சரும பிரச்சனைகளும்ஸ அதற்கான இயற்கை தீர்வுகளும்

17 Aug,2014
 

             


பிரச்சனை இல்லாம சருமம் யாருக்கு தான் உள்ளது. எல்லோருக்குமே சருமத்தில் ஒருசில பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம், சருமத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது, கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவது மற்றும் இதுப்போன்ற பல உள்ளன. இப்படி சரும பிரச்சனைகள் வருவதற்கு ஒருபக்கம் க்ரீம்கள் காரணமாக இருக்க, அந்த பிரச்சனைகளைப் போக்க உதவும் க்ரீம்களை வாங்கி போட்டால், அது எந்த பயனும் தராமல் அப்படியே இருக்கும். ஆகவே சருமத்தில் எந்த பிரச்சனைகள் வந்தாலும், உடனே அதனை சரிசெய்வதற்கான இயற்கை வழிகளை தேட வேண்டுமே தவிர, க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. சரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்!!! இங்கு சருமத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளையும், அதற்கான இயற்கை தீர்வுகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அதனை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் சருமம் வறட்சியால் தோலுரிய ஆரம்பித்தால், தினமும் சருமத்திற்கு

 

பால் தடவி மசாஜ் செய்து கழுவி வாருங்கள். இதனால் சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, சருமம் பொலிவோடு இருக்கும். தற்போது பலருக்கு கருவளையம் இருக்கிறது. அத்தகைய கருவளையத்தைப் போக்க தினமும் வெள்ளரிக்காயை அல்லது குளிர்ச்சியான டீ பேக்கை கண்களில் வைத்து எடுத்தால் போக்கிவிடலாம். நீண்ட நேரம் கம்ப்யூட்டரின் முன்பு உட்கார்ந்து கண்கள் சோர்வுடன் காணப்படுகிறதா? அப்படியானால் க்ரீன் டீ பேக்கை கண்களின் மேல் 10-15 நிமிடம் வைத்து வந்தால், சோர்வு மற்றும் கண்களில் உள்ள வீக்கம் குறைந்துவிடும். பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உதடுகள் வறட்சியடைவது. உதடுகள் வறட்சி அடைய காலநிலை மாற்றம், உதடுகளை கடிப்பது, அடிக்கடி எச்சில் வைப்பது, லிப்ஸ்டிக் போடுவது என்று பல காரணங்கள் இருந்தாலும், தினமும் இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை உதடுகளில் தடவி தூங்க வேண்டும். மேலும் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். இளம் வயதினர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் முகப்பரு. இத்தகைய முகப்பருவை கற்றாழை ஜெல், எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவற்றைப் பயன்படுத்தி போக்கலாம். கோடையில் சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே இத்தகைய சரும நிற மாற்றத்தை தடுக்க ஆரஞ்சு பழச்சாறு, பால், தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கொண்டு போக்கலாம். முகத்தில் கருமையான தழும்புகள் இருந்தால், அவை அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே இத்தகைய கருமையான தழும்புகளைப் போக்க எலுமிச்சை சாறு மற்றும் சந்தனப் பொடி ஆகியவற்றுடன், தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், விரைவில் போக்கலாம். தேன், எலுமிச்சை சாறு, ஓட்ஸ், முட்டை, ஜாதிக்காய் பொடி ஆகியவை கரும்புள்ளிகளைப் போக்கக்கூடியவை. அதற்கு இந்த பொருட்களைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்து வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். சிலருக்கு சருமத்தில் வெள்ளை திட்டுக்கள் இருக்கும். இவை பொலிவற்ற தோற்றத்தைக் கொடுக்கும். ஆகவே அதனை தடுக்க பால் மற்றும் மில்க் க்ரீம் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் தேன் பயன்படுத்தி சருமத்தை மசாஜ் செய்தும் வெள்ளை திட்டுக்களைப் போக்கலாம். நிறைய மக்கள் எண்ணெய் பசை சருமத்தினால் அதிக பிரச்சனைக்கு உள்ளாவார்கள். அத்தகையவர்கள் சருமத்திற்கு எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தின் சாற்றினைப் பயன்படுத்தி, சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கிவிடும்.

உங்களை நீங்களே அருமையாகக் கவனித்துக் கொள்ள 8 அழகான வழிகள்!!



நீங்கள் எப்போதும் மற்றவர்கள் அல்லது உங்கள் குடும்பத்தினருக்காக மட்டும் மாடாய் உழைத்து, ஓடாய் தேய்கிறீர்களா? அதே நேரத்தில், உங்களைப் பற்றிய அக்கறை உங்களுக்குத் துளிக்கூட இல்லையா? நீங்கள் ஒன்றும் அவ்வளவு ‘பாசக்காரப் பயபுள்ளை’யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக யாரும் உங்களுக்கு உதவ வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அடுத்தவர்களுக்கே நீங்கள் உதவும் போது, உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள முடியாதா? மாதத்திற்கு ஒரு முறையாவது உங்களுக்கென ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த அளவிற்காவது நீங்கள் ஒரு சுயநலவாதியாக இருந்தால் தான் அடுத்தவர்களை இன்னும் நன்றாகக் கவனித்துக் கொள்ள முடியும். இப்போது உங்களை நீங்களே எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று

 

பார்க்கலாம். அடுத்தவர்களுக்கு எப்போதும் உதவிக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் எதுவும் நேரக் கூடாது. அதற்காக உங்களுடைய உடம்பில் நோயெதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முக்கியத் தேவை மசாஜ் செய்து கொள்வதாகும். உழைத்து உழைத்துக் களைத்துப் போன உங்களுக்கு மசாஜ் ஒரு புதுத் தெம்பையும் கொடுக்கும். உடல் களைப்பும் நீங்கும். உங்களுக்கு வேகமாகத் தூக்கம் வருகிறது, ஆனால் தொடர்ந்து தூங்க முடியவில்லையா? கவலையை விடுங்கள், அதற்கும் மசாஜ் தான் உங்களுக்குக் கை கொடுக்கும். மசாஜ் செய்வதால் உங்கள் ஹார்மோன் அளவுகள் மாறி, தசை இறுக்கங்கள் குறைந்து, உடம்பே இலகுவாகி விடும். இதனால், உங்கள் மூளையிலுள்ள டெல்டா அலைகள் தூண்டப்பட்டு, உங்களால் நன்றாகவும் தூங்க முடியும். பருத் தொல்லையால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? பருக்களும், பருத் தழும்புகளும் நீங்கி, உங்கள் முகம் பொலிவு பெற ஃபேஸியல் செய்து கொள்ளுங்கள். ஃபேஸியல் செய்வதால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன; சிறுசிறு துளைகள் அடைக்கப்படுகின்றன. ஃபேஸியலில் பல வகைகள் உள்ளன. உங்கள் சருமத்தைப் பாதிக்காத அளவுக்கு சிறந்த ஃபேஸியலை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு நோயோ, உடம்பில் வலியோ இருக்காது. ஆனால் எப்போதும் களைப்பாக இருப்பது போல் உணர்வீர்கள். இதற்குக் காரணம், நீங்கள் ஊண்-உறக்கம் இல்லாமல் ஓயாமல் உழைப்பது தான். உங்கள் கடின உழைப்புக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். பேட்டரிக்கு ரீசார்ஜ் கொடுப்பது போல தான். ஓய்வுக்கு அப்புறம், உங்களால் இன்னும் அதிகமாக உழைக்க முடியும். நாள்தோறும் உங்கள் வாழ்க்கையில் நிறைய சவால்களையும், துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு இருப்பீர்கள். அதற்காகப் பயந்து கொண்டும் இருப்பீர்கள். ஆனால் ‘எதுவும் நிரந்தரமானதல்ல; மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். பயத்தைத் தூக்கி எறியுங்கள். உங்களை நீங்களே தேற்றிக் கொண்டு, அடுத்து வரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். உங்கள் தோற்றம் நன்றாக இருந்தால், உங்கள் உணர்வும் நன்றாகத் தான் இருக்கும். உங்களை நன்றாக அலங்கரித்துக் கொள்ளுங்கள். முடி அலங்காரத்திலிருந்து கால் நகங்களைப் பராமரிப்பது வரை அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருங்கள். உங்களுக்கே உங்கள் மேல் இன்னும் அதிக நம்பிக்கை வளரும். உங்களுக்கு மன அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளது போல் உணர்கிறீர்களா? உடனே மருத்துவரின் உதவியை நாடுங்கள். வயிற்றில் கொழுப்பு அதிகமாவதாலோ அல்லது உடம்பில் கார்ட்டிசோல் அளவுகள் அதிகம் இருந்தாலோ மன அழுத்தம் ஏற்படும். ஆரம்பத்தில் கூறியபடி, இதற்கும் மசாஜ் தான் சிறந்த வழியாகும். மசாஜ் செய்யும் போது கார்ட்டிசோல் அளவுகள் குறைந்து, மன அழுத்தமும் குறைகிறது. முதுகு வலி, தோள்பட்டை வலி, தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக தினமும் நிறைய மாத்திரைகளை எடுத்து வருகிறீர்களா? முதலில் அந்தப் பழக்கத்தை விடுங்கள். இதுப்போன்ற உடல் வலிகளைப் போக்கவும் மசாஜ் தான் உங்களுக்குக் கை கொடுக்கும். ஸ்வீடிஷ் மசாஜ் மற்றும் விளையாட்டு மசாஜ் செய்வதால் தசைகள் ஒழுங்காக இயங்கி, வலிகள் குறையும். இந்த இரு மசாஜ்களைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதும், மாத்திரைகளுக்கு ‘குட் பை’ சொல்லிவிடலாம்!




Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies