நாட்டுக் கோழி மிளகு சாறு ஆட்டு எலும்பு நண்டு ஈரல் மாங்காய் சூப் வகைகள்

04 Mar,2015
 


ஈரல் மாங்காய் சூப்


தேவை:
ஈரல் மாங்காய் – கால் கிலோ
 சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் – தலா 1
தனியா, மிளகு, சீரகம், சோம்பு – 1 ஸ்பூன்
 மஞ்சள் – 1 துண்டு
 அரிசி களைந்த தண்ணீர் – 2 ஸ்பூன்
 கறிவேப்பிலை, மஞ்சள்தூள் – சிறிதளவு
 உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:
ஈரல் மாங்காயை பொடியாக நறுக்கி 5 முறை கழுவி எடுத்துக்
 கொள்ளவும். சின்னவெங்காயம், மஞ்சள், மிளகு, சீரகம்,
சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில்
 போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில்சிறிதுஎண்ணெய்ஊற்றிஈரல்மாங்காய்,மஞ்சள்தூள் அரைத்த விழுது, தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரிசி களைந்ததண்ணீர், ஊற்றி நன்கு வேகவிடவும்.
1 விசில் வந்ததும்குக்கரை திறந்து சிறிதளவு உப்பு போட்டு, 1 கொதி வந்ததும்இறக்கவும்.


 நண்டு சூப்

crab soup - நண்டு சூப் - சமையல் குறிப்பு

தேவையான பொருட்கள்;

நண்டு 100 கிராம் ;

மீன் 100 கிராம்  ;

இறால் 100 கிராம் ;

கேரட் 2;

வெங்காயம் 2;

மிளகு 6;

எண்ணெய் 1/2 குழிக் கரண்டி;

தேவையான அளவு உப்பு.

செய்முறை;

முதலில் அரிந்துகொள்ளவேண்டிய வெங்காயம், கேரட் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,  வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் நண்டு, மீன், இறால், கேரட்  ஆகியவற்றை சேர்த்து வதக்கி, நீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.   காய்கறியும், நண்டு வகையறாக்களும் நன்கு வெந்தவுடன் இறக்கி நண்டு,  மீன், இறால் இவைகளை வெளியே எடுத்து சூப்பை பறிமாறவும். பறிமாறும்போது, ஒரு துண்டு நண்டையோ, மீனையோ, இறாலையோ சேர்த்து விருப்பத்துக்கேற்றவாறு பரிமாறலாம்.

நண்டு ரசத்தைப் போலவே ,நண்டு சூப்பும் உடலுக்கு தெம்பு தரும். இதை சாப்பிடதும் ஜலதோஷம் பிடித்திருந்தால், கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும்.



ஆட்டு எலும்பு சூப்


தேவையானவை:

ஆட்டு எலும்பு  –  1/2 கிலோ
 கத்திரிக்காய்  –  150 கிராம்
 துவரம் பருப்பு – 100 கிராம்
 உருளைக்கிழங்கு  –  150 கிராம்
 முருங்கைக்காய்  –  2
தக்காளி  –  கால் கிலோ
 சின்ன வெங்காயம்  –  100 கிராம்
 பெரிய வெங்காயம்  –  100 கிராம்
 பச்சைமிளகாய் – 10
வரமிளகாய்  –  10
சீரகம்  –  1 டீஸ்பூன்
 மிளகு  –  1 டீஸ்பூன்
 பட்டை  –  4
பிரியாணி-இலை – 1
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
 சோம்பு  – 1 டீஸ்பூன்
 எண்ணெய் – தேவையான அளவு

 செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஆட்டு எலும்பு, துவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள் தூள், சிறிது உப்பு, மற்றும் 5 டம்ளர் தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடாய் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை,பிரியாணி இலை, பச்சைமிளகாய், வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் இரண்டு வெங்காயம் , தக்காளியையும் சேர்த்து வதக்கவும். அதனுடன்  கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி  சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,காய் நன்றாக வதங்கியதும் கலவையுடன் வேகவைத்த ஆட்டு எலும்புகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்


நாட்டுக் கோழி மிளகு சாறு,



தேவையானவை

எலும்புகளோடு கூடிய நாட்டுக் கோழி கறி- 1/4 கிலோ
 சிறிய வெங்காயம் -8
மிளகு- 2 தேக்கரண்டி
 சீரகம் -1 தேக்கரண்டி
 இஞ்சி -சிறு துண்டு
 பூண்டு- 6 பற்கள்
 நாட்டுத் தக்காளி -1
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
 கல் உப்பு – ருசிக்கேற்ப
 கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை
 கறியை சுத்தமாக கழுவவும். சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி, நீரில் அலசி வையுங்கள். இஞ்சி, பூண்டு நசுக்கி வையுங்கள்.   தக்காளியை வெட்டிக் கொள்ளுங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து வையுங்கள்.
ஒரு அகலமான பாத்திர(குக்கரில்)த்திரத்தில் 4 தம்ளர் நீர்விட்டு, கறி, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பொடித்த மிளகு, சீரகம், மஞ்சள் தூள், கல் உப்பைப் போட்டு கிளறுங்கள்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மேலே வையுங்கள். கறி வெந்து வரும் வரை (20லிருந்து 25 நிமிடங்கள் ஆகலாம்) வேகவிடுங்கள். கறியில் இருக்கும் கொழுப்பின் மணத்தோடு, மிளகின் மணமும் சேர்ந்து  புதுவித மணத்தை உண்டாக்கும். அந்த சமயம் கொத்தமல்லித்தழைத் தூவி பாத்திரத்தை இறக்குங்கள். குக்கரில் எனில் 4 விசில் வரை விட்டால் போதும்.
மண்ணின் மணம் வீசும் நாட்டுக் கோழி மிளகு சாறு, நிச்சயம் உங்கள் எல்லோரையும் சுண்டி இழுக்கும்!





Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies