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.

எ[தொகு]
எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல.
எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
எடுப்பார் கைப்பிள்ளையைப் போல இருக்காதே!
எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டானாம்..(விடாதே!)
எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
எட்டு வயசான எரும ஏரிக்கு வழி கேக்குதாம்.
எண் இல்லாதவர் கண் இல்லாதவர்.
எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
எண்ணறக்கற்று எழுத்தறப் படித்தாலும், பெண்புத்தி பின்புத்திதான்!
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
எதார்த்தவாதி வெகுசன விரோதி.
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
எதிரிக்கு எதிரி நண்பன்.
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்? (சொலவடை)
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?
எரியும் பந்தத்திற்கு எண்ணெய் வார்ப்பதைப்போல...
எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
எருது புண்ணு காக்கைக்குத் தெரியுமா?
எருமைமாட்டின் மீது மழை பெய்தாற் போல.
எலி அழுதால் பூனை விடுமா?
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
எலிக்கறி உடம்புக்கு நல்லதுன்னு பூனை சொல்லுச்சாம்.
எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
எலியைக் கொல்ல குடியிருக்கும் வீட்டிற்கே தீ வைத்தாற்போல..(வைத்துக்கொள்ளுவார்களா?)
எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!னுபோகந்தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும்

Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies