ஸ்காட்லாந்துக்கு சுதந்திரமா?: வாக்குப்பதிவு முடிந்தது: வாக்கு எண்ணிக்கையும் துவங்கியது
5 கவுன்சில்கள் எதிர்ப்பு
18 Sep,2014
ஸ்காட்லாந்து தனி நாடு ஆவதற்கு 5 கவுன்சில்கள் எதிர்ப்பு
ஸ்காட்லாந்து தனிநாடு ஆவதா வேண்டாமா என்பது தொடர்பான வாக்கெடுப்பில் 32 கவுன்சில்களில் 5 கவுன்சில்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பிரிட்டனில் ஸ்காட்லாந்து கடந்த 1707–ம் ஆண்டு இணைந்தது. 307 ஆண்டுகள் இணைந்து இருந்த நிலையில், பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடு ஆக வேண்டும் என்று அதன் முதல்–மந்திரி அலெக்ஸ் சால்மண்ட் தலைமையில் ஒரு அணி வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி நாடு ஆவதா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க கருத்து வாக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
அந்த கருத்து வாக்கெடுப்பு ஸ்காட்லாந்தில் நேற்று காலை இந்திய நேரப்படி 11.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு அடைந்ததது. கருத்து வாக்கெடுப்பில் பதிவான ஓட்டுகள் ஸ்காட்லாந்தில் உள்ள 32 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றனர். இதில் ஆரம்ப வாக்கெடுப்பு முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி 6 கவுன்சில்களில் 5 கவுன்சில்கள் தனிநாடு ஆவதற்கு எதிராக வாக்குகள் பதிவு செய்துள்ளன. ஒரு கவுன்சில் பிரிவதற்கு ஆதரவாக வாக்கு பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை ஒருங்கிணைந்து பிரிட்டன் என்று அழைக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் தனி பாராளுமன்றம் இருந்தாலும் குறிப்பிட்ட அதிகாரமே அதற்கு உள்ளது.
மற்றவை அனைத்தும் இங்கிலாந்தின் கீழ் இருந்து வருகிறது. ஆகவே, பிரிட்டனிடம் இருந்து ஸ்காட்லாந்து பிரிய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதற்கான கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற 32 மையங்களிலும் வாக்கெடுப்பு முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை முடிவு இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில் துல்லியமாக தெரியவரும் என்று கூறப்படுகிறது. இன்று வெளிவரப்போகும் மக்கள் தீர்ப்பு, இங்கிலாந்துடன் இணைந்திருந்த 307 ஆண்டு கால உறவு துண்டிக்கப்பட்டு சுதந்திரமான தனி நாடாக ஸ்காட்லாந்து அறிவிக்கப்படவேண்டுமா என்பதை தீர்மானிப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.