பப்பாளிக்காய் கறி
01 May,2015
பப்பாளிக்காய் கறி
தேவையான பொருட்கள்:
•பப்பாளிக்காய் - ஒன்று
•தேங்காய் - 2 துண்டுகள்
•பச்சைமிளகாய் - 2
•மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
•புளி - நெல்லிக்காய் அளவு
•வெங்காயம் - ஒன்று
•காய்ந்த மிளகாய் - 4
•தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
•கடுகு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பப்பாளிக்காயை தோல் சீவி சிறுத் துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சைமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
பப்பாளிக்காய் வெந்ததும் திறந்து மசித்து விட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்.
புளியை ஊற வைத்து கரைத்து பாப்பாளிக்காயுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தக்கியவற்றை பப்பாளிக்கறியில் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
சுவையான கேரளா ஸ்டைல் பப்பாளிக்காய் கறி தயார்.